UUU 3 - 9

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அப்பாடா. கீர்த்தி கொஞ்சம் தெளிவு....... வளர் ம்மா சூப்பர்....
அப்படியே அந்த சரணுக்கும் ஒரு கிளாஸ் எடுத்துட்டு போங்க...
 

Priyaasai

Active Member
View attachment 10609

உயிர் - 9.1

சரண் கீர்த்திக்கு தனிமை கொடுத்து வெளியேற முயன்ற வளர்மதியின் கரத்தை கெட்டியாக பிடித்து கொண்ட கீர்த்தி "நீங்களும் கூட இருங்க பெரிம்மா" என்று கண்ணீர் சுமந்த விழிகளோடு சரணை பார்த்தவாறே கூற,

'இல்லைடா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்கு வேலை இருக்கு' என்று மறுத்த வளர்மதிக்கு அப்போது தான் அவள் குரலில் இருந்த நடுக்கமும் விழிகளின் அச்சமும் தென்பட அவள் கூற்றை புரிந்து கொள்ள சில நொடிகள் பிடித்தது வளர்மதிக்கு புரிந்ததுமே தம்பியை தான் பார்த்தார்.

ஆனால் அதற்குள் அவர் எதிரே நின்றிருந்த சரணின் முகமோ கீர்த்தியின் வார்த்தைகளில் கருத்து சிறுத்து போயிருந்தது.

அதை கண்டு பதறிப்போன வளர்மதி, "கீர்த்தி என்ன பழக்கம் இது..?? பேசுறதுக்கு முன்னாடி என்ன பேசுறன்னு புரிஞ்சி பேசு" என்று கண்டித்தவர் தம்பியை நெருங்கி,

"சரண் அவ ஏதோ புரியாம உளறிட்டு இருக்கா நீ எதுவும் தப்பா எடுத்துக்காத.., எவ்ளோ நேரம் பசியோட இருப்பீங்க முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க அப்போதான் சரியா யோசிக்க முடியும் என்றவாறே பாத்திரங்களின் மூடியை திறந்தவர் வாழை இலையை விரித்து கொண்டே, நீயும் உட்காரு கீர்த்தி நானே பரிமாருறேன்" என்று அப்போதைக்கு பேச்சை திசைமாற்ற முயன்றார்.

ஆனால் அதற்கு கீர்த்தி விட்டால் தானே..!!

'இல்லை பெரிம்மா நான் புரிஞ்சி தான் பேசுறேன்' என்ற கீர்த்தி ஒரு முடிவோடு கண்ணீரை துடைத்துக்கொண்டு இருவரையும் பார்க்க,

வளர்மதியின் கரம் ஒரு கணம் வேலையை நிறுத்தி, "கீர்த்தி சொன்னா கேளு இப்போ எதுவும் பேச வேண்டாம் முதல்ல வந்து சாப்பிடுங்க நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு கிளம்பனும்" என்று அழைத்தார்.

'இல்லை' என்று தீர்க்கமாக தலையை இருபுறமும் அசைத்தவள், "இல்ல பெரிம்மா வேண்டாம்.., சாப்பாடு மட்டும் இல்லை எனக்கு வேற எதுவுமே வேண்டாம், என்னை விட்டுடுங்க நான் தகுதி இல்லாதவ எனக்கு...." என்று உதடு துடிக்க கூறும் போதே சரண் கூறிய,

"உன்னை காதலித்த பாவத்திற்கு எனக்கு தண்டனை வேண்டாமா..??" என்ற வார்த்தைகள் நினைவு வர, கீர்த்திக்கு மீண்டும் கண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது.

முயன்று அதை கட்டுபடுத்தியவள் மீண்டும் வளர்மதியிடம், "என்னால மாமா பட்டது எல்லாம் போதும் இனியும் அவருக்கு தண்டனை வேண்டாம், முக்கியமா நான் வேண்டாம், மாமாக்கு நான் வேண்டவே வேண்டாம் பெரிம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க" என்று நடுக்கத்துடன் அவரை அணைத்து கொண்டவள்,

"நான் தான் அப்போவே இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேனே பெரிம்மா யார் கேட்டீங்க..?? இப்போ உங்களால மாமாக்கு ..." என்ற போதே அவள் குரல் உடைய தொடங்க அதற்கு மேல் பேச முடியாமல் அவரை இறுக அணைத்து கொண்டு தேம்ப தொடங்கினாள்.

கீர்த்தி வளர்மதியிடம் மெல்லிய குரலில் கூறி இருந்தாலும் அது சரியாக சரண் செவிகளை சென்றடைய அது நேரம் வரை கண்களை இறுக மூடி நின்றவனின் பார்வை இப்போது அவள் மீது அழுத்தமாக படிந்தது.

