P19 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“ஹலோ நான் பவித்ரா பேசுறேன்.”
“சொல்லுங்க அண்ணி.”
“அண்ணன் போன் லைன் போகலை. அங்க புயல்ன்னு சொன்னாங்களே, அண்ணன் எங்க இருக்கார்?” பவித்ரா பதட்டமாக கேட்க, பதில் சொல்வதற்குள் ரோஜாவுக்கு நாக்கு உலர்ந்து விட்டது.
“கடலுக்கு தான் போய் இருக்கிறார்.” என்றதும்,
“என்னது கடலுக்கா? இந்த புயல்லையா?”
“அவர் காலையில போகும் போது புயல் இல்லை.”
“என் அண்ணனுக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா... அதுக்கு முதல் காரணம் நீதான் ரோஜா... நீதான் என் அண்ணனை திரும்ப இந்த வாழ்க்கைக்கு தள்ளிட்ட....”
“அவர் எங்களோட இருந்திருந்தா பத்திரமா, பாதுக்காப்பா இருந்திருப்பார். இப்ப அவர் இப்படி கஷ்ட்டபட நீதான் காரணம்.” என அழுகையின் ஊடே சொல்லிவிட்டு, பவித்ரா போன்னை வைத்து விட... ரோஜாவுக்கு இன்னும் கலக்கம் அதிகரித்தது. அருள் நல்லபடியாக வந்துவிட்டால் போதும் என்றானது.

***************************************************************************************************************

காலையிலேயே வந்து நின்ற பவித்ராவை கலை ஆச்சர்யமாக பார்க்க...
“அவர் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணாருன்னு, நீங்க என் அண்ணனை இப்படியே விட்டுடுவீங்களா தாத்தா.” என கேட்டவள்,
“நீங்க யாரு எங்க அண்ணன் கம்பெனிக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்ல? எங்க அப்பாவும் இந்தக் கம்பெனியில தான் இருந்தார். அப்ப எங்க அண்ணனுக்கு மட்டும் வர உரிமை இல்லையா?” என தன் சித்தப்பா செல்வத்தை பார்த்துக் கேட்டவள்,
“இருங்க உங்க மேல எல்லாம் கேஸ் போடுறேன்.” என மிரட்டி விட்டு அவள் அங்கிருந்து செல்ல... தேவி இதை புவனாவுக்கு அழைத்து சொல்லி அழுதார்.

******************************************************************************************************************

“உன் சித்தி இத்தனை நாள் நாங்கதான் வளர்த்தோம், எங்க மேலையே கேஸ் போடுவேன் சொல்றா...” என சொன்னதாக புவனா சொல்ல...
“என் அண்ணனுக்காக நான் கேட்டேன் இதுல என்ன தப்பு?” என பவித்ரா கேட்க,
“ஆமாம் பெரிய அண்ணன், தங்கைக்கு சொல்லாம கூட கல்யாணம் பண்ண அண்ணனுக்குத்தான் இவ வக்காலத்து வாங்கிறா?” என ரேஷ்மா கேலி செய்ய... ஏற்கனவே இருந்த கோபம், இப்போது ரேஷ்மா நக்கல் செய்ததும் இன்னும் அதிகமாக, “நீயும் தான் எங்க அண்ணன் அப்படி அவசரமா கல்யாணம் பண்ண காரணம். நீ வேற மனசுல ஆசையை வளர்த்துகிறன்னு தான், எங்க அண்ணன் அப்படி அவசரமா கல்யாணம் பண்ணார்.” என பவித்ரா சொல்லியே விட...
“ஏன் பேச மாட்ட? யாரும் இல்லையேன்னு போனா போகுதுன்னு உன்னை என் அண்ணனுக்கு செய்ய எங்க அம்மா நினைச்சாங்க இல்ல... நீ இதுவும் பேசுவ, இன்னனும் பேசுவ.” என ரேஷ்மா சொல்ல...
“ரேஷ்மா நீ உள்ளப் போ...” என புவனா அவளை அதட்ட...
“என்னது பாவம் பார்த்துக் கல்யாணம் பண்ணீங்களா?” பவித்ரா கேட்க,
“அவ கிடக்கிறா... அப்படியெல்லாம் நினைச்சு கல்யாணம் பண்ணலை. நீ என் அண்ணன் பொண்ணு டா... என் அண்ணன் பொண்ணு என் வீட்டுக்கு வரணும்ன்னு தான் நான் நினைச்சேன்.” என புவானா சொன்ன சமாதானம் எல்லாம் பவித்ராவிடம் எடுபடவில்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கு தெரிஞ்ச மீன் பிடிக்கும் தொழிலைத்தானே அருள் செய்ய முடியும்?
அருள் நல்லபடியா வந்துடணும்
இல்லாட்டி இந்த பவித்ரா பேசிப் பேசியே ரோஜாவை ஒரு வழி பண்ணிடுவாள்
பவி இன்னும் ஏன் வெளிநாட்டுக்கு
போகலை?
உள்ளதைத்தானே தாத்தா சித்தப்பாவிடம்
பவி பேசினாள்
இவள் பேசியது எல்லாம் சரிதான்
ஆனால் தேவி ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கணும்?
யப்பா இந்த ரேஷ்மாவுக்கு வாயா
இல்லை தேள் கொடுக்கா?
அருள் இவளைக் கல்யாணம் செய்ய
மறுத்த எரிச்சலில் பேசுறாளா?
அருளுக்கு என்ன ஆச்சோன்னு
ஒரே கவலையா இருக்கு
இன்றே அப்டேட் கொடுக்க முடியுமா,
ரம்யா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top