முரண்பாடே காதலாய் 12

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
சோர்ந்துபோகும் நேரம்தனில்
தோள் சாய்ப்பவனின் சிறு பிரிவே இருவருக்கும் உயிர்போகும் வலிகொடுக்க ...!!!
இனி அவளின் நினைவு மட்டுமே அவனின் வாழ்வாயின் அது அவனை
உணர்வற்ற ஜடமாய் மாற்றிவிடுமோ
...??

அத்தியாயம் 12 :

சின்னம்பாளையம் :

"என்னயா இது ..?? மொத்த ஊரும் இங்கதான் இருக்காங்க போல ..." என கூடியிருந்த கூட்டத்தை பார்த்து தன்னருகிலிருந்த காவலதிகாரிடம் கேட்டார், தலைமை காவல் அதிகாரி.

"ஏற்கனவே போனவாரம் தான சார் இங்க ரெண்டு பேர் செத்துப் போயிருந்தாங்க .. என்னதான் போதைல அடிச்சிக்கிட்டு செத்தாங்கனு நம்ப சொன்னாலும் பலவருஷமா அவங்க அட்டகாசத்தை பார்த்தவங்களாசே ...இதுல ஏதோ மர்மம் இருக்கும்னு நினைச்சி பார்க்க வந்துருக்காங்க சார்..!"

"அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்மந்தம் ?? ஆமா இந்த ரெண்டு பேரும் யாரு என்னனு தெரிஞ்சிதா ?"

"அதுதான் சொல்ல வந்தேன் சார்..! இவனுங்க ரெண்டுபேரும் இந்த ஊரே இல்ல சார், செத்துப்போன பண்ணையாரோட மகன் கூட தான் இவங்கள ரெண்டுமூணு தடவை பார்த்ததா சொல்றாங்க ..!"

"ம்ம்ம்...! சரி சரி இது யார் இடம் ??நைட் யார்லாம் இந்த பக்கம் வந்ததுனு விசாரிங்க...மொதல்ல இந்த கூட்டத்தை கலச்சிவிட்டுங்க"

- என்றவர் அவ்விடத்தில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என ஆராய ஆரம்பித்தார் .

அப்பொழுது அங்கு தங்களின் காரை நிறுத்திய ஜான்,
"பாஸ்...!போலீஸ் நிறைய பேர் இருக்காங்க பாஸ் ....! நீங்க இங்கயே இருங்க , நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று சொன்னவனுக்கு முறைப்பை பரிசளித்தவன் ,

"அவங்க ஒருநாளைக்கு பல குற்றவாளிகளை பாக்குறவங்க ஜான்...! எல்லோரையும் நியாபகம் இருக்க வாய்ப்பில்லை ...அண்ட் மோர் ஓவர் போலீஸ் ஆஹ் பொறுத்தவரை நான் ஒரு குற்றவாளியும் இல்லை " என்றபடி அவன் சடலங்களை சுற்றி நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தினுள் கலந்தான் .

சடலங்கள் மேல் துணி போத்தியபடி இருக்க... முகம் தெரியததில் அவ்விருவரும் அஸ்வந்த் மற்றும் ஹரி ஆக இருக்க கூடாதென நினைத்தபடியே போலீசார் அவர்களின் முகத்தை காட்டும் நேரத்திற்காய் காத்திருந்தான் .

ஆனால் சிறிது நேரத்திலே சடலங்களை அகற்ற சொல்லி மேலதிகாரி உத்தரவிட , பிணங்களை ஸ்ட்ரெச்சரில் வைத்தனர் .

"ஷிட்...! அவனுங்க தானான்னு பார்க்கமுடியலையே " என 'பாஸ்' முனங்க , ஒரு கேலியான சலசலப்புடன் காற்று வேகமாய் சுழன்றது .

காற்றின் வேகத்தில் பிடித்திருந்த பிடியை மீறி இரண்டு சடலங்களின் மேல் போத்தி இருந்த துணியும் பறந்தது.

அதில் சடலங்களை பார்த்த மக்கள் அனைவரும் அதன் அகோரத்தில் கண்களை இறுக்க மூடிக்கொள்ள , 'boss' என்றழைக்கப்பட்டவன் இமைக்க கூட அசைக்கமுடியாமல் சிலையாய் சமைந்துவிட்டான் .

இரண்டு சடலங்களும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் , உடலின் பல இடங்களில் தோல்கள் ஆங்காங்கே பிய்க்கப் பட்டு எலிகள் பல ஒன்று சேர்ந்து கொதறியதை போல் காணப்பட்ட அவ்விடங்களில் ரத்தம் காய்ந்து பச்சை நிறம் கொண்டிருந்தது .

