கொலுசொலி 9

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா

அடுத்த நாள் காலையில் காமாட்சி மகள் இன்னும் பத்து மணி ஆகியும் கீழே வரவில்லையே .
புகுந்த வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று காவ்யாவை மனதில் திட்டி கொண்டே இருந்தார்.

ரங்கநாதனும் ரமாவும், ஏதேனும் நினைப்பார்களோ என்ற தவிப்பு அவரிடம்.
ப்ரியா எப்பொழுதும் போல் விடியலில் எழுந்து அவளின் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் .
அருண் மட்டும் குளித்து கீழே இறங்கி வந்ததை பார்த்ததும் அவருக்கு இன்னும் கோவம் வந்தது.

"அண்ணி இன்னும் இந்த பொண்ணு எழுந்தக்கல, அவளை தப்பா நினைக்காதீங்க அண்ணி."
"அங்க ஊருல அவ அஞ்சு மணிக்கே எழுந்திடுவா."

ரமாவும் ," அட என்ன அண்ணி, நீங்க, நான் ஏன் எங்க வீட்டு பொண்ண தப்பா நினைக்க போறேன் ."
"அவ்வளவு சீக்கிரம் எழுந்து தான் இங்க செய்ய என்ன இருக்கு."
"புது இடம், ஊருல இருந்து வந்த அலைச்சல், கல்யாண அலுப்பு எல்லாம் இருக்கும்ல ."
"நீங்க தான் இத ஒரு விஷயமாவே பேசுறீங்க."


"அத்தை, கவி ரொம்ப டயர்ட், நான் தான் அவள எழுப்பல ."
"பாவம் அசந்து தூங்குறா," இன்னும் என்ன சொல்லி இருப்பானோ, அதற்குள், விக்ரம் வந்து அவனை அங்கிருந்து, அழைத்து சென்று விட்டான்.


அதற்க்கு மேலும் காமாட்சி ஏதேனும் அவனிடம் கேட்பாரா, மகள் வந்ததும், அவளிடம் அறிவுரை கூற காத்திருந்தார்.
காவ்யா எழுந்ததும், பதறி அடித்து கொண்டு, குளித்து விட்டு, கீழே இறங்கி வந்தாள் .
அன்னையின் கோவம் கண்டு, தயங்கியவாறே இறங்கி வந்தாள் .


எங்கு காமாட்சி திட்டி விடுவாரோ, என்று ரமாவே மருமகளை கண்டதும், கவியை நெட்டி முறித்து திருஷ்டி கழித்து,
"போய் சாமி கும்பிடு மா ."
"அவளும் மாமியார் கூறியதற்கு பூஜையறையில் சென்று இறைவனை வணங்கி விட்டு "சாரி அத்தை, இன்னைக்கு மட்டும் தான் லேட்டா, எழுந்தேன்."
"இனி சீக்கிரம் எழுந்துக்குறேன் ."என்று தயக்கமாக பதிலளித்தாள் .

"அடடா, அண்ணி பிள்ளைய நல்லா மிரட்டி வளர்த்து இருக்கீங்க போல, உங்க முறைப்புக்கே, அவ முகம், சுருங்கிடுச்சி ."
"பின்ன என்ன அண்ணி."
"பிரியாவுக்கும் தான் அலைச்சல் இருந்தது கவி, அவ சீக்கிரம் எழுந்து எல்லா வேலையும் பார்க்கல ."
"இதே கடைசி முறையா இருக்கட்டும் ."


கவியும் ஒன்றும் கூறாமல் சமத்தாக தலையாட்டினாள் .
அருண் மனைவியை கண்டதும், அங்கு வேகமாக வந்து சேர்ந்தான்.

காமாட்சி மீண்டும் வாயை மூடி கொண்டார்.
காவ்யாவை எதுவம் சொல்ல விடுவதில்லையே மருமகன், என்று ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், மகள் எங்கும் கெட்ட பெயர் வாங்க கூடாது என்ற பயம் அவருக்கு .


"ஓய் குட் மார்னிங் டியர், நல்லா தூங்கி எழுந்தியா ,இந்த ஸாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு."
"இப்படி பப்ளிக்கா ஜொள்ளு விடுறவன, பார்த்து இருக்கியா மச்சான்," என்று விக்ரம் கார்த்திக்கின் காதை கடித்தான் .


