என் இதய விழி நீயே-Episode 13

Advertisement

achuma

Well-Known Member
hi friends how r u all?
put next episode
thanks for previous comments n likes

take care

pls read n give comments :)



என் இதய விழி நீயே



கண்களில் பழி வெறியுடன் , கைகளில் மது கோப்பையினை ஏந்தி வெறித்து அமர்ந்திருந்தாள் பிரேமா ...
"ஹ்ம்ம்ம் பெத்தது எதுக்காவது பிரயோஜனம் இருக்கா , எவ்வளவு கனவு கோட்டை கட்டி வெச்சி இருந்தேன் , நான் பெத்தது சரி இல்ல..."
சிவநேசனின் கம்பெனி சொத்து உட்பட அனைத்தும் அன்னபூரணியின் பெயரிலேயே உள்ளது, அன்னபூரணி,அதில் கார் ஷோரூம் மட்டும் அவர் பெயரில் நான்கு உள்ளது, அதில் இரண்டு அர்ஜுனின் மனைவிக்கு என்றும் மற்றும் இரண்டு ஆதியின் மனைவிக்கு என்றும், யாரின் பெயர்களையும் எழுதாமல் , பொதுவாக வரப்போகும் மருமகளிற்கு என்று ,எழுதி வைத்துள்ளார் ...

அதில் பிரேமா மட்டும், அன்னபூரணி உயிருடன் இருக்கும் நேரத்தில், நிஷா பொறுப்பேற்கும் வரை தான் பார்த்து கொள்வதாக , இரண்டு ஷோரூம்களையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார் ...
மற்ற இரண்டும், ஸ்ரீ பார்த்து கொள்கிறாள் ...
பிரேமாவை பொறுத்த வரை அந்த இரண்டு ஷோரூமிற்கும் அவரே முதலாளி என்பது போன்று நினைப்பு ...
அன்னபூரணியும், அண்ணியின் நிர்வாக திறமையில் வியப்படைந்து , எதிலும் தலையிட்டுவதில்லை ...
பிரேமாவின் நிர்வாகம் சிறப்பாகவே நடந்தது ...
அதே நேரம் யாரிற்கும் சந்தேகம் வராத வாறு , அங்கு நடக்கும் தவறுகளும் மறைக்க பட்டது, பிரேமாவால் ...

அங்குள்ள ஒரு சிலரை தவிர , மற்ற அனைவரும் பிரேமாவின் ஆட்களே ...
"நம்ம சொல்லும் விலைக்கு , quote பண்ணும் suppliers , எத்தனை பேர் இருக்காங்க, கார் சர்வீஸ் நம்ம வைத்து தானே சட்டம் , ஸ்ப்ரெஸ் suppliers குடுக்கும் கமிஷன் , இன்சூரன்ஸில் செய்யும் குழப்பம் என்று எத்தனை வகையில் யாரிற்கும் சந்தேகம் வராத வாறு லாபம் பார்த்து வருகிறேன் ..."
இதெல்லாம் அபியின் கைகளுக்கு சென்றால் , நினைக்கவே உடல் சில்லிட்டது பிரேமாவிற்கு...
இப்பொழுது, அனைத்தும் ஒரு நொடியில் கலைந்ததே என்று, பிரேமாவால் , தாங்கிக்கொள்ள முடியவில்லை ...

அபியின் மீதான ஆதியின் விருப்பம் பிரேமா கண்டு கொண்டார் , அதே நேரம் தோழிகள் இருவரும், அவர் மக்களின் திருமணம் பற்றி பேசியதும் அவள் கண்ணில் பட்டது ...
மரண படுக்கையில் இருந்த மாமியாரிடம், சொந்தம் விட்டு போகாத வாறு, அது இது என்று அவர் மனதினை குழப்பி , அவர் வாயாலே அவர் மகளிடம்(பூரணி ), பேரன் பேத்திகள் திருமணம் குறித்து சத்தியம் வாங்கி கொண்டார் ...

அதன் பிறகு, தேவியை அலட்சியம் செய்வது, அபியை அந்த பக்கமே வராத வாறு அவளை திட்டி அனுப்பியது, என்று இத்துணை செயல்கள் செய்தது எல்லாம் , இன்று அவர் மகளாலேயே போயிற்று என்று , சினத்தில் இருந்தாள் ...

