தேய்வது நிலவல்ல - 3

Advertisement

Hi friends and sisters,



Here post next epi, read and kindly share your comments

thanku



அத்தியாயம் – 3

காலை நேர பரபரப்பில் தனது இருசக்கர வாகனத்தில் சிக்னல்லுகா காத்திருப்பது என்பது அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரமுடியும்.

அப்படி ஒரு அவஸ்தையில் இருந்தான் அதியன். இன்று அவனுக்கு நேர்முக தேர்வு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், அங்கு நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை அறிவான்.

எப்போதும் நேரம் தவறாமையை கடைபிடிப்பவன். இன்று ஏதோ அரசியல் கூட்டம் என்று இந்த சாலை இப்படி முடக்கப்படும் என்பதை அறியால் இப்படி வந்து மாட்டிக்கொன்டோம் என்ற நினைத்தவன்.......... நல்ல வேளை விட்டுல இருந்து முன்னாடியோ கிளம்பியாச்சு, எப்படியும் சரியான நேரத்திற்க்கு போயிடலாம் என்றாலூம். ஒர் டென்சன் தான்.



என்றவன் எண்ண ஒட்டத்தை கலைத்து அருகில் கேட்ட குரல், ஏய் தாரா என்னடி இது, இப்படி டிராபிக்ல மாட்டிகிட்டோம். என்று இதுவரை 10 முறைக்கு மேல் புலம்பிவிட்டால் தேவி நேத்திராவின் தோழி. அதை எதையும் கவனிக்காமல் ரோட்டையும், சுற்றி இருந்தவர்களையும் கவணித்த படி இருந்தால் நேத்திரா.



மறுபடியும் தன் புலம்பலை ஆரம்பித்த தேவி, அவள் முறைப்பில் அமைதியாகிவிட்டவள், தன் அருகில் இருக்கும் இன்னோறு தோழியிடம் ஏன் டீ இப்படி முறைக்கற...



பின்ன என்ன வந்ததுல இருந்து எத்தனவாட்டி சொல்லுவே காதுல ரத்தம் வருது, இப்படி ரோடுல பெர சொல்லி கூப்பிடாதே எத்தன தடவ சொல்லது உனக்கு.....



இப்ப இப்படி பெலம்பரவ காலையில சிக்கரம் களம்பி இருக்கனும். அத விட்டு இப்ப ரோடு பெலம்பினா உனக்கு மட்டும் சிக்னல் ஒபன் ஆகுமா சொல்லு, நானும் உன் கூட சோர்து பெலம்புறேன்.



இப்ப நான் என்னடி சொல்லிடேன், என்றவளை பார்த்த நேத்ரா, முதல நீ லேட்டா கிளம்பினது உன்னோட தப்பு, நீ சரியான நேரத்திற்க்கு கிளம்பி இருந்த நாம ஏன் இப்படி நிக்க போறோம்.



முதல்ல உன்னோட தப்பு என்னனு பார் அப்பறம் அடுத்தவள்கள குறை சொல்லாம். எப்பவும் நம் தப்புக்கு அடுத்தவன கைகாட்டறது. என்ற நேத்ரா வின் பேச்சால் வாய்யை முடினர் இருவரும்.



இவர்களின் பேச்சை சுவாரசியமாக கேட்டுக்கொன்டு இருந்தவன், சிக்னல் விழவும் நகர்ந்தான். இருவரும் தம் வழிகளில் சொன்றனர்.



சென்னை டைட்டில் பார்க்கில் அமைந்து இருந்த அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்ப்பு அறையில் அமர்ந்து தன் அழைப்பிற்காக காத்து இருந்தவன், அந்த சுற்றுபுறத்தை ஆராய்ந்த படி இருந்தான்.



அவன் படித்து BE CS என்றாலும் அவன் ஆர்வம் முழுவதும் ஹேக்கிங்கில் (ethical Hacking) தான், இது அவனின் கணவு என்பதை தான்டி அவனின் passion என்று சொல்லாம்.



கடுமையான பல சுற்றுகளுக்கு பின் உணவு இடை வேளையின் போது அழைக்க பட்டவர்களில் 6 பேர் மட்டும் எஞ்சி இருந்தனர். அதில் அதியனும் ஒருவன்.

