Poorva jenmam - Episode 18

Advertisement

கோபி கடைசியாக சிக்னல் எங்கிருந்து வந்ததோ அங்கேயே மூளை முடுக்கெல்லாம் தேட ஆரம்பித்தான். பார்ம் ஹௌஸின் மேல் சந்தேகம் ஏற்படவில்லை. ஏனெனில் இப்போதுதான் போலீஸ் custody யிலிருந்து விடுபட்டது. அதனால் கடத்தி கொண்டுபோய் அங்கு வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் மொத்த ஏரியா வையும் அலசி பார்த்தபிறகு பார்ம் ஹௌசையும் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாது. அது மட்டுமில்லாமல் அங்கே கடத்தி வைத்திருந்தால் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரியாது. யோசித்து கொண்டிருக்கும் போது chief போன் செய்தார்.

போலீசுக்கு தெரிவித்ததையும் அவர்கள் கோபியை தொடர்பு கொள்வார்கள் எனவும் கூறினார். அதன்படி அவர்களும் போன் செய்தனர். அவர்களுக்கு தான் இருக்கும் இடத்தையும் பார்ம் ஹௌஸின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தான். அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

பிரணவ் எதிர்காலத்தை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தான். அவன் எதிரில் சிறையில் இருக்கும் அவன் நண்பன் வந்து நின்றான். பிரணவ் அதிர்ந்துவிட்டான்.இருவரும் பேச்சுவார்த்தை முற்றியது. இவனை கொள்வதற்காவே அவன் சிறையில் இருந்து தப்பியது. தப்ப வைத்தார்கள் என்று சொல்லலாம். பேச்சு வார்த்தை கைகலப்பிற்கு வந்தது. இதுதான் சமயம் என்று பிரணவ் ஐ நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டான். கையில் வைத்திருந்த மயக்கமருந்தை அவன் மூக்கில் வைத்தான். மயக்கத்தில் மூச்சு திணற ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வந்த வேலை முடிந்து விட்டது. பங்களாவின் பின்புறம் நின்றிருந்த வண்டியில் போய் ஏறிக்கொண்டான். வண்டி புறப்பட்டது. சிறிது தூரம் சென்றபிறகு வண்டி ஓரிடத்தில் நின்றது. அவனை இறங்க சொன்னார்கள். அவனுக்கு புரிந்துவிட்டது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. எவ்வளோ கெஞ்சி பார்த்தான். பிரயோஜனம் இல்லை. மறுநாள் பேப்பரில் கொட்டை எழுத்தில் வரும். சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற ஆயுள் தண்டனை கைதி சுட்டு கொலை என்று.

கோபியும் போலீசாரும் பார்ம் ஹௌஸிற்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த 5 பேரும் தப்பி ஓட பார்த்தனர். அவர்களை வளைத்து பிடித்தனர். கோபியும் நேத்ரனும் உள்ளே போய் ரித்திகாவை தேடினர். கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தவளை மீட்டனர். கடத்தியத்திலிருந்து நடந்தவை அனைத்தும் கூறினாள். விடியும் வரை கெடு அவனை திருமணம் செய்ய என்றாள். கோபி மனதில் நினைத்து கொண்டான் எங்கிருந்து தான் வருவார்களோ போட்டிபோட்டு கொண்டு. இப்போது இவனை வேறு சமாளிக்க வேண்டும். போலீசார் வீடு முழுக்க தேடினர். பிறகு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து நீச்சல் குளத்தில் இருந்தவனை தூக்கி சென்றனர்.

ஆம்புலன்ஸ் வரவும் மூவரும் வெளியே வந்து பார்த்தனர். இன்ஸ்பெக்டர் அவன் போதை அதிகமாகி நீச்சல் குளத்தில் இறந்து கிடந்ததாக கூறினார். ப்ரணவ் இன் தந்தைக்கும் சொல்லப்பட்டது. கோபி மனதில் அம்மாடி ஒரு ரூட் க்ளியர் ஆகிவிட்டது என்று நினைத்து கொண்டான். மூவரும் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று official formalities முடித்த பிறகு வீடு சென்றனர்.

மறுநாள் செய்தித்தாளில் பிரணவ் ன் மரணம் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் வந்தது. அவன் நண்பனின் மரணம் அதே முதல் பக்கத்தில் ஒரு ஓரத்தில் இருந்தது.

பிரணவ் ன் தந்தைக்கு மகனின் மரணத்தில் சந்தேகம் இருந்தது. தானே தண்ணீரில் விழும் அளவுக்கு குடிப்பவன் அல்ல. அதுமட்டும் அல்லாமல் வீட்டிலிருந்த bar போனமுறை போலீஸ் கஸ்டோடியில் இருக்கும்போதே அகற்றப்பட்டு விட்டது. அதனால் நினைவு தப்பு அளவுக்கு குடிக்க மதுபானம் அந்த வீட்டில் இல்லை. மற்ற போதை வஸ்துக்களில் அவனுக்கு நாட்டம் கிடையாது. அவருக்கு தனஞ்செயனின் மீதும் அந்த பெண்ணின் மீதும் தான் சந்தேகம். அவர்கள் ஏதோ பண்ணிவிட்டார்கள் என எண்ணினார். பதவி பறிபோனதிருந்து தனஞ்செயனின் மீது கோபத்தில் தான் இருந்தார். திட்டம் தீட்டி பறித்துவிட்டதாக எண்ணியவர் அந்த தனஞ்செயனை சும்மா விட கூடாது, பழி தீர்க்க முடிவு செய்தார்.

தனஞ்செயன் செய்தித்தாளில் வெளிவந்த செய்தியை கண்டவுடன் ரித்திகாவை அழைத்தான். அவளும் நடந்தவற்றை கூறினாள். உடனே அவளை பார்க்க விழைந்தது மனம்.


இன்னும் 15 நாட்களில் தங்கைக்கு திருமணம். இரண்டு நாட்களில் போய்விட்டு வந்துவிடலாம் என அடுத்த நாளே கிளம்பினான். ஓட்டுனருக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லவும் தானே வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

இதை அறிந்த பிரணவ் ன் தந்தை அவனை சென்னைக்கு வரும் வழியில் தீர்த்து கட்ட முடிவெடுத்தார். தனஞ்செயன் வந்து கொண்டிருந்தான். இரவு நேரம் இப்படி தானே வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது மிகவும் பிடித்த விஷயம். மதுராந்தகம் தாண்டியவுடன் ஒரு மணல் லாரி அவனை நோக்கி வேகமாக வந்தது. சுதாரித்து திரும்பியவன் பக்கத்திலிருந்த மரத்தில் மோதிவிட்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
முட்டாள் தனஞ்செயன்
வலுவில் போய் மாட்டிக்கிட்டானோ?
மரத்தில் மோதினவனுக்கு என்ன ஆச்சு?
ப்ரணவ்வைக் கொன்றது போலீஸ்தானே
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ஏன் இப்படி தனியா வரணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top