மாலை சூடும் வேளை -35

Advertisement

laxmidevi

Active Member
மாலை-35

பாடல் வரிகள்

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா....

விக்ரமின் போனிற்கு கடத்தியவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது .அதில் விக்ரம் பிடித்து வைத்திருந்த வேனை அவன் சொல்லிய இடத்தில் நிறுத்தி விட்டுப் போகுமாறு சொல்லியிருந்தான்.

விக்ரமும் அவன் சொல்லியாவறே ஒருவரை அழைத்து அந்த வேனை அங்கே நிறுத்திவிட சொன்னான்

சுந்தர் விக்ரமிடம் கனி இருக்கும் இடம் தெரிந்து விட்டதா என்று கேட்டான்.

மம் கண்டுபிடுசாச்சு சுந்தர் .இன்று மாலை கனி நம்முடன் நம் வீட்டில் இருப்பாள்

இங்கு சுந்தரூடன் பேசிக் கொண்டிருந்தாலும் விக்ரமின் மனமோ கார்த்திக் மங்கையை பார்த்து இருப்பானா , அவள் என்ன செய்கிறாளௌ என்று எண்ணிக் கொண்டிருந்தது.




அங்கே அவனின் மனைவியோ அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்தாள்.

மங்கை கண்விழித்ததும் அவளருகில் வந்த அடியாட்களில் ஒருவன் எழிலரசன் இங்கே பாரம்மா எங்களுக்கு தேவையானது கிடைத்துவிட்டால் நாங்கள் உன்னை பத்திரமாக உங்கள் வீட்டில் விட்டு விடுவோம். அதுவரை தப்பிக்க முயற்சி செய்யாமல் அமைதியாய் அந்த ரூமில் இரு.அங்கே உனக்கு தேவையான சாப்பாடு தண்ணி எல்லாம் இருக்கிறது ஏதும் வேண்டுமானால் கேள். பார்க்க பிள்ளைத்தாச்சி பெண்ணாக வேறு இருக்கிறாய். நீ எதுவும் தொல்லை செய்யாமல் இருந்தால் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றான் .

எழில்அரசனுக்கு மங்கையை பார்க்கும்போது தன் தங்கை ஞாபகம் தான் வந்தது . மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இப்போதுதான் அவள் கருத்தரித்து இருக்கிறாள்.அவளுக்கும் இப்போதுதான் ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது.எனவே வேறு வழியில்லாமல் கடத்தி இருந்தாலும் மங்கையை அக்கறையோடு பார்த்துக் கொண்டான்

திருநெல்வேலியில் சிவாவின் ஊரில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்ததால் கார்த்திக் சிவாவின் வீட்டிற்கு வந்ததூ யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படுத்தவில்லை.

மங்கை கடத்தியவனோ விக்ரம் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதி செய்துகொண்டு அவன் இங்கு வர வாய்ப்பில்லை என்று சும்மா ஒரு நான்கு பேரை மட்டும் தான் மங்கையின் பாதுகாப்பு இருக்கிறாள் ஏற்பாடு செய்தது இருந்தான். கார்த்திக்கும் உடன் இருந்தவர்களும் அங்கிருந்தவர்கள் அடித்து போட்டு விட்டு மங்கையை அங்கேயிருந்து சிவாவின் வீட்டுக்கு கூட்டி வந்து விட்டனர்.

தன்னை எப்படியும் காப்பாற்ற தன் கணவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு கார்த்திக்கினை பார்த்ததும் ஒரு மெல்லிய ஏமாற்றம் தோன்றியது. இருந்தாலும் எப்படியோ தப்பித்து விட்டோம் என்று கார்த்திக்குடன் வந்துவிட்டால்.

சிவாவின் தங்கை டாக்டர் தான் என்பதால் அவளை மங்கையை செக் செய்து அலைச்சலால் வந்த களைப்பு தான் வேறு எந்த பாதிப்பும் இல்லை இன்று ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளை காலையில் கூட்டிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டாள்

கார்த்திக் விக்ரமிடம் மங்கையை காப்பாற்றி பாத்திரமாக சிவா வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக கூறினான்.


விக்ரம் மங்கையிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்க அவள் சாப்பிட்டுவிட்டு தூங்குகிறாள் என்றான் கார்த்திக்.


