அவளே என் தோழனின் வசந்தம்-2-இ

Advertisement

surthi

Well-Known Member
அம்மு மீரா பிரியாவின் சிரிப்பு சத்தம் கேட்டு சமயல் கட்டில் இருந்து வெளியே வந்தார் அவர் சாப்பாட்டு மேஜையை நெருங்கும் சமயத்தில் தான் ரிஷி ராமை கோபமாக முறைப்பதையும் மீரா பிரியா இருவரும் ராமை பார்த்து சிரிப்பதையும் கவனித்தார் எதற்காக ராமை கண்டு அவ்விருவரும் சிரிக்கிறார்கள் என யோசித்துக் கொண்டே அவனை நெருங்கி பார்த்தவருக்கும் மெல்லிய சிரிப்பு அரும்பியது.
பின் சிரிப்பு வராமல் என்ன செய்யும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராம் சாப்பிட்ட விதம் அப்படி அதாவது அவன் சாப்பிடுகிறான் என்று சொல்வதை விட அச்சாப்பாட்டை வெளுத்து வாங்கினான் என்றே கூற வேண்டும் அதுவும் எப்படி என்றால் ஒரு கையில் பூரியும் ஒரு கையில் இட்லியும் வாயில் பொங்கலும் என்று இருந்தான் .
சிறிது நேரம் பொருத்த ரிஷி இதற்கு மேலும் தாமதித்தால் இன்று அலுவலகம் சென்ற மாதிரி தான் என்பதை உணர்ந்து தன் உணவை முடித்துக் கொண்டு தட்டில் கை கழுவி விட்டு எழுந்து சென்றான் ராமோ ரிஷி எழுந்து செல்வதை கூட உணராமல் உண்டு கொண்டிருந்தான் . இதில் விஷயம் என்னவென்றால் ராம் சாப்பாட்டு பிரியன் என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இருப்பது அம்முவின் கைமணம் ஆம் அம்முவின் சமயலை சாப்பிடுபவர்கள் அவரின் சாப்பாட்டிற்கு அடிமையாகி விடுவர் என்று சொன்னால் அது மிகையாகாது .
அப்படி இருக்க சாப்பாடு என்றால் உயிரையும் விடும் ராம் அம்மு செய்த சாப்பாட்டை இவ்வாறு உண்ணாமல் இருந்தால் தான் ஆச்சரியம் .
பிரியா ராமை தட்டி ரிஷி செல்வதை காண்பித்தாள் ரிஷி செல்வதை கண்டு தான் சீக்கிரம் செல்லா விட்டால் ரிஷியிடம் மண்டகபிடி நிச்சயம் என்பதை உணர்ந்த ராம் தன் சாப்பாட்டு தட்டை ஏக்கத்துடன் பார்த்து விட்டு அதில் இருந்த ஒரு பூரியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டு ரிஷியை நோக்கி ஓடினான் .
ரிஷி வருவதை கண்ட வீர் (ரிஷியின் பிரித்யேக பாதுகாவலன் ரிஷிக்கு அவனின் பென்ஸ் காரின் கதவை திறந்து விட்டு விட்டு ரிஷியை நோக்கி சல்யூட் அடிக்க அதற்கு ரிஷி பதிலாக தலையசைத்து விட்டு காரின் பின் பக்கம் ஏறி அமரவும் அவன் அமர்ந்தவுடன் வீர் காரின் கதவை சாத்தவும் ரிஷியை நோக்கி பின்னால் ஓடி வந்த ராம் அக்காரின் முன் கதவை திறக்கவும் சரியாக இருந்தது
ராம் காரில் ஏறியவுடன் அந்த கார் கிளம்பியது . கிளம்பியது ரிஷியின் கார் மட்டுமல்ல அதற்கு முன்னும் பின்னுமாக இருந்த நான்கு கார்களும் தான் அதில் ஓரொரு காரிலும் ஐந்து பேர் (வண்டி ஓட்டுபவரோடு சேர்த்து அவர்களும் செக்யூரிட்டி நிறுவனத்தால் பயற்றுவிக்க பட்டவர்கள் தான் ) என மொத்தம் இருபது பேருடன் அலுவலகம் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள் முதலில் இச்செக்யூரிட்டிகளை கவனிக்காத ரிஷி சிறிது தூரம் சென்றதும் தான் அக்கார்கள் தன்னை தொடர்வதை கண்டு ராமை பிடித்து உலுக்கினான் ராமும் ரிஷியின் உலுக்கலில் வானதியும் ஆடிட்டர் ராகவும் தான் செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்ய சொன்னதாக கூறினான் (. அது வேற ஒன்னும் இல்ல இப்படி உயிருக்கு பயந்து அடுத்தவங்க பின்னாடி ஓளிஞ்சுகறது கோழை தனம் அப்படினு ஒரு எண்ணம் ரிஷிக்கு)
------------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த பிரம்மாண்டமான பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் இருந்தவர் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் மணி காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து இந்த பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் தான் வர்மா குருப்ஸ் (Varma groups) தேவ் குருப்ஸ் (Dev groups) ஜெ.ஆர் ஹோட்டல்ஸ் (J.R. Hotels ) இவற்றின் மொத்த அதிகாரமும் இங்கு தான் உள்ளது இக்கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தொழில்களின் நடப்புக்களும் கணக்குகளும் பராமரிக்க பட்டு வருகிறது இதேபோல் தான் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமில்லாமல் வெளி நாடுகளில் இருக்கும் ஒரு சில கிளைகளுக்கும் இங்கிருந்துதான் கட்டளைகள் பிறப்பிக்க படும் எங்குமே ரிஷிக்கு தெரியாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதே இதற்கான அர்த்தம்.

