நினைவெல்லாம் நீ(யே)யா? அத்தியாயம் 1_4

Advertisement

அத்தியாயம்_3

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி.
வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள்.
ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் முன்பு சடன்பிரேக் இட்டு நிறுத்தியதில், அதிர்ந்து இரண்டடி பின்சென்றாள்.
கருப்பும் சிவப்பும் கலந்த காட்டன் புடவை அவள் வெண்ணிறத்திற்கு மேலும் அழகு சேர்க்க, வளைந்த புருவத்தின் மத்தியில் சிறிய கருப்பு நிற பொட்டும் அதற்கு மேலே சிறிய பட்டை சந்தனமும், மையிட்ட விழிகள் அதிர்ந்ததில் மேலும் விரிந்திருக்க, கூரான நாசியில் சிவப்பு நிற மூக்குத்தியும், சிவந்த உதடுகளும், சிறிய கழுத்தில் மெல்லிய நீண்ட செயினில் இசை சிம்பிலின் (மத்தியில்) மத்தியில் M என கற்கள் பதிக்கப்பட்ட டாலரும், வலக்கையில் மெல்லிய பிரேஸ்லைட்டும், இடக்கையில் ரோஸ் (ம) தங்க நிறம் கலந்த கடிகாரமும், வலது தோள்பட்டையில் இடைவரை தொங்கும் பையும், இடைவரை நீண்ட கற்றைமுடியை சென்டர் க்ளிபில் அடக்கியிருக்க, காலில் படிந்த (Flate) செருப்புடன் இருந்தவளை விஷ்ணு அச்சிறிய நேரத்திலும் ரசிக்க தவறவில்லை.
( செருப்பெல்லாடா ரசிப்ப)

ஏய், கருப்பு புடவையில தலவிரி கோலமா யார் கிட்ட நீதி கேட்க போகிறாய், மார்டன் கண்ணகி என்றான்.

அதுவா, என் காதல் கணவராக போகிறவனை, கொன்றவனை பார்த்து, நீதி கேட்க போறேன்.

அடி பாதகத்தி, உன் காதல் கணவனாக போகிறவன், உன் முன்னாடி தானே இருக்கேன். என்றான் அதிர்ந்த குரலில்.

ஹலோ, இன்னொரு முறை காதல், கணவன்னு சொன்ன, மாமா பையனுகூட பார்க்க மாட்ட, தாத்தா கிட்ட சொல்லிடுவ அப்புறம் வீட்ல சாப்பிடுற தண்டசோறும் கட்டு தா. என்றாள் கோப குரலில்.

ஹ.ஹா .. மேடம்க்கு விஷயம் தெரியாது, சார் இப்ப கல்லூரி பேராசிரியர்.என்றான் காலரை தூக்கியபடி

சாருக்கு, மில்லுக்கு போவ கஷ்டம், இதுல தல கல்லூரி பேராசிரியராம். பொண்ணுங்க பின்னாடி சுத்தரவனுக்கு பொண்ணுங்க இருக்கற இடதா பிடிக்கும் பின்ன மிஷின் இருக்கற இடமா பிடிக்கும்.வேல கூட உனக்கு ஏத்தா மாதிரிதா புடுச்சிருக்க.என நக்கல் பொதிந்த குரலில் கூறினாள்.

ஏய் அசிங்கமா பேசின வாய்லயே போடுவேன்.பொண்ணுங்க பின்னாடி எல்லாம் சுத்தமாட்ட. உன் பின்னாடிமட்டும் தா.என்றான் சிரித்தபடி.

ஆமா இப்ப எங்க போற?

காலேஜ்கு ... என்றாள்.

காலேஜிக்கு ஏ இப்ப போற? காலையில என்ன பண்ண?

அத உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் எனகில்ல. என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

சொல்லாம உன்ன நகரவிடற எண்ணமும் எனக்கில்ல.என்றான் புருவத்தை உயர்த்திய படி.

அது காலையில துருவுக்கு வேலகிடச்சதால கோவிலுக்கு போன அதானால ஆஃப்டே (off day leave) லீவ்.அதா இப்ப போறேன். என்றாள் எங்கோ பார்த்தபடி.