பாஸ் மற்றும் ஜான் இருவரும் சடலத்தின் அருகிலே நின்றிருக்க , ஒரு சடலத்தின் பக்கவாட்டில் தோல் சிறிது கருகிருந்தது தெரிந்தது ... அவர்களின் நாசியை கருகிய வாடை தீண்டியது.

மற்றொரு சடலத்திலோ மணிக்கட்டில் கூர்மையான பொருளால் கிழித்ததை போல் ரத்தம் கோடாய் உறைந்து சுற்றிலும் பரவிஇருந்தது .

அந்த கையில் தொங்கிக் கொண்டிருந்த கை சங்கிலியை கண்ட ஜான் பயத்துடன் பாஸை பார்க்க, அவனின் முகமோ உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தது .

"ஜான் ...! நம்ப கிளம்பலாம் " என்று மட்டும் சொல்லியவன் வந்தது போலவே எவரும் கவனிக்கும் முன்பு விரைவாய் கூட்டத்தை கடந்து வெளிவந்தான் .

"பாஸ்...! அது நம்ப அஸ்வந்த் & ஹரி தான் பாஸ் ...நீங்க தான...நீங்க தான அந்த கைச்சங்கிலியை அஸ்வந்த்துக்கு போன வருஷம் குடுத்திங்க ??...அது அஸ்வந்த்னா கூட இருக்கிறது ஹரியா தான் இருக்கணும் ??"

"ஆமா ஜான்...! நான்தான் குடுத்தேன் ...அத எடுத்துக்காக கொடுத்தேனும் எனக்கு நியாபகம் இருக்கு ஜான் " என்றவனின் உதடு இடதுபுறமாக வளைந்து , "சூர்யா" என முனங்கியது.

அவனின் முனங்கல் சரியாய் கேட்க, "சூர்யாவா??...பாஸ்....!என்ன சொல்றிங்க ??" என புரியாமல் கேட்டான்.

"ஜான்...! உனக்கு நியாபம் இருக்கா ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் சூர்யாவை பத்தி சொன்னது???" என கேள்விகேட்டு தொடர்ந்து அவனே பதிலும் சொல்ல ஆரம்பித்தான்,

"என்ன சொன்னானுங்க?? ஹரிஷ் அவளோட முகத்தையும் , முதுகுகயும் சூட்டுல பொசிக்கியும் ....அஸ்வந்த் அவளோட மணிக்கட்டுல அறுத்ததாவும் சொன்னாங்கள?? ...ஜான் ...! நீ அந்த சடலங்களை கவனிச்சியா ஒருத்தனோட கை மணிகட்டு அறுத்திருக்கு , இன்னொருத்தனோட முதுகு பொசிங்கிற்குன்னு நினைக்குறேன் ...அப்போ இதுக்கு பின்னாடி அன்னிக்கு இருந்த சூர்யாவோட நிலைமை ஏன் காரணமா இருக்கக்கூடாது "

"பாஸ்ஸ்ஸ்......! அப்போ அது அஸ்வந்த் அண்ட் ஹரி தானா ??? ஆனா...ஆனா எப்படி பாஸ் அந்த சூர்யாக்கு இவங்க பண்ண அதே இவங்களுக்கு நடந்துச்சு??" என நம்ப முடியாமல் தவித்தவன் தொடர்ந்து,

"நான் அன்னிக்கே சொன்னனே பாஸ் மறுநாள் இவங்க சொன்ன இடத்துல எந்த பிணமும் இல்லனு . அப்போ அன்னிக்கு இவங்க ரெண்டு பேரும் கிளம்புனதுக்கு பிறகு யாரோ அவளை காப்பாத்திற்க்கணும்.பாஸ்...அப்போ சூர்யா தான் இதுவரைக்கும் நடந்த எல்லாத்துக்கும் காரணம்ல " என யோசித்து யோசித்து பேசினான்.

சிறிதுநேரம் அமைதியாய் இருந்த பாஸ், "இல்ல ஜான்...! சூர்யாவா இருக்காது.... இவங்க சொன்னதை வச்சி பார்த்தா சூர்யா இந்த ஒரு வருஷத்துல சரியாகி பழிவாங்குறதுக்கு வாய்ப்பில்லை ஜான். இதுல சூர்யாக்கு சம்பந்தப்பட்ட வேற யாரோ தான் இருக்கணும் " என்றான்.

சரியாய் அவ்வேளையில் ஓர் கார் புழுதியை கிளப்பி விட்டபடி அவ்விடத்திற்கு வந்து நின்றது .

புழுதியில் கண்களில் மண்புகுந்து எரிச்சலை கிளப்ப ...கண்களை கசக்கியபடியே நிமிர்ந்தவர்களின் பார்வையில் விழுந்தாள், அப்பொழுதுதான் அந்த காரை விட்டு இறங்கிய யஷி .

