கொலுசொலி மயக்குதடி - 33

Advertisement

இருடா இதோ வந்துடறேன் என்றவாறு சக்தி எங்கோ கிளம்பி போகவும் வாசு இருந்த மனநிலையில் எதையும் யோசிக்க தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் திரும்ப வந்த சக்தியின் கைகளில் அஜய் கொடுத்துவிட்டு போன பைல் இருந்தது.

இது என்னடா என வாசு கேட்டான். நான் தான் சொன்னேன்ல இதுல மகா மேக்னா இரண்டு பேரை பத்தியும் இருக்கு என சக்தி சொன்னான்.

மேக்னா பற்றிய ரிப்போர்ட்டை வாசுவிடம் கொடுத்து விட்டு மகா பற்றிய பைலை தான் எடுத்துக் கொண்டான்.

வாசுவும் மனதே இல்லாமல் மேக்னாவை பற்றி பார்க்கத் தொடங்கினான். படிக்க படிக்க அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவனின் மனதில் இருந்த உணர்வை என்னவென்றே அவனால் வரையறுக்க முடியவில்லை.

சக்தியோ மகாவை பற்றி படித்து முடித்ததும் வாசு என அழைத்தான்.

என்ன சக்தி சொல்லு என்றவன் மேக்னாவை பற்றிய சிந்தனையில் இருந்து வெளி வந்தான்.

இவ எங்க ஊரு பொண்ணு தான் டா... லட்சுமி படிச்ச காலேஜ்ல தான் இவளும் படிச்சுருக்கா.எதுக்காகாக மும்பை வந்திருக்கானு தெருஞ்சுக்க முடியலயே டா

சக்தியின் குழப்பமான முகத்தை பார்த்த வாசு இந்த மகாவை நாமளே கொஞ்சம் குளோசா வாட்ச் பண்ணுனா என்னனு கண்டு பிடிக்கலாம் டா என யோசனை சொன்னான்.

அதுவும் சரிதான் வாசு என்றவன் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு போனான்.

யாரிடமோ பேசியவன் அப்படிங்களா சரிங்க ரொம்ப தேங்க்ஸ் என்றவன் வேறு ஏதோ சொல்லவும் அவரும் சரியென்று கூற அழைப்பைத் துண்டித்து விட்டு வந்த சக்தியின் முகம் இரத்தமென சிவந்திருந்தது.

சிறிது நேரம் கழித்து வாசுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் போய் கதவைத் திறந்தான். மகாவும் மேக்னாவும் நின்றிருந்தார்கள்.

உள்ளே வாங்க மேடம் என மகாவை பார்த்து அழைக்கவும் அவளோ என்னவோ ஏதோவென உள்ளே வர மேக்னாவோ அமைதியாக உள்ளே வந்து நின்றாள்.

வாசு மேக்னாவை பார்த்த பார்வையில் இதுவரையில் இல்லாத ஒரு கோபத்தை பார்த்து அரண்டு போனாள்..

ஏங்க மகா மேடம் உங்களுக்கு லட்சுமினு யாராச்சும் ப்ரண்ட் இருக்காங்களா என கேட்டதும் மகாவிற்கு சப்தநாடியும் ஒடுங்கி போனது. ஒரு நொடியில் முகத்தை சரி செய்தவள் எந்த லட்சுமி என கேட்டாள்.

சேலத்துல இரத்னவேல் மாமா பொண்ணு லட்சுமி என கேட்டதும் என்ன இவன் எதற்காக இப்படி கேட்கிறான் என புரியாமல் வெகு ஜாக்கிரதையாக என்ன சொல்றீங்க என கேட்டாள்...

மகா.... என சக்தி கத்திய காட்டு கத்தலில் சிவாகாமியும் நிலாவும் ஓடி வந்தனர்.

அட இந்த பொண்ணா இவளை நம்ம லட்சுமி கூட நிறைய தடவை பார்த்திருக்கேன். எப்போ பார்த்தாலும் அவ கூடயே தான் சுத்துவா என சக்தியை பார்த்து கூறினார்.

வாசுவிற்கு எதுவோ புரிவது போல இருக்கவும் நிலாவை நோக்கி நடந்து போனான்.

லட்சுமியை பார்த்த அதிர்வில் இருந்தவள் இப்பொழுது மகாவை அவளின் ப்ரண்ட் என சொன்னதும் பயத்துடன் பார்த்தாள்.

நிலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டே நடந்தவன் அவளின் பயத்தை பார்த்து உள்ளுக்குள் உடைந்து போனான்.

வாசு அருகில் வந்து நிலா என கண்ணீருடன் அழைக்க தாய்மடி தேடும் கன்றாய் அவனிடம் அடைக்கலமானாள்.

சேர்த்து வைத்த மொத்த வைராக்கியமும் மொத்தமாக உடைய அவன் மேல் சாய்ந்தவாறு ஓவென அழுதாள்.

ஏற்கனவே கொலை வெறியில் இருந்த சக்தி நிலாவின் அழுகையை பார்த்ததும் மகாவை ஓங்கி ஒரு அறை விட்டான்.

அவன் விட்ட அறையில் மகா சுருண்டு போய் ஓரமாய் விழுந்தாள். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் ஆவேசமாய் அவளின் அருகில் போன சக்தி கொத்தாய் அவளது முடியை பிடித்தான்.

ஏற்கனவே அவன் அடித்ததில் இராட்சசியாய் மாறியவள் சக்தி முடியை பிடிக்கவும் ஆங்காரமாய் அவனது கையை தட்டி விட்டாள்.