சரி உன் வண்டி என்னாச்சி?

அதுவா, வரவழியில பஞ்சர் மெக்கானிக் ஷெட்ல ஆளில்ல அத வண்டிய கடையிலே விட்டுட்டு நடந்து போற.

சரி வந்து வண்டில ஏறு, நானே காலேஜ்ல விட்டுறேன்.என்றான்
அதுக்கு வேற ஆளப்பாரு, உன் வண்டில எப்பவும் ஏற மாட்டேன்.என கூறிவிட்டு
வேகமாக நடந்து சென்றாள்.பாவம் அவள் அறியவில்லை, அவள் வாழ்க்கையே அவனுடன் தான் செல்ல போகிறதென்று.


வீட்டில் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க.
விஷ்ணு , தாத்தா பாட்டி அப்பா அம்மா அண்ணா ருத்ரா உங்க எல்லார் கிட்டயும் ஒண்ணு சொல்லனும் என்றான் மெல்லிய குரலில்.

அங்கிருந்த ஹரிணி, எதுக்கிப்ப அட்டனென்ஸ் எடுக்கற, நீ என்ன சொல்லப் போற தாத்தா, என்னால நாளைக்கு மில்லுக்கு போகமுடியாது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அதான சொல்லப்போற, என்றபடி இட்லியை வாய்க்குள் அடைத்தாள்.

ஹரிணியை முரைத்து விட்டு, தாத்தா எனக்கு *** கல்லூரி பேராசிரியரா வேல கிடச்சியிருக்கு.நாளையில இருந்து வர சொன்னாங்க, நீங்க என்ன சொல்றீங்க? என்றான் தயங்கியபடி.

ஹரிணிக்கு விஷ்ணு சொன்னதைக் கேட்டு புரையேற.அருகில் இருந்த கவிதா பொறுமையா சாப்பிடுடி, என
தலையை தட்டியபடி தண்ணீரை கொடுத்தார்.

உனக்கெல்லாம் யாரு வேல கொடுத்தாங்களோ? நீயே ஒரு தண்டசோறு உன்கிட்ட படிக்கபோற பசங்களோட நிலைமை என்னமோ? கையை உயர்த்தி மேலே பார்த்தாள்.

அங்கிருந்த உமையாள், ஹரிணி அண்ணனு மரியாதை கொடுத்து பேசு.மாமா , என் மகனுக்கு புடிச்ச வேலய அவ பாக்கட்டுமே, பாடம் சொல்லி கொடுக்கறவங்க கடவுளுக்கு சமமானவங்க. என விஷ்ணுவின் தலையை வருடினார்.

விருதாசலம், விஷ்ணுவை பார்த்து நீ என்ன வேலைக்கு வேணுனாலும் போ ஆனா வாரத்துக்கு ஒரு முறை மில்லுபக்கம் போய் என்ன வேல நடக்குதுனு பார். நம்ப தொழில நம்பதா பாக்கனும்.என்றபடி சாப்பிட முனைந்தார்.

அங்கு நடந்த அனைத்தையும் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த ருத்ராவின் மனதில், அவனுடைய நினைவுகளையே ஏற்கமுடியாத என்னால் அவனுடன் சேர்ந்து எவ்வாறு தொழில் தொடங்குவது என்ற எண்ணத்திலே சரியாக சாப்பிடாமல் அறைக்கு சென்றுவிட்டாள்.

தாத்தாவின் சம்மதத்தால், மூன்று தாய்மார்களும் விஷ்ணுவிற்கு இனிப்பு ஊட்டி மகிழ. அதை ஏளனபார்வையுடன் கடந்து சென்றாள் ஹரிணி.

ருத்ரா ஆதவ் வாழ்வின் அடுத்தகட்டத்தை பார்க்க காத்திருப்போம்.

ஹாய் பிரண்ஸ் , படிச்சிட்டு அப்படியே போகாம நிறை குறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்க....
நீ(யே)யா?.....
 