மித்ரனும் , யஷியும் இவர்களை தாண்டிச் செல்ல ...அதுவரை யஷியையே பார்த்திருந்த இருவரும் "இவளா...???" என ஒரே நேரத்தில் முனங்கினர்.

கடந்து சென்ற மித்ரனின் காதில் இவர்களின் முனங்கல் விழ , திரும்பி இருவரையும் சந்தேகமாய் கண்களின் கேள்வியுடன் பார்த்தான்.

இருவரின் பார்வையும் யஷியின் மேல் பதிந்த விதமே தவறாய் இருக்க அவன் மனம் துணுக்குற கைகள் தானாய் யஷியின் தோளை சுற்றி பாதுகாப்பாய் அணைத்தது .

--------------------------------------------------------------------------------

மாலை நான்கு மணி :

யோசனையுடன் அமர்ந்திருந்த மித்ரன், "அது ஏன் அந்த ஹரிஷா இருக்கக்கூடாது ??" என்ற யஷியின் கேள்வியில் அவளை புரியாமல் பார்த்தான் .

"என்னடா பாப்பா ...! என்ன சொல்ற ??"

"அதான்டா...! இன்னிக்கு பார்த்தோமே அந்த ரெண்டு சடலம் ...அது ஏன் அந்த அஸ்வந்த் அண்ட் ஹரிஷோடதா இருக்க கூடாது??"

"யஷிமா நீ என்ன பேசுற ?? ஹரிஷ் எங்க இருக்கானே யாருக்கும் தெரியாது ...சூர்யாவோட மேலாளர் கூட எந்த ஊர்க்கு ஹரிஷ் போனான்னு சொல்லமுடியாது சொல்லிட்டாரு !!"

"இல்லடா ...! என்னமோ எனக்கு நீ சூர்யா பத்தி சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் மனசுல எதோ ஒருமூலைல அந்த பாவிங்களுக்கு தண்டனை கிடைச்சிருக்குமுன்னு தோணுச்சு . அண்ட் அந்த எரிஞ்ச வீடு அத கூட நான் இதுக்குமுன்ன பார்த்தமாதிரி இருந்துச்சுடா " என்றாள் .

"யஷிமா...! நம்ப இந்த ஊருக்கு வந்தே முழுசா ஒருவாரம் கூட ஆகலை . நாம இங்க வரணும்னு முடிவுபண்ணி உன்கிட்ட சொன்னபோதுதான் உனக்கே இப்படி ஒரு ஊர் இருக்குனே தெரிஞ்சிருக்கும் ,அப்றம் எப்படி இந்த வீட உனக்கு தெரிஞ்சிருக்கும் ??"

"இல்லடா..! இன்னிக்கு அந்த போலிஸ்காரர் சொன்னதை கேட்டல , ரெண்டுபேரோட காலும் வெட்டப்பட்டு உடல் எல்லாம் ரொம்ப கொடூரமா தோலெல்லாம் பிஞ்சி ஒருத்தனுக்கு முதுகுகூட கருகிப்போனதா சொன்னாருல்ல . அண்ட் ...மித்...மித்ரா ..அது "என தடுமாறியவள்,

"நீ சொன்னமாதிரியே சரியா ஒருவருஷத்துல சூர்யாக்கு நியாயம் கிடைச்சிச்சிருச்சி இப்போ உனக்கு சந்தோஷமானு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்டுச்சுடா. என்னடா !! இப்டி பார்க்குற எனக்கு தெரியும் நீ நம்பமாட்டேனு ..ஆனா எனக்கு உண்மையா அப்படி தான் இருந்திச்சிடா ...யாரோ என்கிட்ட நெருக்கமா நின்னு குரல்ல சந்தோஷத்தோட என்கிட்டையும் அந்த சந்தோஷத்தை எதிர்பாத்து கேட்ட மாதிரி ".

முதலில் அவள் சொல்லும்பொழுது , இதற்கு முன்னர் இயல்பாய் நடந்த இறப்புகளை கொலை என்று சொல்லி குழப்பியதை போல் இதையும் சொல்கிறாள் என்று அசட்டையாய் கேட்டவனை , தடுமாற செய்தது அவள் கேட்டதாய் சொல்லிய குரல். இவன் இந்த விஷயத்தில் நுழைந்ததே அக்குரலால் தானே என யோசித்தவன், அவளின் வார்த்தையில்..

"யஷிமா என்ன சொன்ன? ஒரு வருஷத்துக்கு முன்னாடி நீ சொன்னதாவா அந்த குரல் சொல்லியது " என கேட்டவனின் விழிகளை பயம் கவ்வியது .

