முரண்பாடே காதலாய் 11

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
"நம்பிக்கை "
பெண்களின் வாழ்வை வழிநடத்தும் ஐந்தெழுத்து உயிர்ப்பான மந்திரம் அது....!!!


அத்தியாயம் 11:


"என்னாச்சி யஷிமா?? கார்ல ஏறுற வரைக்கும் கேள்வியா கேட்டுட்டு இருந்த ...இப்போ எதுவும் கேக்காம, பேசாம அமைதியா வர?? " என தன் அருகில் எதையோ தீவிரமாய் யோசித்தபடி வந்தவளிடம் கேட்டான் மித்ரன்.

"அது அந்த 'டாமினி' " என்று ஆரம்பித்து பின் மாற்றி ," அந்த சூர்யா பத்தி சொல்லுடா . போற வழில சொல்றன்னு சொன்னல ..எப்போ சொல்லலாம்னு இருக்க?? " என அவனின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டு வைத்தாள்.

"நீ எதையோ என்கிட்ட மறைக்குற மாதிரி இருக்குடா பாப்பா .ம்ம்ம்..! சரி நீ எதுவும் இப்போ சொல்ல வேணாம், நான் சூர்யா பத்தி தெரிஞ்சிகிட்ட விஷயங்கள சொல்றேன்" என்றவன் முன்பு விட்டதிலிருந்து சொல்ல தொடங்கினான்.


அன்று :

ஹரிஷின் முன் தான் திரட்டிய தகவல் அடங்கிய கோப்பை வைத்த சூர்யா , " நான் சொல்றத கவனமா கேளு ஹரிஷ். இந்த பவித்ரா மாதிரி இந்த ஊர்ல இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட பொண்ணுங்க இறந்துருக்காங்க .இதுல இந்த பத்து பேருக்குமே பதினஞ்சு வயசுக்கு கீழே தான் . அண்ட் இந்த ஒரு பாயிண்ட்ல தான் இத பத்தி விசாரிக்கணும்னு முடிவுபண்ணி நம்மளோட மேலாளர் என்னை அந்த ஊருக்கு அனுப்பிவைச்சாரு" என ஆரம்பப்புள்ளியை சொன்னவள் நிமிர்ந்து ஹரிஷை பார்க்க ,

"தெரியும் சூர்யா ...! நான் உன்னோட அந்த ஆர்டிகிள் பார்த்தேன். அந்த ஊர பத்தியும், இதுவரைக்கும் அந்த ஊர்ல ஏற்பட்ட இறப்புகள் , அதுல பதினஞ்சு வயசுக்கு கீழே இருக்க பொண்ணுங்க தொடர்ந்து இறந்ததுனும் ...அதுக்கு காரணம் யாரா இருக்கும்னு நீ தெளிவா எழுதிருந்தியே " என்றவன் தொடர்ந்து,

"இந்த பொண்ணுங்களோட சாவுக்கு காரணம் அந்த ஊரோட பண்ணையார் வீட்டு பசங்கனும் , அவங்க தான் இத்தனை பேரையும் மிரட்டி தங்களோட தேவையை தீர்த்துட்டு கொன்னுட்டதாவும் சொல்லி நீ ஆதாரத்தோட நிரூபிச்சி இருந்தாலும் , பண்ணையாரோட அரசியல் செல்வாக்குல இப்போ எல்லாம் அடிபட்டுபோச்சே . உன்ன இத பத்தி எழுதுறதுக்காக அனுப்புன மேலாளரே இப்போ இத விட்டுட சொல்லிட்டாரே"

-என்றவனின் முகம் சோகத்தை காட்டியது. அவள் இந்த கேசை போலீசுக்காரர்களை விட எவ்வளவு தீவிரமாய் ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்தாள் என்று உடனிருந்து அவனும் பார்த்திருந்தானே.

"அவர் விட்டுட சொன்னா நான் விட்டுடமுடியுமா . இத என்னால சும்மா விடமுடியாது ஹரிஷ். ஆம்பளைங்க அவங்க ஆசைப்படி வாழ மட்டும் தான் இந்த உலகம் இருக்கா ? பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக நாங்க எல்லாரும் மனசும் , உடலும் ரணப்பட்டு வாழணுமா ?? அதுவும் அந்த பொண்ணுங்களாம் இன்னும் உலகம்னா என்னனு முழுசா கூட உணராத சின்ன பறவை ஹரிஷ் . இறக்கை வளர்ந்த பிறகு வெட்டுறதே தப்புண்ணும் போது இறக்க முளைக்கும் போதே அந்த பறவையை அடிச்சி ருசிக்கிற இவனுனங்களாம் என்ன ஜென்மம் ஹரிஷ் .இதுல இந்த கேடு கெட்டவனுங்கள காப்பாத்த ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு வரானுங்க . அப்படி வரவனுங்களாம் மட்டும் ஒழுக்கமானவங்களாவா இருப்பானுங்க ?? தனக்கும் பொண்ணு இருக்கு வீட்ல மனைவி இருக்கா , தன்னை பெத்து பாதுகாத்து வளர்த்ததும் பொண்ணு தானனு யோசிக்கிற எந்த ஆம்பளையும் இந்த மாறி காரியம் பண்றவங்களுக்கு உதவமாட்டாங்க . ஆனாலும் இவனுங்களுக்கு உதவி கிடைக்குதுனா இந்த உலகத்துல எந்த ஆம்பளை தான் நல்லவன்"

