3....என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்....

Advertisement

Yazh Mozhi

Active Member
Avanai rumba paduthura pola eruke, super ah dan kekura pa ellam room potu yosikiralo, en da nalla varuvimga da rendu perum, nice update Gayathri dear thanks.
நன்றி நான் தான் சொல்ல வேண்டும்... மிகவும் மகிழ்ச்சி சகோ
 

Hema Guru

Well-Known Member
2....என்னுள் தேடி உன்னுள் தொலைந்தேன்...
டேய் மச்சான்... என்னடா பிரச்சனை உனக்கு நீ ஜாலியா பொண்டாட்டிய மாமியார் வீட்டுக்கு பார்சல் பன்னிட்டு இங்க டெய்லி பீரும் பார்சல் சாப்பாடுமா கொண்டாட்ற...
என் நிலைம அப்படியா இருக்கு... மாசம் பொறந்து சம்பளம் வரும்போது ஒரு பீருக்கு இராப் பிச்சக்காரன் மாதிரி கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கி அத அடிக்கிறதுக்குள்ள ஏன்டா கல்யாணம் பன்னேனு 648. வது தடவை வருத்தப்பட்டு புலம்பியே கேர் ஆகி தூங்கிடுறேன் மச்சி...
நீ இப்படி டெய்லி கூட்டிட்டு வந்து என்ன காவலுக்கு உட்காரவசாச்சு பாக்க விட்டு வெறியேத்துறது சுத்தமா நல்லா இல்ல டா டேய்....
டேய் கௌதம் நானாடா உன்ன குடிக்காதனு கையப் புடிச்சிகிட்டேன்... நீ வா மச்சி நாலு பீர் ஆர்டர் பன்னி பாட்டம் சிப் அடி மச்சி வா.. வா...வா...
அது சரி... குடிக்க துணைக்கு ஆள் தேடுனனு பார்த்தா நீ டைவர்ஸ் கும் சேர்த்து தான் என்ன ஆள் சேக்குற போல...
இப்படி ரெண்டு நாள் கன்டினியூஸ் ஆ வீட்டுக்கு டைட்டா போனேனு வை...
உனக்காவது டைவர்ஸ் கு ஆறுமாசம் டைம் கிடைக்கும் பொண்டாட்டி கைல கால்ல விழுந்தாவது மனச மாத்திடுவ..
எனக்கு லாங் சைஸ் அருவாளோட ஒரு பட்டாளமே படைய கிளப்பிகிட்டு வந்து பஞ்சாயத்து பன்னி ஒரே நாள் ஆ குடும்பத்த வெட்டிவிட்டு என்ன ஒத்தையில வாழாவெட்டி ஆ ஆக்கிட்டு போயிடுவாங்க டா... டேய்...
உனக்கு என்னடா பிரச்சனை கல்யாணம் ஆகி மூனு வருஷம் இருக்குமா....அது கூட இன்னும் முடியல அதுக்குள்ள டிவோர்ஸ் னா என்னடா இதெல்லாம்.... உன் பையன் விஹான பத்தி கோஞ்சமாவது நினைச்சு பாத்தியா டா....
டேய் அட்வைஸ் லா பன்னாத... நா ஒன்னும் ஆன்டி இண்டியன் இல்ல... பக்கா ஃபேமிலி மேன் தான்... இது என் பொண்டாட்டிக்கு ஒரு ஸ்மால் லெசன் எடுக்கதான் டா... இந்த டிவோர்ஸ்....
சரி தான்... எல்லா பொண்டாட்டிக்கு உள்ளயும் ஆயிரம் டீச்சர் ஐநூறு புரொபொசர் எல்லாம் இருக்காங்க மச்சி... நீ அவங்களுக்கு லெசன் எடுக்க போறியா... போடா டேய்...
உனக்கு என்னடா இன்னும் சின்ன பையன்னு நினைப்பா... இரண்டு வயசுல பையன வச்சிகிட்டு ரெண்டு பேரும் இப்போதா செத்து செத்து விளையாடலாம் வாங்கற மாதிரி ஆளாலுக்கு டைவர்ஸ் கேட்டு விளையாடுவீங்களா...
இப்போ டைவர்ஸ் கேக்குறதே ஃபேஷன் ஆகிடுச்சு போல... ஷாப்பிங் கூட்டிட்டு போகல அவுட்டிங் கூட்டிட்டு போகலனு தொட்டதுக் கெல்லாம் டைவர்ஸ்...
இப்படி இருந்திருந்தா நமக்கெல்லாம் கதை சொல்லி வளக்கவும் ஆளாக்கவும் அப்பா அம்மாவோ ஒரு தாத்தா பாட்டியௌ கூட இருந்து இருக்க மாட்டாங்க டா...
ரெண்டு பேருக்கும் மெட்சூரிட்டி இல்லாம இப்படி லைப்ல ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருக்கீங்க... என்னடா இதெல்லாம்....
டேய் மூடு சரியில்லைனு தான்டா நானே இங்க வந்தேன்... நீ இன்னும் மூட் அவுட் பன்ற மச்சி...

