Iratturamozhithal - 23

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்..

இன்னும் ஒரு பதிவு இருக்கு.. இதோட முடிக்க நினச்சேன்.. ஆனா.. தானா வளருது..
ஸ்பெல் செக் பண்ணலை.. சாரி..

படிச்சு பிடிச்சா லைக்..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
IM 23

தியாவின் அறைக்கு சென்ற பரிதி, அவள் தூங்குவது தெரிந்து, சத்தமின்றி குளித்து வெளிவரும்போது, அறையில் விளக்கு எரிந்தது.. "தூங்கினா, எழுப்ப மாட்டிங்களா?", கேட்ட தியா, கையில் பரிதியின் நைட் பான்ட் ம், டீ ஷர்ட்டும் வைத்திருந்தாள்.

"டிஸ்டப் பண்ண வேணாம்-னு தான் டா", சொல்லியவாறே அவள் நீட்டிய உடுப்பை எடுத்துக்கொள்ள... தியாவை பார்த்தான்.. அவள் முகம் தீவிரமாக இருந்தது.

தலையை துடைத்துக் கொண்டே "என்னடா, என்ன யோசனை?",

"ம்ம். அந்த வீடியோ பத்தி, ...."

"அது மொத்தமா மார்ப்ஹிங், செஞ்சவனை புடிச்சு உள்ள போட்டாச்சு"

"ஹப்பா .. அம்மா முகத்தை பாக்க முடில..."

"ஆனா, உங்கப்பா வந்தப்போ, கவலைய காமிக்கவே இல்ல தெரியுமா?"

"அம்மா அப்படித்தான், அவங்க குழப்பம் பிரச்சனையெலாம் அப்பாகிட்ட போகவே போகாது."

" சரி... நம்ம குட்டி என்ன சொல்லுது?", தலை சீவியபடி பரிதி கேட்க..

"ம்ம்...அம்மாவை தொந்தரவு பண்ணாத ன்னு சொல்லுது", கண்ணாடி வழியாய் அவனை பார்த்து நொடித்தாள்.

"ஹ ஹ ஹ, அம்மாவை தொந்தரவு பண்ணினதாலதான் நீயே வந்த-ன்னு சொல்லி வை என் வாரிசுகிட்ட.."

"ஆஹா... அப்படியே.. இப்போ, சாப்பிட போலாமா?", தியா சொல்ல ..,

"ஹே.. பசிக்குதா?, உங்கம்மா நீ ஏற்கனவே சாப்டுட்டேன்-னு சொன்னாங்க "

"அதுக்கென்ன பண்றது? உங்க வாரிசும் ஒற்றகுச்சி மாதிரி நிகுநிகுன்னு வளந்து வருமோ என்னவோ?, சூப்பரா சாப்பிடுது ", பதிலுரைத்து சிரித்தவாறே இருவரும் ஹாலுக்கு சென்றனர்.

++++++++++++++++++++++

"ஹனி.. என்ன பண்ற?", இது வேற யாரு நம்ம காதல்(கோப) மன்னன் , பாஸ்கர்.

"தோசை வாக்கறேன்.", லதிகா, பேசுவது அலைபேசியில் ....

"அம்மா?"

"டேபிள்ல தட்டு வச்சிட்டு இருக்காங்க, இன்னுமா ரெப்ஃரேஷ் ஆறீங்க?

"அதெல்லாம் முடிஞ்சது.. அம்மா உன்கிட்ட என்ன சொன்னாங்க?"

"என்ன சொன்னாங்க?"

"ஏய்.. என்ன ரைம்ஸா படிக்கற?, ராகம் போட்டுட்டு இருக்க?, அவனுக்கு என்ன வேணும்-னு பாரு ன்னு சொன்னாங்க-ல்ல ? "

"உங்களுக்கு என்ன வேணும்-னு எனக்கு நல்லா தெரியும், ரெடி பண்ணி வச்சிட்டேன், அடையும் அவியலும் உங்களுக்கு பிடிக்குமாமே ? செமையா அள்ளுது. இதுக்காகவே நமக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி இங்க வந்திடனும் போல இருக்கு. சீக்கிரம் வாங்க.", ஆழமாய் வாசனை பார்த்து, "ம்ம்ம்ம்... யம்மி..", என்றாள் "த்ட்ட்" நொட்டை விட்டுக்கொண்டே.