"ஆமாடா..! அது அப்படி தான் சொன்னமாதிரி இருக்கு ... நான் எப்போ எப்படி யார்கிட்ட சொன்னேன் ? ஆமா மித்ரா எனக்கு ஏன் எதுவும் நியாபகம் இல்ல ?? " என குழம்ப ஆரம்பித்தவளின் முகம் வியர்த்து மூச்சு வாங்க ஆரம்பித்தது .

அதில் பதறிய மித்ரன் அவளின் முகத்தை கைகளில் தாங்கி வியர்வையை துடைத்தவன் , "யஷிமா ...!ஒன்னுமில்லடா...ஒண்ணுமில்லை...என் பாப்பால ..எதையும் யோசிக்காதடா ...நான் இருக்கேன் டா உனக்கு ..நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்" என அவளின் நிலையில் இவன் தன் நிலைத்தப்பி புலம்பியபடி அவளை தாங்கிக்கொண்டான் .

"யஷிக்குட்டி ...! என்னடாமா ஆச்சி உனக்கு ?" என கேட்டபடியே வந்த யஷியின் தந்தையை பார்த்த மித்ரன்...யஷியை விலக்காமலே ,

"அங்கிள் ..! நீங்க எப்படி இங்க?" எனக் கேட்டான்.

"ஒன்னுமில்லை மித்ரா ..! எனக்கு யஷியை பார்க்கணும் போல இருந்துச்சி அதான் நேரா கிளம்பி வந்துட்டேன் " என மித்ரனைப் பார்த்து கண்ணசைத்தவர் யஷியை தன் மடியில் தாங்கிக் கொண்டார் .

சிறிதுநேரத்திலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல.. மித்ரன் அவளை தூக்கிச்சென்று அறையினுள் படுக்கையில் கிடத்திவிட்டு நகர்ந்தான்.

நகர்ந்தவனுக்கு ஏனோ மனம் காரணமே இல்லாமல் வலித்தது . இதுதான் யஷியை கடைசியாய் பார்ப்பது என்பதாய் ஓர் எண்ணம் தோன்ற அதிர்ந்தவன் , "இல்லை என் பாப்பாக்கு எதுவும் ஆகாது ..நான் எதுவும் ஆக விடமாட்டேன் " என சொல்லியபடி அவளின் நெற்றியில் முத்தம் இட்டவனின் உதட்டின் ஈரத்துடன் அவனின் கண்ணீர் ஈரமும் கலந்தது.

தன்னை சமாளித்துக்கொண்டு அறைவிட்டு வெளிவந்தவன் ...அங்கு முகம் கசங்கி அமர்ந்திருத்தவரிடம், " இப்போ சொல்லுங்க அங்கிள்...! எதுக்காக இப்படி பதறி அடிச்சி வந்திருக்கீங்க ??" .

சந்தேகமாய் கேட்டவனை பக்கத்திலிருந்த அவனின் அறைக்கு அழைத்து சென்று கதவை சாத்தியவர் , ஒரு நாட்குறிப்பை அவனின் கைகளில் கொடுத்தார் .

"இது என்ன அங்கிள் ??" என அவரிடம் கேட்டுக்கொண்டே திறந்தவன் , அதன் முன் பக்கத்தில் "இச்சாதாரி நாகங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிய குறிப்பு " என எழுதபட்டிருந்ததில் ஆர்வத்துடன் பக்கங்களை புரட்டினான்.

முழுதும் பார்த்து முடித்தவன் , "வாவ்...அங்கிள்...! என்னால நம்பவேமுடியலை இதுல இச்சாதாரிகள் பற்றிய அத்தனை குறிப்பும் கூடவே படங்கள் சிலதும் வரையப் பட்டிருக்கு . அண்ட் அங்கிள் ...! இது ஒரு வருஷத்துக்கு முன்னாடி டைரி அப்போ இது எல்லாம் ஒருவருஷத்துக்கு முன்னாடி தான் எழுதப்பட்டதா ?? ஆமா...! இது யாரோடது ? இது எப்படி உங்களுக்கு கிடைச்சது அங்கிள் ?? "

-என்று தன் நீண்ட நாட்களின் தேடலுக்கான பதில் அனைத்தும் தற்பொழுது தன் கைகளிலே இருக்க ...அதை நம்பமுடியாமல் பல கேள்விகளை கேட்டவனை நிலைகுலைய செய்தது அவர் சொன்ன ஒற்றை வார்த்தை பதில்.

அவ்வீட்டின் மற்றொரு அறையில் தூக்கமா , மயக்கமா என அறியா ஒருவித மாயலோகத்தில் இருந்த யஷியின் மூளை ..விதவிதமான காட்சிகளை அவள் முன் காட்டியது .

