தேவ மஞ்சரி –14

Advertisement

Gangashok

Member
எங்கும் குழப்பம் யாவரிடமும் குழப்பம்

ருத்ரவினுள் மஞ்சரியை கண்ட தேவராஜ் முதலில் மகிழ்ந்தாலும் பின் மிகவும் குழம்பிப்போனான் "ஆத்மா ஓவியத்தில இருக்குறதாதான் வேதாளம் சொல்லுச்சு இப்ப என்னனா ருத்ராவோட உடம்புக்குள்ள இருக்கே இத எப்படி எடுத்துட்டு போறது, ஓவியத்தில்னா மஞ்சரி எதுவும் செய்ய முடியாது ஆனா இப்போ அப்படி இல்லையே. மந்திரவாதி யாரவது கூட்டிட்டு வரலாமா ? ஆனா நாம மாட்டிக்கிடுவோமே இந்த விஷயத்தில யாரையும் நம்பி கூட்டு சேக்க முடியாது பணம்னு வந்துட்டா பிணமும் வாய திறக்கும்னு சும்மாவா சொல்லிவச்சாங்க கூடவே இருந்து கழுத்தை அறுத்துடுவானுக காவாலி பசங்க. இப்போ எப்படி மறுபடியும் எப்படி அந்த ஆத்மாவ ஓவியத்துக்குள்ள போகவைக்கிறது?"தலையை பித்துக்கொள்ளாத குறைதான்
மஞ்சரியின் நிலையோ இருதலை கொல்லி எறும்பின் நிலையானது, " எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின் காணக்கிடைத்த மணிமாறனின் முகம், அதை கண்டால் உள்ளம் நெகிழ்ந்து அவன் பால் ஓடுகிறேதே, மணிமாறனுடன் வாழ கிடைக்கும் அறிய வாய்ப்பு விட்டுவிடாதே என்று கெஞ்சுகிறதே, அவன் மணிமாறன் அல்ல வேதாந்த் என்று புத்தி அறிவுறுத்தியும் அதை ஏற்க மறுத்து சிறுபிள்ளையாய் அடம் செய்கிறதே, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க என்னை நம்பி தன்னில் எனை ஏற்ற ருத்ராவிற்கு தந்த வாக்கு, காதலை உதறாதே என்று உள்ளம் ஒருபுறம் இழுக்க நட்புக்கு இழுக்கு செய்துவிடாதே என்று புத்தி மறுபுறம் இழுக்கிறதே. காதலின் பிரிவின் வலியை அறிந்த நான் என் தோழிக்கு அதையே அளிக்க முடியுமா? அனால் மணிமாறன்! மணிமாறனை எப்படி இழப்பேன்" பல நூற்றாண்டுகளுக்கு பின் அவளுக்கு கிட்டிய கண்ணீர் உன்னை விட்டு விலகமாட்டேன் என்பதுபோல் நிற்காமல் வழிந்தபடி இருந்தது.
வேதாந்த்தின் நிலையோ நெருப்பில் வெந்து பணியில் உறைவது போல் இருந்தது இந்த நிமிடம் இன்பமா துன்பமா பிரித்து அறியமுடியவில்லை அவனால். ருத்ராவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஈர்ப்பு தன்னிடம் மட்டுமே என நம்பியிருந்தான் ஆனால் நீர் கோர்த்த விழிகளில் காதல் ததும்ப அவள் பார்த்த பார்வை அதில் கொஞ்சமும் பொய் இல்லை, அவளிடமும் அதே உணர்வுகள் வெளிப்படுவதில் அவனால் முழுதாய் மகிழ்ந்துவிட முடியவில்லை அரங்கநாயகிக்கு இந்த காதல் ஒருபோதும் ஏற்புடையதாய் இருக்கப்போவது இல்லை. விதையாய் விழுந்து வளர்ந்து நிற்கும் இந்த காதல் தன தாயால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விடுமோ? உண்மையில் தன்னுள் வந்திருப்பது காதல் தானா? அல்லது தன் உயிரை காத்தவள் என்ற நன்றியுணர்வா? விடை தெரியாத கேள்விகள் அணிவகுத்ததில் குழம்பிய குட்டையாகி தன் உறக்கத்தை தொலைத்திருந்தான்.
