Iratturamozhithal 20

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்..

ஒரு ஜாலியான [ ? ] எபி கொடுக்கலாம்-ன்னு... இந்த எபி கடைசில கொடுக்க நினைச்ச SNP பார்ட் கட் பண்ணிட்டேன்... படிச்சு.. பிடிச்சா லைக்... & கமெண்ட்..

இது லோப்பல காமெடி தெரியாதவர்களுக்கு...


காவ்யா @Kavyajaya ஹாப்பி?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
IM 20

"நம்ம வீட்ல, நமக்கு கல்யாணம் பேசறாங்க, தெரியுமா ?",

பாஸ்கர் ஆதித்யா அறைக்கு வந்து அமர்ந்ததுமே , தான் இங்கு அதிகப்படி என்றெண்ணிய இவளது தோழி, வெளியே கிளம்பிவிட்டாள்."ம்ம்.. ஆபிஸ் என்னுது, இவங்க என்னடான்னா சட்டமா உக்கார்ந்துகிட்டு, நம்மள வெளிய கிளப்பி விடறாங்க.. ஆண்டவா, இன்னிக்கு எந்த chair -ம் உடையக்கூடாது.." என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே .

அவள் சென்றபின், கல்பலதிகாவிடம் கேட்டான். "நம்ம வீட்ல, நமக்கு கல்யாணம் பேசறாங்க, தெரியுமா ?",

அவள் முகம் கடுமையாக இருந்தது, "ம்ம்..", என்றாள்.

"என்ன சொல்லப்போற?", என்ன பதில் வரும் என்பதை தெரிந்தேதான் கேட்டான்..

"அதான் எதுவும் சொல்ல முடியாம, அம்மாவை விட்டு கார்னர் பண்றீங்களே, என் இஷ்டம் ல்லாம் அவங்க எதுவும் கேட்கவேயில்லை ?", முகத்தை தூக்கி வைத்தவாறே சடசடவென பதில் லதிகாவிடமிருந்து வந்தது.

"நான் கேக்கறேன் சொல்லு.., உனக்கு என்ன பிடிக்கல எங்கிட்ட?", முதன்முறையாய் அமைதியாய் பேச ஆரம்பித்தான்..

என்ன சொல்லுவாள்?, இத்தனை நாளாய் சுய பரிசோதனை செய்ததில் அவளுக்கு தெரிந்ததை அவனிடம் கொட்டினாள் , " நீங்க ரொம்ப டாமினேட்டிங் கேரக்டர், நானோ இன்டிபென்டண்ட்-டா முடிவெடுத்து பழக்கப்பட்டவ. நமக்குள்ள எப்படி சரியா வரும்? பிடிச்சிருக்கு இல்லகிறது இல்ல விஷயம்... காலம் பூரா நல்லா இருப்போமா? இல்ல விவாகரத்து-ல வந்து நிப்போமா? நான் ரொம்ப சுயமரியாதை பாக்கிற ஆளு.. நீங்க என்னடான்னா பப்ளிக் பிளேஸ் -ன்னு கூட பாக்காம கை நீட்டறீங்க ?" இதை சொல்லும்போது கண்களில் நீர் திரண்டது.

வலது கையால் தன முகத்தினை காண்பித்து "தோ .. பாருங்க.. எனக்கு கண்-ல தண்ணீ வச்சாலே பிடிக்காது., அழற எல்லாரையும் திட்டுவேன் . ஆனா, உங்கள பத்தி நினைச்சாலே..... நீங்க என்னை அழ வைக்கறீங்க ", என்று ஆரம்பித்தவள், "ஷூம் ", மூக்குறிஞ்சி தொடர்ந்தாள்.

