விந்தையடி நீ எனக்கு...4

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



விந்தையடி நீ எனக்கு...4

தன் மகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார் தியாகராஜன்.அவருக்கு மகள் கடைசியாக கூறிய வார்த்தைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.தன் மகளின் வார்த்தைகள் தந்தையாக அவரை பயம்கொள்ள செய்திருந்தது.தன் நினைவுகளில் ஊழன்றவரை நிகழ்வுக்கு கொண்டுவந்தார் அமுதா,

"என்னங்க..."என்று அவர் தியாகராஜனை உலுக்க அதில் தன்னுர்வுக்கு வந்தவர்,

"ஆங்...என்னம்மா...என்ன கேட்ட..."என்றார்.

"என்னங்க அப்படி யோசனை சாப்பிடாம...."என்றார் அமுதா.

"ஒண்ணுமில்ல மா...நம்ம பொண்ணு மஞ்சரி பத்திதான்..."என்றார் கவலையாக.

"என்னங்க என்ன சொன்னா மஞ்சு...ஏன் இப்படி இருக்கீங்க..."என்றார் பதட்டமாக.மனைவியின் பதட்டம் கண்டவர் அவரை கைபிடித்து எதிரில் உள்ள நாற்காலியில் அமர வைத்து அவர் அருந்த தண்ணீர் கொடுத்தார்.

"ஏன் இவ்வளவு பதட்டம் அமுதா...உனக்கு தான் ஏற்கனவே பிபி இருக்குல்ல...முதல்ல கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..."என்று அதட்ட அமுதாவோ,

"ம்ம்...என்ன அதட்டுங்க...ஆனா பொண்ண ஒண்ணும் சொல்லிடாதீங்க...இப்பெல்லாம் அவ எங்க போறானே தெரியறது இல்ல...என்கிட்டேயும் சரியா பேசறதும் இல்ல...எனக்கு என்னமோ பயமா இருக்குங்க..."என்றார் கலக்கமாக.மகளின் ஒதுக்கம் வெகுவாக பாதித்திருந்தது தாயை.

"என்ன அமுதா இதுக்கெல்லாம் கண் கலங்கிட்டு...நான் இருக்கேன் இல்ல நான் பார்த்துக்குறேன்...."என்றார் தியாகு. என்ன தான் தன் மனைவியை சமாதானம் செய்தாலும் தியாகுவிற்கும் மகளின் நடவடிக்கைகளைக் கண்டு சற்று கலங்கி தான் போயிருந்தார்.எங்கே தான் ஏதாவது கூறினால் மனைவி மேலும் பயப்படுவாளோ என்று நினைத்தவர் மனைவியிடம் தைரியம் கூறினார்.

"ஹாய் டாட்,மாம்..."என்றபடி வந்தான் நவீன்.அந்த வீட்டின் கடைக்குட்டி.மஞ்சரி பிறகு குழந்தை தங்காமல் போக வெகு நாள் வேண்டுதலுக்கு பிறகு பிறந்தவன்.மஞ்சரியின் செல்ல தம்பி.மஞ்சரிக்கு தனது தம்பி என்றால் உயிர் அதே போல அவனுக்கும் தன் தமக்கை என்றால் அவ்வளவு பிரியம்.

"வாடா...வர நேரமா இது...எப்ப போனவன் இப்ப தான் வரியா..."என்று மகனை காய்ந்தார் அமுதா.

"கிரிக்கேட் விளையாட போனேன் மாம்...வர வழியில என் பிரண்ட பார்த்துட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..."என்றான் புதல்வன்.

"எப்ப பாரு விளையாட்டு இந்த வருஷம் நீ பன்னிரெண்டாவது நியாபகம் இருக்குல்ல...ஒழுங்கா படிக்கிற வழிய பாரு..."என்று அமுதா அதட்ட புதல்வனோ அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.அவனது பொறுப்பின்மையைக் கண்ட அமுதா மேலும் ஏதோ கூற வர அவரை தடுத்த தியாகு,

"அமுதா...போய் தம்பிக்கு சாப்பாடு எடுத்துட்டு வா..."என்று கூறி அனுப்பினார்.அவர் எதற்கு கூறுகிறார் என்று உணர்ந்த அமுதா தியாகுவை முறைக்க அவரோ போ என்பது போல இறஞ்சும் பார்வை பார்த்தார்.கணவனின் பார்வையில் கடுப்பானவர்,

"என்னமோ பண்ணுங்க..."என்றுவிட்டு சாப்பாடு எடுத்துவர சென்றார்.அமுதா சென்றவுடன் நவீனிடம் திரும்பியவர் பேசும் முன்,

"ஹாய் டாட்....ஹாய் நிவி...நீங்க இங்க இருக்கீங்கலா..."என்று உற்சாகமாக வந்தாள் மஞ்சரி.தமக்கையைக் கண்டவுடன் நவீனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை இருக்காத பின்னே தந்தை அறிவுரை என்ற பெயரில் கூறும் சொற்பொழிவில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டளே என்று மனதால் நன்றி உரைத்தான்.