கார்த்திக் ஏதம் வேறு பிரச்சினை இல்லை அல்லவா?


டாக்டர் இன்று நன்றாக தூங்கட்டும். பயண களைப்பு தான் உடம்பிற்கு வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

நம் வீட்டில் எல்லோரிடமும் அவள் தோழியின் வீட்டில் தங்கி இருப்பதாக மட்டும் சொல்லி வை.வேறு எதுவும் கூற வேண்டாம் சரியா .நாளை காலை மங்கைக்கு கொஞ்சம் தெம்பு வந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு அங்கே வந்து விடுவேன் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இங்கு நம் கனியை பார்த்தேன். அவள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள் என்று என்னால் நம்பவே முடியவில்லை .ஆனால் கனி என் நம்மிடம் வரவில்லை என்று தான் எனக்கு புரியவில்லை. இன்னும் அவள் என்னை பார்க்கவில்லை நான் அவளை பார்த்து பேசி விட்டு வரும்போது அவளையும் கூட்டிக்கொண்டு வருகிறேன் சரிதானா என்றான்.

விக்ரம் கார்த்திக்கிடம் சுந்தர் வந்தது அதற்குப் பின் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான்.

நாம் பார்த்து பார்த்து வளர்த்த பெண் அவள் வாழ்வில் எவ்வளவு நடந்து இருக்கிறது. நம்மிடம் ஏதாவது கூறி இருக்கிறளா? இருக்கட்டும் அவளை வைத்துக் கொள்கிறேன் என்றான் கார்த்திக் கோபமாக.

சரிடா பார்த்து பேசு வரும்போது அவளையும் அழைத்து வந்து விடு என்றான் விக்ரம்.

சுந்தரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் விக்ரம். சுந்தரும் விக்ரமும் கனியும் மங்கையும் கிடைத்தது விட்டதில் சற்று நிம்மதியடைந்தனர்.

சுந்தரை சாப்பிட வைத்து கெஸ்ட் ரூமில் தங்க சொன்னான் விக்ரம்.மங்கை தோழியின் வீட்டில் தங்கி இருப்பதாக தன் வீட்டினரிடம் சொன்னான்.மங்கை கல்லூரிக்கு சென்றிருந்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

மங்கையின் அறைக்கு வந்தான் விக்ரம். முழுமையாக இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை அதற்குள் மங்கையை கடத்தி விட்டார்கள் என்ற செய்தியில் மிகவும் களைத்துப் போயிருந்தான் . முதன்முறையாக வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தது இப்போதுதான். தன் மனைவி தன்னை எந்த அளவு ஆட்சி செய்கிறாள் என்று இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டான். எப்போதடா விடியும் தன் மனைவியை பார்ப்போம் என விழிகள் தூங்க மறுத்தன விக்ரமிற்கு.

அங்கே ஒருவன் இவளின் நினைவில் உருகி கரைந்து கொண்டு இருக்க மங்கையோ சிவாவின் தங்கை கொடுத்த மாத்திரைகளினால், ஊசியினால் நன்றாக உறங்கி போனாள்.

கார்த்திக் சிவாவிடம் ,சிவா உங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறாங்கள்ள கனி,அவங்க யாருன்னு தெரியுமா.

கண்மணியின் பிரண்ட் கார்த்திக்.

தவறாக நினைத்துக் கொள்ளாதே சிஸ்டரிடம் அந்த பெண்ணை இங்கு அழைத்து வர சொல்ல முடியுமா

தவறாக நினைக்க என்ன இருக்கிறது நீ காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டாய்.நான் கண்மணியை அவர்களை அழைத்து வரச் சொல்கிறேன்.

சிவா கண்மனியிடம் சொன்னவாறு கனியை அழைத்துக்கொண்டு கார்த்திக்கின் அறைக்கு வந்தாள் கண்மணி.

தன் தோழியுடன் வந்த கனிமொழிக்கு கார்த்திக்கை பார்த்ததும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை

நீங்க எப்படி என்று திக்கினாள் கனி.

நாங்க எல்லாம் இன்னும் உயிரோட தான் இருக்கோம் இல்லைனா கூட என்ன அத பத்திதான் உனக்கு எந்த கவலையும் இல்லை.

