Thiru.Selvam-Part-7

Advertisement

srihari

Member
இப்போது 10ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு , புது மேனேஜ்மென்ட் போர்டு மெம்பரான M1 அவர்களின் மனைவி எடுக்க போகிறார் என்று அறிந்தான் , யார் அந்த M1 என்று தெரிந்து கொள்ள நினைத்தான் . யார் அந்த M1 என்று பள்ளி செக்கூரிட்டியிடம் கேட்டபோது , அருகில் இருந்த பேனரை காணிபித்தார் , அந்த பேனரை பார்த்ததும் , அவர் தனது ஸ்கூலில் உரை ஆற்ற வந்த “மைண்ட் ஒப் ஹுமன்ஸ் ” அமைப்பை சேர்ந்தவர் என்று புரிந்தது. ஆனால் அவர் எப்படி இங்கே? . மற்ற விஷயங்களை நேரில் பார்த்து பேசிக்கொள்ளலாம் என்று வீட்டிற்கு புறப்பட்டான் .
அடுத்த நாள் உணவு இடைவேளை நேரத்தில் , கல்வி துறை அதிகாரிகள் சில பேர் பள்ளிக்கு வந்திருந்தனர், செல்வமும் ப்ரின்சிபாலால் அழைக்கப்பட்டான், அதனால் செல்வத்தால் அருணின் பள்ளிக்கு செல்லமுடியவில்லை . வீட்டிற்கு வந்த அருணிடம் அந்த போர்டு மெம்பேரை M1 பற்றி விசாரித்தான் . அப்பொழுது செல்வத்திடம் ஒரு பேப்பரை நீட்டிய அருண் “ எங்கள் மேடம் எல்லா ஸ்டுடென்ட்ஸுக்கும் நாளை முதல் எக்ஸ்ட்ரா கிளாஸ் இருக்குன்னு சொன்னாங்க ”. செல்வம் “ எந்த மேடம் ”. அருண் ”எங்க புது கரெஸ்பாண்டெண்ட் வைப் ”. செல்வம் “அவங்க பேரு ?”. அருண் “துர்கா ”….
செல்வம் இன்று இரவும் மொட்டைமாடியில் நிலவோடு அருணை பற்றியே உரையாடி கொண்டு இருந்தான் , அருண் கூறிய அந்த மேடத்திடம் பேச வேண்டும் , அவனுடைய மதிப்பெண்கள் குறைவதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணி , அவனை அறியாமல் அங்கேயே உறங்கிவிட்டான் . அருண் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் அருகிலேயே அவனும் படுத்துகொண்டான் . காலை வேலை சூரியனின் கிரணங்கள் செல்வத்தின் மேல் விழுந்தது , கண் விழித்த செல்வம் அருகில் அருண் படுத்திருப்பது பார்த்து , அவன் தலையை தடவி கொடுத்தான் . நல்ல உறக்கத்தில் இருந்த அருணுக்கு எதுவும் தெரியவில்லை .
செல்வத்தின் வேலை சுமை அதிகரித்து வந்தது, அவனால் திட்டமிட்டபடி அருணின் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியவில்லை. அந்த துர்கா மேடத்தையும் பார்க்க முடியவில்லை, அந்த கார்த்திக் சாரையும் பார்க்க முடியவில்லை. அருணுடைய மதிப்பெண்ணில் இப்போது நல்ல முன்னேற்றம் இருந்தது. அதை பார்த்து சந்தோஷப்பட்டான்.
டிசம்பர் மாதம் வந்தது , அரை பரீட்சை , மாடல் எக்ஸாம் , பிரேபரேட்டரி எக்ஸாம் , பிராக்டிகல் என்று செல்வம் பிஸியாக இருந்தான் . செல்வம் பள்ளியில் பகலில் இன்விஜிலேஷன் செய்வதும் , அவன் மகன் இரவில் கண் விழித்து படிக்கும் போது டி போட்டு கொடுப்பது . இந்த வேளையில் கல்வி துறையில் இருந்து ஒரு கோண்பிடென்டியல் லெட்டர் கரெஸ்பாண்டெண்ட் அறைக்கு வந்தது , அதில் மாநில அளவின் ஆசிரியர் குழுவில் செல்வம் 10ம் வகுப்பு கேளிவி தாள் தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் என்று இருந்தது . அன்று பள்ளி முழுவதும் இதே பேச்சுதான் . இதில் ஹயிலைட் என்னவன்றால் அந்த ஏரியாவின் எம்.எல்.ஏ “காசி ” தன் அரசியல் ஆதாயத்திற்காக நமது செல்வத்திற்கு சால்வை அணிவித்து போட்டோ எடுத்துக்கொண்டான் . நமது “சுகந்தி ” தான் வெட்கி தலை குனிந்து போனாள் .