"ஹ்ம்ம் , அந்த தேவியும் அபியும் எப்பவும் என் விஷயத்தில குறுக்கால வந்துட்டே இருக்காங்க...இத்தனை நாள் இல்லாம , இப்போ இவ வந்ததும் இந்த மா உனக்கான கம்பெனின்னு நான் தூக்கி குடுத்துடனுமா ..."
"அதுக்கா இவ்வளவு வருடம் கஷ்ட பட்டேன் ..."

"ஒரு நாளைக்கே எவ்வளவு வருமானம் வர ஷோரூம்,.."
"என்னோட கிளப் பிரெண்ட்ஸ் பொறுத்த வரை நான் தான் , முதலாளி நினைக்கிறாங்க ...
அனைத்திலும் ரெண்டு vouchera போட்டு எத்தனை காசு பார்த்து இருக்கேன், இதெல்லாம் இனி இல்லாம இருக்க முடியுமா ..."

"விட கூடாது, அவள இந்த கம்பெனி உள்ள விடவே கூடாது..."
"ஆதிக்கம் அபிக்கும் ஏதாவது பிரச்னை குடுத்திக்கிட்டே இருக்கனும், அப்போ தான் , அந்த ஆதி இதை பற்றி சிந்தனை இல்லாம இருக்கும்..."
"அவங்க பிரச்னையே அவங்களுக்கு பெருசா இருப்பது போல் ஏதாவது செய்யணும்...
அவ இந்த குடும்பமே வேண்டாம்னு ஓட வைக்கணும் ..."
(யாரு யார ஓட வைக்கிறானு தெரியாம பிரேமா யோசனை செய்தா மட்டும் நடக்குமா )

"அவங்க கதை தான் அப்படினா, எனக்கு பொறந்துவ சரியான லூசா இருப்பா போல, பண ஆசை இல்லாம யாரவது இருப்பாங்களா, இப்போவே வேதாந்தம் பேசிட்டு திரிறா , அன்றைக்கே இவளையும் போட்டு தள்ளி இருக்கனும், பொறந்ததுக்கு ஏதாவது ப்ரயோஜனமா இருப்பானு பார்த்தா, எனக்கே வேட்டு வெச்சிட்டாளே ,"

" இந்த மனுஷனும், பொண்ணு மாசமா இருக்கானு உடனே , அவ பின்னாடியே ஓடிட்டாரே," இன்று ஒரு நாளே யாரும் தன்னிடம் இல்லாமல் தனித்து இருப்பதற்கு காரணம் எல்லாம் அபியே என்று ஒரு வன்மம் அவள் மீது வந்து விட்டது பிரேமாவிற்கு ...

அன்று இரவு முழுதும், உறக்கம் இல்லாமல் ஏதோ சிந்தனையில் பிரேமாவின் நேரம் கழிந்தது...

இரவு நேரம் கழித்து உறங்கினாலும், அபி விடியலில் எழுந்து விட்டாள், எழுந்தவுடன், முதலில் ஏதும் புரியாமல் மலங்க மலங்க விழித்து பார்த்தாள் ...

அதன் பிறகு நேற்று ஒரு நாள் நடந்த நிகழுவு அனைத்தும் அவள் கண் முன் வந்தது ...

"ஒரு நாள் போதுமா ?"
" இன்று ஒரு நாள் போதுமா ?"

என்ற பாடல் அவளின் நினைவுக்கு வந்தது

ஒரு நாள் , அவள் வாழ்க்கையே மாற்றி அமைந்து விட்டதே, என்று நினைத்தாள் ...
முதலில் பெற்றோர் இறந்த அந்த ஒரு நாள் அவள் வாழ்க்கையை துன்பத்தில், தனிமையில், லீலாவின் கொடுமையில் என்று மாற்றி அமைத்தது...

நேற்று கழிந்த ஒரு நாள் , ஆதியுடனான திருமண வாழ்க்கை , இந்த மாற்றம் அவளுக்கு என்ன வைத்து உள்ளது, என்று நினைத்து பார்த்தாள் ...
பிறகு அவள் கணவன் கீழே தரையில் படுத்து உறங்கி கொண்டிருப்பதை பார்த்தாள் ...
"இவரு என்ன கீழ படுத்து தூங்குறாரு , சரியான சொகுசு மன்னனாச்சே , " என்று அவளின் சிந்தனை சென்றது...

பிறகு சிறிது நேரம் அவன் முகத்தினையே பார்த்து கொண்டிருந்தாள் , அலை அலையான கேசம், நான் யாருக்கும் அடங்க மாட்டேன் , என்பது போன்று இங்கும் அங்கும் அசைந்து கொண்டிருந்தது ...
அடம் பிடிக்கும் குழந்தை போன்று உறக்கத்திலும் முகம் பிடிவாதத்துடன் இருந்தது...