-கோபத்தில் உடல் வியர்த்து ,முகம் சிவந்து வேகமூச்சுகளை விட்டபடி பெண்ணியம் என வரைக்குள் அடங்காத ... பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பிற்க்காக போராடி இயலாமையில் பெண்சிங்கமாய் கர்ஜிக்கும் சூர்யாவை கண்ட ஹரிஷ், தானாய் நாற்காலியிலிருந்து எழுந்து ஓர் அடி பின் வைத்திருந்தான் .

அதில் நிதானத்திற்கு வந்த சூர்யா, சட்டென்று தனது நாற்காலியில் அமர்ந்து குனிந்தபடி முன் நெற்றியில் இருகைகளையும் கோர்த்தபடி அமர்ந்து தன் உணர்வை கட்டுப்படுத்த முயன்றாள்.

அவளை கவனித்துக்கொண்டிருந்த ஹரிஷ் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி , "ரிலாக்ஸ் சூர்யா ..! இந்தா முதல்ல கொஞ்சம் தண்ணி குடி " என்றான்.

அவனின் மென்மையான பேச்சில் நிமிர்ந்து அதை வாங்கி அருந்தியவள் அவன் முகத்தை பார்க்க , அவனோ ஆறுதலான புன்னைகையை பதிலளித்தான் .

அவளின் அமைதியில் அவன் , " ஓகே சூர்யா நம்ப இத பத்தி அப்றம் பேசலாம் . எனக்கு புரிது இது ரொம்பவே முக்கியமான பிரச்சனை தான் ...ஆனா, எனக்கு எல்லாத்தையும் விட நீ முக்கியம் . யூ ஆர் மை பிரின்ட் ...சோ இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு " என்றவன் அங்கிருந்து நகர்ந்தான் .

இத்தனை நேரம் ஆவேசமாய் பேசிய பெண்சிங்கம் இப்பொழுது சிறுபெண்ணாய் தனது வலியை பகிர ஒருவரின் தோள் தேட, தற்பொழுது அது கிடைத்ததில் சந்தோஷமாய் அவனுக்கு விடை கொடுத்தவள் ,

"ஈவினிங் நம்ப எடிட்டிங் ரூம்க்கு வரமுடியுமா ஹரிஷ்..எனக்கு இந்த விஷயத்துல சில உதவி தேவைப்படுது .உன்னால எனக்கு உதவமுடியுமா" என தன் மனவுணர்வுகளை அடக்கி எப்பவும் மற்றவர்களை தள்ளி நிறுத்தும் அதே பார்வையுடன் கேட்டாள்.

நொடிநேரத்தில் அவளின் முகஉணர்வை அவள் மாற்றியிருந்தாலும் அதற்குள் அதை கவனித்திருந்ததில் , "இட்ஸ் மை பிளஷர்" என சிரிப்புடன் விடைபெற்றான் அவன்.

மணி ஏழை கடந்திருக்க அந்த பத்திரிகை அலுவகத்தில் ஓரிருவரே இருந்தனர். அப்பொழுதுதான் தனது வேலையை முடித்துக் கொண்டு அலுவகத்திற்க்குள் நுழைந்த ஹரிஷ் ,காலை சூர்யா சொல்லியது போல் எடிட்டிங் ரூமிற்க்கு சென்றான்.

பொதுவாய் அந்த அறையை பயன்படுத்துவது எடிட்டர் ஆன அவர்களின் மேலாளர் தான் . அவருக்கடுத்து சூர்யா தான் அதிகமாய் அவ்வறைக்கு செல்வாள் .

முதல்முறையாய் உள்ளே சென்றவனை யாருமில்லா அறையே வரவேற்றது. சூர்யா எங்கே என்ற யோசனையுடன் திரும்பி செல்ல நினைத்தவனை தடுத்தது அவ்வறையினிலே இருந்த மற்றோரு கதவின் அடியிலிருந்து வந்த வெளிச்சம் .

கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து இயல்பாய் புன்னகைத்த சூர்யா , "வா ஹரிஷ் " என்றாள்.

ஆனால் அவ்வறையை கண்ட ஹரிஷால் தான் இயல்பாய் இருக்க முடியாமல் போனது.

அவ்வறையின் சுவர் முழுக்க ஏதேதோ காககித குறிப்புக்கள் , சில புகைப்படங்கல் இறந்த பெண்களின் புகைப்படம் , குற்றவாளிகளாய் சூர்யா கருதும் அந்த பண்ணையாரின் மகன் மற்றும் அவனின் நண்பன் புகைப்படம் , பண்ணைவீட்டின் புகைப்படம் என ஒரு பக்க சுவர் முழுதும் அடங்கப்பட்டிருந்தது.

