அறிமுகம் 1 :

Advertisement

bavi1308

Well-Known Member
உன்னை உனக்கே அறிமுகம் செய்வேன் !

அறிமுகம் 1 :

இரவு...

பல சுவாரஸ்ய நிகழ்வுகளை உள்ளடக்கியது.

அமாவசை முதல் பௌர்ணமி வரையிலான நிலவின் வளர்ச்சி நிலைகளை இரவில் தான் நாம் கண்டு மகிழ்கிறோம்.

இருண்ட வானத்தைப் பார்த்துக்கொண்டே இரவின் மடியில், நாம் நட்சத்திரங்களை எண்ணி மகிழ்ந்திருக்கிறோம்.

கருப்பு வண்ணமும், ஓவியர்களின் கைகளில் சேர்ந்தது இரவின் உபயமே!

கவிஞர்களின் கற்பனை உலகத்தில், அவர்களின் பாடல்களில் நீங்கா இடம் பிடிப்பது இரவு தான்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் ஒரு இரவு வேளையில் தான்.

அப்படி பல சிறப்புகளை, பெருமைகளை கொண்ட ஒரு இரவு வேளையில், சென்னை மாநகரின் , அந்த புகழ்ப்பெற்ற மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

தனது மருத்துவர் அறையில், இரவு நேர பணிக்காக அமர்ந்து, உள்நோயாளிகளைப் பார்த்து விட்டு, மருத்துவக் குறிப்புகளைப் பார்த்து கொண்டிருந்தான் அவன்.

அவன்...இனிலன் ...இனிலன் அபிமன்யு....MD பொது மருத்துவம் படித்துவிட்டு, அந்த மருத்துவமனையில் பணி புரிகிறான். வயது 29 . இன்னும் திருமணம் ஆகவில்லை. மிகவும் மென்மையானவன். அவனின் மருத்துவ தொழிலை சேவையாக செய்பவன். விடுமுறை நாட்களில், ஆஸ்ரமங்களுக்குச் சென்று, முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும், இலவசமாக சிகிச்சை அளித்து கொண்டிருப்பவன்.

அப்போது, ஒரு செவிலி வந்து, கதவைத் தட்டி விட்டு, அனுமதி அளித்ததும், " டாக்டர், ஒரு எமர்ஜென்ஸி, " என்று சொல்லி விட்டு சென்றாள். இனிலனும் அவள் பின்னே தன் ஸ்டதஸ்கோப்பை எடுத்து கொண்டு சென்றான்.. சென்றான் என்பதை விட ஓடினான் என்பதே சரியாக இருக்கும். ஏனென்றால், மருத்துவ துறையில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக ஆபத்தானவை.

ஒரு இளைஞன் ஸ்ட்ரிச்ரில் படுக்கவைக்க பட்டுருந்தான். அவன் உடல் முழுவதும் இரத்தம். அவனருகே இரு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

இனிலன் அந்த இளைஞனை ஆராய்ந்து கொண்டிருந்தான். காவலர் ஒருவர், " டாக்டர், பையனுக்கு உயிரிருக்கா! " என்று கேட்டார். "ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல சார், சிஸ்டர் ! சீக்கிரம் ஆப்பேரஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க..மற்றும் சில உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சில மணி நேரங்களுக்கு பிறகு, அறுவை சிகிச்சை வெற்றி அடைய , வெளியில் வந்தான். ஒரு பெண், காவலர் உடையில் மற்ற இரு காவலர்களிடம் பேசி கொண்டிருந்தாள்.

"மேடம், டாக்டர் வந்தாச்சு! " என்று ஒரு காவலர் சொல்ல , அவள் திருப்பினாள்.
" ஹலோ டாக்டர், அந்த பையன் எப்படி இருக்கான்!" என்று கேட்க, அதற்கு, "ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல மேடம் ! அவங்க சேப், இன்னும் 2 அவர்ஸ் ஆகும் கண்ணு முழிக்க" என்று சொன்னான்.

"ஓகே தேங்க்ஸ் டாக்டர், " ஐ'ம் ஆதீனி அருள்மலர், ACP " என்று கைகுலுக்க , " ஐ'ம் இனிலன் அபிமன்யு" என்று பதிலுக்கு கைகுலுக்கினான் இனிலன்.

இந்த சேர்ந்த கை ,சீக்கிரமாக இணைபிரியா கைகளாக மாறும் என்று அவர்களுக்கு தெரிந்துருக்க வாய்ப்பில்லை.


-- இன்னும் அறிமுகம் செய்வேன்....


நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.

--தபு ஷங்கர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன்னை உனக்கே
அறிமுகம் செய்வேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பவித்ரா சுந்தர் டியர்
 

Suvitha

Well-Known Member
ஹாய் பவி,

முத்தான முதல் கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பா...

முதல் பதிவிலே நாயகனையும் நாயகியையும் கைகுலுக்க வச்சாச்சு. அருமை.

சின்ன friendly advice ப்பா...
கொஞ்சம் பெரிய பதிவாக கொடுக்க முயற்சி செய்யுங்கள் பவி...
ஒரு ஆயிரம் வார்த்தை அவளிற்காவது.

பதிவில் spell mistake இல்லாதது கூடுதல் சிறப்பு.
 

bavi1308

Well-Known Member
ஹாய் பவி,

முத்தான முதல் கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பா...

முதல் பதிவிலே நாயகனையும் நாயகியையும் கைகுலுக்க வச்சாச்சு. அருமை.

சின்ன friendly advice ப்பா...
கொஞ்சம் பெரிய பதிவாக கொடுக்க முயற்சி செய்யுங்கள் பவி...
ஒரு ஆயிரம் வார்த்தை அவளிற்காவது.

பதிவில் spell mistake இல்லாதது கூடுதல் சிறப்பு.
Sure sis...thank you for your valuable comments..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top