இதயம் இடம் மாறியதே - 8

Advertisement

Indira75

Active Member
காலை அழகாக புலர்ந்தது. சூரியன் தன் கதிர்களுடன் பூமியை பார்க்க ஆயுத்தமானார். நேற்றின் கனம் சற்றே குறைந்திருக்க அந்த வீட்டின் தினப்படி வேலைகள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. விசுவநாதன் கோமதி யை இரவே அழைத்து வந்திருந்தார். கோமதியும் தமிழரசியும் பேசியபடியே காபி போட்டுக்கொண்டும், காலை உணவுக்கான வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சித்ரா வடிவாம்பாளு க்கு உதவியாக பூஜையறையில் சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றிக் கொண்டு இருந்தாள். சாம்பிராணி வாசம் வீட்டை கமகமக்க வைத்தது.

உலகநாதன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். பூஜையை முடித்துவிட்டு வந்து உலகநாதன் அருகில் அமர்ந்தார் வடிவாம்பாள்.

தமிழரசி அனைவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தார்.
தம்பி என உலகநாதன் சப்தமிட வந்துட்டேன் அண்ணா, என்றவாறு விஸ்வநாதனும் காபியை வாங்கிக்கொண்டார். தமிழரசியும், கோமதியும் கூட காபி தம்பளருடன் தரையில் அமர்ந்தனர்.
வடிவாம்பாள், உலகநாதனை பார்த்து வக்கீல் ஐ வரசொல்லிட்டியா? என்றார்
ம்ம் சொல்லிட்டேன்மா, காலையில ஏதோ கோர்ட் ல வேலையிருக்காம். அதனால மதியத்துக்கு மேல வர்றேன்னு சொல்லியிருக்கார் என்றார்.
விஸ்வநாதனும், கோமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தமிழு, சித்ரா வீட்ல இருந்து எத்தனை மணிக்கு வர்றாங்க? என்றார்.
அத்தை காலைல பதுமணிக்கு மேல வர்றேன்னு சொல்லியிருக்காங்க.காலைல வேலை எல்லாம் முடிச்சுட்டு கெளம்புவாங்க ன்னு
நெனைக்கிறேன் என்றார்.
சரி. தமிழு, மதியம் சமையல் நல்ல தடபுடலா செஞ்சு வை. இனிப்பு செஞ்சு வை . வடை, பாயசம் எல்லாம் செஞ்சிரு என்றவரை
அத்தை அதெல்லாம் இப்ப எதுக்கு? நான் வழக்கமா செய்யற மாதிரியே செய்யறேன் என்றார். தமிழரசி
இங்க பாரு தமிழு, சம்மந்தி வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு எப்பவாவது தான் வர்றாங்க. நம்ம பிரச்சனை நம்மளோட. அவுங்க நல்ல விஷயமா வர்றாங்க. சித்ரா அவுங்களுக்கு ஒரே பொண்ணு. அவுங்களை நல்ல படியா கவனிச்சு அனுப்பனும். அப்பதான சித்ராவுக்கும் சந்தோசமாவும், மதிப்பாவும் இருக்கும். அத னால நான் சொன்னபடி செய் . என்றார் வடிவாம்பாள்.
கோமதி அம்மா வீட்ல எல்லாரும் நல்லாருக்கங்களா? என்றார்.
ஆமாங்க அத்தை, அம்மாவும் அப்பாவும் இன்னும் ரெண்டு நாள் கழித்து வர்றேன்னு சொன்னாங்க. என்றார்.
சரி என்றவர், உலகு நான் ராத்திரியே அப்பா கிட்ட எல்லா விஷயமும் பேசிட்டேன். எப்படி என்னன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.
அப்புறம் நம்ம சித்ரா வுக்கு இப்ப ஆறு மாசம் முடியப்போகுது. இன்னும் பத்து நாள்ல ஏழாவது மாசம் பொறந்திரும். மாசம் பொறந்ததும் முதல் முஹூர்தத்திலேயே ஒரு நல்ல நாளா பார்த்து வளைகாப்பை முடிச்சுடலாம். ஜோசியரை வர சொல்லிட்டியா? என்றார்.
ஆமாம்மா, அவரு பத்தரை மணிக்கு வந்துடுவாரு. என்றார் உலகநாதன்.
அப்பா இன்னும் உறங்கறாங்ளாம்மா? என்றார் உலகநாதன்.
ஆமாப்பா, ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வரலன்னு பேசிட்டு இருந்துட்டு நேரம் கழிச்சு தான் உறங்குனாங்க. சித்த கழிச்சு எந்திரிக்கட்டும்னு விட்டுட்டேன் என்றவர்,
சரி போய் ஆகவேண்டிய வேலைகளை பாருங்க, நான் போயி அப்பாவை பார்க்கிறேன் என்று எழுந்து சென்றார்.
தமிழரசியும், கோமதியும் மதியம் என்ன செய்வது என்று பேசியபடி சமயலறைக்கு சென்றனர். அந்த வீட்டில் மேல் வேலைக்கும், சுத்து வேலைக்கும் வேலையாட்கள் இருந்தனர். ஆனால் சமையல் மட்டும் வீட்டு பெண்கள் தான் செய்ய வேண்டும் என்பது வடிவாம்பாளின் விருப்பம். அதன் படிதான் நடந்து வந்தது.
அக்கா இனிப்புக்கு கொஞ்சம் கேசரி செஞ்சு கூட நான் வீட்ல இருந்து கொண்டு வந்த கருப்பட்டி மைசூர்பாக் இருக்கு, அதை வச்சுடலாம். கொஞ்சம் vegetable ரைஸ். சாதம், முருங்கைகாய் சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு கறி, கேரட் பீன்ஸ் பொரியல், தக்காளி கூட்டு, அப்பளம் பொரிச்சு, வடை சுட்டு
இளநீர் பாயசம் செஞ்சுடலாம் என்றார்.