Last edited:
[QUOTE = "ஷாலூ ஸ்டீபன், இடுகை: 744805, உறுப்பினர்: 13671"] நல்ல எபி அன்பே.
எழுத்துரு அளவு கொஞ்சம் பெருசு பண்ணலாமா ஆசிரியர் ஜி எங்களுக்கா.
கத ரோம்பா சுவாரஸ்யமானதை விட பொகுது, வழக்கமான எபி கொடுதீங்கான விருவிருப்பா மரிடும்.
இப்போ அண்ணா பங்குதாரர் ஆ அல்லா ருத்ரா பங்குதாரர் ஆ?
பார்ட்னர்ஷிப் கு யோசிக்காது செரினு சொல்லிடீங்களே அவள நல்லா வாங்கலடா நீ எல்லாரும் ம்ம்ம்ம். [/QUOTE]



"மால் கட்டனும்கின்ற ஆசை ருத்ராவோடது . அதனால ருத்ராதா பங்குதாரர். சிவா ஆதவுடைய உயிர் தோழன். தினமும் எபி போடுவேன் தோழியே. அடுத்த அத்யாயத்திலிருந்து எழுத்துருவை பெரியதாக்குகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி."
 

Shaloo Stephen

Well-Known Member
Intha athiyayamum nalla irruku.
Thenmozhi kurichu varunanai nalla irrunthathu.ayyo authore avalda kutty viralil pottu irruntha nail polish colour sollala.(summa jolly ku dont take it serious).
Kootu kudumbamum ,ottrumayum super.
Katha nalla theliva kodukuringo,ezhuthu nadai clear ah irruku.super.
 
Intha athiyayamum nalla irruku.
Thenmozhi kurichu varunanai nalla irrunthathu.ayyo authore avalda kutty viralil pottu irruntha nail polish colour sollala.(summa jolly ku dont take it serious).
Kootu kudumbamum ,ottrumayum super.
Katha nalla theliva kodukuringo,ezhuthu nadai clear ah irruku.super.


தங்களுடைய பொன்னான நேரத்தில் என்னுடைய கதையை பற்றி விமர்சித்ததற்கு மிக்க நன்றி Shallo stephen.
 

Shaloo Stephen

Well-Known Member
தங்களுடைய பொன்னான நேரத்தில் என்னுடைய கதையை பற்றி விமர்சித்ததற்கு மிக்க நன்றி Shallo stephen.
Ungada katha mattrayor katha pola yen post aaguthilla?msg vazhiye than varuthu. Ellavarukum vasikka kidaipathilla. Admin odu check panni seri pannungo. Ungalukkaga aavaludan niraya per kathirukalam.
 
அத்தியாயம்_4

இரவெல்லாம் தூங்காமல் பழைய நினைவுகளின் தாக்கத்தால் அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு நேரத்தை தள்ளிக்கொண்டிருந்தாள் ருத்ரா.

எப்புடி டா என்னப்பாத்து அந்த வார்த்த கேட்ட , அப்ப அந்த நினைப்போடதா என்கூட பழகுனியா? என ஓங்கி மெத்தையை குத்தினாள்.

கண்கள் கசிய, விட்டத்தை நோக்கி மெத்தையில் அமர்ந்திருந்தவளுக்கு எப்போது விடிந்தது என்று தெரியவில்லை. ருத்ரா...ருத்ரா..என உமையாள் அழைக்கும் வரை.

சொல்லுங்க பெரியம்மா, என்ன விஷயம் என்றபடி எழுந்து நின்றாள்.

ருத்ராவின் முகத்தை ஒற்றை கையில் பிடித்துக் கொண்டு, என்னமா கண்ணெல்லாம் சிவந்து வீங்கி இருக்கு அழுதையா என்ன? என்றார் கலங்கிய முகத்துடன்.

இல்ல பெரியம்மா, நைட்டெல்லாம் தலவலி கபோட்ட மாத்திரையும் இல்ல,நீங்களும் தூங்கிட்டிங்க அதானால நைட்டு தூக்கமில்லாம கண்ணு சிவந்திடுச்சி.

வேற ஒண்ணு இல்லையே, நேத்தில இருந்தே உன் முகமே சரியில்ல, ஏதாவது பிரச்சணையினா சொல்லுடா என்றார் முகத்தை வருடிய படி.