ஆனால் அதில் எதுவுமே தெளிவாய் இல்லாமல் புகைபோல் காட்சிகள் மங்கலாய் தோன்றி, தோன்றிய வேகத்திலே மறைய அவளின் மூடிய கண்களுக்குள் கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது .

இறுதியில் அந்த பாதி எரிந்த வீடுமட்டும் தெளிவாய் தோன்ற அங்கு ஓர் உருவம் மங்கலாய் தெரிந்தது .இவளை பார்த்தபின் அது அவ்வீட்டின் பின்புறமாய் சென்று மறைய , அதை தொடர்ந்து சென்றவள் அவ்வுருவம் மறைந்ததில் அங்கே தடுமாறி நின்றாள் .

பக்கவாட்டில் சத்தம் கேட்க திரும்பியவளின் முன் ஓர் அறை இருந்தது . அவள் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே அவ்வறையினுள் அவ்வுருவம் தெரிய அது இவளை நோக்கி கைகளை நீட்டியதில், இவளும் இதழில் சிரிப்புடனே நீட்டிய அக்கைகளுக்குள் தஞ்சம் அடைந்தாள் .

அவளை அணைத்த அவ்வுருவத்தின் குளிர்ச்சியை நிஜத்திலும் உணர்ந்த யஷி , நடுங்கியபடி எழுந்தமர்ந்தாள்.

முதலில் தன் வீட்டில் தான் இருக்கிறோமா என்பதையே நம்ப முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்த யஷிக்கு , அவள் கனவில் உணர்ந்த அவ்வணைப்பு நிஜத்திலும் வேண்டும் போல் தோன்றியது .

அவளின் நினைவில் அந்த எரிந்தவீடும் அதன் பின்புற அறையும் தோன்ற, இப்பொழுதே அங்கு செல்ல வேண்டுமென வேகமாய் எழுந்தவளை தடுத்தது கட்டிலின் முனையில் மாட்டிக்கொண்ட அவளின் நீண்ட பாவாடையின் முனை.

அதை விடுவித்து அறையை விட்டு வெளியே போனவளின் முன் விழுந்தது அவளும் மித்ரனும் இணைந்திருந்த புகைப்படம் .

காற்று அதிகமாய் வீசுவதை பார்த்தவள் அதில் விழுந்திருக்கும் என எண்ணியபடியே அதை எடுத்துவைக்கப்போனவளின் கண்களில் பட்டது அப்புகைப்படத்தில் தன்னை மடிதாங்கியபடி இருந்த மித்ரனின் புன்னகை முகம் .

ஓர் நிமிடம் ..."நாம் இல்லாமல் போனால் இவனின் இந்த சிரிப்பு என்ன ஆகும் ??"என தோன்ற,
அக்கேள்வியில் "என்ன நினைப்பு இது ??" என்றபடி தலையை உலுக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் .

அறையின் கதவின் அருகில் சென்றவள் மீண்டுமாய் திரும்பி வந்து அந்த புகைப்படத்தை பார்த்தபடி சிறிது நேரம் நின்றவள் , அதிலிருந்த மித்ரனுக்கு ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு திரும்பியும் பாராமல் அவ்வறையை மட்டுமின்றி அவ்வீட்டை விட்டும் வெளியேறினாள்.

அவளை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்ற காற்றில் கலந்திருந்த அவ்வுருவம் அதை செய்யமுடியாததில் வேகமாய் சென்று மித்ரனின் மேல் படர்ந்தது .

திடீரென தன்னை சுழன்றடித்த காற்றை கூட உணரமுடியாமல் யஷியின் தந்தை கூறிய பதிலில் அதிர்ந்து போய் நின்றிருந்தான் மித்ரன்.

மீண்டும்மீண்டுமாய் அவனை சுற்றி சுழன்ற காற்று அவன் தன்னுணர்வ்வுக்கு வராததில் அவ்விடத்தை விட்டு நீங்கி யஷியை தேடிச் சென்றது.

மணி ஆறை கடந்திருக்க இருட்ட தொடங்கி இருந்ததில் அந்த எரிந்த வீடு இருக்கும் இடம் தெரியாமல் சிலரிடம் விசாரித்து சென்றுகொண்டிருந்த யஷிக்கு உள்ளுக்குள் பயம் அதிகரித்தது.