டேய் மச்சி சீரியசா இப்போ நீதான் டா என்ன மூட் அவுட் பன்ற... என்னதான்டா உனக்கு பிரச்சினை டைவர்ஸ் பன்ற அளவுக்கு....

சந்தேகம் மச்சி...

சந்தேகமா .... யாருக்கு....

ஸ்வேதாக்கு தான்டா....

என்ன சந்தேகம்....

எல்லாமே... சந்தேகம் தான்... மச்சி....

எல்லாமே னா... தெளிவா சொல்லுடா... நான் என்ன ஒன் வோர்ட்ல குவிஸ் ப்ரோக்ராம் ஆ நடத்துறேன்....

எல்லாமே.... எல்லாமேனா... எல்லாமே...

கொஞ்சம் லேட்டா வந்தா ஆயிரம் கேள்வி கேக்குறா மச்சி ...

டெய்லி வீட்டுக்கு உள்ள நுழையும் போதே அந்த எக்ஸ்ரே கண்ண வச்சு உருட்டி உருட்டி குடிச்சிருக்கியானு கேக்குறா மச்சி

டெய்லி ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் மாதிரி ஊதிட்டு உள்ளப் போனு நிக்க வைக்கிறா மச்சி...

மொபைல் எடுத்தா அவ கூட பேசு பேசுனு இம்சை பன்றாடா...

பப்ஜி ஆடுனா தப்பு ... ஆன்லைன் ரம்மி ஆடினாலும் தப்புனு தம்கட்டி சண்டை போட்றா மச்சி...

டிக்டாக்ல வீடியோ போட்டா காளி அவதாரத்துல கைல கரண்டி மத்து கட்டைனு தேடி எடுத்து அடிக்கிறா மச்சி...

ஆஃபிஸ் கொலிக்ஸ் கிட்ட சேட் பன்னா அதுக்கு அப்படி ஒரு கோவம் சண்டை...

காலேஜ் பிரண்ட்ஸ் ஆஃபிஸ் பிரண்ட்ஸ் கூட அவுட்டிங் போனா பேய் மாதிரி கத்துறா மச்சி

மத்த பொண்ணுங்கல ரோட்ல போகும் போது ரெண்டு செகண்ட் லைட்டா உத்து பாத்தா போதும் அன்னைக்கு ஃபுல் டே கச்சேரி கலகட்டிடும் மச்சி...

கல்யா
ண நாள் மறந்துட்டா கூட பரவாயில்லை
முதல் முதல்ல பாத்த நாளு ...பேசின நாளு .....ப்ரப்போஸ் பன்ன நாள்.... எல்லாம் பப்ளிக் எக்சாம்ல வர இம்பார்டன்ட் கொஷின மறந்துட்டா மாதிரி சொல்லி சொல்லி திட்றா மச்சி...

மொபைல் கைல இருந்தா இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை என்ன பன்ற என்ன பன்றனு கேட்டு கேட்டு டார்ச்சர் பன்றா மச்சி...

ஆஃபிஸ் போயிட்டு அவ பாக்குற டைம்ல ஆன்லைன் ல இருந்தா யாருகூட சார்ட் பன்னிட்ருக்கனு சண்டை... போடுறா மச்சி...

மத்தவங்க கிட்ட சிரிச்சி பேசினா ஏன் ஓவரா வழியிறனு கேக்குறா மச்சி..

மத்த பொண்ணுங்க கிட்ட கேஷூவலா மா டா டியர் லா போட்டு பேசுனா அப்படி ஒரு சண்டை மச்சி

அன்னோன் நம்பர் ல இருந்து கால் வந்தா அதுக்கு ஒரு பிரச்சனை... அது பொண்ணு பேரோட ட்ரூகாலர் ல வந்தா எனக்கு அன்னைக்கு அவ கையால தர்ம அடி மச்சி...

ஃபோன டெய்லி ரெண்டு மணி நேரம் ஃபுல் செக்கப் பன்றா மச்சி...
ஏதாவது ஏடாகூடமா கண்ல மாட்டிட்டா வச்சு பொலந்து கட்றா மச்சி....

அவ கால் பன்னும் போது நம்பர் பி.சினு வந்தா யாரு யாரு னு ஒரே தோல்லை மச்சி..

அதுகூட இப்போ எல்லாம் நம்பிக்கை இல்லாம உடனே ஸ்கிரீன் ஸ்ர்ட் எடுத்து அனுப்ப சொல்றா மச்சி...
ஃபேஸ் புக்ல ஃபோட்டோ ஷேர் பன்னா சண்டை மச்சி....
எப்.பில யாராவது புதசா பிரண்ட் ஆனா அதுக்கு கூட சந்தேகம் மச்சி...
வாட்ஸ் அப் டிபி ல என் ஃபோட்டோ மட்டும் வசாசா அதுக்கு சந்தேகம் மச்சி...
சோஷியல் மீடியா எதுவும் யூஸ் பன்னக்கூடாதாம் மச்சி அப்படி பன்னா ஃபோட்டோ அப்லோட் பன்ன கூடாதாம் மச்சி...