பப்ளிக் எக்ஸாம் வந்தது . பரீட்சை நடக்கும் எல்லா பள்ளிகளிலும் பறக்கும் ஸ்க்வாட் சுற்றி கொண்டு இருந்தார்கள் . செல்வத்திற்கு அருணின் ஞாபகம் வந்தது . சிறிது நேரம் ஜன்னல் வெளியே இருந்த மரங்கள் அசைந்து ஆடுவதையே பார்த்தான் . ஒரு புறம் ஸ்க்வாட் வர , ஒரு மாணவன் பிட் அடிக்க தன் சட்டையை சரி செய்து கொண்டு இருந்தான் , திடீரென்று ஒரு சத்தம் “சார் , அடிஷனல் சீட் ”. செல்வம் நினைவு திரும்பியது , ஒலி வந்த திசையில் திரும்பி பார்த்தான் , ஒரு மாணவன் கை மேல் உயர்த்தி காட்டினான் . செல்வம் கண்களில் அவன் மட்டும் தெரியவில்லை , முன்னால் ஒரு மாணவன் தன் சட்டையிலிருந்து பிட் எடுத்து கொண்டு இருந்தது தெரிந்தது , மறுபக்கம் ஸ்க்வாட் வருவதையும் கண்டான் . வெகு சீக்கிரம் அவன் அருகில் சென்று அந்த பிட் எல்லாவற்றையும் வாங்கி கொண்டான் . வந்த ஸ்க்வாட் ரான்டொமாக செக் செய்ததில் அந்த மாணவனும் இருந்தான் . அந்த மாணவன் வெல வெலத்து போய் விட்டான் .
நாட்கள் கடந்தன , பரீட்சை முடிந்தது , விடை தாள்கள் திருத்துவதற்கு மாநிலம் முழுவதிலும் ஆசிரியர்கள் வரவழைக்க பட்டனர் , செல்வத்தையும் அழைத்தார்கள் . தாள்கள் திருத்தும் மையத்திற்கு சென்றான் , அவனுக்கு திருத்துவதற்கு டம்மி நம்பர் இட்ட தாள்கள் கொடுக்க பட்டது . ஒன்று …இரண்டு அல்ல பத்து நாட்கள் கடுமையான செக்யூரிட்டி இருந்தது . கடைசி நாள் 12ம் வகுப்பு பரிசை திருத்தும் ஆசிரியருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகவே . அங்கு வந்திருந்த எல்லா கணக்கு ஆசிரியரிடமும் நியமிக்கப்பட்ட தாள்களுடன் , உடல் நிலை சரி இல்லாமல் போன ஆசிரியரின் தாள்களில் ஒரு பகுதி கொடுக்க பட்டது . செல்வத்திடம் அந்த குறிப்பிட்ட தாள்களின் ஒரு பகுதி பட்டது . அந்த தாள்கள் கட்டுகளை திறந்தவுடன் , செல்வத்திற்கு ஆச்சரியமாக இருந்தது . அந்த கட்டில் இருந்து , முதல் ஒரு தாளை மட்டும் எடுத்து இந்த தாளை வேறு யாரிடமாவது கொடுத்து விடுங்கள் என்றான் , வந்த சூப்பர்வைசரிடம் கொடுத்தான் . அவருக்கு ஏன் கொடுக்கிறான் என்று புரியவில்லை . செல்வம் “அது என் பையனோட பேப்பர் , வேற யாரையாவது கரெக்ட் பண்ண சொல்லுங்க ”. வந்த சூப்பர்வைசர் திடுக்கிட்டு போனார் , “பெயர் எதுவும் எழுதாத நிலையில் , டம்மி நம்பர் வைத்து எப்படி இவர் கண்டு பிடித்தார் ”. அந்த விடை தாளை அடுத்த அறையில் திருத்தி கொண்டு இருந்த ஆசிரியையிடம் கொடுக்க பட்டது . எல்லா தாள்களும் திருத்தும் பணி முடிந்த பிறகு , அந்த சூப்பர்வைசர் செல்வத்தின் அருகில் வந்து , தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டார் , அதற்க்கு செல்வம் கூறிய பதில் வியப்பானது “ குலதெய்வம் பெயர் யார் எழுதி இருந்தான் ” சூப்பர்வைசர் குறுக்கிட்டு “அது பல மாணவர்கள் எழுதுவது தானே ” செல்வம் “குலதெய்வத்தின் பெயருக்கு கீழே அவன் தனது அம்மாவின் பெயர் மற்றும் என்னுடைய பெயர் சேர்த்து எழுதி இருந்தான் ”. சூப்பர்வைசர் ஆடி போய்விட்டார் . உண்மையில் அந்த தாள் செல்வத்தின் மகன் அருணுடையது தான்.