"என்னடா இது ?", என்பதைப்போல் பார்த்திருந்தவன், வழக்கம்போல அவன் கர்சீப்பினை நீட்ட..., மறுப்பில்லாது வாங்கி, கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள். சிவந்திருந்த கண்களும், நலுங்கியிருந்த முகமுமாய் இருந்தாலும் பாசாங்கில்லாது பேசுபவளை, ஆர்வமாய் பார்த்தான்.."அழகிடி நீ", மனம் ஜொள்ளியது.. கூடவே, "நீ மட்டும் இத இப்ப சொன்னே, மவனே சங்குதாண்டீ உனக்கு", என்றும் சொல்லியது.

லதிகா தொடர்ந்து, "கேஸ் விஷயம் எடுத்துக்கோங்க.., எதையும் நேரடியா சொல்றது கிடையாது... நீங்க மனசுக்குள்ள வச்சிருக்கறது எனக்கு தெரியும்-னு எப்படி நினைக்கறீங்க ? புரியல?, நானென்ன உங்க கூடவேயா இருக்கேன்?", என்றதும்..

சட்டென, "கூடவே இரு-ன்னு தான் சொல்றேன்..", இடைமறித்தான் பாஸ்கர். "ஏன்னா , நீ என் பக்கத்துல இருந்தாலும் இல்லேன்னாலும், நான் உங்கூடத்தான் பேசிட்டே இருக்கேன்..அதனாலதான், உன்கிட்ட எதை சொன்னேன், எதை சொல்லாம விட்டேன்-ன்னு கூட தெரியாம, எனக்கு தெரிஞ்சதெல்லாம் உனக்கும் தெரியும்-கிற நினப்புலயே நா உன்கிட்ட பேசறேன். எப்பவும் ஒரு hallucination[மாயை], நீ எங்கூடவே இருக்கிறா மாதிரி. நான் சொல்றது லூசுத்தனமா தெரிஞ்சாலும் அதான் நிஜம்", என்றவனை, லதிகா புரியாது "ஙே", என்று பார்த்தாள்.

இப்போது சடசடவென பொரிவது அவன் முறையானது. "நான் உன்ன லவ் பண்றேன் இல்லங்கிறத விடு.. ஒரு நல்ல கம்பானியனா, நம்ம வேவ்லெங்த் மேட்ச் ஆகுது, என்னால எல்லாத்தயும் உன்கிட்ட ஷேர் பண்ண முடியுது-ன்னு எனக்கு தெரியுது., நாம சேர்ந்து இருக்கும்போது ஒருவித [comfort zone ] கம்போர்ட் ஸோன் ஃபீல் பன்றோம். அது உனக்கு புரியுதா?."

"நமக்குள்ள என்ன சரி வரலை-ன்னு இத்தனை லிஸ்ட் போட்டியே ?, ஒரே ஒரு காரணம் கூட தோணலையா உனக்கு? நாம சேர்ந்தா நல்லாயிருக்கும்னு?"

"என்ன எதிர்பாக்கற நீ எங்கிட்ட? நீ காற்று , நான் மரம், நீ நிலா, நான் வானம்-ன்னு சினிமா டயலாக் பேசணும்-ன்னா?, எனக்கு வராது.. நான் வரணும்னும் நினைக்கல. நான் ப்ராக்டிகல் லைஃப் -ல இருக்கறவன், அடுத்து என்ன நடக்கும்?-ன்னு தெரியாத வாழக்கையை.. அப்படியே எடுத்துட்டு, அது வழில போய் ஜெயிச்சு நிக்கணும்-னு நினைக்கறவன்..",

"எனக்கு.. பொதுவாவே பொண்ணுங்கள பாத்தாலே கடுப்பு வரும், கொஞ்சம் கீழ தான் பாப்பேன் ஏன்னா என் ஸ்டேட்டஸ், அழகு பாத்து, பின்னால அலைஞ்ச பொண்ணுங்க அதிகம்.."என்றவன், லதிகாவின், "ஆமா, இவர் பெரிய மன்மதராசா", என்று மனதில் நினைத்து கேலியாக பார்க்க, அதை உணர்ந்தவன், "என்ன பாக்கறே? நான் நல்லாயில்லன்னு சொல்லு பாக்கலாம்?"