அவள் பதிலில் கடுப்பானவன்.. தலையில் அடித்து , "சரியான சாப்பாட்டுராமியா இருக்கியே?, என்னடா, மேரேஜ்-கு முன்னாலேயே லவ்வர் வீட்டுக்கு வந்திருக்கோமே ? இதை ஸ்வீட் மெமரி-யா மாத்திக்கலாமே?-ன்னு உனக்கு தோணுதா பாரு? தத்தி.. யூஸ் லெஸ் ..."

"யோவ்... வாய மூடு.. அதுக்காகத்தான் கேசரி செஞ்சு எடுத்துட்டு வந்தேன்..என்னது யூஸ்லெஸ்ஸா ..?", லத்திகா புஸ் புஸு-என்று மூச்சு விட்டு "ம்ம்ம் , ஐயோ ஞாபகம் வரலையே ? ", என அவள் அங்கே எதற்கோ பரிதவிக்க..

"எதுடீ ஞாபகம் வரல?", பாஸ்கருக்கு சுத்தமாய் புரியவில்லை...

"ஆங் ... வந்துடுச்சு... பேமானி, கஸ்மாலம், டுபுக்கு... இருங்க, மீதியை மறந்துட்டேன். அண்ணி வர்றாங்க, கேட்டு சொல்றேன்", என்று வேகமாய் டைனிங் ரூமிற்கு நடக்க, அவள் அசையும் சப்தம் கேட்டு...

"அட. என் அக்கா வேலையா இது?, இவ சென்னை பாஷையெல்லாம் இவ வீட்டுக்காரரோட வச்சுக்க வேண்டியதுதானே?, ஹனி.. புஜ்ஜி, செல்லோ, டாலி, கண்ணம்மா .. ப்ளீஸ் டீ .. எங்கக்கா இருக்காளே?" பல்லைக் கடித்தவன், "அவ பேச்சு கேக்காத, முடிஞ்சா அவ கூட பேசவே பேசாதடா செல்லம்", வேக வேகமாய், கையில் கிடைத்ததை உடுத்தி, அறையை விட்டு வெளியே வந்தவாறே பேசியவன் முழித்தான்.

போன் ஸ்பீக்கர்-ல் போட்டு சுற்றி தியா, பரிதி, மற்றும் லதிகா.. !!!!

தியா தீயாய் பார்க்க... ;

பரிதி சிரிப்பை வாயில் மெல்ல;

இவன் ஆசைகாதலி... முழித்துக்கொண்டு நின்றாள். தியா போனை ஸ்பீக்கரில் போடுவாள் என்று இவள் நினைத்தாளா என்ன?...

நல்லவேளையாய் ... சரண், வாசலில் நிற்கும் செக்யூரிட்டி-க்கு சாப்பிட தர சென்றிருந்தாள். நரேனோ, குளித்து பூஜையறையில் இறைக்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தான்...

"பக்கி , பரதேசி... யார் கூடடா பேச வேணாம்-னு சொல்ற?", கடித்த பற்களுக்கு இடையே , சப்தம் குறைத்து .. கேட்டது தியா.

"ஏண்டீ பிசாசே, நீ கெட்டது போதாதுன்னு அவளையும் கெடுக்கறயா?", இவனும் அதே டோன் -இல் பதிலுரைக்க..

"அதெல்லாம் நீதான் மாப்ள பண்ணனும்.", பரிதி போட்டு தாக்க ....

ஒரே நேரத்தில் ,,
"அ..து....",கெத்தாக அக்கா...
"மாமா", என்று பாவமாக பாஸ்கர்

பெரியவர்கள் இருவரும் உள்ளே வந்ததால்... சிறியவர்கள் கப்சிப் ..

சரண் அனைவருக்கும் தோசைகளை வைக்க ..

"ஸ்ஸ். அத்தை இருங்க.. கேசரியோட ஆரம்பிக்கலாம். ஹாட் பாக்-ல வச்சிருக்கேன். மறந்துட்டேன். ", லதிகா உள்ளே போக எழ.... , பாஸ்கர் லதிகாவை முறைக்க,

"நீ உக்காரு.. நான் எடுத்துட்டு வர்றேன்.", சரண் சென்று எடுத்து வந்து பரிமாறினாள்...