ருத்ரா குரலை சமநிலைக்கு கொண்டுவந்து, என் செல்ல பெரியம்மா, என அவரின் முகத்தை கொஞ்சிக்கொண்டு. எந்த பிரச்சணையும் இல்ல மா , மால் விஷயமும் யோசிச்சதால கொஞ்சம் தலவலி மத்தபடி ஒண்ணு இல்ல.

சரி .தாத்தா ,உன்ன வர சொன்னாரு. சீக்கிரமா ரெடியாகி கீழ வா என கூறி இறங்கி சென்றார்.

கீழே சென்ற ருத்ரா. தாத்தா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்து. என்ன தாத்தா என்ன விஷயமா வர சொன்னிங்க?

அது ஒண்ணு இல்லடா இன்னும் இரண்டு நாள்ள திருவிழா ஆரமிக்க போகுது. அதானால நாளைக்கு நாள் நல்லா இருக்கு மாலுக்கான பூமி பூஜைய நாளைக்கே போட்டுடலானு அந்த இடத்தோட ஓனர்கிட்ட பேசிடுமா.ஒப்பந்தமும் இன்னைக்கே முடிச்சிடுமா.என ருத்ராவின் முகத்தை பார்த்து விருதாசலம் கூறினார். சரி எனும் தலையசைப்போடு எழுந்துவிட்டாள்.

அனைவரும் அவர் அவர் வேலைக்கு புறப்பட , மில்லை நோக்கி சென்றாள் ருத்ரா.ஆதவன் மில்லுக்கு வராததால் விருந்தினர் அறையில் அமர்ந்திருந்தாள்.

ஆதவ் வந்தவுடன் அவனுடைய அறைக்கு சென்று எவ்வாறு பேசுவதென்று தயங்கிபடி அமர்ந்திருந்தாள்.

ஆதவ் , சொல்லுங்க ருத்ரா என்ன விஷயம்?

அ..அது, நா உங்க கூடசேர்ந்து மால் வேலைய தொடங்கலாம்னு இருக்க நீங்க என்ன சொல்ரிங்க.என்றாள் தயங்கிய படி.

அப்பொழுது அங்கு வந்த சிவா, ருத்ராவிடம் ஒப்பந்த பத்திரத்தையும், ஒரு பென்டிரவும் கொடுத்து அருகில் அமர்ந்தான்.

பத்திரத்தை ஆதவின் முன்பு நீட்டி, இத படிச்சிட்டு கையெழுத்து போடுங்க. அப்புறம் இன்னும் இரண்டு நாள்ள திருவிழா வரதால நாளைக்கு மால்லுகான பூமி பூஜை போட்டுடலாம்.இந்த பென்டிரவ்ல மாலுக்கான மாடல் இருக்கு, இதல எதாவது மாத்தனும்னா சிவா அண்ணா கூட பேசி மாத்திக்கங்க.என அவன் முகத்தை பார்க்காது எங்கோ பார்த்த படி பேசிமுடித்தாள்.

ஆதவ் பத்திரத்தை படித்துக்கொண்டிருந்தப்போது, சிவாவிற்கு அழைப்பு வர பேசியபடியே வெளியே சென்றான்.

கால்மேல் கால் போட்டபடி தலையை சற்று வலபுறம் சாய்த்து ருத்ராவை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த ஆதவ்.

என்ன ருத்ரா ,கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு அழுதிங்களா என்ன?? சொல்லபோனா அந்த அழுகைக்கு காரணம் நானாதா இருப்ப. என்றான் தெணாவட்டாக.

சிரித்தபடி ருத்ரா, நா வாழ்க்கையில உண்மையா உயிரா நினச்சவன் என்ன ஏமாத்திட்டு போகும் போதே நா அழல. உங்கல நெனச்சி நா ஏன் சார் அழனும் என்க.

இப்ப நீங்களும் நானும் ஒரு தொழில்ல பார்ட்ணர்ஸ். அப்படி இருக்கும் போது என் அழுகைக்கு நீங்க எப்படி காரணமாகுவிங்க சார்.என புருவம் உயர்த்தி கூறினாள்.

