அன்பின் இனியா 18

Advertisement

achuma

Well-Known Member
அடுத்துபதிவு பதிவிட்டுள்ளேன் நட்புக்களே.
படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் .
சென்ற பதிவிற்கு உங்களின் ஆதரவிற்கு நன்றி.
stay safe friends


விடியற்காலை, நான்கு மணி அளவில், முதலில் மன பெண்ணையும் மன மகனையும் முதலில், எண்ணெய் நலங்கிற்கு அழைத்தனர் .
இனியா அவள் வீட்டாருடன், நலங்கு முடிந்து, தயார் ஆனாள்.


அன்பு விஷயத்தில் மட்டும் விஷாகா ஒவ்வொன்றுக்கும் முறுக்கி கொண்டு திரிந்தாள்.
தன்னை தன் பிறந்த வீட்டார் ஒதுக்கி வைத்தது போன்று அவளுக்குள்ளே ஒரு கற்பனையை உருவாக்கி கொண்டாள் .

அது போன்ற நினைப்பை, அவள் அன்னையிடமும் ஏற்படுத்தினாள், இதன் வழியாக, அவர் இனியா மீது இன்னும் வஞ்சம் உருவாகும், அவளை அடக்கி வைப்பார், என்று நினைத்தாள் .


அந்தோ பரிதாபம், இந்த விஷயத்தில் மட்டும், அவள் சுமதி மீதான எதிர்பார்ப்பு, அவளுக்கே எதிர்மறையாக மாறியது.
அவரின் வருத்தம் முழுதும் விஷாகா மீதே சென்றது.
அவருக்கு மகளின் மீது முதல் முறையாக ஒரு சுனக்கம் உருவானது.


"இந்த பொண்ணு ஏன் தான் இப்படி பன்றாளோ, நானே எவ்வளவு தான் இழுத்து நிற்க வைக்கிறது ஒவ்வொன்னுத்துக்கும்."
" ஒரே தம்பி, அவனுக்கு முன்னாடி நின்னு செய்யணும்னு, இவளுக்கும் இருக்கனும் ."
"ஏற்கனவே எல்லாருமே இவ மேல கோவமா இருக்காங்க, நாளைக்கு எனக்கு பிறகு, இவன் தானே இந்த பொண்ணுக்கு செய்வான் ."
"இதுல பிடிச்ச பொண்ண வேற கல்யாணம் செய்துக்க போறான்."
"நாளைக்கு அன்பு பொண்டாட்டி பேச்சை கேட்டு, என் பொண்ணுக்கு, பொறந்த வீட்டு துணை இல்லாம தனியா நிற்க கதி வந்துடுமே".
"இது எல்லாம், ஏன் இவளுக்கு தெரியா மாட்டங்குது," என்று அப்பொழுதும் மகன் இறுதி வரை மகளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே யோசித்தது அந்த தாய் உள்ளம் .


சரண், அன்பு கூடவே இருந்து கொண்டு, அவனுக்கு துணையாக அனைத்தும் செய்தான் .
அவனுக்கு காசியாத்திரை சடங்கு முடிந்து, அவன் மீண்டும் வந்து மன மேடையில் அமரும் வரை அவன் கூடவே இருந்தான் .
இதற்க்கு மேல், மற்ற சொந்தங்கள் அவனை சூழவே, "அம்மாவோடு இருக்கேன் அன்பு," என்று அவனிடம் கூறி கீழே சென்று, அவன் அன்னையுடன் அமர்ந்து விட்டான்.