அபி மிகவும் ஏங்கும் வெண்மையான நிறம்,, இவர் இவ்வளவு நிறமா இருக்காரு, நான் நிறம் ரொம்ப குறைவா இருக்கேன், உயரமும், இவரு பண மரத்துல பாதி இருக்காரு , என்ன எப்பொழுதும் முன்ன இவரு அழைப்பது போல் நான் ஆழாக்கு மாதிரி உயரம் குறைவா இருக்கேன் , என்று வழக்கம் போல் அவளின் தாழ்வு மனப்பான்மை தலை தூக்கியது ...
ஆதி அவளை மனதால் ஏற்று கொள்வானா என்று அவளிற்கு அவளே கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ...

அதே நேரத்தில் அவளிற்கே தெரியாமல் அவள் கணவனை மனதில் பதிய வைத்து கொண்டிருந்தாள் ..
cleardot.gif

"ஹ்ம்ம்! தோழனா இருக்கும் போது நல்லா பழகுனார் , இப்போ சிடுசிடுங்குறார்"
எவ்வளவு நேரம் அவன் முகத்தையே பார்த்து அமர்ந்திருந்தாளோ , சிறிது நேரத்தில் எழுந்து குளிப்பதற்கு சென்றாள் , அந்த அறையில் அங்கு ஏற்கனவே அவளின் உடைகள் அடங்கிய பை இருந்ததால் , அதில் இருந்து உடை எடுத்து குளிப்பதற்கு சென்றாள் ...
அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டின் வெளி புறம் சுற்றி பார்க்க சென்றால் , அத்தனை பெரிய வீட்டில் அதன் சுற்றி உள்ள இடம் ஏதும் தோட்டம் இல்லாமல் வெறுமையாக இருந்தது...

மீண்டும் மாடி ஏறி அவர்களின் அறையில் உள்ள பாலகனி வந்து, அவளின் ஈர கூந்தலை துவட்ட ஆரம்பித்தாள் ...
கைகளை அதன் வேலையே செய்து கொண்டிருந்தாலும் , மண் முழுதும் ஊரில் நடக்க இருப்பதை பற்றிய சிந்தனையில் இருந்தது ...

எப்பொழுதும் எழும் நேரதிக்கே ஆதி எழுந்து விட்டான் , ஆதி எழுந்ததும் அபி அறையில் இல்லாததை கண்டு கொண்டான் ...
பால்காணி கதவு திறந்து இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்தான் , அவன் மனைவி அவனிற்கு முதுகை காட்டி தலை துவட்டி கொண்டிருந்தாள் ...
எந்த வெளி பூசு இல்லாமல் இருக்கும் மனைவியின் இயற்கை அழகு அவனை மிகவும் கவர்ந்து இழுத்தது ...
அவளின் இடை தாண்டி நடனம் ஆடும் கூந்தலில் அப்படியே அவன் முகத்தை புதைத்து, கொள்ளும் ஆசையை அடக்கி , கீழே இறங்கி சென்றான் ...
சிறிது நேரம் ஆதி நடை பயிற்சி செய்து முடித்து ,அவனின் மனைவிக்கு டீ தயாரித்து எடுத்து சென்றான் ...
அவளின் அருகில் சென்று , கம்பீரமான குரலில் குட்மார்னிங் அபி என்றான் ...

திடீர் என்று ஒலித்த குரலில் அபி அதிர்ந்து திரும்பினாள் , "ஈஸி அபி நான் தான் , சாப்ட்டா தான கூப்பிட்டேன் , இப்படி பயந்தா எப்படி ரொம்ப கஷ்டம்..."
அபி தன்னை சுதாரித்து , குட்மார்னிங் , என்றாள் ...