அன்னை மற்றும் மாமியார் முன்பு, கணவர் பேச்சை கேட்க முடியாமல், அதே நேரம் அவனை முறைகவும் முடியாமல் தவித்தாள் .

"மா, அவ எழுந்து, என்ன வேணும் இன்னும் கேட்கவே இல்ல."
ப்ரியா தங்கைக்கு டீ எடுத்து வந்து கொடுத்தாள்.

ரமா சிரித்து கொண்டும், காமாட்சி முணுமுணுத்து கொண்டும், அங்கிருந்து சென்றனர்.


"என்ன டியர், இது என்ன லுக்குன்னே புரியலையே."
"ஆசையா பார்க்குறியா இல்ல, முறைக்குறியா."

"எல்லார் முன்னையும், என்ன அப்படி ஏன் கூப்பிடறீங்க, அது என்ன டியர்,"
"நீ ன் பொண்டாட்டி டி, இதுல என்ன இருக்கு,"தோலை குலுக்கி சாதாரணம் போல் கூறினான் .
அவளுக்கு தான் கூச்சமாக இருந்தது.


"முதல் நாளே லேட்டா எழுந்துட்டேன், அம்மாக்கு கோவம், நீங்க எழுந்து வரும் போது என்னையும் எழுப்பி இருக்கலாம்ல ."

"நான் எங்க உன்னை நேத்து தூங்க விட்டேன், அதான் எழுப்ப மனசு வரல, அதுவும் இல்லாம, காலையில நான் உன்னை எழுப்பி இருந்தா , நம்ம இப்போ கூட வெளிய வந்து இருக்க மாட்டோம்."
"ஒரேடியா, மத்தியானம், உன் பேரன்ட்ஸ் ஊருக்கு போகும் போது தான் வந்து இருப்போம், பரவாயில்லையா ," என்று விஷமாக கூறி கண்ணடித்தான்.

அவள் அதன் பிறகு அங்கு நிற்காமல், அன்னை அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் .
"அம்மா, இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போயேன் மா," கவி அன்னை கை பிடித்து கேட்டு கொண்டாள்.

"இருக்கட்டும் கவி, கிளம்புனா அங்க சரியா இருக்கும், எல்லாம் அப்படியே போட்டு வந்தது."
"மாப்பிளை, மறு வீட்டுக்கு வாங்க, ப்ரியா நீயும், பெரிய மாப்பிள்ளையும் வாங்க, அண்ணி, எல்லாரும் வந்துட்டு போங்க, என்று முறையாக புண்ணியகோடி, மற்றும் காமாட்சி ரங்கநாதன் குடும்பத்தை அழைத்தனர்.


கவிக்கு தான் கண்கள் கரித்து கொண்டு வந்தது.
அழுகையை கட்டுபடுத்தி இருந்தாள் .
நேற்று வரை கூட தெரியாத, ஒரு பயம், இன்று பிறந்த வீட்டினர் செல்கின்றனர், என்றதும் மீண்டும் ஒரு பயம், அவளுள் .

மனைவியையே சைட் அடித்து கொண்டிருக்கும் அருணுக்கு அவளின் முகம் மாறுதல் கண்டு, "ஏன் அத்தை கவி தான் இவ்வளவு தூரம் சொல்றா, உங்கள யாரு, இன்னைக்கே டிக்கெட் புக் பண்ண சொன்னது."

"அவ அழுறா பாருங்க, இன்னும் கொஞ்ச நாள், இங்க தங்களாம்ல."
காமாட்சிக்கு மகளை பிரிந்து செல்வதில், வருத்தம் இருந்தாலும், எத்தனை நாள், பெண் கொடுத்த வீட்டில் இருப்பது.

"அது நல்லா இருக்காது சின்ன மாப்பிளை, நாங்க இப்போ, கிளம்புறோம், நீங்க மறு வீட்டுக்கு வாங்க, என்று மீண்டும் அழைப்பு விடுத்தார்."

"வரோம் அத்தை, அங்க எத்தனை நாள் தங்கணும் சொல்லுங்க," என்று அருண் உடனே பதிலளித்தது, சிறிதளவில் இருந்த அவன் மீதான தவறான எண்ணங்களும் அகன்றது.
அருணை பந்தா காட்டுபவன், திமிர் பிடித்தவன் என்றெல்லாம் நினைத்திருந்தார்.


