Final episode of VK-22

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நல்ல கதை..
நல்ல பாத்திரபடைப்பு..
இயற்கையை மறந்த செயற்கை வாழ்வில்..
இயற்கை விவசாயத்தை கொண்டு
கதை படைத்ததற்கு நன்றி..

கதையின் துவக்கத்திலிருந்து, சரி, தவறு என அனைத்தையும் சுட்டிக் காட்டி கருத்துக்களைத் தெரிவித்ததற்கு மிக்க மிக்க நன்றி மா...
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Lovely geetssss

to be truth...
first neenga ippadilam scene vaikkiradhunala dhaan naan movies paarkiradhaiyae vittennu sonnappo romba kastama pochu:(
veetla, friends kitta lam, three days ah orae pulambal.
but adhukkappuram naanae thelivaagitten. ini, innum sub conciousoda stories ezhudhanumnu!
sollap pona readersoda positive commentsai vida negative commentsdhan enakku romba pakkuvathai kodukudhu! and also it helps me to improve my writing da... So thank u very muchhhh for ur wonderful support dear...

:)
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி கீதாஞ்சாலி அவர்களுக்கு, தங்களின் மறுபதிவு நாவலான வயல்வெளி கவிதைகள், சிறந்த கிராமிய நாவல். அருமையான நாவல். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமுககடமை உள்ளது. அதிலும் எழுத்தாளருக்கு அதிகம், அதனை உணர்ந்து தாங்கள் எழுதியதுக்கு என் வாழ்த்துக்கள்.
காடோடி திரிந்தவனின் கவலை தீர்த்தது உழவு
நாடோடியாக வாழ்ந்தவனை நாகரிகமாக்கியது உழவு

உலகிலுள்ள தொழிலுக்கெல்லாம் முன்னோடி உழவு
உனக்கும் எனக்கும் உயிர்வாழ உணவளிப்பது உழவு

ஈரடியால் வள்ளுவனும் ஏற்றிப் புகழ்ந்த உழவு
ஆறடியில் அடங்கும் வரை அவசியம் இந்த உழவு

முன்னோர்தம் கைகளினால் முப்போகம் விளைந்திட்ட உழவு
நம்மோர்கள் நஞ்சிட்டு விஷமாகும் உழவு

ஊருக்கே வேலை தரும் உயர்ந்த தொழில் உழவு
பாருக்கே படியளக்கும் சாமிதானே உழவு
இப்படி பட்ட விவாசாயின் பிரச்சனைகள் பற்றியும், பெண் கொடுமை {கொஞ்சம் மட்டும்} இயற்கை விவாசயம், ஜாதிகலப்பு, காதல், பாசம், அன்பு, அனைத்தும் கலந்த நாவல். மிக சாதரணகரு அதனை மேற்குறியவை வைத்து மிக சாமர்தியாமாக நாவல் படைத்துள்ளீர், அருமை. என்னுடைய முதல் சந்தோஷம் அனைத்து பெயரும் தமிழ் பெயர், {அழகு,அறிவு,சண்முகக்கனி,தங்கபாண்டியன்,வள்ளி,தாமரை,வளவன்,பொன்னுதாயி,செல்வி,கோதையம்மாள்
சரவணன்,தீபா, இன்னும் பலர்}. அதன்பிறகு நாவல் முழுவதும் கிராமியமொழி, அதனை எந்த இடதிலும் விடாமல் தொடர்ந்தது அருமை.பிறகு சாண்டில்யன் போல் பெண் வர்ணனை {மலர்களுடன் ஓப்பிடு}, சில இடங்களில் கவிதைகள் மூலமும், சில இடங்களில் படங்களில் மூலமும் எழுதியது அருமை. உங்களின் முதல் வெற்றி, படிக்கும் போதே கண் மூன் காட்சி தெரிகிறது போல் எழுத்து உள்ளது இது அருமை. மொத்ததில் ஒரு பாரதிராஜா திரைப்படம் போல் உள்ளது சகோதரி..
வேறிடம் போக எனக்கு
கல்வியோ துளியும் இல்லை
வயலிடம் வாழ்க்கைப் பட்டேன்
வேதனை சொந்தம் ஆச்சு

மானிடப் பிறவி நானே
பசியினால் துடிக்கும் வேளை
எந்நிலப் பயிர்கள் எல்லாம்
நீரின்றி தவிப்பதைக் காண்

உலகத்தார் பசியைப் போக்க‌
செய்கிறேன் இந்தப் பணியே
பசியெனக்கு பழகிப் போச்சு
பாதிசொந்தம் விலகிப் போச்சு

மாட்டுக்குப் புல்லும் இல்லை
ஆட்டுக்கு இலையும் இல்லை
பயிருக்கு விலையும் இல்லை
வாழ்க்கையில் ஒளியும் இல்லை

பட்டினி கூட வருது
பிரச்சனை கழுத்தை பிடிக்குது
நாளையோ பயத்தைக் கொடுக்குது
வேதனை மட்டுமே நிலைக்குது எனக்கு
என்று அவனின் பிரச்சனை பற்றி கூறியதுக்கு வாழ்த்துகள் சகோதரி. ஒருசின்ன குறை கதை கரு இன்னும் கணம் தேவை சகோதரி. கண்ணீரை கதையில் சேர்த்துவிடாதீர் , நகைச்சுவை இன்னும் அதிகபடுத்துங்கள் சகோதரி, இன்றைய தலைமுறை தங்கீலிஷ் தலைமுறை அதுவும் புக் இல்லாமல் செல்லில் படிக்கும் தலைமுறை. அவர்களுக்கு புதிய தமிழ் சரியானது. கிராமிய மொழி சற்று கடினம். உங்கள் உழைப்பு வீணாகும் அபாயம் உள்ளது.அதுபோல் செண்டிமெண்ட்ம் புரியாது. எனவே உங்கள் முடிவு உங்கள் உரிமை சகோதரி. வாழ்த்துகள் சகோதரி அன்புடன்
V.முருகேசன்.
 