அவளின் இந்த கேசுக்கான முயற்சிகளை அறிந்திருந்த ஹரிஷ் இதை எதிர்பார்த்தே வந்திருக்க , அவனை அதிர செய்தது சுவரின் மறுபாதி பக்கத்தை தன்னகத்தே படுத்தியிருந்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் .


"பெய்ட்" (paid) என்ற வார்த்தை பெரிதாய் நடுவில் கருப்பு எழுத்தில் இருக்க , அதில் 'ஐ' எனும் எழுத்தை வட்டமிட்டு அதன் மேல் 'எல்' என எழுந்திருந்தது .


அதை சுற்றி பல செய்தி துணுக்குகள் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்க .... ஒவ்வொரு துணுக்கிற்கு அருகிலும் ஒரு பெண்ணின் படம் இருந்தது .

இவற்றை பார்த்தே அதிர்ந்து நின்றிருந்தவனை கலைத்தது சூர்யாவின் அழைப்பு .

"என்ன பாக்குற ஹரிஷ்..! இதுலாம் என்னனா ?? நீ அந்த ஆர்டிகிள் படிச்சனு சொல்லிருந்தல....அதுல நான் கடைசியா எழுதிருந்தேனே 'பெய்ட்' இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னனு தெரிஞ்சிக்க காத்திருங்கனு கவனிச்சியா ??" எனக் கேட்டாள்.

"ஆமாம்" என்பது போல் தலையசைத்தவன் , " அது நாளைக்கு நம்மளோட பேப்பர் ஓட முதல் பக்கத்துல விளம்பரமா போட சொல்லி சொல்லிருந்தாங்க ", என கூடுதல் தகவலையும் கூறினான் .

அவள் சிறிது நேரம் அமைதியா இருக்க ...தன்னை சமாளித்துக்கொண்டு ஹரிஷ் , " ஏன் சூர்யா...! இதுக்கான அர்த்தம் என்னனு கண்டுபிடிச்சிட்டியா ?? வேற என்னலாம் இந்த கேஸ்ல கண்டுபிடிச்சிருக்க ??"

அவனின் கேள்விக்கு பதிலாய் இந்த பக்கம் ஒட்டப்பட்டிருந்த பண்ணையாரின் மகன் மற்றும் அவனின் நண்பனின் புகைப்படத்தை எடுத்தவள் 'பெய்ட்' என்னும் வார்த்தையின் அருகில் ஓட்டினாள்.


அதை ஹரிஷ் கண்களை இடுக்கி யோசனையாய் பார்க்க, " நான் உன்கிட்ட காலைல ரொம்ப எமோஷனலா நடந்துக்கிட்டேன் ஹரிஷ் சாரி ...,! " என்றவளை ,அவன் குறுக்கிட அதை கண்டுகொள்ளாத சூர்யா,

"ஆனா நான் சொன்னது எதுவுமே தப்பில்லை ஹரிஷ் . நீ இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு . இந்த பத்து பொண்ணுங்க இறந்ததை தவிர இந்த ஊர்ல இருக்க பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் உடலால மட்டுமில்லாம மனசாலையும் கற்பழிக்க பட்டிருக்காங்க ஹரிஷ். இதுல பெரிய கொடுமை என்னனா ஒவ்வொரு பொண்ணோட நிலைமைக்கும் காரணம் மத்த பொண்ணோட வீட்ல இருக்கவனா தான் இருப்பான் " என்றவளின் உதடு இடதுபுறம் வளைய ,

"மிருகம் கூட தன்னோட குடும்பத்தை பாதுகாக்க தான் நினைக்கும் ஆனா இவனுங்க ஒரு கூட்டத்தை உருவாக்கி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு தங்களோட தோளையே அறுத்து திங்குற மனிஷமிருகங்க ஹரிஷ் " என்றபடி அந்த 'பெய்ட் ' என்ற வார்த்தை எழுதிருந்த அட்டையை பிய்த்து அவனின் முன்போட்டாள் சூர்யா.

பொண்ணுங்க எல்லோருமே தன்னோட புருஷன் , புள்ளைங்க எல்லாம் ராமரை மாதிரின்னு நினைச்சிட்டிருக்காங்க அப்போ விபச்சாரிக்கிட்ட போறதுலாம் யாருன்னுலாம் நான் கேட்கமாட்டேன் . ஏன்னா இந்த மாதிரி கேக்க கூடிய காலம் எப்பவோ மாறிடிச்சி .முன்னாடிலாம் புருஷன பத்தியும் புள்ளைங்க பத்தியும் தெரியாம பொண்ணுங்க ஏமாந்தாங்கனா ...இப்போ எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணமுடியாம இந்த சமூகத்துக்கும், வாரிசுகளோட எதிர்காலத்துக்கும் அவங்கள சகிச்சிக்கிட்டு வாழுறாங்க.