இப்பொழுது அவரின் அழைப்பிற்கு, எந்த பந்தாவும் இல்லாமல், அவன் கொடுத்த பதில் அவருக்கு நிம்மதியாக இருந்தது.

"நீங்க எத்தனை நாள், வேணும்னாலும் வந்து தங்குங்க மாப்பிளை, அதுவும் உங்க வீடு தான்,"கண்களில் கண்ணீர் துளிக்க பதிலளித்தார்.

ரமாவிற்கு தெரியாதா, காமாட்சியின் கண்ணீர் எதற்கு என்று, "அண்ணி, இந்த சேட்டை பையன் அங்கேயே கூட தங்க வெச்சிடுங்க அண்ணி, இங்க நாங்க நிம்மதியா இருப்போம்," என்று காமாட்சியின் கண்ணீரை போக்கினார் கிண்டலுடன்.

"என் அருமை உங்க யாருக்கும் தெரியல, என் மாமியார், நான் அங்கயே போய் இருந்தாலும், தாங்குவாங்க," என்று பெருமை பட்டு கொண்டான்.
"ஆமா தாங்குவாங்க தாங்குவாங்க," என்ற விக்ரம் கிண்டலடித்தான் .
இந்த இனிய தருணத்தோடே, புண்ணியகோடியின் குடும்பம், சென்னை நோக்கி சென்றது .

காவ்யா அவளின் அறையில் சென்று அமைதியாக அழுதாள் .
தானும் அடிக்கடி அக்காவை போல் அன்னை வீட்டிற்கு சென்ற வர முடியாத தூரத்தில் இருக்கிறோமே என்று, நினைத்து நினைத்து அழுதாள் .

ரமா, மகனை பார்த்ததும், அருண், மாடியில் உள்ள அவன் அறைக்கு சென்றான், மனைவியை சமாதானம் செய்ய .
அங்கு அவள் அழுவதை கண்டதும் அவனுக்கு வேதனை ஆனது.

"ஓய்," என்ற அவனின் அழைப்பில், அவள் கண்களை துடைத்து கொண்டாள் .
மனைவியை நெருங்கி அமர்ந்து, அவன் தோள் சாய்த்து கொண்டான்.
சட்டையில் கசியும் அவளின் கண்ணீரை கண்டு, "இந்த பொண்ணுங்க, மட்டும் ஏன் தான் அம்மா வீட்டுல இருந்து மாமியார் வீட்டுக்கு வரணும் சிஸ்டம் வெச்சாங்களோ தெரியல."

"ஏன் கவி ஒரு சேஞ்சுக்கு, நாம வேணுமுன்னா அங்க போய் இருக்கலாமா," என்று கேள்வி எழுப்பினான் .

அவளும் அவனிடம் இருந்து விலகி, அவன் முகத்தை பார்த்தாள்.
அவளிடம் இருந்து பதில் இல்லை என்றதும்
"ஓய், நேத்தே என்ன சொன்னேன், நீ என்கிட்டே தான் பேசி ஆகணும், எல்லார்கிட்டயும் அமைதியா இருக்குற மாதிரி நம்ம லைப்ல இருக்க முடியுமா."

அவளும் வாய் திறந்தாள்," நீங்க சொல்றது எல்லாம், நடை முறைக்கு சரி பட்டு வராது, அக்கா இவ்வளவு தூரம் இருக்குறதால, அங்க அடிக்கடி வர முடியலன்னு, அம்மா புலம்புவாங்க."

"அப்போ எல்லாம், நான் நினைப்பேன், நானாவது கிட்ட இருக்கனும்ன்னு ."

"இப்போ, நானும் நினைச்சா போய் பார்த்துட்டு வர தூரத்துல இல்லையேன்னு, தான் வருத்தம்." என்று அழுதாள் .

மனைவியை இறுக்கி அணைத்து கொண்டு, இதற்க்கு என்ன என்று கூறுவது, நினைத்து கொண்டான்.
"உனக்கு எப்போ, உங்க வீட்டுக்கு போகணும் தோணுதோ, அப்போ, எனக்கு சொல்லு, நாம போய்ட்டு வரலாம்."
"நீ நினைக்குறது போல, மும்பை ஒன்னும் தூரம் இல்ல."