"நான் எப்போ சொன்னேன், நல்லாயில்லன்னு?", அவளே அவளை தடுப்பதற்கு முன் வார்த்தைகள் விழ...."அச்சோ...."என்று தலையில் கை வைத்தாள்.

அதற்கு மேல் பொறுக்க இயலாதவனாகிப் போனான், பாஸ்கர் ஆதித்யா. வினாடிக்கும் குறைவான நேரத்தில், அவளருகில் சென்று, அவள் உணரும் முன்னே, அவளை எழுப்பி கையணைவில் கொண்டு வந்திருந்தான்... "உன்ன பாத்த அன்னிலேந்து மென்டலாக்கறடி என்னை", யாராவது பல்லைக் கடித்து, காதல் வசனம் பேசுவார்களா?, பாஸ்கர் பேசினான்.

அவள் அவனை பார்க்க.., தொடர்ந்து , "ப்ளீஸ், உனக்காக இல்லேன்னாலும் எனக்காக என்ன கட்டிக்கோயேன்..", என இவன் பேச.. லதிகா இங்கே இருந்தாலல்லவா? இவனென்னடா இவன் இவ்வளவு பேசறான்? எப்பவும் ஒரு சென்டென்ஸ்.. இல்ல, அதிரடியா ஆக்க்ஷன்-ன்னு படம் காமிப்பான்? மூச்சு விடாம முப்பது பக்கம் பேசுவான் போலிருக்கே? என நினைத்தவள் இவன் கைப்பிடியில் இருப்பது கூட தெரியாமல், அவன் முகத்தை பார்த்தவாறு .. அப்படி ஒரு யோசனை..

அவளது மாறும் முக பாவனைகள், எப்போதும் போல் இவனை பைத்தியமாக்க அவளை அணைத்தவாறு பிடித்திருந்த பிடியை இருக்க.. சட்டென நிகழ்வுக்கு வந்தவள்... அவனை பிடித்து தள்ளி... "நாம இன்னமும் பேசி முடிக்கல..."

"சரி, சொல்லு என்ன பிரச்னை?"

"நீங்க கம்பெனி வாங்கறதுக்கு முன்னாடியே, நாங்க சாம்பிள் வாங்கிட்டோம், அதுக்கும் முன்னாடியே எங்களுக்கு போன் வந்தது.. அப்போ ஏன் நீங்க இந்த பாயின்ட்-டை , கோர்ட் -ல சொல்லல? "

"சொன்னா, எங்களுக்கு பதிலா , யார் வரணும்?"

"பைழைய ஓனர். ",

"அவர் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருக்கார்.,",

"ஓஹ் , ஆனா..", லதிகா இழுக்க.... பாஸ்கர் ஆதித்யா, கையமர்த்தி தொடர்ந்தான்..

" தவிர.. பணம் செட்டில் பண்ணின உடனே, அவர் ஃபாக்டரி ஹாண்ட் ஓவர் பண்றேன்னு சொன்னார்.. நாமதான், நாள் நல்லா இல்ல, எல்லா டாக்குமெண்டும் ரெடி பண்ணியாச்சு, லீகல் ரெஜிஸ்டரேஷன் ஒரு வாரம் பொறுத்து வச்சுக்கலாம்-னு சொன்னது.. அப்போவே நம்ம லோகோ மாத்திட்டோம், ஆனாலும் அவர் அங்க இருக்கும்போது, நம்ம கம்பெனி பரந்தாமனுக்கு [Executive Director] அங்க போக தயக்கம்".