"ம்ப்ச் . நீயும் உக்காரு சரண், நேரமாச்சு", என்று நரேன் கூற.. அமைதியாய் இரவு உணவு, சற்று தாமதாக முடிந்தது.

உண்டபின், "நரேன், ப்ராப்ளம்-ல்லாம் சால்வ் ஆனா திருப்பதிக்கு வர்றதா வேண்டிட்டு இருக்கேன்.கல்பா வீட்ல பேசிட்டேன். வர்றதா சொல்லி இருக்காங்க. போலாமா?", சரண் துவங்க...

"ம்ம்.. ஒரு ரெண்டு நாள் போகட்டுமே, ஆபிஸ் ஒர்க் முடிக்கணும். தவிர, இளா ஊர்-ல இருந்து பாட்டி, மாமா ல்லாம் வர்றதா வேற சொன்னாங்க., அப்படியே அவங்களையும் கூட்டிட்டு போலாமே?", நரேன் பதிலுரைக்க..

"ஓ எஸ் தாராளமா, அவங்களை கூட்டிட்டு போங்க, ஆனா என்னை கூப்பிடாதீங்க, லீவ் கிடைக்காது, தியா.... ", என்று இளம்பரிதி ஆரம்பிக்க...

"தியா வேணாம் தம்பி, அவ ரெஸ்ட் ல இருக்கட்டும்",

"எஸ்.. நல்ல வேளை நானே சொல்லணும்-னு இருந்தேன்., ம்மா.. அந்த ஸ்ரத் -ல்ல , கம்ப்ளீட்டா கியூர் ஆகிட்டான்.. வென்ட் எடுத்தாச்சு, பிரீதிங் நார்மல், இன்னும் ரெண்டு மூணு நாள் அபசர்வேஷன்-ல வச்சிருந்து அனுப்பலாம்-ன்னு சீஃப், சொன்னாரு.. நான் கண்டிப்பா இருக்கனும்-னு அவங்க ரெக்வஸ்ட்", இது தியாவின் பதில்.

"அப்போ வெள்ளிக்கிழமை கிளம்பி, ஞாயிறு வந்துடலாம். ட்ராவல் ஏஜென்ட் கிட்ட சொல்லிடு பாஸ்கர்..", என்ற நரேன், "பாஸ்கரிடம் , "ம்ம். ஓகே டாட்",பதில் வாங்கி ஒரு மினி டூர் பிளான் செய்து, அவரவர் தூங்க செல்ல ..

பாஸ்கர் எழுந்து செல்லும் முன், லதிகாவை பார்த்து... யாரும் கவனிக்காத வண்ணம்.. மண்டையை தடவி, ஆள்காட்டி விரலால் மேலே என்று காண்பித்தான்.

இவளோ "ங்கே "என்று முழிக்க.... , கையலம்பி அருகே தியா வர இருப்பதை பார்த்த பாஸ்கர், "ஹ்ம்ம்... இவ என்னடா இவ்வளவு தத்தியா இருக்கா?, இவளை வச்சிட்டு ... ?", நொந்தவாறு அகன்றதும்,

தியா லதிகாவின் காதில், "அவன் உன்னை மொட்டை மாடிக்கு கூப்பிடறான், ஒழுங்கா போயிட்டு, பெரிசா .. எந்த கசமுசாவும் பண்ணாம, சீக்கிரம் வந்து படுக்கற.. சரியா?"என கிசுகிசுக்க...., லதிகாவின் முகம் அந்தி வானமாய் சிவக்க.. "அய்யோ .. அண்ணீ .... ", என்று அவளையே கட்டிப்பிடித்து வெட்கம் மறைக்க.... "போ போ போம்மா, நாங்க எத்தனை பேரை பாத்திருக்கோம்", சிரித்தவாறே அவளறைக்கு சென்றாள், தியா.
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நிரம்ப தயக்கத்திற்கு பிறகு, அடி மேல் அடி எடுத்து... மெல்ல லத்திகா மொட்டை மாடி-க்கு சென்றாள். "ஓ .. ஒரு வழியா புரிஞ்சுடுச்சா?, மறுபடியும் கால் பண்ணணுமோ-ன்னு நினச்சேன்.", கிண்டலாக பாஸ்கர் ஆதித்யா கூற.. திடீரென இருட்டை கிழித்து வந்த சப்தத்தில்.. வெடவெடத்தாள் பெண்.