இதுதான்... இந்த பொம்பளைங்களால என்ன பண்ணமுடியும் நம்பள சகிச்சிக்கிட்டு தான் இருக்கணும்ன்ற திமிர் குடுக்குற தைரியத்துல தான் அத்தனை ஆம்பளைங்களும் தன்னோட பொண்டாட்டிய மட்டுமில்லாம தங்களை தேவைய தீர்க்க அத்தனை பொண்ணுங்களையும் அடிமையாக்கி ஆளப் பாக்குறாங்க .

ஹரிஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருக்க , அவளே இதுவரை கண்டுப்பிடித்தது அனைத்தையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள் .

"உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும் . ஹரிஷ்..! நான் அந்த ஊருக்கு போனப்போ முதல் முதலா என்னை யோசிக்க வச்சது இந்த வார்த்தை தான் . பார்க்குற அம்பதுல முப்பது வண்டில இந்த வார்த்தை இருந்துச்சி...அது ஏன்னு தெரிஞ்சிக்கணும்னு என்னோட உள்ளுணர்வு சொல்ல விசாரிக்க ஆரம்பிச்சேன். பாதிபேர் எதுவும் சொல்லலைனாலும் சிலபேர் அதுவும் இளைஞர்கள் தங்களோட நண்பர்கள் சொல்லி இத ஓட்ட ஆரம்பிச்சதாகவும் , இது நண்பர்களுக்குள்ளான விளையாட்டு எனவும் மாற்றி மாற்றி சொன்னாங்க" என சொல்லிக்கொண்டிருந்தவள் இடையில் ,

"அவங்களே அவங்களோட குடும்பத்தோட சந்தோஷத்தை ஒட்டுமொத்தமா துடைக்குறதுக்கு குழி தோண்டுறதுதான் அந்த விளையாட்டு . அது என்ன விளையாட்டுனு உனக்கு புரிதா ஹரிஷ் " என கேட்டாள்.

அவனோ அவள் சொல்லும் அனைத்தையும் மிகவும் கவனத்துடன் கேட்டபடி "நீயே சொல்"என்பது போல் பார்த்தான் .


"அவங்க தங்களோட வீட்டு பெண்களை பகடையா ஆக்கி ஆடுற விளையாட்டு ஹரிஷ் .அதுல தோத்தவன் ஜெயிச்சவன் ரெண்டுபேரோட வீட்டு பெண்களுமே ஆட்டத்துல வெட்டப்படுறாங்க அதுவும் அவங்களுக்கே தெரியாமல் ..."

இவன் பேர் சூரஜ் , பண்ணையாரோட பையன் ....இவன் ஆதி ஒரு தொழிலதிபரோட மகன் , இவனுங்க ரெண்டு பேர் தான் இந்த ஊர்ல நடக்குற இத்தனை அநியாயத்துக்கு காரணம் ஹரிஷ் " என இருவரின் புகைப்படத்தை காட்டியவள் தொடர்ந்து,

" இவனுங்க தான் இந்த வார்த்தையை உருவாக்கி தங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு அவங்களோட திட்டத்தை சொல்லி முகநூல்ல ஒரு பக்கத்தை உருவாக்கிருகாங்க.

இவனுங்க மோசமானவனுங்க தான் ஆனா அது முகநூல்ல தெரியப்போறதில்லையே. ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு ஊர்ல இருக்க ஒவ்வொருத்தரையும் அந்த பக்கத்துல இணைய வச்சவனுங்க , ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருததர்னு தங்களோட நட்பு வட்டத்தை வச்சி அவங்க கூட பழகி எந்தவித சந்தேகமும் வராத அளவுக்கு அவங்களோட மொத்த குடும்ப விவரத்தையும் சேகரிச்சிர்க்காங்க".

"என்ன சொல்ற சூர்யா ?? இந்த அளவுக்கு எதுக்கு பண்ணனும்... அதும் ஒரு ஊர்ல இருக்க அத்தனை பேரோட விவரங்கள் எதுக்கு ?? இது தான் நீ சொன்ன விளையாட்டா " என எதுவும் அறியா அப்பாவியாாய் கேட்டுவைத்தான் .

"விளையாட்டை இதுக்கு அப்றம் தான் ஆரம்பிக்கவே செஞ்சிருக்காங்க ஹரிஷ் " ....

"இதுல பொண்ணுங்க இருக்க வீடாவும், இளம் தம்பதிகள் இருக்க வீடாகவும் பிரிச்சவன் அந்த வீட்ல இருக்கவங்கள அவங்களோட பேசுற தன்னோட ஆளுங்களை வச்சி இந்த வார்த்தையை அவங்க வண்டில ஒட்டவச்சானுங்க. அடுத்து என்ன யார்யாருக்கு எந்த எந்த வீடுன்னு சொல்லி அந்த வீட்டு ஆண்கள் கிட்ட இருந்தே அந்த பொண்ணுங்களோட போன்நம்பர்அ எடுத்து அவங்களை தன்னோட வலைல விழவைச்சி தங்களோட ஆட்டத்தை ஆராம்பிச்சிட்டானுங்க."