'கீர்த்தி' என்ற அதட்டலுடன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்திய வளர்மதி "வாயை மூடு கீர்த்தி என்ன பேசுறதுன்னு விவஸ்த்தை வேண்டாம், கல்யாண நாள் அதுவுமா என்ன ஆகி போச்சுன்னு இப்படி அழற...?? என்று அவள் கண்ணீரை முந்தானையால் துடைத்து விட்டவாறே முதல்ல அழுகையை நிறுத்து யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க" என்று அவள் பேச்சை தடுக்க பார்த்தார்.

ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன் சரணை சந்தித்தவள் தான் கனவில் கூட நினைத்து பாராத விடயங்களை அவன் கடந்து வந்திருப்பதை கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் முழுதாக நொறுங்கி போயிருந்தாள். அதுநாள் வரை தன்னை காதலித்த ஒரே காரணத்துக்காக தந்தையால் அவன் சந்தித்த இன்னல்களும், அவமானமும், துரோகமும், வஞ்சமும் அவள் இரவுகளையும், உறக்கத்தையும் களவாடி வதைத்து கொன்று தின்று கொண்டிருந்த நிலையில் சரணுக்கும் அவன் காதலுக்கும் தான் நிச்சயமாக தகுதி இல்லாதவள் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

பல இரவுகள் அவனை மறக்கவும் முடியாமல் அவன் நினைவுகளுடன் காலத்தை கழித்தவளுக்கு இப்போது ப்ரீத்தி செய்த விஷயத்தை கேட்ட பின் அவனை எதிர்கொள்ளும் துணிவு சுத்தமாக இல்லை.

கண்ணீரை துடைத்து கொண்டே, "சரி நான் அழலை ஆனா மாமாக்கு நான் வேண்டா...:"

'கீர்த்தி உன்னை எதுவும் பேசாதன்னு சொன்னேன்'

அதை கண்ட சரணோ "அக்கா அவளை ஏன் நிறுத்துற..??? நீ அமைதியா இரு அவ பேசட்டும்" என்றான்.

கடந்த இரு நாட்களாக திருமணத்தை மறுத்து கீர்த்தி பேசியதை எண்ணி பார்த்த வளர்மதிக்கு இப்போது அவள் பேசுவது பிரச்னையை நிச்சயம் ஊதி பெருசாக்கும் என்பதால் , முடிந்தவரை இப்போதைய பேச்சை தடுப்பதற்கு முயன்றவர் அவனிடம்,

"சரண் சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாம அவ ஏதோ புரியாம உளறிட்டு இருக்கா அதையெல்லாம் பெரு..." என்றவரின் முன் கரம் நீட்டி பேச்சை தடுத்தவன் கீர்த்தி புறம் திரும்பி 'நீ பேசு' என்றான் கட்டளையாக.

அவன் பேசு என்றதை எதிர்பாராத கீர்த்திக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள பேச நினைத்த வார்த்தைகள் வராமல் சதி செய்தது. இருக்காதா பின்னே பலவருடங்கள் கழித்துஅவனை சந்தித்ததில் இருந்து ஒரு நொடி கூட அவள் பேச்சை கேட்க தயாராக இல்லாதவன் இப்போது திடீரென பேசு என்று கூறியதே அவளை திகைப்படைய செய்ய சுத்தமாக அவளுக்கு பேச்சே எழவில்லை.

காதலிக்கும் காலத்தில் ஒரு நாள் ஒரு நொடி கூட அவள் மீது கோபம் கொள்ளாத சரண் இப்போது கோபத்தை மட்டுமே அவளிடம் காட்டி கொண்டிருப்பது அவளுக்கு பேரதிர்ச்சியே..!! கனிவான அவன் பேச்சையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து இருந்தவளுக்கு அவனது இம்முகத்தை சுத்தமாக ஏற்க முடியாமல் போக அவன் பார்வையிலும் வார்த்தையிலும் பெரிதும் காயப்பட்டு போனாள்.

மெல்லிய மனம் படைத்தவளுக்கு அவனிடம் பிடித்ததே சரணின் பொறுமையும், நிதானமும், அவள் மீதான கரைகாணாத நேசமும் அக்கறையும் தான் !! சொல்லபோனால் பிரகாசத்தை விட அவளை தங்கமென தாங்கியவன், பாப்பு என்ற வார்த்தை மாறாது முகம் பார்த்து அவள் தேவைகளை அறிந்து செயலாற்றுபவன் என்றுமே அவளை கடிந்து கொண்டதே இல்லை.

