ராதையின் கண்ணன் இவன்-29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

AbiGank

New Member
ஸ்வேதாக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நடந்ததை மறுபடியும் முதலில் இருந்து மனதில் மெதுவாக ஓட்டி பார்க்க, முதலில் ஆர்.கே, ராதிகா வரவும், இவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் சஞ்சீவின் பெரியம்மா அருகில் சென்று அமரவும், இவ்வளவு நாள் மகாராணி தோரணை காட்டியவர், அந்த ராதிகாவை கன்னம் வழித்து முத்தம் கொடுத்ததோடு, அவளிடம் உரிமையாக பேசவும் தான், மனதிற்குள் மணிஅடித்தது. சஞ்சீவ் ஏற்கனவே தன் பெரியம்மாவிற்கு ஒரு பையன் இருப்பதாகவும், அவனை பற்றி ஏதோ சொல்ல வரவும், இவள் தான் அந்த பேச்சை தவிர்த்து இருந்தால், ஒரு வேளை கேட்டு இருக்க வேண்டுமோ என யோசிக்கையிலே, இவளின் மாமியார் அங்கு செல்வதும், ஏதோ பேசுவதும் பின்பு அவர் ஆர்.கே, ராதிகாவுடன் மேடையேற, எதற்கு என்று இவள் யோசிக்கையிலே அந்த ஆர்.கே ஒரு நக்கல் புன்னகையுடன், தன் மனைவியுடன் இணைந்து தாலியை எடுத்து கொடுக்க , "என்னது இது" என்று இவள் நடக்க போவதை உணர கூட நேரம் கொடுக்காமல் சஞ்சீவ் அவளின் கழுத்தில் அந்த தாலியை அணிவித்து இருந்தான். நெஞ்சம் கொதிக்க, யாரிடமும் கேட்கவும் முடியாமல், யாரிடம் கேட்க என தெரியாமல்,எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்க என நேரம் ஒரு பக்கம் பறக்க, தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவ்ளோ நேரமும் அமைதியாக இருந்தவள், கொஞ்ச நேரம் கிடைக்கவும், அந்த நேரத்தில் அவளின் அருகில் அவளின் மாமியார் வரவும், அவரிடம் கோவமாக,

"அவங்க எதுக்கு தாலி எடுத்து கொடுத்தாங்க" என எடுத்த எடுப்பிலே பல்லை கடிக்க, அவரோ அவளை, அவளின் கோவத்தை கணக்கிலே கொள்ளாமல் மிகவும் சாதாரணமாக,

"வேற யாரு எடுத்துக்கொடுக்கனும்னு சொல்ற, ராகவ் அஹ பகைச்சிகிட்டா நாம அந்த வீட்டுல இருக்க முடியாது" என்று அவளின் மாமியார் சொல்ல, அவர் தமிழில் பேசினாலும் அவர் சொல்ல வருவதின் கருத்து புரியாமல்,

"அந்த வீட்டுல உங்களுக்கும் உரிமை இருக்குது தானே" என கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவர்,

"சஞ்சீவ், ராகவோட சித்தி பையன், சித்தப்பா பையன் இல்ல" என சொல்ல, அவர் சொல்ல வருவது புரியவும், நாக்கு எல்லாம் உலர,

"அப்படின்னா" என கேட்க வாய் திறக்க, வார்த்தைக்கு பதில் வெறும் காற்று மட்டுமே வர, அவள் கேட்க வருவதை புரிந்துகொண்டு அவளின் மாமியார்,