மூன்றுமாதம் தொடர்ந்து ஒரு வீடு பூட்டப்பட்டிருந்தாலே அதை பேய் வீடு என முத்திரை குத்திவிடும் மக்கள் ....தொடர்ந்து ஒருவருடமாய் எவரும் அங்குசெல்லாமல் பாதி எரிந்திருக்கும் வீடை பேய்களின் சொர்கமாய் சித்தரித்து வைத்திருக்க ... தற்பொழுது அங்கு இரண்டு பிணங்கள் கொடூரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இன்னும் அவர்களின் கதை புனையும் திறனுக்கு தீனியிட்டிருந்தது

ஆக வரும் வழியில் அவ்வீட்டை பற்றி கற்பனை கலந்து பலர் சொல்லிய தகவல்கள் அவளை மிரள செய்திருக்க, அதிலும் வீட்டின் பின்புற அறையை பற்றி சொன்ன தகவல்கள் அவளின் வயிற்றில் புளியை கரைத்திருந்த்து.

ஒருவழியாய் அவ்வீட்டின் முன் வந்திருந்தவளை அவ்விருளில் அகோரமாய் தோன்றிய பாதி எரிந்திருந்த வீடு அவளின் நெஞ்சத்தை தடதடக்க செய்தது.

இச்சூழ்நிலையில் அவள் மனம் தானாய் மித்ரனை தேடி அவனின் நெஞ்சில் அடைக்கலமாக துடித்தது.

அதில் வீட்டிற்க்கு செல்ல துடித்த கால்களை தடுத்தது அவளின் நினைவில் மங்கலாய் அவ்வறையில் தோன்றிய உருவம் .

அவ்வுருவத்திடம் செல்ல வேண்டுமென அவளின் மனம் முரசொலித்தாலும் , இப்பொழுது இதனுள் சென்றால் இனி மித்ரனை என்றும் காணவே முடியாமல் போகும் என தோன்ற இரண்டுமனமாய் அல்லாடினாள்.

சற்று தள்ளி இவளின் மனப்போராட்டத்தை கண்ட காற்றுடன் கலந்திருந்த உருவம், தன்னால் இனி எதுவும் செய்யமுடியாதென உணர்ந்து அவளின் தவிப்பை போக்கமுடியாததில் தானும் தவித்தது .

இனி நேரப்போவது அனைத்தையும் அறிந்திருந்த அவ்வுருவத்தின் கண்களில் கண்ணீர் பெருகெடுக்க அது இமைத்தாண்டும் முன்னே காற்றில் கரைந்துக் கொண்டிருந்தது .

சிறிது நேரத்தில் ஓர் முடிவுடன் அவ்வீட்டினுள் நுழைந்த யஷி , எவ்வறைக்கு கதவே இல்லையென மக்கள் கதை புனைந்திருந்தனரோ அவ்வறையினுள்ளே நுழைந்திருந்தாள்.

பார்க்கும் பொழுதே பலமாதங்களாய் உபயோகத்தில் இல்லாத அறை எனத் தெரிந்தது.

அதனுள் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டே ஒருவித திகிலை அவ்வறை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

அந்த அறையினுள் நுழைந்த அவளின் மனம் பயத்தில் படபடத்தாலும்,தனக்கு வேண்டியது அங்குதான் உள்ளது என்ற உள்ளுணர்வின் உந்துதலில் கைகளால் துலாவியபடியே அவ்வறையினுள் நுழைந்தாள் .

அவளை வரவேற்பதுபோல் மெல்லியதாய் தழுவி சென்றது எங்கிருந்தோ வந்த லேசான காற்று .

அது ஒரு நீண்ட, அகலம் குறைவான அறை... ஒருபுறம் முழுக்க ஆளுயரக் கண்ணாடிகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்க அதன் முன் ஒரு தடுப்புச்சுவர் இருந்தது.

இவை எதுவும் அவ்வறையின் இருட்டில் அவளின் கண்களுக்கு புலப்படாமல் போக, கைகளை அங்கும் இங்கும் துழாவியபடியே சென்றாள்.

தான் தேடி வந்தது தென்படாமல் போக இருட்டில் பாதை தெரியாததில் ,சுவற்றில் ஒவ்வொரு இடமாய் தடவிபார்க்க ஆரம்பித்து அவ்வறையின் பாதிதூரத்திற்கு வந்தபிறகும் அவளின் கண்கள் இருட்டில் பழகாமல் இருக்க உள்ளுக்குள் பயம் அதிகரித்ததால் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை காதோரமாய் ஓடிமறைந்தது .

தான் துடைப்பதற்கு முன்பே வியர்வை மறைந்ததில் ஆச்சர்யம் கொண்டு, சுற்றும்முற்றும் பார்க்க மிகவும் மெல்லியதாய் மட்டுமே அவ்வறையினுள் காற்று ஆக்கிரமித்திருந்தது .

"இங்க காற்றே இருக்காதுன்னு சொல்லிருந்தாங்களே" என யோசித்தவள் மூளையில் தான் வந்த வழி பளிச்சிட அவ்வழியில் காற்றுவருவதாய் நினைத்துகொண்டாள்.