"சரண் அங்கு நிற்கிறாங்க பாரு, அவங்க பொண்ணோட பெரியம்மா, அவங்க தான் எல்லா சடங்கும் ஐயர் கிட்ட சொல்லிட்டு இருக்காங்க, அவங்களுக்கு தான் முதல் மரியாதையும் தராங்க, அன்பு தேர்ந்தெடுத்த பொண்ணு வீடு, ரொம்ப நல்ல இடம்,"
"அவங்க குடும்பத்தில் இருக்குறவங்க எல்லாருமே, காசு பணத்தை விட மனுஷங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவங்க, கண்டிப்பா, அந்த வீட்டில வளர்ந்த பொன்னும், ரொம்ப நல்ல பொண்ணா தான் இருபாப்பானு, அவங்க குடும்பத்தை வைத்தே சொல்லிடலாம்".
"நமக்கு மட்டும் ஏன் டா, இப்படி ஒரு உறவுகள் கிடைச்சி இருக்கு," என்று எதையும் மறக்க முடியாமல் வருந்தினார் .
"என்ன மா, உன்னால இங்க இருக்க முடியலையா, எல்லாம் ஞாபகத்துல வரும் தெரிஞ்சி தான், உன்னை இங்க வர வேண்டாம்னு சொன்னேன், ஆனா, அன்புக்காக வர சூழ்நிலை".
"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ மா, போய்டலாம்," என்று அன்னையை தேற்றினான் .


வினோத்துக்கு நன்றாக புரிந்து விட்டது, சரண் தன் வருகையை விரும்பவில்லை என்று, தான் என்ன செய்தேன், எல்லோர் மீதும் கோவமாக இருக்கானே, என்று அவன் உள்ளம் தவித்தது.
வினோத், தேவகி, என்று மற்றவர்கள், அன்புவுவை சூழ்ந்ததும், அவர்களுடன் இருக்க பிடிக்காமல் அவனே வந்து விட்டான் .


வினோத், தான் வந்ததும் அவன் கீழே சென்றதை நினைத்து வருந்தினான் .
சிறு வயதில், அனைவரும் ஒன்றாக தான் வளர்ந்தோம்.
சரணின், தந்தை உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நேரம், வினோத், வெளி நாட்டில் இருந்தான்.


உதவிக்கு என்று, விஷாவின் தந்தையிடம் சென்றால், அவர் ஏளனமாக பேசியே, பணம் கொடுத்ததில், அந்த பணத்தை வாங்காமலே, மற்ற இடத்தில உதவி கேட்டு, ஒரு வழியாக, அவருக்கு சிகிச்சை கொடுத்தாலும், பலன் இன்றி அவர் உயிர் பிரிந்தது.
நாதனும் தகுதி, பார்த்தே பழகுவதால், அவருடனும் ஓட்டுதல் இல்லை.
விளைவு, சரண் அனைவரையும் ஒதுக்கி வைத்தான்.


"அன்பு, சரண் உனக்காக தான் அவ்வளவு தூரம் இருந்து வந்து இருக்கான், நான் வேணும்னா, அம்மாவோடு கீழே இறங்கிடறேன், நீ அவனை வர சொல்லு", என்று கேட்டதில், "மாமா, எங்கயும் போகாதீங்க, அவன் வருவான், நீங்களும் இருங்க," என்று அதிதியிடம் கூறி அழைத்து வர செய்தான்.
அதிதி, அவள் சந்திரா அத்தையிடம் சென்று, "அத்தை, அண்ணா உங்க இரண்டு பேரையும் மேடைக்கு வர சொன்னாரு, நீங்க வரலை என்றால், அவரே இறங்கி வருவேன்னு சொல்றாரு," என்று சரணை முறைத்து கொண்டே கூறி முடித்தாள் .
சரண் அன்புவையே பார்த்து கொண்டதில், அவன் பார்வையின் உஷ்ணத்தில், "அம்மா, வாங்க, இல்லை அவன் என்னை கொண்ணுடுவான், அவனுக்காக, இந்த பண கும்பலை, கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் செய்துக்கலாம்", என்று பதில் முறைப்பு அதிதிக்கு வழங்கினான் .


அவன் அன்னையுடன் மேடைக்கு சென்றான் .
சந்திரா தயங்கினாலும் அன்பு அவரை மீண்டும், கைகளால் , வருமாறு அழைக்கவே, மகனை ஒட்டியே செண்டு மேடை ஏறினார் .
"டேய் அடங்க மாட்டியா நீ," என்று நண்பனை, கடிந்து கொண்டான் சரண் .
"நீ தான் டா ஆடுற, ஒழுங்கா இங்கயே இரு," என்று பதில் கொடுத்தான் அன்பு.