பேசிக் கொண்டிருந்தவள் ஒரு பென்ட்ரைவை எடுத்து அங்கிருந்த தனது லேப்டாபில் பொறுத்த , அதிலிருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது .


"அக்கா ...அக்கா...! நீங்க தான் எங்களை காப்பாத்தணும்....தயவு செஞ்சி எங்களை இந்த நரகத்துல இருந்து காப்பாத்துங்ககா.யாருனே சரியா தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அவங்க பேச்சிலே மயங்கி காதலிச்சது தப்புதான் கா .. அதுக்காக தான் தினம் தினம் நரகத்தை அனுபவிக்கிரதையும் பொறுத்துகிட்டேன் . கொஞ்சம் கூட காதல் இல்லாம பொய்யா நடிச்சு ஏமாத்தி உடலை சூறையாடறத விட கொடுமையான நரகம் வேற என்ன ?? யாருனே தெரியாதவன் கடத்தி கற்பழிக்க படுறவளாச்சி உடலளவுல தான் கற்பழிக்கப்படுறா. ஆனா என்னை மாதிரி பொண்ணுங்க ஒருத்தன உண்மையா நம்பி நேசிச்ச பாவத்துக்கு என்னோட மனசையும் கொன்னு ஒவ்வொருநொடியும் மனசாலையும் கற்பழிச்சி ...அது நரகத்தை விட கொடுமையா இருக்குகா ...அத கூட பொறுத்துகிட்டேன் ஆனா ஒருத்தனை காதலிச்சு இத்தனை கொடுமையை அனுபவிக்கிறவளை இன்னொருத்தனை சந்தோஷப்படுத்த சொல்லும் போது சாகக்கூட முடியலைகா...! இந்த கொடுமையை நான் மட்டுமில்லாம இந்த ஊர்ல பல பொண்ணுங்க அனுபவிக்கிறாங்க கா .தப்பா படம்புடிச்சி வச்சிருக்கிறத வெளியிட்டடா கூட பரவாலைனு தைரியமா சொன்ன சில பொண்ணுங்களை கூட குடும்பத்தை எதாவது பண்ணிடுவேனு சொல்லியே தங்களுக்கு பணியவச்சிட்டாங்க கா . ப்ளீஸ் கா உங்கள கெஞ்சிக்கேட்டுகிறேன் எங்களை இந்த மிருங்கங்க கிட்ட இருந்து காப்பாத்துங்கக்கா . உடம்பெல்லாம் காயத்தோட , மனசெல்லாம் ரணமாகி கிடைக்கிறோம் கா ...ப்ளீஸ்கா...ப்ளீஸ் ....."

என அக்குரல் பேசிமுடிக்க அதை தொடர்ந்து வெறும் அழுகுரல் மட்டுமே கேட்டிருந்து பின் அதுவும் இன்றி அமைதியாகியது .



சூர்யா கண்களை மூடி அமர்ந்திருக்க அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததிலே அவள் உணச்சிகளை அடக்கி கொண்டிருக்கிறாள் எனத் தெரிந்தது .

எழுந்து நின்ற ஹரிஷ் தனது சட்டையை சரிசெய்தவன் வலது கையை பேண்டின் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, இடதுகையால் அந்த பென்ட்ரைவை எடுத்தான் .

அதில் கண்திறந்த சூர்யா , " சாரி ஹரிஷ்...! டைம் ரொம்ப ஆகிடுச்சா " என்றபடி அவளும் எழுந்தவள் , அவனிடம் இருந்து அதை வாங்கி தனது கழுத்தில் இருக்கும் சைனின் டாலரை திறந்து அதில் வைத்துக்கொண்டாள் .

ஹரிஷின் பார்வை அதிலே இருக்க அதை பார்த்த சூர்யா , " என்னாச்சு ஹரிஷ்..?? ஏன் அப்படி பாக்குற ?" என அவனை கலைத்தவள் ,

"இந்த பென்ட்ரைவ் எனக்கு பவியோட கேசை பத்தி விசாரிக்கும்போது என்னோட வீட்டுக்கு யாரோ அனுப்பிருந்தாங்க . இத கேட்டதுக்கு அப்றம் தான் நான் இதுல தீவிரமா இறங்கி இந்த விஷயங்களையும் , இதுக்கு அந்த இரண்டு பேரும் தான் காரணம்னு கண்டுபிடிச்சேன் . அண்ட் நான் டிஜிபி கிட்ட பேசிட்டேன் ஹரிஷ் , நாளைக்கு காலைல இந்த பென்ட்ரைவ் அண்ட் நான் சேகரிச்ச தகவல் எல்லாம் அவர்கிட்ட குடுக்கணும் " என்று பேசியப்படியே அவனை அழைத்துக்கொண்டு வெளிவந்தாள்.