" கிருஷ்ணா குரூப் குடும்பத்தின் ஏக வாரிசு ராகவ் தான், என்னோட அக்கா தயவால் தான் நாங்க அங்க அந்த குடும்பத்து பேரை உபயோகப்படுத்தி கிட்டு, எல்லா வசதிகளையும் அனுபவிச்சி கிட்டு இருக்க முடியுது, இப்போ என்னடான்னா அவன் பொண்டாட்டி கிழிச்ச கோட்டை தாண்டாதா புருஷனா இருக்கான், சரி எங்க அக்காவையாவது ஏதாவது சொல்லி தூண்டி விடலாம்னு பார்த்தா, அவங்க என்னமோ உலகத்துல இல்லாத மருமகள் வந்த மாதிரி அந்த தாங்கு தாங்குறாங்க, ராதிகா உன்னோட அக்கா தானே, ஒழுங்கா அவளை சோப்பு போட்டு உன்னோட கைக்குள்ள வசிக்க பாரு, சஞ்சீவ் உன்னை விரும்புறேன்னு சொன்னதும் நாங்க சம்மதிக்க காரணமே, நீ ராதிகா தங்கச்சி அப்படின்னு தான், பொண்டாட்டி மேல இருக்க பாசத்துல அவளோட தங்கச்சி உன்னையும், உன் குடும்பத்தையும், என்னோட மாமா(ராகவின் அப்பா) மாதிரி ராகவும் பார்த்துப்பான் இல்ல, நாங்களும் அவன் எப்போ வீட்டை விட்டு வெளிய போக சொல்லுவானு பயந்துகிட்டே இருக்க வேண்டாம் பாரு" என காரிய காரணத்தோடு விளக்க, ஸ்வேதாவிற்கு தான் மிக, மிக கேவலமாக தோற்று இருப்பது புரிந்தது. யாரை வெற்றிகொள்ள வேண்டும் என அவள் இவ்வளவும் செய்தாலோ, அவளின் தங்கை என்பதாலேயே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு, அவர்கள் கையாலே தாலி எடுத்து கொடுக்க அவளின் கல்யாணம், இனி வாழ்க்கை முழுதும் அவர்களின் கையை எதிர்பார்த்தே தான் தன் வாழ்க்கை என்பதும் புரிய, அவளின் மாமியாரின் பேச்சிலே அவளின் எதிர்கால வாழ்க்கை படமாக விரிய, அவர் விவரித்த காட்சிகளின் கணம் தாங்காமல் அப்படியே உறைந்து போய் அமர்ந்துவிட்டாள். யார் செய்த புண்ணியமோ சஞ்சீவ் அவளை உண்மையாக விரும்பி மணம் முடித்து இருக்கிறான், அவனின் காதலையும், அதை கொண்டு வாழ்க்கையும் சீரமைத்து கொள்வதும், இல்லை இல்லாத பேரையும், புகழையும், பணத்தையும் நினைத்து வாழ்வை பாழாக்கிக் கொள்வதும் இனி ஸ்வேதாவின் கையில் தான்.

ராதிகாவும் அவளின் கணவனும் மண்டபம் உள்ளே நுழைந்தது முதல் அவர்களை கண்ணிலே நிரப்பி கொண்டு இருந்த தெய்வா, சண்முகம் தம்பதியரை கவனித்த பொன்னிற மேனியன் திரும்பி தன் மனையாளை பார்க்க, அவ்ளோ அவனின் தாயோடும், அவளின் தாத்தா, பாட்டியிடம் பேசிக்கொண்டு இருக்க, அவளின் கவனத்தை கவராமல் தெய்வா, சண்முகம் தம்பதியரை நெருங்கினான் பொன்னிற மேனியன்,

"அப்புறம் எப்படி இருக்கீங்க மிஸ்டர்.சண்முகம், பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லை, அப்புறம் என் கையில் நான் கட்டியிருக்கேனே வாட்ச் அது உங்க பொண்ணு யூஸ் பண்ற காரைவிட விலை அதிகம், அப்புறம் என்னோட கார் விலையை எல்லாம் நீங்க உங்க லெவல்கு யோசிச்சி பார்க்க கூட முடியாது, கேட்க மறந்துட்டனே உங்க பத்து கடை ஏப்படி இருக்கு, அச்சோ இப்படி கேட்டு இருக்க கூடாது, இப்போ யார்கிட்ட இருக்குனு கேட்டு இருக்கணும் இல்ல, உங்களுக்கு தெரியாது இல்லை, உங்க கடைகளை வாங்கியது நான் தான் ஆனால் என்னோட ராதை பேரில், அன்றைக்கு அவளோட தகுதி பத்தி என்னமோ சொன்னிங்க இல்ல, இப்போ உங்க தகுதி என்னனு உங்களுக்கு தெரியுமா, யாரை வேண்டாம்னு விட்டுபோனீங்களோ, அவகிட்ட தான் சம்பளம் வாங்கி சாப்பிட்டு கிட்டு இருக்கீங்க, நேரம் எப்போ எப்படி மாறும்னு யாருக்குமே தெரியாது, அன்றைக்கு என்ன ஒன்னுமே இல்லாதவனா நினைச்சி கேவலப்படுத்தினீங்க, இப்போ நீங்க ஒன்னுமே இல்லாம நிற்கிறீங்க, இவ்ளோ தான் வாழ்க்கை மிஸ்டர்.சண்முகம், வரட்டா" (மக்களே பீல் தி பீ.ஜி.எம்) என அவரின் பதிலை எதிர்ப்பார்க்காமல் திரும்பி நடந்தான்.