அரங்கநாயகின் மனமும் கல் விழுந்த குளம் போல் தான் இருந்தது, இன்று வேதாந்த்தும் ருத்ராவும் விழியோடு விழி கலந்து மெய்மறந்து நின்றிருந்த கோலம், அதை கண்டத்தில் இருந்து எங்கே தன் மகன் தன் கை நழுவிப்போய் விடுவானோ மனம் புற்றீசலாய் அரிக்க ஆரம்பித்துவிட்டது " இந்த ருத்ரா சனியன விரட்டலாம்னு பாத்தா சாமி வேற பயமுறுத்திட்டு போய்ட்டாரு, அவரு சொன்னாப்ல ரெண்டு தடவ எம் புள்ள சாவ பாத்துட்டு வந்துட்டான், ஆனா சரியா அவனுக்கு ஆபத்து வரப்பெல்லாம் இவ எப்படி அங்க போறா? ஒருவேள எல்லாம் இவ செட்டப்பா இருந்திருக்குமோ?அட அப்படியே இல்லனாலும் உதவி செஞ்சதுக்காக பணம் கிணம் வேணுமுன்னா குடுத்துடலாம் எம் புள்ளயையே பருச்சுடுவா போல இருக்கே? எம் புள்ள அழகென்ன கம்பீரம் என்ன அவனுக்காக வரிசையா பணத்தை கைலவச்சுக்கிட்டு ப்ரொடியூசருங்க காத்துகிட்டு கிடக்குறாங்க எம் மகன் எங்கே வீடு வீட்டுக்கு பொய் கையேந்தி பொழைக்கிற இவ எங்க மலைக்கும் மடுவுக்கும் ஈடாகுமா?
அந்த தாரா புள்ள மட்டும் என் வீட்டு மருமகளாய்ட்டானா வாழ்கபூராம் காசுக்கு பஞ்சமில்லாம ராஜ வாழ்க்க வாழலாமே? இவன சொல்லணும் கைல இருக்கிற வைரத்த பாக்காம கண்ணாடி கல்லு பின்னால போறானே இந்த ருத்ரா ஒத்த பைசாக்கு தேருவாளா? இந்த ருத்ராவும் சரியான கைகாரிதான் சும்மா மினிக்கிகிட்டு ஆம்பலப்பய முன்னாடி ஷோ காட்டினா மனசு சலனப்படத்தானே செய்யும் இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும், இவ ஒரு கைகாரினு எம் புள்ளக்கி புருஞ்சுடுச்சுனா தானா விலகிடுவான். அப்புறம் எல்லாம் நம்ம கையில தான், அவ முகத்துல கரிய பூசல நா அரங்கநாயகி இல்ல" தனக்குள் முடிவெடுத்துக்கொண்டவராய் வேதாந்த்தின் கனவு கண்ணி ருத்ரா அல்ல என்பதை நிரூபிக்க வழி தேடி தன் மூளையை குழப்பிக்கொண்டிருந்தார்.
நண்பர்கள் நிலையோ அந்தோ பரிதாபம்,
சுருட்டை " மாப்பு கொஞ்சம் கிள்ளுடா என்ன"
ஏழுமலை கிள்ளியதில் அம்மா என்று கைகளை பர பரவென டெய்துகொண்டவன் "கிள்ளுனா இருக்குற கொஞ்ச சதையையும் பிச்சு எடுக்கணுமா மூதேவி?"
ஏழுமலை "ஹி ஹி எனக்கும் இது கனவா நினவானு தெருஞ்சுக்கணும் போல இருகுதுடா அதான் கொஞ்சம் பலமா கிள்ளிட்டேன்"
மலையப்பன் "அட அடகம்னா என்ன விலைனு கேக்குற நம்ம ருத்ரா புடவை கட்டி நடக்குற நடையென்ன, வெக்கமென்ன, கூச்சமென்ன,இன்னும் என்ன என்ன "
மண்ணாங்கட்டி " இவன் ஒருத்தன் ஒளவயார் மாதிரி என்ன என்னன்னுட்டு, முக்கியமானத கவனிச்சீங்களாடா ருத்ராவும் நம்ம ஹீரோ சாரும் கண்ணாலேயே ரூட்டு போட்டாங்களே அட அட கண்கொள்ளா காட்சி டா "
சுருட்டை " ரொம்ப நாள் இமிட்டே இருக்கனும்மோனு பயமா இருந்துச்சுடா இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு"
ஏழுமலை " எனக்கென்னவோ நம்ம ருத்ராவுக்கு பதில் வேற யாரோ வந்துட்ட மாறி இருக்கு "
மண்ணாங்கட்டி பரிதாபமாய் " ஏண்டா?"
ஏழுமலை " நம்ம ருத்ரா என்னைக்காச்சும் அழுது பாத்தீங்களாடா, மாமாக்கு நெஞ்சு வலி வந்து படுத்தப்பகூட
ஒருசொட்டு கண்ணீர் வந்துச்சா இன்னக்கி அவ கண்ணுல தண்ணி பாத்தேண்டா "
மலையப்பன் " இவன் பாயிண்டும் கரெக்டுடா "

அனைவரையும் குழப்பிவிட்டு காலம் தன் அடுத்த விளையாட்டுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top