சுமதியை, அன்பு தன்னருகிலேயே, நிற்க வைத்து கொண்டான், எங்கும் செல்ல கூடாது என்று.
அவரும் மகன் திருமணத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டார்.
விஷாகா பற்றுதல் இல்லாமல், இருப்பதில் வருத்தம் என்றாலும் மகன் திருமணத்தை, முன் நின்று செய்தார்.
இனியாவும் முகுர்த்த புடவையில் எந்த ஒப்பனையும் இன்றி, மஞ்சள் மட்டும் பூசிய முகத்தில், நிறைந்த கலையுடன், அழகு மிளற, அனைவரையும் வணங்கி, அவனின் பக்கத்தில் அமர வைக்க பட்டாள் .


அவர்களின் ஜோடி பொருத்தம் அங்குள்ளோரை, அவர்களையே பார்க்க செய்தது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர், பிறந்தனர், என்பது போன்றே அவர்களின் பொருத்தம் அமைந்ததில், ஆண்டவனின் பூரண ஆசி போலும் .


அதன் பிறகு, சடங்குகள் வேகமாக நடந்தேறியது.
முதலில் பெண்ணின் பெற்றோருக்கு பாத பூஜை முடிந்தது, பிறகு மன மகனின் பெரியன்னை பெரியப்பா இருவருக்கும் அன்பு பாத பூஜை செய்தான்.
நுகி தடியில் மூன்று முறை மாங்கல்யம் பொருந்திய மஞ்சள் கையிற், வைத்து அபிஷேகம் செய்தனர்.
அதன் பிறகு, தாய்க்கு சமமான தாய் மாமனின், மடியில் இனியாவை, அமர வைக்க பட்டனர்.


மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றார் ஆசியுடன், தேவர்களை வணங்கி, அன்பு, இனியாவின் கழுத்தில் தாலி கட்டினான்.

இருவரின் உடலும் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது, தன் இடம் வந்து சேர்ந்த உணர்வு, அன்புவுக்கு.
அவனின் தாலி தந்த உணர்வு, மன மகளுக்கு.


இந்திரா ஆனந்தத்தில் கண்ணீர் சிந்த, மற்ற சொந்தங்கள் அவரை தேற்றினார்.
மீண்டும், இனியா அன்பு பக்கத்தில் அமர வைக்க பட்டு, அவன் நெற்றில் இட்ட குங்குமத்தை பெற்று கொண்டாள் .
நாத்தனார், மூன்றாவது முடிச்சி போடும் சடங்கிற்கும் விஷா, வர முடியாது என்று முன் கூட்டியே மறுத்து விட்டாள் .


அதற்கும் , அன்புவின் அக்கா முறை ஒருவர் முடிச்சிட்டார், என்றால், அதிதி, கையில் விளக்குடன் மணமக்கள் பின் நின்று கொண்டாள் .

எதில் எல்லாம் தனது முன்னுரிமை, வேண்டும், என்று நினைத்தாளோ, அவளே, அதில் இருந்து நழுவி செல்வது தெரியாமல், அவளின் கோவமே அவளுக்கு பிரதானமாக தெரிந்தது.

இலக்கியா இனியாவிடம் வாழ்த்து கூற, அவள் முன் குனியும் முன்பு, தானே முதலில் அவன் மனைவிக்கு
வாழ்த்து கூற வேண்டும் என்று அன்பு, இனியாவை, நெருங்கி, அவள் காதோரம் "கங்கிராட்ஸ், வெல்கம் டு மை லைப்," என்று வாழ்த்தினான் .


இனியா கணவன் வாழ்த்துவான் என்று நினைக்கவே இல்லை, அதில் மகிழ்ச்சியில் தடுமாறி, "தேங்க்ஸ், கங்கிராட்ஸ் ," என்று அவளும் வாழ்த்தினாள் .
இருவரும் நேருக்கு நேர் புன்னகை புரிந்தனர் .

மீண்டும், ஐயர் , அவரின் சடங்குகளில் மன மக்களை, இழுத்து கொண்டார்.


