சேனைகிழங்கு கட்லெட்

Advertisement

Bhuvana

Well-Known Member
சேனைகிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்:

சேனைகிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பொரிகடலை - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பிரட் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சேனைகிழங்கை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி குக்கரில் சிறிதளவு தண்ணீர், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு புளி, சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேகவைத்து எடுத்து ஆற விட்டு மசித்து விட்டு கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். மசித்து வைத்த சேனைகிழங்குடன் பொடித்த பொரிகடலை, வெங்காயம், சோம்பு, மிளகாய் தூள், சீரகத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பிடித்த வடிவத்தில் தட்டி இரு பக்கமும் ரொட்டி தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் இரு பக்கமும் திருப்பி முறுகலாக வேக வைத்து எடுத்தால் சுவையான சேனைகிழங்கு கட்லெட் ரெடி.

மையோனீஸ் அல்லது தக்காளி சாஸூடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு : பிரட் தூள் தயாரிக்க வீட்டில் ரொட்டி இல்லையென்றால் ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

அதுவும் இல்லையென்றால்
மேரி பிஸ்கட், பைபர் பிஸ்கட் இப்படி ஏதாவது இருந்தாலும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

இவற்றில் எதுவும் இல்லை என்றாலும் கார்ன் ப்ளேக்ஸ் இருந்தால் அதை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
 

Attachments

  • 20210614_155746.jpg
    20210614_155746.jpg
    197.5 KB · Views: 3

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top