"இங்க இருந்து இரண்டு மணி நேரம் பிளைட் பிடிச்சா, உன் ஊருல இருப்ப."
அவன் கூறியது எந்த அளவிற்கு சாத்தியம் என்று அவள் நினைக்கவில்லை, ஆனால் அந்நேர ஆறுதல், அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"உண்மையாவா," என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.
"நான் எப்பவும் என்னால முடியறது மட்டும் தான் சொல்வேன், செய்வேன்."

"பொய்யான, வாக்கு யாருக்கும் இது வரை கொடுத்ததில்லை," என்று கூறும் போது அவனையும் மீறி, அவன் கண்களில் சோகம் .

உடனே தன்னை மீட்டு கொண்டு, "ஹனி மூன் எங்க போலாம் சொல்லு."
"இந்த வாரம் நாலு நாள் டைம் இருக்கு, உனக்கு பிடிச்ச இடம் சொல்லு, போகலாம்."
அவள் திரு திரு என்று முழித்தாள் அவனின் திடீர் கேள்வியில்.
அவள் அதை பற்றி எல்லாம் யோசித்ததில்லையே.

அவளிடம் கேட்டால் என்ன என்று கூறுவாள்.
புதூரை தாண்டி எங்கும் சென்றதில்லை.

"ஓய், என்ன முழிக்குற, எதுவும் யோசிச்சு வெச்சதில்லையா, எனக்கு நிறைய இடம் பிடிக்கும், நான் அங்க எல்லாம் போய் இருக்கேன், எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம், உன்னை கூட்டிட்டு போவேன் ."

"நான் ரசிச்ச இடத்தை நீயும் பார்க்கணும், எனக்கு அது எல்லாம் ஒரு ஆசை."

"பட், இப்போ, முதல் முதல்ல, உனக்கு பிடிச்ச இடம் ஏதாவது சொல்லு, அங்க போலாம்."
"போர் டேஸ் தான், வேலை நிறைய இருக்கு, அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வேற போகணும், அதுக்கு மேல கடையில பிசி ."
"சோ, பக்கத்தில போய்ட்டு வர இடமா சொல்லு."
அவனின் காதலை நினைத்து பிரமித்து கொண்டாள் .
"எனக்கு நிஜமா, எந்த இடமும் தெரியாது, இது வரைக்கும் நான் யோசிச்சதும் இல்லைங்க," என்று அப்பாவியாக அவள் கூறியதும், அவள் செவ்விதழில் ஒரு முத்தம் வைத்து,
"சரி இங்க என்னைக்காச்சும் ஒரு நாள் போகணும் அப்படின்னு நீ நினைச்சு இருப்பல்ல, அது போல, இடம் ஏதாவது சொல்லு, அங்க போலாம்."

"அதற்கு மட்டும் யோசித்து எனக்கு ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு போகணும் ஆசைங்க ."
"ஷீரடியா ,"அவனும் ஆச்சர்யத்துடன் தான் கேட்டான்.

"விக்ரம் மாமாக்கு வேண்டுதல்ன்னு, அக்கா கல்யாணாம் ஆன புதுசுல, அக்காவும் மாமாவும் அங்க போய்ட்டு வந்தாங்கல்ல ."
"அப்போ, அக்கா அந்த கோவில பத்தி நிறைய சொன்னாங்க."

"எனக்கு அப்போவே, அந்த கோவிலுக்கு ஒரு நாள் போயிட்டு வரணும் நினச்சேன்."
"எனக்கு வேற எந்த இடம் போகணும்ன்னு ஆசை இல்லை."

அருண் உடனே சரி அழைத்து செல்வதாக கூறினான்.
"இப்போவே இல்லைங்க, இப்போ தான கல்யாண செலவு எல்லாம் ஆச்சு, ரொம்ப தூரம்ன்னா நிறைய பணம் செலவாகும், உங்க கிட்ட பணம் இருக்கா," என்று அவளின் அக்கறையில், அவளுள் தொலைய ஆசை கொண்டான் .

"அது எல்லாம் நம்ம கிட்ட நிறையவே இருக்கு, நீ அது எல்லாம் யோசிக்காத, இப்போ, நான் கடைக்கு போய்ட்டு வரேன்."
"கொஞ்சம் வேலை இருக்கு, ஒரு பேக்ல தேவையான டிரஸ் எடுத்து வெச்சிக்கோ."
"நம்ம நாளைக்கு போலாம்."