அவ்வறையினுள் காற்றே நுழையமுடியாது எனும்பொழுது தனக்கு எவ்வாறு வழிகிடைத்தது என்பதை யோசிக்க மறந்துதான் போனது அவளின் மூளை . ஒருவேளை எவரேனும் அதை மறக்கச்செய்தனரோ ??

என்ன செய்வது என அவள் குழம்ப இதற்க்குள் கண்கள் பழகியிருந்ததோ ? சற்றே அவ்வறையை பார்க்க முடிய, எதிரே அவ்வறையின் ஓரம் ஓர் இடம் மட்டும் இன்னும் கும்மிருட்டுக்குள் இருந்தது.

தடதடக்கும் நெஞ்சின் மேல் கை வைத்து மெதுமெதுவாய் அருகில் சென்றாள்.

அருகே செல்லச்செல்ல, அவ்வறையின் நீளம் அவளை உள்வாங்க, தனியொரு இடத்தில் அதிலும் இருட்டில் இருக்கும் வேளையில் இயல்பாய் மனதை தன்வசம் இழுக்கும் அச்சம் என்னும் கொடிய நோய் அவளையும் மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொண்டது.

அவ்வளவுதான் இன்னும் இரண்டு அடி வைத்தால் போதும் அந்த நீண்ட அறையின் மூலையில் அவள் இருப்பாள் .

நெற்றியில் வழியும் வியர்வையை இம்முறை வேகமாய் கரம் கொண்டு துடைத்தாலும், அருவி நீர் விடாமல் கொட்டிவது போல் வழிந்துகொண்டே இருந்தது .

அம்மூலையின் அருகில் சென்ற பின்னும் யஷிக்கு எதுவும் தெரியாமல் போக, மெதுவாய்... மெதுமெதுவாய் தன் வலது கையை தூக்கினாள் அந்த மூலையில் துலாவ.

அந்த அழகான விரல்களோ காற்றில் படபடக்கும் காகிதமாய் தடதடத்தது. தடதடக்கும் விரல்களை ஒருமுறை இறுக்க மூடியவள் ஆழமூச்செடுத்தாள் .

சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்.... மிக வேகமாய் கையை கொண்டு சுவற்றில் துளாவபோக , இத்தனை நேரம் மிக லேசாய் வருடி சென்ற காற்றுகூட விடுப்பு எடுத்துச் சென்றது போல் மூச்சு விட முடியாமல் திணறினாள்.

ஆனால் அடுத்த நொடியே பலமான சத்தத்துடன் காற்று அவளை புயலை போல் மோதி சென்றதில் தடுமாறியவள் கைகளை அச்சுவற்றில் ஊன்ற , அம்மூலைச் சுவரும் அவளை விழாமல் தாங்கி நின்றது .

அந்த மூலையில் எவரும் இல்லாததை உணர்ந்தவள் திடிரென வீசிய காற்றுக்கு காரணம் என்ன ? என அறிய திரும்பினாள்.

தான் நுழைந்த வழி மிக தொலைவில் தெரிய ,மிக மிக நீண்ட அவ்வறையின் இந்த கடைசி மூலையில் இருப்பவளின் கண்களோ பயத்தில் சிறிதாய் கலங்க அரம்பித்திருந்தது .

ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டாலும் இப்பொழுது மீண்டுமாய் அவ்வறையை கடக்க வேண்டும் என்றெண்ணும் போழுதே இதயம் வெடித்து விடுமோ என்பது போல் வேகம் கூடியது .இரு கைகளையும் நெஞ்சின் மேல்வைத்து இறுக்கிக்கொண்டவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க , அவளின் கவனம் முழுவதும் முன்னே இருந்ததில் பின்புறம் நடந்ததை உணராமல்போனாள்.

அவள் தடுமாறி விழுந்தநொடி , அக்கும்மிருட்டு அவளை தன்னுள் புதைத்து பின் , அவள் திரும்பிய நொடி மறைந்து அவ்விடம் மற்ற இடங்களை போலவே சாதாரணமாய் மாறியிருந்தது .

அவள் சில அடிகள் எடுத்துவைத்திருக்க ,அவளை தொடர்ந்து அக்கும்மிருட்டும் நகர்ந்து வந்தது.

அப்பொழுது ," இவ்வளவு சீக்கிரம் ஏன்டா வந்த ??" என ஒருகுரல் வருத்தத்துடன் அவளின் காதுகருகில் ஆழ்ந்து ஒலிக்க ...