இந்த டீ , உனக்கு தான் , நீ தான் டீ பிரியை ஆச்சே என்று அவளின் கையில் டீ கோப்பையை கொடுத்தான் ..
அவனின் செயலில் அபியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது , எத்தனை வருடம் கழித்து இது போன்று டீ குடிக்கிறாள் , அவள் பெற்றோர் இருந்த காலத்தில் , காலையில் டீ இல்லை என்றால் , அவளின் தாயிடம் அத்தனை ஆர்பாட்டம் செய்து விடுவாள் , அவரின் மறைவுக்கு பிறகு, ஒரு நாளும் அது போன்று அவளின் விருப்பத்தினை அனுபவித்ததில்லை ...
அதிலும் தன்னவன் , அவளிற்காக என்று அவளிற்கு பிடித்த தேநீர், தயார் செய்து கொண்டு வந்தது , அவள் மனம் அவனின் பக்கம் அவள் அரியமால் சாய ஆரம்பித்தது ...
"ஹே, என்ன கண்ணுல தண்ணி ?" என்றான் ஆதி...
" இல்ல காத்து ரொம்ப வீசுதுல அதன் ஏதோ தூசி ,ரொம்ப தேங்க்ஸ் ...உங்களுக்கு?" என்றாள் ...

"நான் க்ரீன் டீ தான் ,நான் குடிச்சிட்டேன் ..."
" ஆமா , அங்க என்ன அந்த டேபிள் மேல அவ்வளவு சேப்டி பின்?" என்று தெரிந்து கொண்டே கேட்டான்...
இதற்கு என பதில் சொல்வது என்று அபி தெரியாமல் திரு திரு என முழித்தாள் , அவளின் முகமோ செம்மை பூசியது ...
இவன் இப்டி எல்லாம் கேட்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் , என்று நினைத்தாள் பெண்ணவள் ...

அவனிற்கு ஏதும் பதில் அளிக்காமல் , வேறு புறம் திரும்பி நின்றாள் ...

ஆனால் அவன் விடுவதாக இல்லை, அவளின் முன் சென்று அவனே அவளின் முகத்திற்கு அருகே குனிந்து, உனக்கு இவ்வளவு பின் போடாம சாரீ எப்படி கட்டணும்னு நான் சொல்லி தரேன் ," என்று அசராமல் அவளை பார்த்து கண்ணடித்து வைத்து உரைத்து விட்டு சென்றான் ...
அபிக்கு அந்த குளிரிலும் குப்பென வியர்த்தது...

ஆதியும் குளித்து விட்டு வெளி வருவதற்குள் அபி அந்த அறையிலே இல்லை ...
அவனை சந்திப்பதற்கே அபிக்கு ஏதோ ஒரு வித பயம் , வெட்கம் என்று ஒரே கலவையாக இருந்தது ...

அதற்குள் அனைவரும் எழுந்து , தயார் ஆகி வெளி வந்தனர் ...
அபி ஸ்ரீயிடம் அவளின் நகைகளை ஒப்படைத்தாள் ...
ஸ்ரீ எவ்வளவு கூறியும், அபி வேண்டாம் என்று மறுத்து விட்டாள் ...

சிவநேசன் ஆதியை அழைத்து வருமாறு கூறினார் , அபி இனியும் தப்பிக்க முடியாது என்று , ஆதியை அழைப்பதற்கு சென்றாள் ...
ஆதி ஏதோ அங்கு இருந்த அலமாரியில் தேடி கொண்டிருந்தான் , பிறகு அபியின் வரவு அறிந்து , "அபி இந்த நகையை போட்டுக்கோ" என்று ஒரு நகை பெட்டியை கொடுத்தான் ...

அபி ஏதும் புரியாமல் பார்த்ததற்கு , அவனே அதனை திறந்து , அதில் இருந்து ஹாரம் போன்று பெரிதும் இல்லாத, டாலர் செயின் போன்றும் இல்லாத வகையில் ஒரு அழகான டாலர் வைத்த சங்கிலி இருந்தது ...

"எனக்கு வேண்டாம்," என்று , நிஷாவிற்கு வாங்கி வைத்ததோ என்று நினைத்து மறுத்தாள் ...

மீண்டும் ஆதிக்கு கோவம் வந்து விட்டது என்று அவனின் இறுகிய முகத்தை வைத்தே கண்டு கொண்டாள் , இல்ல யாருது என்று மெதுவாக கேள்வி கேட்டாள் ...
"உனக்கு வாங்கியது தாண்டி," என்று ஆதிக்கு கத்த வேண்டும் போல் தோன்றியது ...
"இது அம்மாது தான்," என்று அவனே அவளின் கூந்தலை ஒதுக்கி அபிக்கு போட்டு விட்டான் ...
பூரணியின் பெயர் சொன்னதும், அபிக்கு மறுப்பதற்கு ஏதும் தோன்றவில்லை ...