Last edited:

Sri B

Well-Known Member
அழகான கதை..குடும்பம்,உறவுகள், பசுமை புரட்சி,இயற்கை விவசாயம்,விழிப்புணர்வு,நாளைய தலைமுறைக்கும் இப்போவே அவங்க மனசுலயும் விதைக்குறதும் அவங்க செயல்படுத்துறதும் அருமை..எல்லாமே சூப்பர் கீதுமா;):):)நன்றி.
 
அருமையான வரிகள் கொண்டு அழமான விமர்சனம் அண்ணா.... :)

உழவரைப் பற்றிய உங்கள் பாடல் வரிகள் மிக அருமை!!

சாண்டில்யன் கதைகள் நான் படித்ததில்லை! இப்போது படிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுகிறது... நான் கதை படித்த காலகட்டம் வெகு சொற்பமே! இப்போதும் மிக மிக குறைவாகவே படிக்க முடிகிறது என் கண்ணில் உள்ள குறைபாடால்.

உங்களை எல்லாம் பார்க்கும் போது சற்றே பொறமை கூட எழுகிறது. என்னால் உங்கள் அனைவரையும் போல் படிக்க முடியவில்லையே என்று!! தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அண்ணா...:)

நிறைகளை சந்தோஷமாக ஏற்றது போல் நீங்கள் சுட்டிக் காட்டிய சிறு குறைகளையும் அவ்வாறே ஏற்றுக் கொண்டேன்.

கிராமிய மொழி: அது இந்த நாவலில் மட்டுமே நான் பயன்படுத்தி உள்ளேன் அண்ணா... எனது மற்ற நாவல்களில் சாதாரண தமிழ் நடைதான்.

பின் கதைக் கரு : உண்மையில் நான் எடுத்துக் கொண்ட கதைக் கருவில் ஐம்பது சதவிகிதம் மட்டுமே இக்கதையில் கொடுக்க முடிந்தது! அதனால் எனக்குமே அந்தக் குறை மனதில் உள்ளது!

ஆனால் இதனை அடுத்து எழுதிய கதைகளின் கருவில், ஓரளவு நான் நினைத்ததில், எழுபது சதவிகிதம் கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அதற்க்கு நீங்கள் எனது மற்ற நாவல்களை படித்து சொன்னால்தான் எனக்குத் தெரியும். என் எழுத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்று! முடிந்தால் படித்துச் சொல்லுங்கள் அண்ணா...

கண்ணீர் குறைத்து நகைச் சுவை: நகைச் சுவையைக் கூட்டிக் கொள்கிறேன். கண்ணீர் மிக அதிகமாக என்றால், அது சூர்யோதயத்தில் மட்டும்தான். கதைக்களம் அப்படி அண்ணா நான் என்ன செய்ய???!!!

இறுதியாக செண்டிமெண்ட்: செண்டிமெண்ட் இல்லாத நம்மவர்கள் இருக்கிறார்களா என்ன?! ஆனால் இப்போதைய காலகட்டத்தில், அது சற்று குறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை!

இருந்தாலும், உறவுகள் மீதும் நட்புகள் மீதும் நாம் வைத்திருக்கும் பாசமும் செண்டிமெண்டும் இன்றளவும் இருக்கத்தானே செய்கிறது அண்ணா?!

நான் கூட அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நாம் அதிகமாக செண்டிமெண்ட் கொடுப்பதால்தான் வாசக வட்டம் நமக்குச் சற்றுக் குறைவோ என்று?!

ஆனாலும் அதனை மாற்றிக் கொள்ள மனம் வரவில்லை! காரணம் செண்டிமெண்ட் என்பது அன்பைச் சார்ந்தது! அன்பு இக்காலத்தில் சற்றே குறைந்து போனாலும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றே நம்புகிறேன்!

இல்லையெனில், இணையதளத்தில் கூட சில நல்ல நட்புக்களையும், சகோதர, சகோதரிகளையும் உறவாகப் பெற்றிருக்க முடியாதல்லவா?!

தங்கள் வேலைகளுக்கு கிடையில் பல மணித்துளிகள் செலவிட்டு இவ்வளவு நிறைவான விமர்சனத்தைக் கொடுத்ததற்கு மிக்க மிக்க மிக்க நன்றிங்க அண்ணா...

தங்களின் கருத்துக்களை பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு வரவேற்கிறேன்... என்றென்றும் என் கதையின் நிறை, குறைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். நன்றி....:)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அழகான கதை..குடும்பம்,உறவுகள், பசுமை புரட்சி,இயற்கை விவசாயம்,விழிப்புணர்வு,நாளைய தலைமுறைக்கும் இப்போவே அவங்க மனசுலயும் விதைக்குறதும் அவங்க செயல்படுத்துறதும் அருமை..எல்லாமே சூப்பர் கீதுமா;):):)நன்றி.

ரொம்ப நன்றி செல்லம்..... ஆரம்பத்திலிருந்து அழகான விமர்சனங்களைப் பகிர்ந்ததற்கு.... My sweet
glitter-kiss-smiley-emoticon.gif
Love uuuuuu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top