அவளை பார்த்து, "கத்தி கித்தி வச்சிராத. அப்டியே தூக்கி கீழ போட்டுடுவேன்.", மிரட்ட..

" ஏங்க உங்களுக்கு காதல் வசனமெல்லாம் வரவே வராதா?, எப்பவும், திட்டுறதே வேலையாப்போச்சு, உங்களுக்கு", சிறிது கோபமும் இருந்ததோ அவள் பேச்சில்.

கிட்டே வந்தவன் , "என்னோடதா-ன்னு தெரியாதவன் தான் காதல் வசனம் பேசி, மயக்க நினைப்பான்.. உன்னை பாத்த நேரத்திலேர்ந்து, உன்ன என் வொய்ப் -ன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன். ஹனி.. உரிமை இருந்தாதான், திட்ட முடியும், மீற மாட்ட-ன்னு தெரிஞ்சுதான். சொல்றதே ..", அவள் கையை இழுக்க.., சூடாய் பாத்திரம் இருந்தது."என்னதிது?"

"கேசரி, நீங்கதானே ஸ்வீட் மெமரி வேணும்-னு கேட்டீங்க..?", பேச்சில் துள்ளல் தெறிக்க, கண்கள் சிரிக்க.. மாடியில் சுற்றி வைத்திருந்த பன்னீர் ரோஜா செடிகளும், மல்லியும் நித்யகல்யாணியும் வாசனை பரப்ப...., மெலிதாய் தெருவிளக்கு வெளிச்சத்தில், அவள் கோட்டோவியமாய் தெரிய... பாஸ்கர் ஆதித்யா.. மயங்கினான்,

"ஸ்வீட் மெமரீஸ் -க்கு ஸ்வீட் தேவையில்லை ஹனி.. நீ போதும்.",, மெல்ல அவளை தன் பக்கம் இழுக்க..

"ம்ஹ்ம் .. க்ஹம் ..", சிணுங்கியவள், "மேரேஜ் டேட் எப்போங்க பிக்ஸ் பண்ணுவாங்க?", பட்டனை பிய்த்தபடி கேட்டாள், லதிகா.

"ஹே.. ஹனி .. என்னதிது? என் டயலாக் லாம் நீ பேசற?"

"டயலாக் இல்லீங்க.. எனக்கு உங்க அப்பாம்மா மாதிரி நாம இருக்கணும்-னு ஆசையா இருக்கு..", உணர்ந்து சொன்னாள்.

கேசரி டப்பாவை திறந்து, அவளுக்கு ஒரு வாய் ஊட்டி.. "யா.. they are made for each other ", சொல்லி அவளை தோளோடு அனைத்து தொடரந்தான் " நாம கூட தான் பேபி., நம்ம பசங்களும் நம்ம பத்தி இதே மாதிரி சொல்லனும், சொல்லுவாங்க...".

அவன் பேச்சினை உள்வாங்கி, ஆழ மூச்சிழுத்து, "ம்..", தலையசைத்து ஆமோதித்தாள்.

மேலும் பத்து நிமிடங்கள் பேசி... இருவரும் நிறைவாய் உறங்க சென்றனர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++


திட்டமிட்டபடி பரிதியின் சொந்தங்கள், லதிகா வின் சொந்தங்கள் அனைவரும் SNP வீடு வந்து சேர, ஏழுமலையப்பனின் தரிசனதிற்கு முன்பே, வீடு திருவிழா கோலம் கொண்டது.

பாஸ்கர் ஆதித்யா , அனைவரும் செல்லவென இரண்டு சொகுசு பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தான், கூடவே, "நான் என் வோல்க்ஸ்வேகன்-ல வர்றேன் பா . அங்க எதுக்காவது கார் தேவைபட்டாலும் படும். ", என்றும் தகவல் அளித்தான்.

"ஓகே நோ ப்ராப்ளம், ஆனா ரீச்சபிள் டிஸ்டன்ஸ்-லயே இரு.", SNP முடித்தான்.

