Iratturamozhithal - 24 (final )

Advertisement

mahalakshmisiva

New Member
அருமையான கதை, தேவையற்ற வார்த்தைகளோ.. வர்ண்ணையோ.. வாக்கியங்களோ இல்லாமல் கதைக்குத் தேவையானதை மட்டும் சொல்லியிருப்பதால் சலிப்பின்றி.. ஸ்க்ரோல் செய்யாமல் படிக்க முடிந்தது.
வாழ்த்துகள்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அருமையான கதை, தேவையற்ற வார்த்தைகளோ.. வர்ண்ணையோ.. வாக்கியங்களோ இல்லாமல் கதைக்குத் தேவையானதை மட்டும் சொல்லியிருப்பதால் சலிப்பின்றி.. ஸ்க்ரோல் செய்யாமல் படிக்க முடிந்தது.
வாழ்த்துகள்.
Thank you Mahalakshmi.:love:
 

Geetha Ravichandran

Well-Known Member
Ni
"அப்ப வெளில வந்தா என்னாகும்? உனக்கு நீ சரின்னு தோணும்போது.. எதுக்கால இருக்கிறவன் என்ன நினச்சா உனக்கென்ன?, கேட்டுக்கிற மத்தவங்களுக்கு சாக்கிறதாயா இருக்கணும்-னு தோணுமில்ல? ", என்று அவர் கேட்க.. ஆமாம், இப்படியல்லவா நினைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

"உனக்கு மட்டுமில்ல ராசா.. எல்லாருக்குந்தென் சொல்றேன். நமக்கு ராமாயணம், பாரதம் தெரியும், ராமருக்கு புறவு.. அவங்க வாரிசுங்கதேன் ஆட்சி பண்ணுனாங்க.. ஆனா ஆராவது அவரு சரித்திரத்தை மாத்தி எழுத நினச்சாகளா? "

"ஏன் மாத்தணும்?,"

"அவரு என்ன தப்பு பண்ணினாரு ?",

"இந்தா வாரேன்..", "யம்மாடி லலிதா, தயிறு புளிக்கிறா மாதிரி இருக்கு, கொஞ்சமா பால ஊத்து ",லத்திகா, பாட்டியிடம் லலிதாவானாள். தயிர் சாதம் கலந்து, பரிமாற ஆரம்பித்தார் பாட்டி..

"எங்க விட்டேன்?..ஆங்... ராமர் கதையை எதுக்கு மாத்தணும் ?... இன்னிக்கு வரைக்கும், தெருவில போற குப்பனும் சுப்பனும்,...... ராமரு பொண்டாட்டிய காட்டுக்கு அனுப்பினாரு , வாலிய மறைஞ்சு நின்னு கொன்னாரு-ன்னு திட்டிட்டுதானே கிடக்கான்?"

"அவரு கடவுளு... தேவலோகத்துலேந்து நாரதர் வந்து ராமாயணம் சொன்னாரு, அது இதிகாசங்கிறதெல்லாம் நா பேசல", "அவரு அம்புட்டு பெரிய்ய ராசா.. செஞ்ச தப்பு தெரியகூடாது ன்னு நினச்சாரா?, இல்ல அவுக புள்ளைங்கதா நினச்சுதுங்களா? அவரு தப்ப வச்சு அடுத்தவன் பாடம் படிக்கட்டும்-னு தான விட்டாரு..?."

"கத தெரிஞ்ச அத்தனை பேருக்கும் தெரியும், சீதம்மா-வ காட்டுக்கு அனுப்புனது ராசாராமென், சீதாராமனில்லை.. அங்கன, அவரு ராசாவா நின்னாரு"

"யாரு சரணம்-னு கால்-ல விழறாங்களோ, அவங்க எதிரியா இருந்தாலும் காப்பாத்தறது ராசகுல மரபு. வாலிங்கிற குரங்கை கொல்ல , சாத்திர சம்பிரதாயமெல்லா பாக்கவேணாம்-னும் இருக்கு, வேட்டைக்கு போகையில, புலிக்கு நேராவா நின்னு சண்டை போடுவாக? ஊர்ல பேசுறவக பேசட்டும், உண்மைய சொல்லு-ன்னு இல்ல ராசாராமன் நின்னாங்க.."

"மனுஷனா புறந்தவன், தப்பு செய்யத்தான் செய்வான்... நம்ம ஊரு பாதிரி சொல்லுவாரு, "கடவுள் தமது சாயலாக ஆணும் பெண்ணுமாக மனிதர்களை படைத்தார்"-ன்னு, சாயலாத்தான் படைச்சாரு.. தப்பு செய்யாதக்கி இருந்தாகளா ? இல்லையே?, அதுக்காக கடவுள் கை வுட்டுட்டாரா என்ன?"