அந்த அலுவலகத்தை சுற்றி ஒரு திசைக்கு இரு வாயில் என எட்டு வாயில்களும் ஒவ்வொரு வாயிலுக்கும் ஐந்து செக்யூரிட்டி விதம் மொத்தம் நாற்பது செக்யூரிட்டிகளும் எட்டு வாயிலை சுற்றி முப்பத்திரண்டு ஸிஸி கேமராக்கள் அது அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் பத்து பன்னண்டு ஸிஸி கேமரா மற்றும் ஒவ்வொரு தளத்திலும் மூன்று/நான்கு ப்ஃயர் எக்சிட் என இது போல பாதுகாப்பு முறைமைகள் எந்த விதத்திலும் குறையில்லாமல் இருந்தது இதில் ஆறு வாயில் தான் அலுவலக பணியாளர்கள் பயன்படுத்தலாம் மீதமுள்ள இரண்டு வாயிலில் ஒன்று ரிஷியின் தனி பயன்பாட்டிற்கும் மற்றொன்று அலுவலக சம்மந்த படாத வெளி நபர் பயன்பாட்டிற்கும் ஆகும்

அந்த அலுவலகத்தின் தரையின் கீழே(under ground) கார் பார்க்கிங் தரை தளத்தில் ரிஷப்ஷன் அதற்கு எதிரில் பெரிய வெய்ட்டிங் ஹால் அதில் ஏழு/எட்டு சோபக்களும் அதற்கு நடுவில் நான்கு டீப்பாயும் போடப்பட்டிருந்தது அந்த ஹாலை தொடர்ந்து இடது பக்கம் ஆறு லிஃப்டும் அதற்க்கு வலது பக்கத்தில் மாடிப் படிகளும் அமைக்க பட்டிருந்தது இது போக இதற்கு எதிர் புறத்தில். அதாவது ரிஷப்ஷனின் வலது பக்கத்தில் இரண்டு லிஃப்ட் தனியாக ரிஷியின் பயன்பாட்டிற்காக இருந்தது. மிச்சமுள்ள அத்தளத்தை நிரப்பியவாறு அந்த அலுவலகத்தின் கேண்டீன் விசாலமாக இருந்தது அதன் பின் இருந்த ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தொழில் நடந்து கொண்டிருந்தது கடைசி இரண்டு தளத்தை தவிர்த்து கடைசி தளத்தில் எல்லா வசதியுடன் ஒரு ரூம் மட்டும் ஒன்று உள்ளது . கடைசி தளத்திற்கு முன் தளத்தில் பெரிய. மீட்டிங் ஹால் ஒன்றும் ஆடிட்டோரியம் போல் பெரிய இன்னொரு ஹாலும் இருந்தது
இக்கட்டிடத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் தான் இன்று வெளி நாட்டவருடன் ஒப்பந்தம் நடக்கவிருக்கிறது எப்போதும் அவ்வலுவலக மீட்டிங் மட்டும் தான் அங்கு நடக்கும் வெளி ஒப்பந்த மீட்டிங் எல்லாம் ஜெ.ஆர் ஹோட்டலில் தான் நடக்கும் இன்று ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் இங்கு நடக்கிறது.