அமைதியாய் அவள் சொல்வதை கேட்ட ஹரிஷ் , அவள் தனது ஸ்கூட்டியை எடுப்பதை பார்த்து அருகில் வந்து தடுத்தவன் ,

"சூர்யா ...! நீ இப்போ தனியா போகவேணாம ...என்கூட வா நான் உன்னை வீட்ல விட்டுட்டு போய்டுறேன் " என அழைத்தான் .

அவனை பார்த்து சிரித்த சூர்யா, " இல்லை ஹரிஷ்...!நான் என்னோட வண்டிலையே போய்க் கொள்கிறேன் " என மறுக்க ,


"நீ ஏன் ஆண்களை நம்பமாட்டேனும் , அதுதான் நல்லதுனும் இப்போ எனக்கு நல்லா புரிது . ஆனா...! நீயும் என்னை புரிஞ்சிக்கோ..
நீ சொன்னதை எல்லாம் கேட்டா இது ரொம்ப பெரிய ஆளுங்க எல்லாம் சம்பந்தப்பட்டதுனு தெரிது ...உனக்கு ஆபத்து அதிகம் சூர்யா ...என்னால இப்போ உன்னை தனியா விடமுடியாது "என வற்புறுத்தினான் .

அவனின் வற்புறுத்தலில் இரண்டுவருடமாய் அவனை அறிந்திருந்தவள் அவனுடன் வருவதற்கு சம்மதித்தாள்.

பேசிய விஷயங்களின் பாரம் தாங்கமுடியாமல் இருவரும் அவரவரின் யோசனையில் இருக்க , வண்டியின் இரைச்சலும்...காற்றின் ஓசையும் தவிர இருவரிடையே மவுனம் நிலவியது .

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் இரவு பதின்னொன்னை கடந்திருக்க , வீதிகள் இருளால் மறைக்கப்பட்டு அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றுக் கொண்டிருந்தன .

திடீரென ஏதோ ஒன்று அவர்கள் சென்றுகொண்டிருந்த வண்டியின் டயரில் எறியப்பட, ஹரிஷ் சுதாரிப்பதற்குள் இருவரும் வண்டியிலிருந்து தூக்கி
எறியப்பட்டிருந்தனர்.

விண்ணென்று வலித்த பின்தலையை தாங்கியபடியே எழுந்த சூர்யாவின் கழுத்திலிருந்த செய்னை பறிக்கபார்த்தான் ஒருவன்.

அவனை இதற்க்கு முன் பார்த்தது போல் இல்லாமல் போக இவன் நகையை பறிப்பவன் போல என்றெண்ணியவள் தன்னை சமாளித்து தன் அருகிலிருந்த கற்களை எடுத்து அவனை சரமாரியாக தாக்க துவங்கினாள்.

அவளின் தாக்குதலை தடுத்தபடி பதி்லுக்கு தாக்கமுற்பட்டவனை ,இயல்பாய் அவளிடம் இருக்கும் தைரியத்தில் கற்றிருந்த தற்காப்பு கலைகள் கை குடுக்க அவனை வெற்றிகரமாய் மண்ணை கவ்வவைத்தாள்.


அவளின் செயலில் அவன் தடுமாறி எழுவதற்குள் , ஹரிஷ் எங்கே என்பதுபோல் பார்த்தவள் அவன் எதிரில் மற்றோருபுறத்தில் மயங்கிருப்பதை கண்டு அருகில் சென்றாள்.

"ஹரிஷ்...ஹரிஷ்...!" என அழைக்க , அவன் கண் திறக்காததில் அவனின் தலையை மடியில் வத்தபடி "ஹரிஷ்..! சீக்கிரம் எழுந்துரு ஹரிஷ் ...ப்ளீஸ்...நம்ப இங்க இருந்து போயாகனும்" என அவனின் கன்னத்தை தட்டினாள்.
அதற்குள் அவளை தாக்க வந்தவன் தன்னை சுதாரித்து எழுந்துவந்து, தனது கையில் இருந்த இரும்பு ராடால் அவளின் தலையில் அடிக்க ,

ஏற்கனவே வண்டியிலிருந்து விழுந்தபொழுது பின்மண்டையில் அடிபட்டிருக்க , இப்பொழுது இதுவும் சேர்ந்து ரத்தம் அதிகமாய் வழிய ஆரம்பித்தது .

அவன் அடித்ததில் தலை சுத்த தடுமாறியவளின் கழுத்திலிருந்த செயினை இழுத்து அறுத்தெடுத்தான் அவளின் மடியில் இருந்த ஹரிஷ்.

வலியின் மயக்கத்தில் சொருகிய கண்களை விரித்து அதிர்ந்து பார்க்க , அவளின் மடியிலிருந்தபடியே அவளை கண்டு வில்லத்தனமான கண்களை சிமிட்டினான் அவன்.