அனைவரும், ஒருவழியாய் பேருந்தில் ஏறியபின், சரண்-னிடம், "மாம்.. லதிகா என்னோட வரட்டும்-ம்மா ", என்று தயங்கி கூற..

" என்ன மதனி? என் பிள்ளையை நம்பி உங்க பொண்ணை கூட அனுப்புவீங்களா?"

"அய்யோ .. ஸ்வீட்டி.. மானத்த வாங்காத...", பாஸ்கர் அலற..

பேருந்து அனைவரின் சிரிப்பில் குலுங்கியது. "போங்க மாப்ள.. கல்பா, கார்ல தான் இருக்கா..", என்று லதிகாவின் அம்மாவும் மாமாவும் அனுமதி தர..

காரில் ஏறியவன் , செய்த முதல் வேலை.. அவனது அலைபேசியின் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்ததுதான் .. கல்பலதிகாவை பார்த்து, 'இன்னும் ஒரு நாலு மணி நேரம், நான் பேசுவேன், நீ கேளு.. ஸ்வீட் நத்திங்ஸ்.. ஆனா.. மெமோரபிள் ஜர்னி, இது இப்போ பிளான் பண்ணல.. என்னோட வாய்ஸ், எனக்கே நீ அனுப்பின பாரு அன்னிக்கே யோசிச்சேன். அடுத்த தடவை உன்னோட நேரா பேசிட்டே போகணும்-னு"

"வர வர நிஜமா லவ்வர் பாய் ஆயிட்டு இருக்கீங்க.. ", மையலாய் புன்னகைத்து கூறியவள், "நானும் இதே மாதிரி நினச்சேன், உங்களோட லாங் ட்ரைவ் போகனும்-ன்னு .. ", விழி தாழ்த்தி மொழிந்தாள்.

"போகலாமா சகியே?", நாடக பாணியில் பாஸ்கர் கேட்க...

"அப்படியே மன்னவா "..அவள் பதிலுரைக்க..அவர்கள் பயணம் இனிதே துவங்கியது.

++++++++++++++++++++

SNP எதிர்பார்க்கவே இல்லை.. இப்படி சொந்தங்களோடு போவது, அருமையான பயணமாக இருக்கும் என்று.. எப்பொழுதும், எந்த விழாவாக இருந்தாலும், அந்த நேரத்திற்கு, மதிப்பாக காரில் வந்து காரில் சென்று பழகியவன், சொந்தங்களை மதிக்க தெரியாதவன் அல்ல.. ஆயினும்.. சற்று எட்டவே நிற்பான்.. இங்கே, இளா-வின் பாட்டி இருந்ததால், அவர் எல்லாரையும் இழுத்து வைத்து பேசிக்கொண்டேயிருந்தார். நேரம் போனதே தெரியாமல், அவரின் பேரன், பேத்திகள், அவர்களின் மழலை மிழற்றல்கள், அவரவர் வட்டார மொழிகளில் அவரவர் பேச.. அது ஒரு ஜுகல்பந்தியாய், அருமையாய் அமைந்தது அவர்கள் பயணம்..

ஏழுமலையப்பன் எம்பெருமானின் தரிசனமோ.. ஆஹா.. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்று லதிகா பாட, அவள் குரல் உருக்கியதோ, பாட்டின் சாரம் உருக்கியதோ தெரியாது, கண்களில் கண்ணீர் மல்க.. SNP எம்பெருமானை நோக்கி "நிறைவாய் எல்லாம் அருள நீயிருக்க, நல்ல மனைவி, அறிவான பிள்ளைகள், அவர்களின் அன்பான துணைகள் என வரமாய் வாழ்க்கை இருக்க என்ன குறை கோவிந்தா?", தொழுது வேண்டி நின்று சமைந்தான். அனைவருக்கும் அது ஒரு மோன நிலை., மனம் அவனருளில் திளைத்திருக்க, அனைவரும் நிறைவாய் வீடு வந்து சேர்ந்தனர்.

மொழிவோம்.....
 
Last edited:

Joher

Well-Known Member
Hi.....

1st para...... லதிகா????? அதிதி இல்ல??????
லட்டு.....
நாதாரி......
சாவுகிராக்கி.....
போதுமா?????

Action game super.......
ஆனா இந்த கத்துக்குட்டி வக்கீலுக்கு புரியலையே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top