"சரியா," என்று கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரி பார்த்து கொண்டு, கை கடிகாரம், எல்லாம் அணிந்து கொண்டு, மீண்டும் மனைவியை நெருங்கி,

"உனக்கு திருப்பியும் சொல்றேன், உனக்கு மனசுல எது பட்டுச்சுனாலும் என் கிட்ட மறைக்காம சொல்லிடு."
"எது வேணும்னாலும் என்கிட்ட மட்டும் தான் கேட்கணும்."
அவன் கூறியது புரியவில்லை என்றாலும், தலையாட்டினாள்.

இங்க அண்ணியோட வெளிய போறேன்னு, எங்கேயாவது போக போற, இங்க எனக்கு பிடிச்ச இடம் எல்லாம் நான் தான் காட்டணும் என்று குழந்தை போல், அவன் கூறி சென்றதில், வீட்டினர், சிரித்து கொண்டனர்.

அங்கு மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கவி தான் அறையினுள் நினைத்து கொண்டாள் .
அவன் கூறிய வேலைகளை முடித்து, மாலை நேரம் சென்று, இரவு நெருங்கும் வேலை,
"அக்கா, இன்னும் அவர் வரலையே," என்று ப்ரியாவிடம் கேட்டாள் .

"தம்பி வர, எப்பவும் பத்து மணிக்கு மேல ஆகும் கவி," தங்கைக்கு பதிலளித்தாலும், இரவு உணவுக்கு, தேவையானதை செய்து கொண்டிருந்தாள் .

"பிசியான ஏரியால கடை இருக்கு, நல்லா வியாபாரம் போகும், அதுனால, எப்பவும் இவ்வளவு நேரம் ஆகிடும்."

"சரி, உனக்கு வீடு எல்லாம் பிடிச்சு இருக்கா, எனக்கு வேலையே சரியா இருந்ததுல, மேல வந்து கேட்க முடியல ."

"ஹ்ம், பிடிச்சு இருக்கு கா, ஆனா ஏன் குட்டி குட்டியா இருக்கு எல்லா ரூமும், இந்த வீட்டுல இருக்குறவங்களால மட்டும் தான், ஒருத்தருக்கு ஒருத்தர் இடிச்சிக்கமா நடக்க முடியும்ன்னு நினைச்சுக்கிட்டேன்."

ப்ரியாவும் சிரித்தாள், "நானும் இங்க வந்த புதுசுல அப்படி தான் நினைச்சேன், ஆனா, இங்க இல்லாத பொருள் இல்ல, பாரு இந்த சமையல் ரூம் கூட எவ்வளவு சின்னது."
"ஆனா தேவையான, எல்லா பொருளும் இருக்கு."

"இந்த இடத்தில சொந்தமா கிடைக்குறதே பெரிய விஷயம் , அந்த காலத்துல மாமா வாங்கி போட்டார் ."
"இங்க எல்லார் வீடும் இப்படி தான் இருக்கும்."

"சில பேர் பொழைப்புக்குன்னு வந்தவங்க, அப்படியே வசதி எல்லாம் பார்க்காம, இருக்குற இடத்தில தங்கிட்டாங்க ."
அவளும் கேட்டு கொண்டே, அக்காவிற்கு, காய்கறி நறுக்கி கொடுத்தாள் .

"போதும் கவி, வேலை இருந்துகிட்டே தான் இருக்கும், நான் பார்க்குறேன், கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு."
"பரவாயில்ல கா, நான் சும்மா தான் இருக்கேன்."

"அங்க ரூம்லயும் எல்லா ட்ரெஸ்ஸும் எடுத்து அலமாரில அடுக்கி வெச்சிட்டேன்."
"எனக்கு போர் அடிக்குது."
ப்ரியாவும்,"சும்மா இருக்க மாட்டியே நீ, "என்று கிண்டலடித்து,
"சரி இந்தா இது எடுத்துட்டு போய் அத்தை, மாமாவுக்கு கொடுத்துட்டு வா ."

"நம்ம அப்பறம் சாப்பிடலாம்."
ஒரு பாத்திரத்தில் கோதுமை தோசையும், ஒரு கிண்ணத்தில் சாம்பாரும், இரு தட்டும் இருந்தது.

"அத்தை, அக்கா கொடுத்து விட்டாங்க, என்று பெரியவர்கள் இருவருக்கும், அவர்கள் அறையில் பரிமாறினாள் .
"மச்" என்ற சலிப்புடன், தட்டில் இருந்த உணவையும் மனைவியையும் பார்த்தார் ரங்கநாதன்.