ப்ளிஸ் கார்த்திண்ணா அப்படி எல்லாம் பேசாதே.

இப்ப தான் அண்ணன் இருக்கறது ஞாபகம் வருதா? சரி விடு நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்.

அது சரி நீயும் குழந்தையையும் மட்டும் தான் வந்திருக்கீங்க போல உன் கணவர் எங்கே ?

அவருக்கு லீவு கிடைக்கல அதனாலதான் வரவில்லை

கார்த்திக் வேகமாக வந்து கனியின் கன்னத்தில் அறைந்தான்.

இப்போதாவது உண்மையை சொல்றியா நீ . சுந்தர் விக்ரமிடம் கூறிய அனைத்து விஷயங்களையும் கூறினான்.

என்ன நீ எடுத்த ஒரு முடிவு தப்பா போயிட்டா நான் உன்னை அப்படியே விட்டுருவோம்னு நினைச்சியா. பெற்ற குழந்தைகள் தவறான முடிவெடுத்தா ,பிள்ளையே வேணாமான்னு முடிவெடுத்துடுவமா இல்லைலா.அத சரிசெய்து அவங்க நல்லா இருக்கணும்னு நினைப்போம்.நீயும் எங்களுக்கு குழந்தை மாதிரி தான் .நான் மட்டும் நம்ம குடும்பத்துல எல்லாரும் அப்படித்தான் நினைச்சோம். பிரதாப் இருந்த வீட்டை எரித்து விட்டனர் .அதில் ஒரு பெண்ணமும் இருந்தாய் தகவல் கிடைத்தது.அது நீதான் என்று நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா. ஆதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல்.. யப்பா கொடுமை டா சாமி. நீ வெளிநாட்டில் தங்கி படிப்பதாய் தான் நம் உறவினர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்திருக்கிறோம். நீ உயிரோடு தான் இருப்பாய் என்ற குருட்டு நம்பிக்கையில் .ஆனால் உன்னுடைய இழப்பினை சித்தி சித்தப்பாவால் இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கார்த்திக் கூறியதை கேட்டு கனி கதறி அழவே சரி விடு கனி.ஏதோ நடந்தது நடந்து விட்டது .அதைப்பற்றி பேச வேண்டாம். நாளை காலை எல்லோரும் கோயமுத்தூர் செல்லலாம்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கண்மணிக்கு கோபம் வந்துவிட்டது .ஏன்டி இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட ஏதாவது சொல்லி இருக்கியா? இப்ப கூட நீ என்கிட்ட உண்மையா சொல்லல. நீ என்ன உன்னுடைய பிரண்டாக நினைக்கல இல்ல பரவால்ல ஆனா நான் உன்னை என் ப்ரெண்டா தான் நினைச்சேன் என்று கண் கலங்கினாள்.

இல்ல கண்மணி என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்றுதான். ப்ளீஸ் என்னை மன்னித்துவிடு என்று கண்மணியின் தோளில் சாய்ந்து அழுதாள் கனி.

சரி பரவால்ல விடு கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கு. நீ இங்க வந்ததுனால தான கார்த்திக் அண்ணா உன்னை பார்த்தாங்க. அது சரி உன் கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடு. மறந்துறாத சரியா என்றாள் கண்மணி சிரிப்புடன்.

அதன் பின்னர் தான் கனி கார்த்திக்கை பார்த்து நீ எங்கே எப்படி எதற்கு வந்தாய் என்று கேட்டாள்.

ஒண்ணொண்ணா கேளு என் கண்ணுக்குட்டி

என்ன கண்ணுகுட்டினு கூப்பிடாதடா காக்கி என்றால் கனி

கனிமொழியின் சிறுவயதில் அவளை கேலி செய்வதற்காக அனைவரும் கண்ணுக்குட்டி என்று அழைப்பர். இப்பொழுது கார்த்திக் அப்படி கூப்பிடவும் அவனிடம் கோபித்துக் கொண்டாள்.



கனிமொழி &கார்த்திக்


சிறுவயதில் பார்த்த தன் செல்ல தங்கையாகவே கணி தோன்றினால் அந்த நிமிடம் கார்த்திக்கிற்கு .

தன்னை அடிக்க வந்த கனியின் கைகளை பிடித்து அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான் அந்த தமையன்.

மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே

கதையை உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top