முதன் முதலில், மாப்பிளை வீட்டில் கொடுத்த காசி துணியில், பெண் வீட்டில் கொடுக்கும் விநாயகர் விக்ரகம் வைத்து, மன மக்களை, ஐயர் தொட்டில் போல் பிடித்து கொள்ள சொன்னார்.

"இருவரையும் பிள்ளை பாக்கியம் வேண்டி, விநாயகர் விக்கிரகம், மூன்று முறை தொட்டிலில் ஆட்டி விடும் படி செய்தார்.

பெண்னின் முகத்தில் தானாக வெட்கம் குடிகொள்ள, மற்றவர்களின் கிண்டலுடன், தொட்டில் ஆட்டினர்.
பெண்ணின் பாதத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மெட்டி இட்டான், மன மகன்.


இப்படி அணைத்து சாங்கியமும் நடந்தேறி, பெற்றவர்களிடம் ஆசி பெற்று, காலை உணவு முடிந்தது.

மீண்டும் அனைவருடனும் புகை படம், குடும்ப புகை படம், எல்லாம் நிறைவடைந்து, இனியா தன் கூட்டை விட்டு, வேறு கூட்டிற்கு செல்லும் கனமான சூழல்.
அவள் தாய் தந்தையின், கைகளை பற்றி கொண்டு, நின்றிருந்தாள் .


மகள், முன் அழுதாள், அவள் மகிழ்ச்சியுடன் இங்கிருந்து செல்ல மாட்டாள், என்று அவளின் பெற்றோர், அவர்களின் கண்ணீரை கட்டு படுத்தி கொண்டு, "இனி உன் வீடு , உனக்குன்னு புது சொந்தம், எல்லாம் புதுசா இருக்கும் மா."
"பார்த்து பத்திரமா இருக்கனும், உனக்குன்னு பொறுப்பு வந்து இருக்கு, கவனிச்சிக்கோ, நல்லா இரு குட்டிமா," என்று இருவரும் அவளை ஆசி வழங்கினார்.
அதனை கவனித்து கொண்டு அன்புவும் அவர்களுடன், நின்றிருந்தான் .


அவனுக்கு, எப்படி கையாள்வது என்று தெரியவில்லை, அதிதிக்கும் தனக்கும் இந்த நிலை தானோ என்று, அவன் கண்கள் அதிதியை கூட்டத்தில் தேடியது.
"நல்லா பார்த்துப்பேன் மாமா," என்று அவர் கைகளை பிடித்து கொண்டு கூறினான்.


இளங்கோ மட்டுமே, அழுது கரைந்தான், இனியாவும், அவனுடன் சேர்ந்து கொண்டாள் .
இருவரும் எவ்வளவுக்கு எவ்வளவு சண்டை போட்டாலும், இருவரும் அத்துணை ஒற்றுமை.
இலக்கியா சென்ற பிறகு, இருவர் மட்டுமே வீட்டினில் என்பதால், இருவருக்குள் நட்பு என்ற உறவு இருந்தது.


அன்பு அவனையும் தேற்றி, இனியாவை ஒரு வழியாக, அழைத்து வந்து, வண்டி ஏறினான் .
இனியாவுடன், இலக்கியா மற்றும் செழியன் புறுபடுவதாக இருந்தது.
ஆகையால் அவர்களும் இனியாவுடன் சென்றனர்.
மாப்பிளையின் சுற்றத்தார், புடை சூழ, இனியா, அவள் புகுந்த வீட்டிற்கு சென்றாள் .


சரண் அவன் அன்னையுடன் , மண்டபத்தில் இருந்து விடை பெற்று கிளம்பி விட்டான்.
அன்புவையும் இனியாவையும் வாழ்த்தி வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது, அவன் கண்களுக்குள் அதிதியை நிரப்பி கொண்டு விடை பெற்றான் .
நடக்காத ஒன்றை, தொங்கி கொண்டு சுற்றும் தன் மனதை, அடக்கும் வழி தெரியாமல் தத்தளித்தது சரணின் உள்ளம்.