பயத்துடன் சென்று கொண்டிருந்தவள் ,திடுமென கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட நெஞ்சின் மேல் இருந்த கைகள் நழுவி தட்டென்று எதன் மேலோ மோதியது.

இப்பொழுது அக்குரலின் பேச்சு சட்டென்று நிற்க காற்றும் உடன் நின்றிருந்தது .

அக்குரல் திடுமென கேட்டதில் வந்த பயத்தை விட ,
தான் விழுந்தநொடியே சட்டென்று நின்று அமைதியானதுதான் பயத்தை அதிகமாக்கியது.

தன் கை எதன் மேல் மோதியது என குனிந்து பார்ததவளுக்கு , அது அவளின் இடுப்பளவு உயரத்தில் இருக்கும் சுவர் என தெரிந்தது.

அச்சுவரை பற்றிக் கொண்டு நடப்பது சற்று இலகுவாயிருக்கும் என்ற எண்ணம் யஷிக்கு தோன்ற... அந்த சுவற்றில் ஒரு கையால் பிடித்து தடவிகொண்டே ஒவ்வொரு அடியாய் கடந்தாள்.

அறையை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தவளை பின்பற்றி வந்துகொண்டிருந்த அக்கும்மிருட்டும் நொடியில் மறைந்தது .

அவ்வளவு நேரம் இயல்பாய் இருந்த அக் குட்டி சுவற்றில் இன்னும் இரண்டடியில் , இவள் கை தழுவ போகும் இடத்தில் மெதுமெதுவாக அந்த பக்கமிருந்து ஒரு கை அச்சுவரை தழுவியது .

அவளின் கை அந்த கையின் அருகில் வந்த நொடி வேகமாய் அதனை இழுத்து தன் கைக்குள் அடக்கிக்கொண்டது. .

திடுமென ஏதோ ஒன்று இழுத்ததில் பயந்து போனவள் எதிரில் தெரிந்ததை கண்டு "ஆஆஆஆ" என்றலறியவாறு பின்புறமாய் சரிந்தாள்.

அவள் சரிந்ததில் அவளை இழுத்த அக்கரமே அவளை தாங்கிப்பிடித்தது .

கண்களை மூடுமுன் தன்னை உடலில்லாமல் ஒரே ஒரு கரம் மட்டும் தாங்குவதை கண்டவள் கண் திறக்க, எதிரிலிருந்த கண்ணாடிகளில் விழி பதிந்து அங்கிருந்ததை பார்த்ததில் மீண்டும் மயக்கமானாள்.

தொடர்ச்சியாய் அடுக்கப்பட்டிருந்த அக்கண்ணாடிகள் அனைத்திலும் விகாராமாய் தெரிந்தது அவ்வுருவம் .

ஒன்றில் உடலில் எலும்புகள் எதுவுமில்லாமல் தோல்மட்டுமாய் ,

ஒன்றில் எலும்புகள் மட்டுமாய்,

ஒன்றில் பாதி உடலுடன் ,

ஒன்றில் ரத்தத்தில் குளித்தவுடலுடன் ,

என ஒவ்வொன்றிலும் ஒருவிதமாய் இருந்த அவ்வுருவங்களின் பிம்பங்கள் எதிலும் வலக்கரம் காணாமல் இருக்க ,

அக்கரமோ அவளை அங்கு தனியாய் சுமந்திருந்தது .

"எப்பிறவியிலும் ... எச்சூழ்நிலையிலும்....எவ்வேளையிலும் ...எங்கிருப்பீனும் ...நீ தடுமாறும் வேளையில் உன்னை தாங்கிக்கொள்ள உனது சந்திராதித்யன் வருவானடி " என ஓர் குரல் அவளை சுற்றி மென்மையாய்
ஒலிக்க ,

மயக்கத்திலிருந்தவளின் ஆழ்மனம் அக்குரலை சரியாய் கண்டுகொண்டதில் .. மயக்கத்திலும் கண்கள் சிவக்க , "குழியா ...!" என அழைத்தவளின் இதழ்கள் சிரிப்பில் விரிந்திருந்தது .

-காதலாகும்.
 
Nasreen

Well-Known Member
Nic
Ni sceQUOTE="Thoshi, post: 592480, member: 7353"]சோர்ந்துபோகும் நேரம்தனில்
தோள் சாய்ப்பவனின் சிறு பிரிவே இருவருக்கும் உயிர்போகும் வலிகொடுக்க ...!!!
இனி அவளின் நினைவு மட்டுமே அவனின் வாழ்வாயின் அது அவனை
உணர்வற்ற ஜடமாய் மாற்றிவிடுமோ
...
Thrilling

-காதலாகும்.[/QUOTE]
Nice thrilling story
Reading after a very long time
 
Reading after a very long time[/QUOTE]
Thanks sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top