Iratturamozhihal 18

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்,
அடுத்த பதிவு... கொஞ்சம் குட்டி பதிவு.. தொடர்ச்சியா குடுக்கணும்னு முயற்சிக்கிறேன் அதனால... இப்படி....

படிச்சு, பிடிச்சா லைக்.. & கமெண்ட்...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
IM 18

“அந்த வக்கீல் பொம்பளை வரும்-னு பாத்தா , அதுவும் வரல. அந்தம்மா புருஷனும் கூண்டு-ல ஏறல ?... சே.... புள்ளையும், அந்த பொண்ணு யாரவ?, கல்பா அவளும் சேர்ந்து காரியத்தை கெடுத்திட்டாங்க" , தனக்கு தானே பேசிய மனோகரனின் பக்கத்தில் குழந்தை உறங்கியிருக்க .. அவனது கையில் குடும்ப புகைப்படம். தீப்தி, இவன் மனைவி.. பாந்தமாய் சிரித்து நின்று, பாசத்துடன் பார்த்து, குழந்தையின் கன்னத்தில் கருப்பு மை வைக்கும் போது எடுத்த போட்டோ...

அதில், அவளையே இமைக்காது பார்த்தவன், "நீயே இல்லாம போய்டுவேன்னு தெரிஞ்சிருந்தா, நான் காசுக்கு இப்படி பேயாட்டம் அலைஞ்சிருக்க மாட்டெண்டீ.., நம்ம புள்ளைய, பாத்துக்க ஆள் போட்டிருக்கேன். ஆனா, நீயிருந்து பாக்கறா மாதிரி வருமா?, இதுல என் ப்ரெண்ட் சொல்றான், வேற கல்யாணம் பண்ணிக்க-ன்னு. உன்ன தவிர இன்னொரு பொம்பளைய நினைக்கணும்-னு கூட தோணலியேடீ , என்ன விட்டு போக எப்படி மனசு வந்தது உனக்கு? நீ என்னை சாக சொல்லி இருந்தா, சந்தோஷமா செத்திருப்பேனேடி, இப்படி கைக்குழந்தையை விட்டுட்டு, என்ன தனியா தவிக்க வச்சிட்டு போய்ட்டியே ?", புலம்ப ஆரம்பித்தான்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்? எல்லாரும் பண்றதைத்தான நானும் பண்ணினேன்?, கொலை செஞ்சேனா?, திருடினேனா? நாலு காசு சம்பாதிக்க, நம்ம புள்ளைங்களுக்கு சேர்த்து வைக்க .. ஆசைப்பட்டேன். இது...", அவன் தவிப்பது அவளுக்கே பொறுக்கவில்லை போலும். தூக்கத்தில், குழந்தை திரும்பி.. இவன் கைகளில், தன தளிர்க்கரத்தை போட்டது. இவன் கவனமும், தன் பிள்ளையிடம் சென்றது.. பெருமூச்சுடன், மெதுவாய் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தான்.. இது பிள்ளைக்கு சமாதானமா? இல்லை அவனுக்கேவா?

சமூகத்தில், இவனை போன்றவர்கள் அநேகம் பேர். "அவன் தப்பு செய்யறான், நானும் செய்யறேன். அவன் வரி கட்டல, நான் மட்டும் ஏன் கட்டணும்?; அவன் ஓட்டுக்கு காசு வாங்கறான், நானும் வாங்கறேன்... ", எல்லாரும் செய்யறதால ஒரு தப்பு சரி-ன்னு ஆயிடுமா என்ன?

மறுநாள் பொழுது விடிந்து, பாலுக்காக அழும் குழந்தையை பார்த்ததும், அப்படி ஒரு ஆவேசம் கிளர்ந்தது, மனோகரனுக்கு. "வக்கீலு... என் புள்ள தவிக்கிறா மாதிரி, உன் குடும்பத்தை தவிக்க விடலை, நா மனோ இல்ல.." வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

விதி வலியது.