மாலையில் தன் வேளையில் கையில் தன் பணி நியமன உத்தரவுடன் கடற்கரையில் அமர்ந்து இருந்தான் அதியன், இது அவன் பதின் வயது முதலே பழக்கம், அவனுக்கு தன்வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ள கடல் மடி வேண்டும்.



அப்பாவிற்க்கு அடுத்து அவன் அதிகம் நாடுவது கடற்கரைதான்.



நான் தினமும் கடற்கரை செல்கிறேன்

அதே தண்ணீர் தான்

ஆனால் புது புது அலைகள்

நாம் எப்போதும் நாம் தான், அலையை போல் தன்னை புதுப்பித்து கொள்பவர்களால் மட்டும் மே தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பயன்னுற வாழமுடியும்.



மெல்ல இருளும் சுற்றுப்புறம், நேரம் ஆவதை உனர்த்த எழுந்தவன் நடக்க ஆரம்பித்தான். அருகில் ஒரு பெண்னின் குரல் ஏய் தாரா .......!



என்று அழைக்க தானாகவே நடையின் வேகம் குறைத்தவன் அந்த பெண்கள் இருக்கும் திசையை நோட்டம் விட்டான். அவனுக்கு காலையில் சிக்னலில் பார்த்த (குரல் கேட்ட பெண் நினைவுக்கு வந்தாள்.



ஏனோ மனம் அவள் முகம் பார்க்க தூண்டியது ஆனால் அந்த இருளில் அது சாத்தியபடவில்லை.



ஏய் அஸ் (அஸ்வதி) அந்த சொட்ட தல chemistry என்னடி நாளைக்கு டெஸ்டுனு சொல்லிடான். ஆமா நாளைக்கு இல்ல அடுத்த வாரம் சொன்னா மட்டும் நீ படிச்சிடுவியா? என்றால் தேவி.

இல்ல தான்.... இருந்தாலும் இப்படி தீடிர் சொன்னா பக்குனு இருக்குல்லா...



இவர்களின் கலாட்டாகளில் எதிலும் கலந்துக்கொள்ளாமல், அமைதியாக நடந்து வந்தாள் நேத்ரா.



என்ன நீத்து அமைதியா வர?

வேற என்ன பன்ன சொல்லிங்க நீங்க தான் எக்சாம் பத்தி பயங்கர discussion ல இருந்திங்க.



ஏன் பா இப்படி இருக்கிங்க கிளாஸ் ரும்ல எப்ப பிச் போக போறோம் அப்படி discussion இங்க கிளாஸ் பத்தி. ஒன்னு எதிர் காலத்தில இல்ல இறந்த காலத்துல எப்பதான் பா நிகழ்காலத்துல வாழ போறிங்க.



நீ இங்க இருக்கறத மறந்துட்டோம் ஆத்தா மன்னிச்சிரு...



இது எப்பவும் மனிஷங்களோட சைகாலஜி, எப்ப ஒரு விஷயம் கையவிட்டு போகுதோ அது வரைக்கும் அதோட அருமை தொரியாது....



நீ மட்டும் ஏதோ manufacture defect .......



என்று கூறியவளை முறைக்க முயன்று முடியாமல், மூவரும் துரத்தி விளையாடுவதில் தங்களை மறந்தனர்.



இவர்களின் பேச்சை கேட்டு கொன்டு இருந்த அதியனுக்கு புன்னகை விரிந்து. ஆனால் அவள் முகம் கான கிடைக்கவில்லை.



ஒரு வேளை பெண் அவளை கண்டு இருந்தால் பின்னாளில் ஏற்படபோகும் விளைவுகளை தவிர்த்து இருக்கலாம்.



இன்று இவளின் பேச்சில் இந்த அளவு தெளிவை கண்டு வியப்பவன், பின் ஒர் நாளில் இவள் பேச்சை புரிந்து கொள்ளாது, தெளிந்து கொள்ளாது.



இவளை சாவின் விளிம்பில் நிறுத்தி வைப்பான் ................. என்பதை இவனுக்கு யார் சொல்வார்....................



விதியின் வழி இவர்கள் பயனிக்க, தங்களின் வீடு நோக்கி பயனித்தனர் இருவரும்.





நிலவு தேயும்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top