"அந்த ஃபாக்டரி ஓனருக்கோ இத்தனை நாளா வளர்த்த தொழில் தன் கைவிட்டு போகுதேன்னு வருத்தம்.. அது ஒர்க்கர்ஸ் -ஐ பாதிக்க, அப்போ, அந்த நேரத்துல தயாரான ப்ரொடக்ட் QC தரக் கட்டுப்பாடு-க்கு போகாம, ஒரு phase தாண்டி , பேக்கிங் செக்க்ஷன் போய் வெளி மார்க்கெட்-க்கு போயிடுச்சு. அப்போ கூட இம்போர்ட்-ல மனோகரன் கை வைக்காம இருந்திருந்தா இப்படி லோ குவாலிட்டி வர வாய்ப்பில்லை. அவன் மெட்டீரியல் மாத்தினது தெரிஞ்சு அவன் பண்ணின தப்பு.. ஆனா, பேக்டரி-ல நடந்தது தெரியாம மேற்பார்வை-ல [சூப்பர்வைஸிங் ] நடந்த தப்பு. அதுக்கு நாம சிலுவை சுமக்க வேண்டியதா போச்சு.. இப்போ உன் சந்தேகம் தீர்ந்ததா?"

"மனோகரன் யாருப்பா இது புதுசா ?" , இவள் கேட்க...

"அடக்கடவுளே, இன்னும் அவனை பத்தி உனக்கு தெரியாதா?", என்றான் அதிர்ச்சியாக.., " ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுத்திட்டு சொல்லவா?, " என்று கேட்க... இவளும் தலையசைத்தாள். ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தபின், பாஸ்கர் ஆதித்யா மனோகரனை பற்றி சொன்னதும் , அதிர்ச்சியை காண்பித்த லதிகா, "ஓ மை காட்... இவ்வளவு நடந்திருக்கா?", என்று கேட்டாள்.

"சொல்லு... இதையெல்லாம் நாம கோர்ட்-ல ஆதாரத்தோட சொல்லி, அதை அவங்க நம்பி, ... முடியற கதையா? சோ கேஸ்ல எங்கடா ஓட்டை இருக்குன்னு பாத்து... கேஸே நிக்காத மாதிரி பண்ணிட்டோம்.. "

"ம்ம். நிஜமாவே நல்ல வேலை பண்ணி இருக்கீங்க.. ", கல்பலதிகா மனப்பூர்வமாய் சொன்னாள்

"இப்போவாவது உனக்கு புரிஞ்சதே..., இப்போ சொல்லு.. கல்யாணத்துக்கு ஓகே வா?, இல்ல அம்மா கட்டாயப்படுத்தறாங்கன்னு தான் யெஸ் சொல்லப் போறயா?", என்று அவளை நேர்பார்வையாய் பார்த்து கேட்டான்..

"நீங்க என்ன அடிச்சதுக்கு , இன்னும் சாரி கூட சொல்லல...", சாரியை இவ்வளவு மென்மையாகக் கூட கேட்பார்களா என்ன?

"அதெல்லாம் எப்போவோ சொல்லியாச்சு,... கைல... கால்ல விழுந்து கூட சாரி கேட்டாச்சு", கெத்தாக பாஸ்கர் ஆதித்யா சொல்ல...

"இதெப்போ ?", குறுகுறுவென அவனை பார்த்து கேட்டாள் ...

"லோப்பல.... மனசுக்குள்ளயே,....", சொல்லி சிரித்தவன், அவளது புரியாத பாவனை கண்டு, "தெரிஞ்சுக்கணும்-னா, வா " , என்று இவன் கைகளை விரிக்க,

சிறு தயக்கத்துடன் அவனது கைச்சிறைக்குள் வந்தவள், "ம்ம்?", என்று கேட்டாள். "நீ ரேஸ்குர்ரம் படம் பாத்து இருக்கியா?"என்று பாஸ்கர் கேட்க..

"ம்ஹூம்", சொல்லி லதிகா இடவலமாக தலையசைக்க..