"என்னப்பா...இன்னக்கி சீக்கிரமே வந்துட்டீங்க...உங்க தங்கச்சி பையன் கல்யாண வேலை பார்க்க போகலையா..."என்றாள் மகள்.

"இல்ல மா..."என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவர் மகளை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்.தியாகுவின் பார்வைக்கு அர்த்தம் உள்ளது காரணம் இன்று மஞ்சரியின் முகத்தில் காணப்பட்ட மலர்ச்சி.கடந்த ஒருவார காலமாக அவளது முகத்தில் சிரிப்பு என்பதேயில்லை.அதுவும் அன்று தன்னிடம் வழக்காடிவிட்டு சென்ற பின்பு அவளது முகத்தில் எப்போதும் இருப்பது சிந்தனை மட்டுமே.ஆனால் இன்று அவளது முகத்தில் காணப்பட்ட மலர்ந்த புன்னகையை பார்க்கும் பொழுது தந்தையாக ஒரு மனது சந்தோஷப்பட்டாலும் இன்னொரு மனது மகளின் மலர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றே சிந்தித்தது.

மஞ்சரியோ தன் தந்தையின் பார்வையைக் கண்டும் காணாதது போல தன் தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"என்னடா இன்னக்கி உன் பிரண்ட பார்க்கப் போறேன்னு சொன்ன போகலையா..."என்றாள்.

"பார்த்துட்டேன் அக்கா.."என்றான் உற்சாகமாக.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சாப்பாடுடன் வந்த அமுதாவும் மஞ்சரியின் மலர்ந்த முகத்தைக் கண்டு,

"என்னடி இன்னக்கி ஒரே சந்தோஷமா இருக்க என்ன விஷயம்..."என்று வினவ தியாகுவோ மகள் என்னக் கூறுகிறாள் என்று காதைத் தீட்டிக்கொண்டு கேட்க அவளோ,

"ம்ம்...அப்படியா...இன்னக்கி என்னோட பழைய பிரண்ட பார்த்தேன் ம்மா அதான்..."என்று கண்சிமிட்டிக் கூறிவிட்டு இங்கு இருந்தால் தன் தந்தை தன்னிடம் ஏதாவது பேசியே விஷயம் வாங்க முற்படுவார் என்று உணர்ந்தவள் அவரிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு,

"ஒகே டாட்,மாம்...ஒரே டயர்டா இருக்கு...நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் பை...பை டா நிவி..."என்றுவிட்டு சென்றுவிட்டாள்.அவள் சென்றவுடன் நவீனும் சாப்பிட்டுவிட்டு தனக்கு படிக்க இருப்பதாக கூறி சென்றுவிட்டான்.

தியாகு ஏதோ சிந்தனையில் இருக்க அமுதா,

"என்னங்க பார்த்தீங்கலா...நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடல...என் பொண்ணு முகத்துல சிரிப்ப திருப்பிக் கொடுத்துட்டார்..."என்றார்.ஆனால் தியாகுவிற்கு மகள் ஏதோ தங்களிடம் மறைக்கிறாள் என்று புரிந்துவிட்டது.ஆனால் அதைக் கூறினால் மனைவி பயப்படுவாள் என்று உணர்ந்து அமைதிக்காத்தார்.ஆனால் மனதோ மகளின் மற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையிலேயே இருந்தது.

தன் அறைக்கு வந்த மஞ்சரிக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.இவ்வாறு தன் தாய்,தந்தையிடம் பொய் கூறுகிறோமே என்று ஒரு மனது எடுத்துரைத்தாலும் அவளது காதல் கொண்ட மனமோ தான் செய்வது தான் சரி என்றுக் கூறியது.காதல் என்று வந்துவிட்டால் அதில் புத்தியை மனது வென்றுவிடும்.அது தான் மஞ்சரியின் நிலையும் அவள் செய்வது தவறு என்று அவளது புத்தி உரைத்தாலும் மனமோ தான் செய்வது சரி என்று கூப்பாடு போட்டது.பல நேரங்களில் நாம் செய்யும் செயலின் வீரியம் அதை செய்யும் போது தெரியாது அது ஏற்படுத்தும் பாதிப்புக்களால் நம் வாழ்க்கையே தடம் புரண்டுவிடும் அது தான் மஞ்சரியின் விஷயத்திலும் நிகழப் போகுகிறது என்று அவளுக்கு புரியவைப்பது கடினம்.அதற்கு காரணம் அவள் ஆஷிக்கின் மீது வைத்துள்ள கண்மூடி தனமான காதல் தான் காரணம்.தன் நிகழ்விலேயே உழன்றவளை மீட்டது கதவு தட்டும் ஓசை ஒரு வேலை தன் தந்தை தான் வந்துள்ளாரோ என்று நினைத்தவள் பின் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எழுந்து திறந்தாள் வந்ததோ நவீன்.