++++++++++++++++++++++++++++++

அன்று இளம்பரிதி, அலுவலகத்துக்கு வந்து "கண்டு பிடிச்சிட்டோம் ..."என்று சொல்லி விபரங்களை சொன்னபோது, SNP -க்கு "ஆஹா.... ", என்று இளா -வை கட்டி கொள்ள தோன்றியது. அவன் கூறியது ::

"அத்தைக்கு போன் பண்ணின அந்த டெலிபோன் பூத்-லேர்ந்து ரெண்டு ஸ்டேப் கீழ இறங்கினா ரோடு, சுத்தி ஒண்ணுமில்ல, ஆனா, ஒரு இடத்துல மட்டும், நான் கால் வச்ச இடத்துல சூடு இருந்தது, என் பேண்ட்-டையும் தாண்டி தெரிஞ்சது. அது கரித்தூள்.. தொடர்ச்சியா ஒரே இடத்தில கொட்டின தடம்.. தள்ளு வண்டில இஸ்திரி போட்றவங்க இப்படித்தான் கரித்தூளை கொட்டுவாங்க... சோ, அந்த ஏரியா மொத்தமும் விசாரிச்சதுல, மூணு பேரு அந்த மாதிரி அயர்ன் பண்றாங்க-ன்னு தெரிஞ்சுகிட்டேன். அவங்கள்ல ஒருத்தன் ரெகுலரா அந்த இடத்துல நின்னு தான், அயர்ன் பன்றான்,அவன் சொன்னது என்னன்னா... நமக்கு போன் வந்த அந்த நேரத்துல, ப்ளூ கலர் ஸ்ட்ரைப் ஷர்ட் போட்ட ஒருத்தன் ஆக்ட்டிவா ஓட்டிட்டு வந்து, அங்க போன் பண்ணிட்டு போனத இவன் பாத்திருக்கான் ... "

"இந்த ஒன்னு போதாதா நமக்கு ?, அந்த ஏரியா, CCTV footage மொத்தமும் அலசினதுல, ப்ளூ கோடு போட்ட சட்ட, வித் ஆக்ட்டிவா ன்னு தேட.வண்டி நம்பர் கிடைச்சு.. ஆள பிடிச்சாச்சு. பேரு யோகேஷ், கை ரேகை செக் பண்ணிட்டேன். நம்ம மெட்டீரியல்-ல கை வச்சதும் இவங்க குரூப்தான்.."

"காரணம் மனோகரன்-்னு ஒருத்தன், விஷயம் கேட்டா, ரொம்ப ஷாக் ஆவீங்க.. அத்தை-ய பழிவாங்க, இத்தனையும் செய்திருக்கான்". தொடர்ந்து மனோகரனின் மீன் வளர்ப்பு, அதன் கலப்படம் & பின் விளைவுகள், சரண்யு தொடுத்த வழக்கு, அதன் விளைவுகள் என்று அனைத்தும் கூறியவன், அவனது மனைவி தீப்தி-யின் தற்கொலை-யையும் கூற.., அதுவரை ஆவலுடன் கேட்ட SNP, அமைதியானான்.

தெரிந்தோ/தெரியாமலோ ஒரு உயிர் பிரிய நம் மனைவி காரணமாகி விட்டாளே ?, என்ற ஒரு வருத்தம் வந்தது.. ஆனால், என்ன செய்வது? என்று
மனதை தேற்றி, "இப்போ மனோகரனை பிடிச்சிடீங்களா?"

"வாய்ப்பே இல்ல,அந்தாள நான் ரெண்டு தட்டு தட்டின உடனே, உண்மையெல்லாம் சொன்னவன், கடைசில சொன்னான் பாருங்க ... " நீ எங்கிட்ட என்ன வேணா கேளு, உண்மையை சொல்றேன்... ஆனா, கோர்ட்-ல மட்டும் , நீ அடிச்சு சொல்ல வச்ச-ன்னுதான் சொல்லுவேன். அப்படி நான் சொல்லலைன்னா, வெளியவோ இல்ல உள்ள வச்சோ என்ன தீத்திடுவாங்க. சாரி ஸார். என் வீட்டு ஆளுங்களும் வெளிய தான் இருக்காங்க.ன் நான் அவங்கள காப்பாத்தணும்ல்ல -ன்னு , அசால்ட்டா சொல்லிட்டான்.."

விஷயம் தெரிஞ்சது-ன்னு வேணும்னா சந்தோஷ படலாம், அவனை தூண்டி விட்டு அடுத்து ஏதாவது அவனே பண்ணினா, மாட்டிப்பான்.. ஆனா, அவன் புத்திசாலி மட்டுமில்ல ரொம்ப பாதிக்கப்பட்டவனும் கூட. பாத்துதான் பண்ணனும்.

அதாலதான், கோர்ட்-ல பாஸ்கரை ... ஒருத்தன் அப்ரூவர் ஆகிட்டான்-ன்னு சொல்ல வச்சேன்..இனி அவனா மூவ் பண்ணினாதான் உண்டு.", என்று முடித்தான்..