வாடாத புன்னைகையுடனே அவனை பார்த்து பழக்கப்பட்டவளுக்கு இன்றைய அவன் சீற்றத்தை எவ்வாறு கையாள்வது என்று சுத்தமாக புரியவில்லை. தந்தையும் தமக்கையும் செய்து வைத்திருக்கும் குளறுபடியில் ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருப்பவளுக்கு இப்போதைய சரணின் கோபம் மேலும் கூட்டுக்குள் நத்தையாய் ஒடுங்க செய்திருந்தது.

உடலில் இருக்கும் குறைகள் மட்டும் ஊனமில்லையே தந்தை மற்றும் தமக்கையால் இப்போது மனதளவில் ஊனப்பட்டு இருப்பவளுக்கு தான் சரணுக்கு பொருத்தமே இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை பெருகி அவளை எதை பற்றியும் சிந்திக்க விடாமல் அவன் நலனை மட்டுமே பார்க்க செய்திருந்தது.

உயிருக்கும் மேலாக நேசித்த அவனை பிரிவது அவளுக்குமே அத்தனை எளிது அல்ல, ஆனாலும் அவனுக்காக அவன் நன்மைக்காக, நிம்மதிக்காகவே விலக நினைப்பவள் அவளது இந்த முடிவே பின்னர் பல பிரச்சனைகளுக்கு காரணமாகி போகும் என்பதை கீர்த்தி அறிய தவறி இருந்தாள்.

சில நொடிகள் பொறுத்து பார்த்தவன் அவள் மெளனமாக இருப்பதை கண்டு 'பேசுடி' என்று கர்ஜிக்க, அதை எதிர்பாராத கீர்த்தியின் உடல் அன்னிச்சையாக உதறலெடுக்க தொடங்கியது அவளருகே நின்றிருந்த வளர்மதி அதை உணர்ந்தவராக தம்பியிடம்,

'சரண் எதுக்கு அவளை கத்தற..??? கொஞ்சம் பொறுமையா பேசு" என்றார்.

அதுவரை விழிகள் சிவக்க கீர்த்தியை பார்த்திருந்தவன், "போதும்க்கா போதும் இதுவரை நான் நிதானமா, பொறுமையா இருந்ததெல்லாம் போதும், எப்பவும் அடுத்தவங்களுக்காக அவங்க இடத்துல இருந்து அவங்களுக்காக யோசிச்சி யோசிச்சி எனக்காக நான் யோசிக்க மறந்துட்டேன். இப்போதான் புரியுது என்ன தான் மத்தவங்களை பார்த்தாலும் எனக்காக நான் யோசிச்சி இருக்கணும் கொஞ்சமாவது சுயநலமா இருந்திருக்கணும் அப்படி இல்லாம போனதோட விளைவு இப்போ என்னை மொத்தமா நான் தொலைச்சிட்டேன்..." என்றவன் ஆற்றாமையில் தலையை அழுந்த கோதி கொடுக்க,

அதே நேரம் 'அது தான் நானும் சொல்றேன் பெரிம்மா என்னால எப்பவும் மாமாக்கு கஷ்டம் மட்டும்தான், நான் என்ன சொன்னாலும் நீங்க புரிஞ்சிக்க மாட்டேன்கறீங்க ப்ளீஸ் பெரிம்மா என்னோட பாவம் என்னோடவே போகட்டும் அது மாமாக்கு வேண்டாம்' என்று தவிப்புடன் சரணை பார்த்தவள்,

"நீங்களே பாருங்க எப்பவும் சிரிச்ச முகமா இருக்க மாமா முகத்துல இப்போ கோபம் மட்டும் தான் மிச்சம் இருக்கு ! எல்லாம் என்னால தானே ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க நான் ஒரு பாவப்பட்ட பிறவி பெரிம்மா நான் அவருக்கு வேண்டவே வேண்டாம் தயவுசெஞ்சி அவருக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்..." என்றவளின் பேச்சு அவள் கழுத்தில் பதிந்திருந்த சரணின் கரம் கொடுத்த அழுத்தத்தில் தொண்டையோடு அமிழ்ந்து போனது.