"ஏய் ஹரி ..! கம் ஒன் மேன்....நம்மளுக்கு வேண்டியது கிடைச்சிடிச்சாசில ...வா இங்கயிருந்து கிளம்புவோம் " என எதிரிலிருந்தவன் நீண்ட நாட்கள் பழகியது போல் அழைக்க , அதில் மேலும் அதிர்ந்தவள் மூச்சுவிடக்கூட சிரமப்பட்டபடி நீண்ட மூச்சுகளாய் இழுத்து இழுத்து விட்டாள்.


அவளின் நிலையை பொறுமையாய் பார்த்த ஹரிஷ் , " என்ன சூர்யா..! அதிர்ச்சியா இருக்கா??? ம்ம்ம்...எனக்கும் உன்னை இப்டி பாக்குறதுக்கு மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா ?? என்ன பண்ணமுடியும் ...நீ தேவையில்லாம எங்க விஷயத்துல நுழஞ்சிட்டியே??" என்றவனை எதிரிலிருந்தவன் மீண்டும் அழைத்தான்.


"ஷ்...அஸ்வந்த் கொஞ்ச நேரம் அமைதியா இருடா..! காதலிச்சவ கிட்ட காதலை சொல்லாம இருக்குறது எவ்வளவு வலினு உனக்கு தெரியாது. நான் அத அனுபவிச்சிருக்கேன் ... ஆனா ..இவ செத்துட்டா என் ஆயுள் முழுக்க காதலை சொல்லாத இந்த வழியை என்னால அனுபவிக்க முடியாது அஸ்வந்த் ...நான் இப்போ சொல்லியாகணும் " என அவனிடம் சொல்லியவனிடம் இருந்து நகர்ந்திருந்தவள் எழுந்து ஓட பார்க்க ,
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஒரே இழுப்பில் அவளை இழுத்து தனதருகில் விழச்செய்தவன் அவள் எழாதவாறு அவளின் மேல் படர்ந்தான்.

உடலின் வழியை விட, முதல் முறையாய் ஒருவனை நம்பி அந்த நம்பிக்கை பொய்த்து போன வலி அதிகமாய் இருக்க , ஹரிஷின் இந்த செயல் அவளை முற்றிலும் பலவீனமாக்கி இருந்தது.

சுத்தி நடப்பதை உணரமுடியாத மயக்கத்தில் அவள் ஆழ , அவனோ அவளின் முகத்தைதான் பார்த்திருந்தான் .


"நாங்க ஒருவார்த்தை சொன்னா அதை செஞ்சி முடிக்க பலபேர் இருந்தும்... உனக்காக தான்டி அந்த வேலைக்கு நானே வந்தேன். ரெண்டுவருஷதுக்கு முன்னாடி தற்செயலாய் உன்னை பார்த்தவன் தான்டி ...அந்த நிமிஷமே உன்கிட்ட விழுந்துட்டேன் . அந்த நிமிஷத்துல இருந்து உன்னைய என் உலகமா தான் பார்த்தேன் .. உன்னை அவ்வளவு நேசிச்சேன்டி...உன்னை என் கைக்குள்ளையே பொத்தி எப்பவும் என் கூடவே வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன் " என கண்கள் முழுக்க காதல் வழிய சொன்னவன் ...அவளின் கன்னத்தை தட்டி ,

"என்னை பாரு சூர்யா ..! நான் உண்மைய தான் சொல்றேன் நீ வேணும்னா அஸ்வந்த்கிட்ட கேட்டுப்பாரேன்.நான்உன்னை என்னிக்கு பார்த்தேனோ அந்த நிமிஷத்துல இருந்தது வேற எந்த பொண்ணையும் தொட்டதே கிடையாதுடி . உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிச்சுதுடி...ஆனா நீ எங்க கூட்டத்தையே பிடிக்க பார்த்தா நான் எப்படி டி சும்மா இருப்பேன்...எப்படி சும்மா இருப்பேன்??" என வெறிபிடித்தவன் போல் கத்தியவன் ,

"ஏன்டி அப்படி பண்ண ?? ஏன்டி அப்படி பண்ண??" என கேட்டபடி மாத்தி மாத்தி அவளின் இரு கன்னங்களிலும் அறைந்து ,


"இப்பவே...இந்த நிமிஷமே நீ எனக்கு வேணும்டி " என கர்ஜித்தவன் மிருகமாய் மாறி அவளின் ஆடைகளை கிழித்தெறிந்து அவளை சூராடினான் .

அவன் அறைந்ததில் சிறிதாய் மயக்கத்திலிருந்து வெளிவந்தவள் , தனது பெண்மையையாவது காக்கவேண்டுமென முயல, அவளின் முயற்சிகளை சிதறடித்தவன் அவளை ஆள தன்னால் எதுவும் செய்யமுடியாமல் புயலில் சிக்கிய படகாய் ஆனவள் உடல் முழுக்க ரணத்துடன் மீண்டும் மயக்கமானாள்.

தனது வெறி தீரும் வரை அவள் மயங்கிருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை மீண்டும் மீண்டுமாய் ஆண்டவன் , பலமணி நேரம் கழித்தே அவளிடம் இருந்து விலகி எழுந்தான் .