விஷாகா, "இதுக்கு மேலையும் என்னை போர்ஸ் பண்ணாதீங்க,தலை ரொம்ப வலிக்குது, நான் நேரா வீட்டுக்கு போறேன்," என்று கணவனிடம் கூறி விட்டு, வழியிலேயே அவள் வீட்டின் பக்கம் இறங்கி கொண்டாள்
உடன், நாதனும் அவரின் அத்தை குடும்பமும் அங்கேயே இறங்கி கொண்டனர்.


"ச்சய், இந்த கிழவி என் வீட்டுல தான் தங்க போகுதா, கொஞ்ச நாள் இது இம்சையை வேற தாங்குணுமா," என்று சலித்து கொண்டே, அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.
மற்றவர் முன்பு மகளிடம் எதுவும் கேட்க முடியாமல், சுமதி தவித்தார்.


"மகராசி, வீட்டுக்கு வரும் போதே, நாத்தனார் உறவு வெட்டிட்டு வரா," என்ற கோவம் இனியா மீது பாய்ந்தது.
அதிதி, ஆரத்தி எடுத்து, அவள் அண்ணியை அழைத்து சென்றாள் .
இனியா அன்புவின் பெரியன்னையின் வார்த்தை பின் பற்றி, பூஜை அறையில் விளக்கேற்றி, பால், பழம் சாங்கியம் எல்லாம் முடித்து, அவளை அதிதி அறையில் ஓய்வெடுக்க கூறினார் .
இனியாவுக்கு அவள் தந்தையிடம் வந்து சேர்ந்த தகவல் கூற நினைத்து அவள் இலக்கியாவை தேடினாள்.
இலக்கியாக்கும் அதே தான், அவள் மோகனிடம் தகவல் கூறினாள்.
தங்கை மற்றவர்களுடன் பழகட்டும் என்று அவள் அன்பு குடும்பாத்தாருடன், இருந்து கொண்டாள், தயக்கம் வேறு
எப்படி, இனியாவை அறைக்குள் சென்று சந்திப்பது என்று.


அதிதியை கண்டதும் அவளிடம் தொலைபேசி கொடுத்து, இனியாவை தந்தையுடன் பேசுமாறு கூறி அங்கு மற்ற பெண்களுடன் இருந்தாள் இலக்கியா .
சுமதி இதனை கவனித்து, "இப்போ தானே வந்து சேர்ந்தா, அதுக்குள்ள என்ன, அவங்க வீட்டுல இருந்து, போன், அப்படி ஒரு அழுகை வேற இவ தம்பிக்கு, இதுக்கு அவளை வீட்டுலயே வெச்சிக்க வேண்டியது தானே, இப்போவே ஒட்ட விட கூடாது, என் பொண்ணு இங்க வராமையே போய்ட்டா,"
"இவ அவ குடும்பத்தோட, கொஞ்ச கொஞ்சமா விலகனும்," என்ற வஞ்சம் அப்பொழுதில் இருந்தே மனதில் தீயாக பற்ற ஆரம்பித்தது .
அதிதியும் அவள் அந்நயிடம் போன் கொடுத்து, வெளிய சென்று விட்டாள் , இலக்கியா கூறியதை கூறி.


நேரம் பார்த்து கொண்டிருந்த, சுமதி, இனியா மட்டும் தனியாக இருப்பதை கண்டு, அறைக்குள் நுழைந்தார்.
மாமியார் என்ற மரியாதை கருதி, அவள் எழுந்து நிற்கவே, "மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை," என்று மனதிலே நொடித்து கொண்டு, "என்ன மா ரெஸ்ட் எடுக்காம கையில போன், இந்த காலத்து பொண்ணுங்க எப்போ பாரு போனோட சுத்துறதே வேலையா , போச்சு," என்று பொதுவாக பேசுவது போல் பேசி, "சரி சரி, நீ ரெஸ்ட் எடு மா, அப்பறமா எங்க அக்கா வந்து கூப்பிடுவாங்க, அப்போ வெளியே வா," என்று அவளை பேச விடாமல், கிட்ட தட்ட இனியா கையில் இருக்கு பேசியை பறித்து கொண்டு செல்வது போல் , போன் எடுத்து கொண்டு இலக்கியா கையில் கொடுத்து விட்டு சென்றார்.
அப்பபோழுது, அவருக்கு அச்செயல் ஆறுதலாக இருந்தது போன்று.
அந்த நேரம் அவளை அவள் பெற்றோருடன் பேச விடாமல் செய்த ஆசுவாசம் சுமதி மனதில்.