இவ்வளவு தேவையா என யோசித்த தமிழரசி, மாமியார் சொன்னது நியாபகம் வர, சரி கோமதி
அப்படியே செஞ்சுடலாம். நீ போயி முருகன் கிட்ட அஞ்சாறு இளநீ போட்டு
வெட்டி குடுக்க சொல்லு என
சரிக்கா என்று தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு சென்றாள் கோமதி.
சித்ரா வந்து தமிழரசி எடுத்து வைத்த காய்கறிகளை, எது எது எதற்கு என்று கேட்டு அதன் படி நறுக்க ஆரம்பித்தாள்.
வடிவாம்பாள் வந்து தன் கணவர் குளிப்பதற்கும் மற்றவேலைகளுக்கும்
உதவி செய்தவர், அவருக்கு இஸ்திரி போட்டு வைத்திருந்த ஆடைகளை கொடுத்து அணிய வைத்தார்.
ஏனுங்க மாமா, சாப்பிட இட்லி இங்கேயே எடுத்துட்டு வரட்டுமா, இல்ல அங்க வந்து சாப்பிடறீங்களா? என்றார்.
இல்ல நான் அங்க வந்தே எல்லோருடையும் சாப்பிடுறேன் என்றவர் மெதுவாக நடந்து வந்தார்.
மதிய சமையலை கவனித்துக்கொண்டே காலை உணவை அனைவருக்கும் பரிமாறி, வீட்டு பெண்களும் உண்டு முடித்தனர்.
சரியாக பத்தரை மணிக்கு ஜோசியர் வந்தார்.அவரை வரவேற்று அவருக்கு காபி கொடுத்து விட்டு, தமிழரசி எடுத்துக் கொடுத்த மாத்திரைகளை ராஜலிங்கத்திற்கு கொடுத்தார். அவரை அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமரவைத்தவர், தானும் அருகில் அமர்ந்து ஜோசியரிடம் பேச ஆரம்பித்தார்.
பதினோரு மணிக்கு மேல் சித்ரா வின் பெற்றோர் வந்தனர். அவர்களை வரவேற்று அமரவைத்தனர். கந்தவேலும், வந்திருந்தவர்களை
வாங்க அத்தை, வாங்க மாமா என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
கோமதி அனைவருக்கும் juice கொண்டுவந்து கொடுத்தாள்.
பொதுவாக சிறிது நேரம் பேசினார்கள்.
சித்ராவின் தாய் வடிவாம்பாளை பார்த்து அம்மா, உங்க பேத்தி சித்ராக்கு நாங்க வளைகாப்பு செய்யணும் இல்ல, அதுதான் உங்ககிட்ட வந்து முறையா கேட்டு, தேதி குறிச்சுட்டு போலாம்னு வந்தோம். என்றார்
அதுக்கென்னத்தா நல்லா செஞ்சுடலாம். உனக்கு ஒரே பொண்ணு நீ எப்படி ஆசைப்படுறியோ அப்படி செய். அதில யாருக்கும் எந்த மறுப்பும் இல்ல என்றவர்
என்ன உலகு, தமிழு நான் சொல்றது என்று தன் மகனையும் மருமகளையும் சேர்த்து கொண்டார்.
ஆமாங்கத்த்தை, நீங்க சொன்னபடியே செஞ்சுடலாம் என்று முகமலர்ச்சியுடன் தெரிவித்தார் தமிழரசி.
ஜோசியரிடம் நல்ல நாள் பார்க்க சொல்ல , அன்றிலிருந்து 18ம் வளைகாப்பு என முடிவானது. இரு பக்கமும் எத்தனை பேரை அழைப்பது, எங்கு நடத்துவது, சமையல் மெனு என எல்லாம் அனைவராலும் முடிவு செய்யப்பட்டது.
சரிங்க அப்ப நான் கெளம்பரணுங்க, என்றார் ஜோசியர்.
வடிவாம்பாள், தமிழரசியை பார்க்க அவர் உள்ளே சென்று தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூவுடன் தட்சிணை வைத்து கொண்டுவர, சித்ராவின் தந்தை தங்கள் பங்குக்கு தட்சிணை வைத்தார். அதை வாங்கிக்கொண்டு கிளம்பிய ஜோசியரை பார்த்து வடிவாம்பாள், நாளைக்கு
கொஞ்சம் காலைல வரமுடியுமா ஜோசியரே? என்றார்
சரிங்கம்மா, வரனுங்க என்றவாறு கிளம்பினார் ஜோதிடர்.