"அதுல ஸ்ருதிதாசன் அவளோட ஃபீலிங்ஸ் எல்லாம் அவ மனசுக்குள்ளேயே நினைச்சுப்பா, அந்த மாதிரி நான் உன்கிட்ட ஸாரி கேட்டேன், அதுவும் கன்னாபின்னான்னு.. எக்குத்தப்பா மேல கீழ விழுந்து.. ", என்று அவளை இறுக்கமாக பிடிக்க வர.. பட்-டென அவன் கைகளை தட்டி விட்டு, அவன் பிடியில் இருந்து நழுவி தள்ளி நின்று, " சினிமா டயலாக் பேச மாட்டேன்னு சொல்லிட்டு, பேசறீங்க? ஆனா எனக்கு கெத்தான பாஸ்கரத்தான் ரொம்ம்ப்ப.. பிடிக்கும்..", உஷாராய் கதவருகினில் சென்று... "எனக்கு.... கோபமா 'பொய் சொல்ல நினைக்காத, கண்டுபிடிச்சிடுவேன்'-ன்னு சொன்ன பாஸ்கர... கடிச்சு திங்கற அளவுக்கு பிடிக்கும்...",

என்று சொல்லிவிட்டு.. அடுத்த நொடி வெளியே சென்றிருந்தாள்.. கேட்ட பாஸ்கரோ, வெகுநாட்களுக்கு பிறகு வாய்விட்டு .. மனம் விட்டு சிரித்து.. "ஹே... நில்லு..", என்று சொல்லியபோது கதவுடன் தான் பேசினான்..

மொழிவோம்...
 
Last edited:

Joher

Well-Known Member
ஹாய் ஆதி..........

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்...........

மணிரத்னம் TR மாதிரி மூச்சு விடாமல் பேசுறாராம்...........
"மூச்சு விடாம முப்பது பக்கம் பேசுவான் போலிருக்கே..........."
எங்கே ஒரு பக்கம் கூட காணோமே...........

கல்பாக்கு அம்பி தான் பிடிக்குமாம்........ ரெமோ வேண்டாமாம்..........
வித்தியாசமான டிசைன் போல..........
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்பவும் பதட்டத்தோட முடிக்கறதா ... ப்ரெண்ட்ஸ் புகார் வாசிக்க.. சரி .. ஈஸியா ஒரு பதிவு கொடுப்போம்-ன்னு பாத்தா... இது யோசிச்சு எழுதறதுக்குள்ள..... ஷப்பா.... முடில...

கிரைம் ஸீன் ஈசி டா சாமின்னு தோணிடுச்சு...:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ரெண்ட்ஸ்..

ஒரு ஜாலியான [ ? ] எபி கொடுக்கலாம்-ன்னு... இந்த எபி கடைசில கொடுக்க நினைச்ச SNP பார்ட் கட் பண்ணிட்டேன்... படிச்சு.. பிடிச்சா லைக்... & கமெண்ட்..

இது லோப்பல காமெடி தெரியாதவர்களுக்கு...


காவ்யா @Kavyajaya ஹாப்பி?
எப்பவும் பதட்டத்தோட முடிக்கறதா ... ப்ரெண்ட்ஸ் புகார் வாசிக்க.. சரி .. ஈஸியா ஒரு பதிவு கொடுப்போம்-ன்னு பாத்தா... இது யோசிச்சு எழுதறதுக்குள்ள..... ஷப்பா.... முடில...

கிரைம் ஸீன் ஈசி டா சாமின்னு தோணிடுச்சு...:D:D
ஏனுங்க, ஆதிலக்ஷ்மி அம்மிணி
இக்கட தமிழே படிக்கிறதுக்கு
ததிங்கிணத்தோம் போடுது
இதிலே சுந்தரத் தெலுங்கா?
ஒரே ஏடுகொண்டலவாடா
இக்கட அரவாளுங்கதேன்
ஜாஸ்தியா கீறோம்,
ஆதி அம்மிணி
அதால, அல்லு அர்ஜுன்,
ஸ்ருதி ஹாசன் காமெடியை
தேனினுமினிய இன்பத் தமிழில்
கொடுங்க, ஆதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top