"பொள்ளாச்சி பக்கத்துல எதோ ஊராமா.. எழுவது பொண்ணுகளுக்கும் மேல, மூஞ்சிப்புத்தகமாமில்லே? அதுல பழகி, கன்னாபின்னா-ன்னு அவுகள போட்டோ புடிச்சிருக்கானாமா, ஒரு பரதேசி... , ஒத்த பொண்ணு கம்பளைண்டு கொடுத்ததுனால, இப்போ அந்த பக்கிப்பய கூட்டம் உள்ள கிடக்காம், இத அந்த முதலாவது பாதிக்கப்பட்ட பொண்ணு கொடுத்திருந்தா , அந்த கட்டைலபோறவங்களுக்கு இம்புட்டு தைரியம் வந்திருக்குமா?, இத்தனை பொண்ணுங்கள சீரழிக்க துணிஞ்சிருப்பானா?"

"அந்த ஒரு பொண்ணுக்கு இருக்கிற தகிரியம் உனக்கில்லாத போச்சில்ல?, கேட்டா மானம் அவமானம்.. ன்னு ... பேச்சு.."

"பேசறவங்க எப்பவும் பேசத்தான் செய்வாங்க...எதப்பு வாழ்க்க? நான் கஷ்டப்பட்டேன், என் அனுபவமிது, நீ சூதானமா நடந்துக்க ன்னு, கூட வர்ற மனுஷங்களுக்கு சொல்றதுதானே? சுத்தி இருக்கிற மக்க மேல காட்டற பாசமும் அன்பும்தானப்பு நிசம்?, கை காஞ்சு போகுது பாருங்க... போங்க ... போய் கை கழுவுங்க",பாட்டியின் பிடிசோறு வயிற்றை நிறைத்திருந்தது, பேச்சு மனதினை.

அனைவரும் மௌனமாய் கலைந்தனர்.

ஆம்.. எது வாழ்க்கை?
அனைவரிடத்தும் அன்பாயிருத்தல் வாழ்க்கை..

+++++++++++++++++++++++

சில பல மாதங்களுக்கு பின்.....

அதிதி ஸந்த்யா , இளம்பரிதியின் மகன் ரவி கதிரோனுக்கு இன்று ஒரு வயது நிரம்பி இருந்தது... SNP யின் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. அனைத்து வேலைகளும் கல்பலதிகாவின் மேற்பார்வையில் கனகச்சிதமாய் நடந்தது.. மேற்பார்வை மட்டுமே.. நடந்தால், கால் வீக்கம் கண்டதினால், வேலை செய்யக்கூடாது என தியா உத்தரவு போட்டிருந்தாள். இப்பொழுது லதிகாவிற்கு ஏழு மாதம். [பெயர் கூட முடிவு செய்து விட்டார்கள் ஆணென்றால் ... சூர்யகிரண் பிரகாஷ்.. (SKP) பெண்ணென்றால் கிரண்மயி]

அனைத்திற்கும் சேர்த்து, மனோகரன் ஓடிக்கொண்டிருந்தான்.. ஆம்.. மனோகரன், மீன் வளர்த்து விற்ற, தொழிலில் பிரச்சனை வர காரணமாயிருந்த, SNP யை கடத்தி ஏடாகூடமாய் வீடியோவில் சித்தரித்த அதே மனோகரன்தான்...

அன்று பாட்டி சொன்னவை, நரேன் மனதில் தைக்க, அவர் [பேரனெல்லாம் எடுத்தாச்சு.. இனி அவர்ர்ர் தான்], கேள்விப்பட்ட விஷயங்களும் உவர்ப்பாய் இருக்க.. அடுத்த ஒரு வாரத்திற்குள் மனோகரனை சிறையில் சந்திக்க சென்ற நரேன் சரண் இருவரும் அவனிடம் பேசியது :

"என்ன எதுக்கு பாக்கணும்-னு வந்தீங்க?, ஜெயில்லயே போட்டு தள்ளிட ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா?", சிறை வாசத்தை விட, தன் பிள்ளையை பிரிந்திருப்பதில் பாதியாய் இளைத்திருந்த மனோகரன் கோபமாய் கேட்க..

"ஒரு விஷயம் உனக்கு சொல்லிட்டு, உன் பர்மிசனுக்காக வந்தோம்.", சரண் பதிலுரைத்தாள்.

"என்ன பர்மிஷன்?"

"உன் ஜாமீனுக்கு நான் அப்ளை பண்றேன், அதுக்கான பெர்மிஷன், ", சரண் கூற..