அவர் கிளம்பியதும் சற்றுநேரம் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
பின் தமிழரசி அனைவரையும் உணவருந்த அழைக்க, அனைவரும் சென்று உணவருந்தினர்.
உணவருந்தி முடித்த பின் சிறிது நேரம் இருந்துவிட்டு சித்ராவின் பெற்றோர் கிளம்பினர்.
அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே பூங்கொடி தன் கணவர் மணிமாறனுடன் வந்தார். காலையிலேயே உலகநாதன் போன் செய்து மதிய உணவுக்கே வரச்சொல்லி இருந்தார். ஆனால் மணிமாறன் கொஞ்சம் வேலையிருப்பதால் தான் 3 மணிக்கு மேல் வருகிறேன் என்று கூறியிருந்தார்.
பூங்கொடி, மாப்பிள்ளை வாங்க, வாங்க என உலகநாதன் வரவேற்றார்.
அண்ணி வாங்க, நல்லா இருக்கீங்களா? அண்ணா வாங்கன்னா என்று தமிழும் கோமதியும் வரவேற்றனர்.
நல்லா இருக்கேன் அண்ணி, நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க? என்று கேட்ட பூங்கொடி
கோமதி அண்ணி ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க? என்று விசாரித்தார் பூங்கொடி.
அதற்கு பதில் சொன்ன கோமதி, இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்.
அம்மா என்றவாறு தன் அன்னையின் பக்கத்தில் தரையில் அமர்ந்தவர், தலையை தன் அன்னையின் மடியில் சாய்த்தார். தன் மகளின் தலையை வருடிய வடிவாம்பாள், என்ன கண்ணு? என்றார்.
நேத்து அய்யாவை ஆஸ்பத்திரி க்கு கூட்டிட்டு போனீங்களாம்மா?
காலைல தாமரை போன் ல சொன்னப்ப தான் எனக்கு விஷயமே தெரியும். சொல்லிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேன் இல்ல என குறையாக சொன்னார் பூங்கொடி
இல்ல கண்ணு, எப்பவும் கூட்டிட்டு போறதுதான, ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க. மருந்து, மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க. இப்போ தான் போயி உறங்குனாங்க. கொஞ்ச நேரத்துல எந்திரிச்சுடுவங்க என்றார்.
பூங்கொடிக்கு தந்தையின் மேல் மிகுந்த பாசம். அவருக்கு இப்போதுள்ள நிலையை சொன்னால் அவர் தாங்க மாட்டார் என்பதால் எதுவும் சொல்லவில்லை.
அண்ணன் காலைல போன் பண்ணி வர சொன்னங்க, நான் என்னவோ ஏதோ ன்னு பயந்துட்டேன் மா என்று தான் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தார்.
மணிமாறனிடம், உலகநாதன் நேற்று டாக்டர் சொன்னதை விளக்கமாக சொல்லி, தன் அன்னை எடுத்திருக்கும் முடிவையும் கண் கலங்க சொன்னார்.
மணிமாறன் உலகநாதனின் கையை பிடித்து, என்ன மச்சான் நீங்க? மாமாவுக்கு ஒன்னும் ஆகாது, டாக்டருங்க எல்லாம் சொல்லுவாங்க. நீங்க என்ன சின்ன பிள்ளை மாதிரி கலங்கறீங்க? தைரியமா இருங்க என்று சமாதானப்படுத்தினார்.
மாப்பிள்ளை பூங்கொடி கிட்ட அப்பாவைப் பத்தி எதுவும் சொல்லல, மெதுவா சொல்லிக்கலாம் என்றார் விஸ்வநாதன்.
சரி மச்சான் நான் பார்த்துக்கிறேன் என்றார். மணிமாறன்.
வாசலில் கார் சத்தம் கேட்டதும், உலகநாதன் வெளியே வந்தார். வக்கீல் திருமூர்த்தி வந்திருந்தார். அவரை கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top