என்ன எல்லா உண்மையும் தெருஞ்சுருச்சா. சும்மா கை வைக்கற வேலையை வச்சுக்காத என கத்தினாள்.

ஆமா உன்னை எல்லாம் அடிச்சிருக்கவே கூடாது. கொன்னே போட்டிருக்கனும்...

டேய் ஏற்கனவே உன்னை பழி வாங்கத்தான் லட்சுமியை பயன்படுத்திட்டேன். அவளும் நான் சொல்றதை நம்பி என்கூட சகவாசம் வச்சுக்கிட்டா.

அவளை வச்சே இதோ நிற்கிறாளே இவளை மிரட்ட வச்சேன். நான் நெனச்ச மாதிரியே இவளும் கல்யாணம் வேண்டாம்னு ஓடிட்டா.

உன்னை கல்யாணம் பண்ணி பழி வாங்கலாம்னு பார்த்தால் இவ கரெக்டா நீ இருக்க ஊருக்கே வந்துட்டா.

நான் வேலை விசயமாக இங்க வந்தப்போ இவளை வாசு கூட பார்த்ததும் ஷாக். நானும் இவளை பின்தொடர்ந்தப்போ எல்லாம் தெருஞ்சு தான் இங்க தங்குனேன்.

உன்னை கல்யாணமே பண்ண விட மாட்டேன் டா. என்னடா பண்ண முடியும் உன்னால...

மகா இவ்வளவு கொடூரமானவள் என அங்கு யாராலும் நம்பமுடியவில்லை.

நிலாவின் அருகில் போன சக்தியோ முதல்ல இங்க வா சிவா.... நிலா என்ற அழைப்பு மாறி சிவா என சக்தி அழைக்கவும் எல்லாரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

சிவா.... அவன் அழைக்க ஏதோ ஒன்று அவளை உந்த வேறு வழியின்றி வாசுவிடம் இருந்து பிரிந்து சக்தியின் அருகில் போனாள்.

என்னை மதிக்கறியா சிவா... நான் என்ன பண்ணுனாலும் சரியாகத் தான் இருக்கும்னு நம்பறியா... என்னோட மானம் மரியாதைக்கு ஒரு இழுக்கு வரும்னா அதை தடுக்க நீ வருவியா என கேட்டான்.

அவளோ சிறிதும் யோசிக்காமல் கண்டிப்பாக என்றாள்...

அனைவருக்குமே ஆச்சர்யம் தான் இவள் எப்படி யோசிக்காமல் இவ்வாறு பேசுகிறாள் என்று. சிவகாமி கூட வியந்து தான் போனார்.

என் கூட வா என அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு போனவன் ரூமிற்குள் போய் கதவை லாக் செய்தான்.

என்னவோ ஏதோவென்று அனைவரும் கதவையே பார்த்தபடி இருக்க மகாவோ கோபத்தில் நகத்தை கடித்து துப்பினாள்

சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வரவும் நிலாவையே பார்த்தபடி இருந்தனர். வாசு நிலாவை நோக்கி வரவும் அவனைக் கைநீட்டி தடுத்தாள்.

ஆணி அடித்தாற் போல் அவன் அதே இடத்தில் நின்று விட்டான்.

நிலா எதுவும் பேசவில்லை அவளது ரூமிற்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.

ஏனோ அந்த நிமிடம் யாராலும் சக்தியை நெருங்க முடியாமல் போகவும் சிவகாமிக்கு கூட இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியவில்லை.

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்ட வாசு சக்தியை பார்த்து சக்தி என அழைப்பதற்குள் அவனிற்கு மூச்சு வாங்கியது.

என்னை மன்னிச்சிடு வாசு இது மட்டும் தான் என்னால உன்கிட்ட சொல்ல முடியும். அவனிடம் சொல்லிவிட்டு சிவகாமியின் அருகில் போனான்.

ம்மா... நாளைக்கு எல்லாமே புரியும் இப்போ எதுவும் கேட்காதீங்க என்றவன் மகாவை பார்த்து ஏய்.... என கையை நீட்டி சீறியவன் யாருகிட்டடி விளையாடிட்ட. நீ நினைச்ச எதுவுமே நடக்காதுடி நாளைக்கு ரெடியாக இரு என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மகாவும் அடிபட்ட வேங்கையாய் அங்கிருந்து வேகமாக கிளம்பினாள். மேக்னா அங்கேயே நிற்கவும் உனக்கு என்ன கிளம்பு இங்கிருந்து என வாசு வெறுப்புடன் கூறவும் அழுதபடியே அங்கிருந்து ஓடி விட்டாள்.

மறுநாள் சக்தியுடன் திருமதி சிவானி சக்தி சரவணனனாய் விமானம் ஏறியவளை சிவகாமியோ தோள் தாங்கி அரவணைத்துக் கொண்டார்.

மயக்குவாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹலோ G P மேடம்
இங்கே என்னதான் நடக்குது?

மகா வேற லட்சுமி வேற ஆளா?
இரண்டு பேரும் சேர்ந்து மிரட்டிய ஆள் நிலா இல்லையா? மேக்னாவா?

மகா ஏன் சக்திக்கு கல்யாணமாவதைத் தடுக்கணும்?
அவனையே கல்யாணம் செஞ்சு பழி வாங்குவேன்னு மகா ஏன் சொல்லணும்?

இவ்வளவு நாளாக வாசுவை விரும்பிய நிலா @ சிவானி திடீர்னு எப்படி மறுநாள் திருமதி சக்தி சரவணனாக மாறி ஊருக்கு கிளம்பினாள்?

கவுண்டமணி பாஷையில் குழப்புறீங்களேப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top