அவள் அவனுடன் கீழே சென்றாள் ...
இருவரும் ஒன்றாக படியில் இறங்கி வரும் போது ,இருவரின் ஜோடி பொருத்தும் கண்டு , அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர் ...பிறகு பூஜை அறையில் பூரணியின் படத்தின் முன்பு ஒன்றாக நின்று வேண்டி வந்தனர் ...
அர்ஜுனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ...

"வீட்டுக்கு வந்ததும் சுத்தி போடணும்" என்று ஸ்ரீ திவ்யாவிடம் கூறிக்கொண்டிருந்தாள் ...
"ஸ்ரீ, அபி! உனக்கு டீ எடுத்து வரவா , நாங்க குடிச்சிட்டோம் , "என்று கேட்டாள் ...
ஆதி ஏதோ அபியிடம் சைகையில் கூற வருகிறான் , அவள் எங்கு அவனை நேர் கொண்டு பார்த்தாள் ...

"இல்ல அக்கா , எனக்கு அவர் குடுத்துட்டாரு ," என்று உளறி விட்டாள் ...
பிறகே ஏன் கூறினோம் என்று ஆகியது அபிக்கு ...
ஆதி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் , சரியான உளறு வாய் , என்று அவன் மனைவியை ,மனதிலே திட்டி கொண்டான் ...
"அட பாவி, இவன் ஒரு கிளாஸ் தண்ணி கூட அவனுக்கு எடுத்துக்க மாட்டான் , உனக்கு டீ போட்டு குடுத்தானா ,"என்று அர்ஜுன் முதல் ஸ்ரீ, திவ்ய அனைவரும் ஆதியையும், அபியையும் ஒரு வழி செய்து விட்டனர் ...

"உங்க தம்பிய பார்த்து கத்துக்கோங்க ," என்று ஸ்ரீ அர்ஜுனை வசை பாடி கொண்டிருந்தாள் ...

"நேற்று தான் அவனுக்கு ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன ,இன்றைக்கு இப்டி சொல்றியே" , என்று அவளிடம் வீரப்பாக கூறியவன், அவளின் முறைப்பிற்கு அடங்கி, "டேய் ஆதி, உனக்கு , நான் என்ன டா செய்தேன்?"
," இப்டி அநியாயத்துக்கு பொண்டாட்டிக்கு சேவை செய்றவனா மாறிட்டு, என்ன வேற கோர்த்து விட்டுட்டா, என்று ப விட்டுட்ட...

பிறகு நேரம் உணர்ந்து, அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர் ...
சிவநேசன், முதல் இருக்கையில் , அர்ஜுன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வந்தனர்...
நடுவில் இருந்த இருக்கையில் குழந்தையுடன் , ஸ்ரீ மற்றும் திவ்யா அமர்ந்தனர் ...

அதற்கு பின் பக்க இருக்கையில் ஆதியுடன், அபி அமர்ந்து வந்தாள் ...
ஊருக்கு போற வரை இவனிடம் பிரச்னை இல்லாம இருக்கனும் என்று வேண்டுவதற்கு முன்பே , ஆதியின் வலிய கரம் அபியின் தோளில் அணைத்தது போல் விழுந்தது ...
அபி முயற்சி அனைத்தும், ஆதியின்,முறைப்பில் அடங்கி போயிற்று ...

ஒருவருக்கு ஒருவர் கேலி கிண்டலுடன், அந்த பயணம் இனிதே ,கழிந்தது, வழியில் உள்ள புகழ் பெற்ற ஹோட்டலில் காலை உணவு முடித்து மீண்டும் பயணம் செய்ய ஆரம்பித்தனர்...

இந்த மகிழ்ச்சி , மீண்டும் ஊரில் இருந்து வரும் போது, காணாமல் போகும் என்று தெரிந்து இருந்தால் , யாரும் பயணம் செய்திருக்கவே மாட்டனர் ...
அங்கு சென்று அபியின் கருப்பு நாட்களை அறிய வரும் போது, அவர்களின் மனம் எவ்வாறு இருக்குமோ ?
 

S SATHYA

Member
Nice ud sis prema than main villiya ivlo fraud pannirukanga abiku ennalam sambavam vachirukanganu therilaye aadhi adhellam solve panniduvanganu theriyum irundhalum sis neenga adikadi kaanamapoiduringa engalukku aadi and abi weekly once venum sis please try
 

monies

Well-Known Member
Tonga nizhavaram trinja aathi summa vidamatane
Romba varuthapaduvanga avala kavanikama vitutome nu
Waiting achu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top