கேட்டவன் திகைத்து விழித்தான்... "நீங்களே ஜெயில்ல புடிச்சு போடுவீங்களாம், நீங்களே ஜாமீனும் எடுப்பீங்களாம்.. என்ன விளையாடறீங்களா ?", மனோகரன் சந்தேகமாய் கேட்டான்.

"இல்ல.. விளையாடலை .. நீ ஊருக்கு அனுப்பினேயே, உன் குழந்தை, அதுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு தர்றாங்க, உயிரோட இருக்கணும்ங்கிறதுக்காக மட்டும்.."

"இல்ல இல்ல அப்படிலாம் பண்ண மாட்டாங்க.. நான் அவங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கிறேன். அதெல்லாம் நல்லபடியா பாத்துக்கறாங்க, நீங்க பொய் சொல்லறீங்க.."

"பொய் சொல்ல வேண்டிய தேவை என்ன ? எல்லாத்தையும் காசால வாங்க முடியாது மனோ, இப்போவாவது புரிஞ்சுக்க.. அன்பு, பாசம், காதல், இதெல்லாம் தானா வரணும்.. நிச்சயமா பணத்துக்கு அதை வாங்கற சக்தி இல்ல..", சொன்ன SNP பகைவனுக்கும் அருள்பவனாய் நின்றார்.

""தெரிஞ்சோ தெரியாமலோ, ஒரு குழந்தைக்கு அம்மா இல்லாம பண்ணிட்டேன்.. அதை நானே நிவர்த்தி பண்றேன். நீ ஜாமீன்-ல வெளில வர்ற வரைக்கும், உன் குழந்தையை நான் பாத்துக்கறேன், அப்பறம் நீயே வச்சுக்கோ.. ", சொன்ன சரண், தொடர்ந்தாள்..

"அதுக்கும் ஒரு கோர்ட் ஆர்டர் தேவை, என் கஸ்டடி-ல குழந்தையை விட சம்மதிச்சு எழுதி கொடு.. அதிக பட்சம் ஒரு மாசம் இல்ல 40-50 நாள்தான்.., உன்ன வெளிய எடுத்திடறேன், ப்ளீஸ்..", என்றவள்..

"இப்போவும் சொல்றேன் .. நான் பண்ணினது தப்பு கிடையாது, ஆனா உன் இழப்பு என்னால நேர் செய்ய முடியாதது.. இத உன் மகனுக்காக செய்யறேன். அப்பறம் உன் இஷ்டம் ", என்று சரண் பேச்சை முடித்து இருவரும் கிளம்ப எத்தனிக்க...

"அம்மா... ", என்று நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான், மனோகரன்... தரையில் விழுந்தவனைத் தூக்கிய SNP எனும் நரேன் அவனை வாழ்க்கையிலும் தூக்கிவிட்டார். ஆம்.. மனோகரனுக்கு, இறால் பண்ணை அமைத்து கொடுத்து, அதன் ஏற்றுமதிக்கும் வழி வகுக்க... "தரம் .. மனோ - forms -ன் தாரக மந்திரம்",என்ற வாசகத்துடன்.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

மனோவின் ஒப்புதல் கிடைத்த அடுத்த நாளே, மனோவின் பிள்ளையை, வேலைக்காரர்களிடமிருந்து பிரித்து, கிட்டத்தட்ட அவர்களை உருட்டி மிரட்டி, வீட்டிற்கு கூட்டி வந்து விட்டாள், சரண்.

தியா, பரிதி தம்பதியின் புதல்வன் ரவிக்கதிரோனின் வரவுக்கு முன்பே தாத்தா பாட்டி ஆயினர் சரணும், நரேனும்.. மிக மிக மகிழ்ச்சியாய்....

அன்றிலிருந்து .. மனோ ... SNP யின் நிழல் போலானான்.. அவன் பண்ணை வேலை நேரம் தவிர, மற்ற நேரத்தில் SNP பின்னேதான் எப்பொழுதும். பாஸ்கரும், பரிதியும் , இவனை தோள் சேர்த்தாலும், எட்டியே நின்றான். சுருங்க கூறின், சூர்ய நாராயண பிரகாஷின் பக்தனானான், மனோகரன்.

ஞாயிறு ..எவ்வாறு ..
மேடு பள்ளம்,
நன்னீர், கழிவு,
இருப்பவன், இல்லாதவன்,
ஜாதி, மதம்,
மொழி, இனம் ... அனைத்தும் கடந்து...
ஒருநாளும் தன் கடமை தவறாது உதித்து .. பூமி செழிக்க உதவுகின்றதோ அது போல.....

இந்த "ஸூர்ய வன்ஷா " - வை சேர்ந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும்.... உலகத்தோர் அனைவர்க்குமாய் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை தொழுது முடிக்கின்றேன்.

வணக்கம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top