பொன்னிற மேனியன் வந்து பேச,பேச அவன் பேசியதை எல்லாம் காதிலே வாங்காமல், இவன் தன் மகளுக்கு பொருத்தமா, அவளை கண்கலங்காமல் பார்த்துகொள்வான என அவனை தான் ஆழ்ந்து கவனித்து கொண்டு இருந்தார் தெய்வா, அவன் ராதா என்ற பெயரை சொல்லும் போதும், அவளை பற்றி பேசும் போதும் அவனின் கண்கள் காட்டிய பாவத்தில் இவன் அவளை நன்றாக பார்த்துக்கொள்வான் என்பது உறுதியாக, கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வழிய, பெற்றோர் விஷயத்தில் தான் ராதிகாவை வஞ்சித்த கடவுள் நல்ல கணவனையாவது அளித்தாரே என்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.

சண்முகமோ, பொன்னிற மேனியன் பேச,பேச இத்தனை வயது ஆகியும், தொழில் முறையில் பலரை சந்தித்தும், மனிதர்களை கணிக்க தெரியாமல், அவனை அவமானப்படுத்தியதற்கு மனதார வருந்தியவர், அவன் ராதிகாவின் பெயரில் தான் கடை இருக்கு என கூறவும், ஸ்வேதாவிற்காக வேலைக்கு செல்ல நினைத்தவர், ராதிகாவிற்கு செய்த பாவத்திற்கு பரிகாரமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதே போதும் என்ற மனநிலையில் மகிழ்ச்சியுடனே வேலையை தொடர்வது என முடிவுக்கு வந்தார்.

இவர்களிடம் பேசிய பொன்னிற மேனியன் தன் சொந்தங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, தன் தாயின் காதில் ஏதோ கூறவும், ஒரு சிரிப்புடன் அவரும் அவனுக்கு தலையசைக்க, எல்லோரிடமும் விடைபெற்று அவனின் கார்மேகத்தை அவசரப்படுத்தி அங்கு இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றான். வீட்டிற்கு சென்றும் கொஞ்சம் கூட அந்த பரபரப்பு குறையாமல், அவளை அவசரப்படுத்தி அவன் அவளுக்காக எடுத்து வைத்து இருந்த நீண்ட பாவாடை, அதற்கு தோதான மேல் சட்டை அணிய சொல்லி, தானும் அவளுக்கு ஏற்ற மாதிரி உடை மாற்றி அவளை அரக்கப்பரக்க அழைத்து கொண்டு கார் ஏறினான்.

கார் ஏறவும் தான், அவன் கொஞ்சம் நிதானமாக அவனின் கார்மேகம்,

"நீ பண்றது எல்லாம் நல்லாவே இல்லை ராகி, இவ்ளோ அவசரமா எங்க போறோம்", இத்தனை நாளில், அவனின் பரபரப்பு எல்லாம் பழகி போய் இருக்க, ஒரு ஆனந்த சலிப்புடனே கேட்க,

"போனா தெரிய போகுது" உல்லாசத்துடனே அவனும் பதில் அளிக்க, அவனின் சந்தோஷம் அவளையும் தொற்றி கொண்டாலும், இன்று நடந்ததை பற்றி அவனிடம் பேச வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து,

"ராகி,சஞ்சீவ்,ஸ்வேதா ரெண்டு பேரும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணி இருக்காங்க, ஆனா எனக்கு அப்படி தெரியவே இல்லை, என்னவோ தப்பா படுது ராகி, படிச்சி முடிச்சதும் கல்யாணம் வேற ஆகி இருக்கு, அவனுக்கும் பொறுப்பா ஒரு வேலை கொடுத்து உன் கூடவே வச்சிக்கோ ராகி" என தாலி கட்டும் போது பார்த்த ஸ்வேதாவின் உறைந்த தோற்றமும், அதற்கு பிறகான அவளின் கோவ முகமும் மின்னி மறைய, சஞ்சீவ் மீது இருந்த உண்மையான பாசத்தோடும் கொஞ்சம் சஞ்சலத்தோடும் பேச, அவளை நன்கு அறிந்த அவளின் பொன்னிற மேனியனோ,