"நான் எப்போவும் போன் கையில் வச்சிட்டு சுத்துவேன் ,அது இவங்க பார்த்தாங்க," என்று இனியாவுக்கு மாமியார் மீது, கோவம் தான் வந்தது.
"என் போனையே, நான் எடுத்துட்டு வர மறந்துட்டேன், யார் கிட்ட கொடுத்தேனும் தெரியலை, இதுல இவங்க வேற," என்று அவள் நினைத்து, அமைதியானாள்.


"டேய் படவா உதை படுவ, உன் பொஞ்சாதி தான், அதுக்குன்னு நீ கேட்டதும் பார்க்க விட முடியாது," என்று அவனை மிரட்டி கொண்டிருந்தார் அன்புவின் அத்தை .
"ப்ளீஸ் அத்தை, அஞ்சே நிமிஷம் மட்டும் அவளோட பேசிட்டு வந்துடுறேன், பெரியம்மா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க," என்று அவரை ஒரு வழியாக சமாளித்து, அவன் தன்னவள், இருக்கும் தங்கையின் அறைக்குள் சென்றான்.


அங்கு அவனை எதிர்பார்க்காத இனியா, வியப்பில் அவனை பார்த்து எழுந்து நின்றாள் .
"உட்கார் இனியா," என்று கூறி கொண்டே அவள் அருகில் அமர்ந்தான் .


அவள் உடனே நகர்ந்து அமர்ந்ததும், அவளை இடையோட இழுத்து அருகில் அமர வைத்து கொண்டான் .
அவளுக்கு தான் அவன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்காமல் தவித்த இனியா, "எடுங்க கையை , நீங்க ரொம்ப அடாவடி, நான் இங்கேயே உட்காறேன்," என்று அவள் இடை பற்றிய, அவன் கையை எடுக்க முயற்சி செய்தாள் .
"குட், இது நீ முதலே செய்து இருக்கலாம், உன்னை என்ன செய்துட்டேனு தள்ளி தள்ளி போறே," என்று கேட்டு கொண்டே, மோகனுக்கு அழைத்து, அவள் கையில் போன் கொடுத்தான்.


"பேசு மாமா தான், வந்து சேர்ந்ததை சொல்லணும்ல, இரண்டு பேரும் சேர்ந்து, அவர்கிட்ட பேசலாம்னு தான் இங்க வந்தேன்."
"நீயும் அவரை பற்றி யோசிச்சிட்டே இருப்ப தானே."
என் எண்ணத்தை புரிந்து வைத்திருக்கும் கணவன் மீது காதல் பொங்கியது பாவைக்கு .





 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
விஷாகா தப்பான வழில
போய் உடன் பிறப்புகள்
பாசமே கிடைக்காமல்
தவிக்க போறா
சுமதி லூசு மகள மட்டுமே
எப்பவும் யோசிக்கிற
அம்மா
இனியா அன்பு அடாவடி
ஆரம்பம்

சரண் அதிதி முறைப்பு
இணைப்பாக மாறுமா
 

achuma

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
விஷாகா தப்பான வழில
போய் உடன் பிறப்புகள்
பாசமே கிடைக்காமல்
தவிக்க போறா
சுமதி லூசு மகள மட்டுமே
எப்பவும் யோசிக்கிற
அம்மா
இனியா அன்பு அடாவடி
ஆரம்பம்

சரண் அதிதி முறைப்பு
இணைப்பாக மாறுமா
Thanks sis
 

Lakshmimurugan

Well-Known Member
சுமதி பாசம் வைக்க வேண்டியது தான் அதற்காக இது கொஞ்சம் ஓவர் தான் பொண்ணு செய்த எல்லாத்துக்கும் மருமகள் மேலே தப்பு கண்டு பிடிப்பார்களா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top