இனி உன்ன அழவைக்க மாட்டன்டி ஆரா. என ஆதவ் தன் மனதில் சொல்லியபடி, நான் இனி இங்க இருந்துதான் என் அப்பா தொழில பாத்துக்க போகிறேன், உண்மைய சொல்லனும்னா உன்ன கல்யாணம் பண்ணிக்கதா வந்தேன் எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்? என்றான் சட்டென ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி.

அவனை முரைத்த ருத்ரா, நா இங்க தொழில் விஷயமா பேச வந்திருக்க அதமட்டும் பேசலாம் என்றாள் மூஞ்சியில் அடித்த படி.

இதற்குள் சிவா உள்ளே வர, என்னடா பேப்பர்ஸ் எல்லா ஓகே வா மாடல்ல எதாவது மாத்தனும்மா?

இந்த பேப்பர்ல என்ன இருந்தாலும் நா படிக்காமலே சைன் பண்ணுவ, உன்ன விட நா வேறயார நம்ப போற என ருத்ராவை பார்த்த படி சிவாவிடம் கூறியவன். பேப்பர்சில் சைன் இட்டு மாடலை பார்க்காமலே நாளைக்கே பூஜை வைக்கலாம் என கூறினான்.

அதற்கு பிறகு சிவாவும், ருத்ராவும் ஆதவிடம் சில விஷயங்களை பேசிவிட்டு புறப்பட்டனர்.

கல்லூரியில் தன்னுடைய யமகா பைக்கை நிறுத்திவிட்டு. கிரே ஷர்டும் கருப்பு பேன்டுடன் இடகையில் பெரிய வட்டவடிவம் கொண்ட கருப்பு பட்டை வாட்சும், வல (ம) இட கையின் மோதிரவிரலில் மெல்லிய தங்க மோதிரமும், கழுத்தில் மெல்லிய தங்கசெயின் அவன் காலர் வழியே சிறிய இடைவெளியில் தெரிய, கருப்பு ஷூவுடன் உள்ளே சென்றவனை அங்கிருந்த அனைத்து பெண்களின், ஆண்களின் கண்களும் ரசிக்க தவரவில்லை.

யாருடா இவ செமையா இருக்கா? சும்மாவே இங்க நமள ஒருதரும் பாக்கமாட்டாங்க இதல இவன் வேற என்று தன் நண்பனிடம் ஒருவன் கூறினான்.

என்ன டிப்பார்ட்மெண்ட் மச்சி என்ன இயர், சமயா இருக்கான் என பெண்கள் பேசிக்கொண்டிருக்க.

பல மாணவர்கள் பேசுவதை கேட்ட விஷ்ணுவை பார்க்காத மாணவர்கள்,
முதல்லர் அறையுனுள் சென்ற விஷ்ணுவை பார்க்க ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அறையை நோட்டமிட்டபடி அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்.

அப்போழுது வருகைதந்த தேன்மொழி, அங்கு அலைந்துக்கொண்டிருந்த மாணவர்களை புரியாத பார்வை பார்த்துவிட்டு முதல்வர் அறையை நோக்கி சென்றாள். அங்கிருந்த காவலர் உள்ளே சார் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக கூறியவுடன் அவ்விடத்தைவிட்டு சென்றாள்..

ஐயர் மந்திரம் கூற ஆதவ், அருகே அமர்ந்திருந்த ருத்ராவை நோக்கி
எனக்கு இப்பவே உன்ன கல்யாணம் பண்ணணைம்னு இருக்கு என ஒற்றை கண்ணடித்தான்.

விஷ்ணுவை பார்த்ததும் தேன்மொழியின் நிலை ??

கதையை படித்துவிட்டு கமெண்ட் பண்ணுங்க பிரண்ஸ்....

நீ(யே)யா?......
 

Shaloo Stephen

Well-Known Member
Globejamoon romba kutty ah irruku pa.(epi kutty ah irruku)globejamoon sonathille epi ippadinu therinju irrukum.
Romance,sentiments, ellam ok comedy missing. Comedian kooty varungo authore .Appo unga fruitsalad fulfil aavum allo.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top