"ஹே நீ எதுக்கு கவலைப்படுற, அதான் நாம இருக்கோம் இல்ல, பார்த்துக்கலாம் விடு, சாப்ட்வேர் கம்பனியை அவன் பொறுப்பில் தான் விடலாம்னு இருக்கேன், அதே மாதிரி நம்மோட இன்னொரு வீட்டை அவன் மனைவி, சித்தி, சித்தப்பாவோட தங்க ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கேன், கல்யாணம் முடியவும் அம்மாவை அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி இருக்கேன், சித்தியும் சரி ஸ்வேதாவும் சரி இனிமேலும் நம்ப கூட இருக்குறது சரியா வராது" என அவனின் சித்தி, அவனின் ராஜமாதாக்கும், கார்மேகத்திற்கும் இடையில் சிண்டு முடிய முயற்சி செய்ததை அறிந்தும், ஸ்வேதாவின் மனநிலையையும் கணித்தபடி, தன் மேல் உண்மையான பாசம் கொண்ட அவனின் தம்பியையும் மனதில் வைத்து யாருக்கும் பாதகம் ஆகாமல் அவன் யோசித்து வைத்ததை அவளை தேற்றும் விதமாக சொல்ல, அவனின் கார்மேகமும் தலையசைத்து அவனின் கூற்றை ஆமோதிக்கவும், அடுத்த கணமே கணவனாக, "ஹனிமூன் போகும் போது பேசுற பேச்சை பாரு" என அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் விதமாக நொடித்துக்கொள்ள, அவளோ,

"ஹே எங்க போறோம், எதுமே பேக் பண்ணலையே,எத்தனை நாள்" என அவன் எதிர்பாத்த மாதிரியே கேள்விகளை அடுக்கிய வண்ணம், முகத்தில் வர்ணஜாலம் காட்ட, அதை ரசித்தவாறே,

"ட்ரெஸ் எல்லாம் நானே பேக் பண்ணிட்டேன், கடலுக்கும் நமக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கே அதான் கடலுக்கே போறோம், உன்னோட பேவரட் பிளேஸ் மால்தீவ்ஸ் போறோம், டூ வீக்ஸ், நாமளும், கடலும் மட்டும் தான்" என கண்சிமிட்ட, அவன் கூறிய நெருங்கிய தொடர்பு அவளுக்கும் புரிந்தது, முதன் முதலில் இவள் அவனிடம் தன்னை பற்றி மனம் திறந்தது கடற்கரையில், முதல் நீண்ட பயணம் கடற்கரை சாலையில், இருவரின் வரவேற்பும் கடற்கரையில் தான், புதுவையில் தில்லையின் வீடும் கடற்கரை ஓரம் தான் எனவே அவர்களின் முதல் தனிமையும் அலைகளின் இசையோடு தான் என புரிய ஒரு வெட்க புன்னகை உதயமாக, அடுத்த நிமிடமே அலறியபடி,

"ராகி, அப்போ ராஜிமா அவங்க தனியா எப்படி இருப்பாங்க" என அவரை நினைத்து வருத்தப்பட, , இது தன் தாயின் மீதான பாசத்தின் வெளிப்பாடு அல்லவா, தன்னை சார்ந்தவர்களையும் நேசிக்கும் அவளின் மனம் புரிய, அவனின் கார்மேகமும், ராஜமாதாவும் சேர்ந்து இந்த ஒரு வாரத்தில் வீட்டில் அடித்த லூட்டி எல்லாம் நியாபகம் வர, அவளை பற்றி அறிந்தவன் என்ற முறையில் அவன் அவளிடம் இருந்து இக்கேள்வியை எதிர்பார்த்து இருந்தான் என்பதால் ஒரு புன்னகையுடனே,

"அம்மா பாண்டி போறாங்க, தாத்தா, பாட்டி கூட இருப்பாங்க, நாம வரும் போது தான் அவங்களும் வருவாங்க, உன்னோட அத்தையை பற்றி கவலை பட்டது எல்லாம் போதும், அவங்க பையனை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுமா" என ஏற்ற இறக்கத்தோடு பேச, அவனின் கார்மேகம் வழக்கம் போல நாவல்பழ நிறம் கொள்ள, அதற்கு பிறகு அவர்கள் பேசியது எல்லாம் அக்மார்க் கணவன் மனைவி பேச்சு, அந்நியர்களுக்கு அனுமதி இல்லை, என்னையும் சேர்த்து தான் மக்களே, நாம் இவர்கள் இன்று போலவே என்றும் மகிழ்வுடன் வாழ அவர்களை வாழ்த்தி அவர்களிடம் இருந்து விடைபெறுவோம்.

இவன் ராதையின் கண்ணன்……………………….

*சுபம்*
After a long long time, reading a college love story based novel... மிகவும் அருமை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top