அவன் பேசும்பொழுதே அங்கிருந்த தனது வண்டியை எடுத்துக்கொண்டு எவரேனும் வருகிறார்களா என சிறிது தூரம் வரை மாறி மாறி வேறுவழியில் சென்றுகொண்டிருந்த அஸ்வந்த் , ஹரிஷ் எழுந்ததை கண்டு வண்டியை அருகில் நிறுத்தி இறங்கினான் .


திரும்பி மயக்கத்தில் கலைந்த ஆடையுடன் இருந்தவளை கண்டவனுக்கு எச்சில் ஊற , கண்களில் காமத்துடன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவனை தடுத்தது ஹரிஷின் கரம்.


இடவலமாய் தலையசைத்தவன், "உனக்கு தேவையானது கிடைச்சிடிச்சி அஸ்வந்த்...! அவளை தொடணும்னு நினைச்சி கூட பார்க்காத ... அவ எனக்கனவ . உனக்கு தெரியுமா அவ இதுவரைக்கும் யாரையும் நம்புனது இல்லை ..என்னை...என்னை மட்டும் தான் நம்புனா ...என் காதல் அந்தளவுக்கு புனிதமானது அஸ்வந்த் " என கேவலமாய் கர்வம் கொண்டவனை மிருகத்துடன் கூட ஒப்பிடமுடியாது .

பெற்ற தந்தையை கூடபெண்கள் நம்ப வாழ முடியாத இக்காலத்தில் ...ஒருவனை நம்புகிறாள் எனில் அதைவிட அவள் அவனுக்காய் என்ன செய்துவிட முடியும் . பெண்களின் நம்பிக்கையே அவர்களை களவாடும் ஆயுதமாய் பயன்படுத்தும் ஆண்கள் இவ்வுலகத்தில் வாழவே தகுதியற்ற உயிரினங்கள். அவனின் இறப்பு நிச்சயம் கொடூரமானதாகவே அமையும்.


பேசிய படி ஹரிஷ் முன் செல்ல ,அவனின் பேச்சை சட்டை செய்யாத அஸ்வந்த் அவளின் அருகில் செல்ல , திரும்பி பார்த்த ஹரிஷ் ,அஸ்வந்த் நிறுத்திவைத்திருந்த வண்டியின் சைலன்சரை பிடுங்கியவன் வேகமாய் அஷவந்தை தள்ள அவன் சிறிது தள்ளி சென்று விழுந்தான்.


"இவ அழகு தான உன்னைய தூண்டுது " என கேட்டபடியே அந்த சைலன்சரை அவளின் முகத்தில் விளாசினான்.

அதன் சூட்டில் ஒருபக்க முகம் வெந்து சுருங்க , அலறியபடியே மறுபக்கம் உடலை சுருட்ட , மீண்டுமாய் அந்த சைலன்சரை தன் முன் தெரிந்த அவளின் முதுகில் வீசினான்.



மித்ரன் அனைத்தையும் சொல்லி முடிக்க கண்கள் சிவந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட கேவி கேவி அழுதபடி இருந்தாள் யஷி.

"இதுல பாதி விஷயம் சூர்யாவோட மேலாளர் சொன்னது ...மீதி அவளை அந்த ஹோச்பிடல்ல டீரீட்மென்ட் குடுத்த டாக்டர்ஸ் சொன்னது....யாரோ அவளை அங்க கொண்டு போய் சேர்த்திருக்காங்க... யஷிமா! அவ அங்க இருக்கிறதே கொஞ்ச மாசத்துக்கு முன்னாடிதான் அந்த மேலாளருக்கு தெரிஞ்சிருக்கு . அவர் சூர்யாவை தன்னோட பொண்ணுமாதிரி தான் பாத்துட்டு இருந்திருக்கார் ..அவ அங்க இருக்குது வேற யாருக்கும் தெரியாது டா "

-என தொடர்ந்து அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாலும் கலங்கிய அவனின் கண்கள் வண்டியை ஓட்டமுடியாமல் தடை செய்தது.

கண்களை துடைத்துக் கொண்டவன் , கேவிக் கொண்டிருந்த யஷியை தன் தோளோடு அணைத்துக்கொண்டுவண்டியின் வேகத்தை அதிகப்படுத்திருந்தான்.


-காதலாகும் ...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தோஷி டியர்

அடப்பாவி ஹரிஷ் எவ்வளவு குரூரமானவன்
சூர்யாவை நாசம் செஞ்சதுமில்லாமல் முகம், முதுகுன்னு பொசுக்கி விட்டுட்டானே
 
Last edited:

Thoshi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தோஷி டியர்

அடப்பாவி ஹரிஷ் எவ்வளவு குரூரமானவன்
சூர்யாவை நாசம் செஞ்சதுமில்லாமல் முகம், முதுகுன்னு பொசுக்கி விட்டுட்டானே
:cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top