________________________________________________________________________

அந்த கார்கள் வரிசையாக அவ்வலுவலகத்தின் முன் நின்றன அதிலிருந்து முதலில் இறங்கிய வீர் வேகமாக வந்து ரிஷிக்கு கதவை திறந்து விட்டான் ரிஷி வீர் கார் கதவை திறந்தவுடன் கம்பீரமாக அதிலிருந்து இறங்கி தன் வேக நடையில் அவன் கோட்டையின் உள் நோக்கி நடந்தான் .
ரிஷி வேகமாக செல்ல ராமோ வீரை முறைத்து கொண்டே அவனிடம் சென்று டேய் வீரா மரியாதை தெரியுமா தெரியாதா என்று கேட்டான் ( மக்களே இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் வரலாம் என்னடா இவ கதையோட லோக்கேஷன் மும்பை சொல்லிட்டு எல்லாரும் தமிழ் பேசறாங்களே அப்படினு மன்னிச்சுகோங்க பா எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது அதோட எப்பவும் போல அவங்க ஹிந்தில பேசறத தமிழ்ல கொடுக்கிறதா நினைச்சுக்கோங்க ப்ளீஸ் )
அதற்கு வீரோ நான் மரியாதை இல்லாம என்ன பண்ணிட்டேன் என்று ராமை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே வினாவினான் ஏனெனில் அவனுக்கு ராம் பற்றி நன்றாக தெரியும் அவன் தன்னை கலாய்ப்பதற்கு தான் இவ்வாறு வினவுகிறான் என்று
அது ஒன்னுமில்ல நீ பாஸுக்கு மட்டும் கதவை திறந்து விட்டு சல்யூட் அடிப்பய எனக்கும் சல்யூட் அடி மேன் ராம் அப்படி கூறியவுடன் வீர் ராமை முறைத்தான் ராமோ அதை தூசு போல் தட்டி விட்டு வீரை சல்யூட் வைக்கு. மாறு ஏவினான்
வீரும் முறைத்துக் கொண்டிருந்தவன் திடிரென சல்யூட் அடித்தான் வீர் தனக்கு சல்யூட் அடித்ததை நினைத்து சந்தோஷமாக இருந்த ராம் அவன் விரைப்பாக நிற்பதை கண்டு வீரிடம். அட உன் பெயர் வீர் அப்படின்னு எல்லாருக்கும் தெரியும் அதுக்குனு நீ வரச்சுகிட்டே நிக்காம கொஞ்சம் ஜாலியா இரு என்ன என்று சொன்னான் அப்போதும் வீர் அவன் நிலையில் இருந்து மாறாமல் இருக்க அப்போது தான் தன் பின்னே நிழல் ஆடுவதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கு ரிஷியை கண்டதும் ராமின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
ரிஷியோ ராமை கண்டு கொள்ளாமல் வீரை கண்களால் காரை விட்டு விலக சொல்லி விட்டு காரில் இருந்த கோப்பை எடுத்துக் கொண்டு ராமை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரிஷி அங்கிருந்து அகன்றவுடன் ராம் வீர் மேல் கோபமாக பாயச் சென்றான் அதையும் ரிஷியின் ராம் என்ற கோபக் குரல் தடுத்தது ராம் வீரை பார்த்து எனக்கு ஒரு நேரம் கிடைக்காமைய போய்டும் உன்னை அப்போ வெச்சு செய்யறேன்ட
அதற்கு வீர் நேரம் வரும் போது அத பாத்துக்கலாம் போ போ என்று நக்கலாக கூறினான் ராமும் வீரை முறைத்துக் கொண்டே ரிஷியின் பின் சென்றான்

ரிஷி தன் அறையை அடைந்து அவனின் இடத்தில் அமர்வதற்கும் ராமின் தொலைபேசி ஓலிப்பதற்கும் சரியாக இருந்தது விமானம் பனிப்பொழிவு காரணமாக தாமதமானதால் மீட்டிங்கை வேறு மாற்றி தரக் கேட்டு ராமிற்கு அதாவது தற்போதைய ரிஷியின் பி.யேவை தொடர்பு கொண்டிருக்கின்றனர். இதை ராம் ரிஷியிடம் பகிர ரிஷியோ முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் மீட்டிங்கை இரண்டு நாள் கழித்து வைக்கலாம் என்று சொல்ல சொன்னான்.
பின் சிறிது நேரம் சில முக்கியமான கோப்புகளை சரி பார்த்து கையெழுத்து இட்டு கொண்டிருக்க அவன் தொலைபேசி சத்தமிட்டு அவனுக்கு ஏதோ தகவல் (message) வந்ததாக காண்பித்தது ரிஷி தன் போனில் வந்த தகவலை கண்டு திகைத்து எழுந்தான்
அவன் எழுவதை கண்டு ராம் எழுந்து ரிஷியை பார்த்தான் ராம் தன்னை காண்பதை உணர்ந்த ரிஷி அவனிடம் ராம் நா வீட்டுக்கு போறேன் நீ இங்க எல்லாத்தையும் பார்த்துக்கோ என கூறி விட்டு வீட்டை நோக்கி பறந்தான். ரிஷி இங்கு வீட்டிற்கு பயத்துடன் வர அங்கு அவனின் அனு அவனை அழகாக வரவேற்றாள்


வசந்தம் எப்படி வரவேற்றது காணலாம் காத்திருங்கள்



வசந்தம் பூக்கும்.....................................................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top