பதறிப்போன வளர்மதி, "என்ன பண்ற சரண்..?? விடு அவளை" என்று அவனை பிடித்து உலுக்க,

சரணோ கட்டுபடுத்த முடியாத ஆவேசத்தோடு, "இன்னொரு வார்த்தை பேசின கொன்னுடுவேன்டி" என்றவாறே அவள் கழுத்தை விட்டவன் நிலை குத்தி போன விழிகளோடு அவனை பார்த்து நின்றவளின் முழங்கையை பற்றி இழுத்து,

"ஏய் என்னடி வேணும் உனக்கு..?? நானும் பார்த்துட்டே இருக்கேன் பெங்களூர்ல தொடங்கி இந்த நாலு நாளா உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க, அப்படி என்னடி நான் உனக்கு கேவலமா போயிட்டேன்..?? ஏன் காதலிக்கும் போது நான் கையாலாகாதவன்னு தெரியலையா..??" என்று சீறியவனிடம் இருந்து கீர்த்தியை வளர்மதி விடுவிக்க.

"ஏன் மாமா இப்படி பேசுறீங்க நான் அப்படி என்னைக்கும் உங்களை நெனச்சது இல்லை, ப்ளீஸ் நீங்க சொல்றது எல்லாம் எனக்கு தான் பொருந்தும் இன்னொருமுறை அப்படி பேசாதிங்க என்றவளுக்கு நெஞ்சம் கனத்து போனது.

"நினைக்காதவ தான்..." என்ற சரனை இடையிட்ட வளர்மதி

'சரண் நான் சொல்றதை கேளு கொஞ்சம் அமைதியா இரு..!!' என்று தடுக்க முயன்ற பேச்சுக்கள் எல்லாம் காற்றோடு கலக்க, அதற்கு மேலும் கீர்த்தியிடம் அவன் கடுமையாக பேசிக்கொண்டே போக கீர்த்தியோ அதை தாளமுடியாமல் தவிக்க அவர்கள் இருவருக்கிடையில் தத்தளித்து போன வளர்மதி ஒரு கட்டத்தில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார்.

இறுதியாக அவள் தாடையை பற்றியவன், "இதோ பார் எனக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியும் நான் என்ன செய்யணும்ன்னு செய்யக்கூடாதுன்னு நீ முடிவு பண்ணாத, இனியும் உன் இஷ்டத்துக்கு ஆட நான் ஆள் இல்லை" என்று சீறியவனிடம் இறுதி முயற்சியாக,

"சரண் ப்ளீஸ் சொல்றதை கொஞ்சம் கேளு" எனவுமே

"என்னக்கா கேட்கணும்" என்று ஆவேசமாக வளர் புறம் திரும்பியவன்,

'இதோ இங்க நிக்கிறாலே இவளுக்காக நான் பட்டது கொஞ்ச நஞ்சமில்லை, சொந்தத்துக்கு நடுவுல கெட்டவன்னு பேர் எடுத்து, ஏமாத்தி குழந்தையை கொடுத்து ஓடிட்டேன்னு ஊர்ல அசிங்கப்பட்டு என்று தொடங்கியவனுக்கு கடந்த காலம் கண் முன் வளம் வர தடை இறுகி போனது. இன்னும் பைத்தியக்காரன் ஆகாதது மட்டும் தான்க்கா பாக்கி ஆனா நான் இவளுக்கு எவ்ளோ ஈசியா போயிட்டேன்' என்றவனின் வார்த்தைகளே நைந்து போன அவன் மனதை எடுத்து காட்ட அதை கண்ட கீர்த்தியின் அழுகை மேலும் அதிகரித்தது.

அவளையே வெறித்து கொண்டு நின்றவனை அவள் கண்ணீர் வெகுவாக பாதிக்க அதை துடைக்க துடித்த கரத்தை அரும்பாடு பட்டு பாக்கெட்டில் அடக்கியவன் குரலை செருமி, "இவ வான்னு சொன்னா வரணும் போன்னு சொன்னா போயிடனும் நான் மனுஷனா இல்லை மெஷினா..?? நெனச்ச போது சட்டையை மாத்தற மாதிரி மனசை மாத்திக்க என்னால முடியாது...?? போதும்க்கா இனியும் இவ கூட போராட நான் தயாரா இல்லை இவளுக்கு இஷ்டம் இருந்தா வந்து வாழட்டும் இல்லையா இவளை அப்படியே போக சொல்லு போய் அவளையாவது நிம்மதியா இருக்க சொல்லு" என்று விரக்தியுடன் கூறியவன் கலங்கிய கண்களோடு வெளியேறி இருந்தான்.
Mana porarattam varathaikal heart touching feeling
 

Rudraprarthana

Well-Known Member
அப்பாடா. கீர்த்தி கொஞ்சம் தெளிவு....... வளர் ம்மா சூப்பர்....
அப்படியே அந்த சரணுக்கும் ஒரு கிளாஸ் எடுத்துட்டு போங்க...
மிக்க நன்றிகள் பேபி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top