"இந்த விஷயம் சரண்-க்கு தெரியுமா?"

தெரியாது, ஆனா சொல்லணும்... நீங்க அத்த வருத்தப்படுவாங்கன்னு பாக்காதீங்க.. அவங்க அண்ட் கல்பா ரெண்டு பேரும், ஜாக்கிரதையா இருக்கணும். அவன் கோபம் யார் மேல திரும்பும்-னு தெரியாது.. "

"என்னால முடிஞ்சது, நான் அவனோட போனெல்லாத்தையும் பக் பண்ணி இருக்கேன். அவனை ஃபாலோ பண்ணுங்க-ன்னு, ரெண்டு கான்ஸ்டபிளை போட்டு இருக்கேன்.."

பரிதியின் அலைபேசி அடிக்க, "ஓகே.. மாமா, வேலை இருக்கு . வர்றேன் ", என்று கிளம்பினான்.

++++++++++++++++++++++++++++++++

இவர்களின் வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப் பட்டு இருந்தது. காரணம், தரமில்லாத அந்த சாம்பிள்கள் [மாதிரி] , இங்கே தயாரிக்கப்பட்டவையா இல்லை போலியா , என கண்டறிந்த பின்னரே, வழக்கின் போக்கு முடிவாகும் என குறிப்பிட்டு, தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.

இவை இவ்வாறு இருக்க, SNP, எப்போது இப்படி ஒரு வழக்கு வந்துள்ளது என்று தெரிந்ததோ, அன்றிலிருந்தே .. வெளிச்சந்தையில் இருந்த அனைத்து தயாரிப்புகளை திரும்ப வாங்கி இருந்தான். ஒரு பக்கமும் விடாது, மருத்துவ மனைகள், மொத்த கொள்முதல் செய்பவர்கள் முதல், சிறிய மருந்து கடை வைத்திருப்பவர் வரை அனைவரிடத்தும் இவனது SIPCOT தயாரிப்புகளை திரும்பப் பெற்றான். இதை இளம்பரிதியும் குறிப்பிட்டு இருந்தான்.. அதற்கும் முன்னரே, இந்த வேலையை SNP , துவங்கி , இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் உள்ளனரா என்று அதையும் சலித்தான். நல்லவேளையாக, கடவுள் அருளால், அப்படி யாரும் பாதிக்கப்பட வில்லை..

அடுத்தது அவன் செய்ததுதான், யாராலும் யூகிக்க முடியாதது.. SIPCOT -ன் தயாரிப்பாளர் உரிமத்தினை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்து இருந்தான்.. [cancellation of licence ]

இவையனைத்தையும் தொழிலாளர்களுடன் கலந்து ஆலோசித்து செய்தான்..
இந்த முத்திரைக்கு கறை படிந்து விட்டது.. மீட்டாக வேண்டும் என்பதால் இதை செய்வதாக.. "உங்க பழைய முதலாளி, உங்க மேல வச்ச நம்பிக்கையை , நீங்க காப்பாத்துங்க.. என் கூட நில்லுங்க.. திரும்ப நாம முழு வீச்சுல மேல வருவோம், நல்ல மதிப்போட , அதுவரை... இங்க ரெனோவேஷன் [புதுப்பித்தல்] வொர்க் நடக்கும், அவங்கவங்க யூனிட் -ல ஏதாவது மாத்தம் வேணும்-னு நினச்சா சொல்லுங்க செய்வோம்.. ", என்று அறிவித்து, தொழிலாளர்கள் மதிப்பினை பெற்றான்.

ஒன்றிரண்டு வாரங்கள் சென்ற நிலையில், மீண்டும் உரிமத்துக்கு விண்ணப்பித்தான், தற்போதும் SNP & கோ. என்ற அதே பெயரில்.. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை கட்டமைப்பின் ஆரம்ப நிலை. உரிமமும் கிடைக்க... இரண்டே மாதங்களில்.. SNP SIPCOT குழுமத்தின் .. முதல் தயாரிப்பினை.. மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றான், "How do they do it?" என்ற நிகழ்ச்சியின் மூலம். ஃபாக்டரியின் அனைத்து செயல்பாடுகளையும், தர கட்டுப்பாடுகள், அதற்க்குண்டான கருவிகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன ? என ஒன்று விடாது, ஒளிபரப்பினான். மொத்தத்தில், SNP trade mark - கின் நம்பகத்தன்மையினை மீட்டுக்கொண்டான்...