"என்னக்கா...தூங்கிட்டியா...ஏன் ஒரு மாதிரி இருக்க என் பிரண்ட பார்த்தியா...என்ன சொன்னான்..."என்று கேள்விகளால் அடுக்க மஞ்சரிக்கோ அழுகை கேவலாக மாறியது,

"நிவி..."என்ற கதறலுடன் அவனை அணைத்துக் கொண்டவள் அழுகையில் கரைய நவீனுக்கோ தமக்கையின் அழுகையை எவ்வாறு நிறுத்துவது என்றே தெரியவில்லை.

"அக்கா...என்னக்கா...என்ன ஆச்சு சொல்லேன் ப்ளீஸ் அழாத...."என்று அவன் கெஞ்ச மஞ்சரியின் அழுகை நின்றபாடில்லை ஒரு கட்டத்தில் தன் அக்காவை தன்னிடம் இருந்து பிரித்தவன்,

"ப்ச் அக்கா...இப்ப நிறத்தபோறியா இல்ல அப்பாவ கூப்பிடவா..."என்று அதட்டவும் தான் அவளது அழுகை மட்டுப்பட்டது.அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவன் பின்,

"இப்ப சொல்லு என்ன ஆச்சு..."என்றான்.

தம்பியின் மிரட்டல் சற்று வேலை செய்தது போலும்,அழுகையை விட்டவள் அவனிடம் நடந்தவைகளைக் கூற கேட்டுக்கொண்டவன்,

"அதான் பணம் கொடுத்திட்டல்ல அப்புறம் என்ன கண்டிப்ப ஒத்துப்பான் நீ கவலைய விடு..."என்று பெரிய மனிதனை போல கூற மஞ்சரிக்கு சிரிப்பு வந்தது.அவளது முக மலர்ச்சியைக் கண்டவன்,

"இப்படியே இருக்கா...எனக்கு அது போதும்..."என்றான் நிறைவான மனதுடன். அவனும் தான் என்ன செய்வான் தன் தமக்கை கடந்த ஒரு வாரமாக அழுது வடிவதைக் கண்டவனுக்கு முதலில் எதற்கு அழுகிறாள் என்றே புரியவில்லை.தாய்,தந்தையிடம் கேட்கலாம் என்று சென்றவன் அவர்களிடம் கேட்க அவர்களோ கூற மறுத்தனர்.பின் அவர்கள் அறியாமல் அவர்கள் பேச்சைக் கேட்டவனுக்கு புரிந்தது என்னவோ தன் அக்கா அத்தானை விரும்புகிறாள்,அவளது விருப்பத்தை தன் அத்தை ஏற்கவில்லை என்பதுவே.அதிலிருந்து அவளைத் தேற்றுவதே அவனது வேலையாகி போனது.

"எனக்கு என்னமோ அவன் இதுக்கு ஒத்துக்கிற மாதிரி தெரியலடா..."என்று வருத்தமாக கூற நவீனோ,

"அதெல்லாம் ஒத்துப்பான் நீ கவலைப்படாத..."என்று கூறி தேற்றினான்.அதற்குள் மஞ்சரியின் கைபேசி அலற எடுத்தவள் புதிய எண்ணாக இருக்கவும் எடுக்காமல் விட மீண்டும் அதே எண்ணில் இருந்து போன் வரவும் ஒருவேலை தமிழ்செல்வனாக இருக்குமோ என்று நினைத்து எடுக்க அவள் நினைத்தது போல அவன் தான் அழைத்திருந்தான்.அழைத்தவன் மஞ்சரியிடம்,

"என்ன செய்யனும் சொல்லு..."எடுத்த எடுப்பிலேயே கேட்க அவனிடம் அவன் செய்ய வேண்டியவற்றைக் கூற அனைத்தையும் கேட்டவன்,

"அதெல்லாம் சரி மீதி பணத்தை எப்ப தர..."என்று பணத்திலேயே குறியாக இருக்க மஞ்சரியோ,

"வேலை முடிஞ்ச அரைமணிநேரத்தில உன் கையில இருக்கும் ...."என்று கூறி வைத்துவிட்டாள்.மனதில் தான் நினைத்தது நடக்க போகிறது என்று மகிழ்வுடன் கண்ணயர்ந்தாள் மஞ்சரி. அதேநேரம் தன் வாழ்க்கையில் நடக்கபோகும் விபரீதங்களை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நித்திலா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top