ரிசல்ட் வந்தது . செல்வம் கணக்கு எடுத்த அணைத்து மானவர்களும் 100/100 மதிப்பெண் பெற்றனர் . மற்ற சப்ஜெக்ட்களின் சந்தேகங்களும் செல்வம் தீர்த்து வைப்பதால் எளிதாக மாணவர்களால் மதிப்பெண் பெற முடிந்தது . எந்த பெண்ணிற்கு வீட்டில் கஷ்டம் அதனால் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லையோ அவள் தான் மாவட்ட அளவில் “நம்பர் 1”. செல்வத்தின் புகழ்ச்சிக்கு காரணமாய் அமைந்தாள் .
பத்திரிகைகள் அந்த பெண்ணை சூழ்ந்தனர் , அருகில் இருந்த அந்த முறைமாமன் இப்போது டீசெண்டாக நடந்து கொண்டான் . பல கேள்விகள் அந்த பெண்ணிடம் கேட்கப்பட்டது . ஏதோ ஒரு கேள்வியின் போது , “எல்லாம் செல்வம் சார் நாலதான் ” என்றாள் அந்த பெண் , பத்திரிகைகள் செல்வத்தை சூழ்ந்தனர் . செல்வம் “ எங்க கரெஸ்பாண்டெண்ட் மற்றும் முதல்வர் நாலதான் இது என்னால செய்ய முடிஞ்சது , அவங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் ” என்று கூறி அந்த பெண் அருகிலே சென்று “ இந்த மாதிரி தனியா ஒரு ஆசிரியரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல கூடாது , பொதுவான முறையில் எல்லா ஆசிரியருக்கும் நன்றி அப்படிதான் சொல்லணும் , நம்மள இணைச்சது இந்த பள்ளி கூடம் தான் , இவங்க உங்க பெயர் சொல்ற மாதிரி நீங்க வளர்ந்து காமிக்கணும் ”. திரும்பி பார்த்தால் எதிரே ராஜகோபால் நின்று செல்வத்தை பார்த்து முகம் மலர்ந்தார் .
அந்த முறை சில டெக்கனிகள் பிரச்சனை காரணமாக 12ம் வகுப்பு சில தாள்கள் திருத்தும் பணி மெதுவாகவே நிறைவடைந்தது . அதனால் ரிசல்ட் வெளியிடும் பணிகளும் தாமதம் அடைந்தன . கல்வி துறையிலிருந்து தேதி அறிவிக்க பட்டது , அந்த நாளும் வந்தது . செல்வத்திற்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது . செல்வமும் அருணும் காலை கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த போது செல்வத்தின் வீடு முன்பு பத்திரிகைகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது, மெதுவாக செல்வம் அருகில் வந்தான் . கூட்டத்தில் இருந்து நிருபர் ஒருவர் அருண் அருகில் வந்து “ மாநில அளவில் முதல் மாணவனாக வந்து இருக்கீங்க , என்ன நினைக்கறீங்க ?”. ஒரு நிமிடம் அருண் சிலையை போல் நின்றான் , என்ன பேசுவது என்று தெரியவில்லை . பின் ஒருவாறு தன் நிலைக்கு திரும்பி எல்லோருக்கும் பதில் உரைத்தான் .
நிருபர்கள் சூழ்ந்து கேள்வி கேட்க்கும் பொழுது, செல்வத்திற்க்கு பெருமையாக இருந்தது. அந்த நிருபர்கள் கூட்டத்தையும் தாண்டி, எதிர் புரத்தில், ஒரு உருவம் தெரிந்தது, அந்த பெண் உருவத்தை காண....இல்லை....இல்லை...அவள் உயிரோடு இருக்க வாய்பில்லை....அப்படியானால் இவர் யார்?...சுற்றி இருக்கும் கேமராக்கள் செல்வத்தின் பக்கம் திரும்பின....முகத்தில் சிரிப்பும்...மனத்தில் குழப்பதோடு...பதில் உரைத்து...யார் அந்த பெண் என அறிய அவன் மனம் பயனித்தது...ஆம்....ஆம்...அவள் பார்ப்பதற்க்கு வந்தனாவை போல் இருந்தாள்...

-----------சுபம்-------
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஹரி டியர்

ஸ்டோரி நல்லாயிருக்கு
நல்ல தீம் இருக்கு
ஆனால் நிறைய இடங்களில் ஜம்பிங் இருக்கு
Coincide ஆகவில்லை
வந்தனா யாரு?
செல்வத்தின் மனைவி பெயர் மலர்விழிதானே
கடைசி வரை ஏன் கடைசியிலும் கூட வந்தனா யாருன்னே தெரியவில்லை
கதையின் முடிவு நிறைவைத் தரவில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top