தலைவர் மொழியில் சொல்வதென்றால், "நான் யானையில்ல, குதிரை, யானை விழுந்தா எந்திரிக்க நேரமாகும், ஆனா, குதிரை, டக்குன்னு சுதாரிச்சு உடனே நின்னுடும்.. " SNP குதிரை... அதுவும் உயர் ஜாதி குதிரை என்பதை நிரூபித்தான்.

மொத்தத்தில் இந்த வழக்கு, அதன் தாக்கங்கள் SNP குடும்பம் மற்றும் மனோகரன், கல்பலதிகா இவர்களுக்குள் மாத்திரமே..

ஆம்.. தியா, தற்போது வரை, அப்பா SNP வீட்டிற்கு வரவில்லை., லதிகா இன்னமும், பாஸ்கர் ஆதித்யா வுடன் பேசவில்லை, சரண்-னை பொறுத்தவரை, அவளது கணவனை SNP என்னும் தொழிலதிபராய் மட்டுமே பார்க்க, பேச முடிந்தது.. நரேன் என்ற அழைப்பும், இவளது இயல்பான, மகிழ்வான பேச்சுக்கள் இல்லாமல் போயிருந்தது..

அடுத்து பாதிக்கப்பட்டு இருந்தவன், மனோகரன்., அவன் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. எங்கேயும் ஒரு துரும்பு நுழையவும் வாய்ப்பின்றி, அனைத்தையும் SNP யின் கண் பார்வையில் இருந்ததால், எந்த ஒரு தகிடுதித்தங்களும் செய்யமுடியாது, மனதுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++

"பாஸ்கர்..", சத்தமாய் SNP கூப்பிட... குரலில் மகிழ்ச்சி தாண்டவமாடியதோ?
"டாட்", பின்புற தோட்டத்தில் இருந்து பாஸ் குரல் கொடுத்து, "தோ வரேன் ", சொல்லியவாறே வந்தான்.
"சரண் ", SNP யின் பாஸ்கர் என்ற அழைப்பிலேயே, சரண் வந்துவிட்டாள்.
"ம்ம். சொல்லுங்க.", என்று SNP -யின் முன் வந்து நின்றாள்.
"நமக்கு ப்ரமோஷன்", என்று கூறி, "ஆனா, நீ பாட்டி-ன்னா நம்பறா மாதிரியா இருக்கு?", சரண்யு-வை ஏற இறங்க பார்த்து சிரித்து, "இளா போன் பண்ணினார், வா தியா-வை பாத்திட்டு வரலாம்.",
"நீங்க வேணா போங்க, நான் வரல..", மகிழ்வான செய்தி, ஆனாலும், பெண் தனக்கு நேரடியாய் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம், அவளுக்கு "உங்க பொண்ணுக்கு ஒரு போன் பண்ணி சொல்ல துப்பில்லை..?, மாப்பிள்ளை சொல்லித்தான் நமக்கு தெரியனுமா?", என நொடித்தாள்...

ஒருவாறாய் விஷயத்தை ஊகித்த பாஸ்கர் ஆதித்யா.. "ம்மா.. விடுமா, இங்க வரல-ன்னாலும், போன்-ல பேசறா தான? யார் சொன்னா என்ன? இது நமக்கு ஹாப்பி நியூஸ் இல்லையா ?, ஸ்வீட் ரெடி பண்ணுங்க. நாம போலாம்.. ", இவன் பேசி முடிக்கும் முன்.... அதிதி ஸந்த்யா , அங்கே பிரசன்னமாகி இருந்தாள் ...

"நான் சொல்லல?, எல்லாரும் வீட்டுக்கு வர ரெடியாவாங்கன்னு?", இளம்பரிதியுடன் பேசிக்கொண்டே உல் நுழைந்த பெண்ணை ஆசையாய் பார்த்தார்கள் பெற்றவர்கள் இருவரும்.. "கங்ராஜுலேஷன் மாமா ", என்று பாஸ்கர் ஆதித்யா, பரிதியை கட்டிப்பிடிக்க.. இவன் நெளிந்து . "அய்யய்ய , சண்டைய மறந்து இப்படி பாசப்பயிர வளப்பீங்க-ன்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி இருப்பேனே மச்சான்", காதினுள் கிசுகிசுக்க.... "ஹ ஹ ஹ ", வயிற்றை பிடித்து கொண்டு சத்தமாய் சிரித்தான் பாஸ்கர்.. சரண்-னின் வீடு ஒருவாறாய் மீண்டிருந்தது.

மொழிவோம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top