மருமகள் என்ன நினைபாளோ, என்று ரமா கண்களால் கணவனிடம் கெஞ்சினார்.
ரங்கநாதனும் சுதாரித்து கொண்டு,"சாம்பார் வை மா , " என்று காவியாவை திசை திருப்பினார்.

ஒரு நொடி என்றாலும், உணவை கண்டதும் முகம் சுருங்கி, மீண்டும் இயல்புக்கு வந்த மாமனாரின் முக மாற்றத்தை கண்டு, அவருக்கு உணவு பிடிக்கவில்லை என்று அறிந்து கொண்டாள் .

"மாமா, என்ன ஆச்சு, உங்களுக்கு இது பிடிக்கலையா, என்ன வேணும் சொல்லுங்க, நான் வேற கொண்டு வரேன்," என்று பதறினாள்.
பெரியவர்கள், கவியின் பாசத்தில், மகிழ்ந்தாலும்,
"எங்க உடம்புல இருக்குற வியாதிக்கு இது தான் மா சாப்பிட்டு ஆகணும்," என்று விரக்தியாக பதில் கொடுத்தனர்.

"நீ போய் சாப்பிடு கவி, விக்ரம், அருண் எல்லாரும் வர லேட் ஆகும்."

அவளும் ப்ரியாவிடம், "அக்கா, மாமாவுக்கு சாப்பாடு பிடிக்கல, அவருக்கு உடம்புக்கு சேருற மாதிரி வேற ஏதாவது செய்யலாமே."
"அதுவும் இல்லாம, இரண்டு தோசை எங்க பத்தும் ."

"அவங்க இது தான் சாப்பிட்டு ஆகணும் கவி, தினமும் இந்த அளவு தான்."
"கவிக்கு தான் மாமனாரின் சோர்ந்த முகம் வருத்தத்தை தந்தது.

"அது எப்படி கா, நம்ம அப்பா, எவ்வளவு குடிக்குறாரு, எவ்வளவு மூட்டை தூக்குறாரு, அதுக்கு ஏத்த அளவு பழைய சாப்பாடா இருந்தாலும் வயிறார சாப்பிடறதால தான், அவரால தெம்பா இருக்க முடியுது."

"அதே வயசு தானே மாமாவுக்கும் , நல்லா சாப்பிட்டா தானே அவருக்கு தெம்பு கிடைக்கும்."

"அதே தான் நானும் சொல்றேன்கவி, நம்ம அப்பா எவ்வளவு வேலை செய்றாரு, அவர் செய்ற வேலைக்கு, அவர் சாப்பிடறது எல்லாம் ஜீரணம் ஆகிடும்."

"இங்க உட்காந்துட்டே இருக்கிறவங்களுக்கு இது போதும்," என்று ப்ரியா ஏதோ திமிராக பதிலளித்தது போல் தோன்றியது காவ்யாவிற்கு.

அவள் கூறியதும் அவள் தட்டில் உள்ள, சப்பாத்தியும், சிக்கன் தொக்கும் ரசித்து உன்ன ஆரம்பித்தாள் .
குழந்தைகளும் இரவு சாப்பாடு உண்டு முடித்து, படுக்க சென்றனர்.

காவ்யாவிற்கு, தான் உணவு இறங்க மறுத்தது.
வீட்டினில் பெரியவர்கள் இருந்தவர் சரியாக உண்ணாமல், அவளுக்கு மனம் வருந்தியது.
அதே நேரத்தில் ப்ரியாவின் பதில் அவளுக்கு உவப்பானதாக இல்லை.
ஏதோ மனம் நெருடியது.


வணக்கம் பிரெண்ட்ஸ்
என் சின்ன பையனுக்கு ஒரு வாரமா இருமல், ஜுரம்.
அவன் கூடயே எனக்கு நேரம் போச்சு .
இப்போ தான் குழந்தை கொஞ்சம் பரவாயில்ல .
தாமதத்திற்கு மன்னிக்கவும் பிரெண்ட்ஸ்.
சென்ற பதிவிற்கு உங்களின் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களுக்கு எனது நன்றிகள்.
இப்பதிவினையும் படித்து உங்களின் ஆதரவை தாருங்கள்.


All take care
:)















 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ப்ரியா ஏன் இப்படி பேசறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top