வா
ட்ஸ் அப்ல ஓல்ட் க்ளாஸ் மெட்ஸ் கேர்ஸ் நம்பர்கு சார்ட்டிங் வீடியோ கால் இன்கம்மிங் அவுட் கோயிங் எது நடந்தாலும் அன்னைக்கும் எனக்கு தான் அர்ச்சனை மச்சி....

வண்
டியில் யாருக்காவது லிஃப்ட் குடுத்தா கூட தப்பாம் மச்சி...

எப்போவாவது அவள விட்டுட்டு வெளிய பார்ட்டி மீட்டிங்னு டின்னர் சாப்பிட்டு வீட்டுக்கு போனா அதுக்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும் பாரு மச்சி...
இதெல்லாம் இல்லாம சண்டே அவ கூட சேர்ந்து பாத்திரம் தேய்க்கனும் மச்சி...
மாசத்துல ஒருநாள் பாத்ரூம் கழுவனும் மச்சி...
வாரத்துல ஒருநாள் நான் துணி காயப் போடனுமாம் மச்சி..
தினமும் வீட்ட மாப் போடனும் மச்சி...
பையனுக்கு மிட் நைட்ல பேம்பர்ஸ் வேற மாத்தனும் மச்சி...
இதெல்லாம் செய்யலைனா அதுக்கு ஒரு சண்டை மச்சி...
எல்லாத்தையும் விட இவள தவிர மத்த எந்த பொண்ணுங்க கிட்டயும் நான் பேசவேக் கூடாதாம் மச்சி...
எங்க அம்மாக்கு மட்டும் தான் பர்மிஷன் மத்த கேர்ல்ஸ் கூட பேசவேக் கூடாதுனு பிரச்சினை மச்சி...
ஆனாலும் எவ்வளவு டார்ச்சர் பன்னாலும் மூனு வேலையும் சூப்பரா சமைச்சி போட்டு ஆசையா ஊட்டுவா பாரு மச்சி அத ரொம்ப மிஸ் பன்றேன் மச்சி ..
பாசத்துல எல்லாம் அவள அடிச்சிக்கவே முடியாது மச்சி
ஆனா இந்த சந்தேகம் இருக்கு பாத்தியா அதுல தான் அவள புடிக்கவே மாட்டேங்குது மச்சி...
டேய்... என்னமோ இதெல்லாம் நாட்ல உனக்கு மட்டும் நடக்குறா மாதிரி உன் பொண்டாட்டி மட்டும் ஏதோ புதுசா பன்ற மாதிரி பேசுற...
அப்போ உனக்குமா மச்சி...
எனக்கு மட்டும் இல்லடா அரேன்ஜ் மேரேஜ் இருந்து லவ் மேரேஜ் வரைக்கும் எல்லார் வீட்லையும் இதே கதை தான்... கரெக்ட் ஆ சொல்லனும் னா வீட்டுக்கு வீடு வாசப்படி...
அக்கரைக்கு இக்கரை பச்சைனு சொல்வாங்கல அப்படி தான்... அதுக்காக லா டைவர்ஸ் பன்னுவியா.... நீ...
இதெல்லாம் என்ன பெருமையா.... கடமை டா கடமை...
அடப் போ மச்சி அவ சரியன சேடிஸ்ட் மச்சி... லேடி ஹிட்லர் மச்சி....
ஆனாலும் ..
பாசத்துல அடிச்சிக்க முடியாது அதான மச்சி...
அதேதான் மச்சி...
சரி டைவர்ஸ் பன்னிட்டு என்ன பன்ன போற...

கல்யாணம் தான் மச்சி...

அடப்பாவி அதுக்குள்ள ஆல் ரெடியா...

ச்சே ச்சே... எப்பவுமே என் ஸ்வேதா தான் மச்சி...

அப்போ கல்யாணம்...

அதுவும் அவகூட தான் மச்சி...

அந்த கருமத்துக்கு எதுக்குடா டிவோர்ஸ் பன்ற...


தெல்லாம் உனக்கு புரியாது மச்சி... மணியாச்சு நான் கிளம்புறேன்.. மச்சி ...

டேய் டேய் உனக்கு கம்பெனி குடுக்க தானடா நான் வெட்டியா வந்தேன் உனக்கு என்னடா அவ்வளவு அவசரம் ...டைம் ஆச்சாமே....

அது... லேட்டா போனா போதைல சாப்ட மறந்துடுவேன் மச்சி குடிச்சிட்டு வெறும் வயித்தோட படுத்தா அவளுக்கு புடிக்காது மச்சி...

நான் எப்போ தூங்குனேன் எப்போ கடைசியா வாட்ஸ் அப் வந்தேனு ஆன்லைன் வந்து செக் பன்னுவா மச்சி அந்த ராட்ஷி...
அதான்...சீக்கிரம் போனாதான் சாப்பிட் டு படுக்க கரெக்ட் ஆ இருக்கும் மச்சி...

அது எப்படி டா அம்மா வீட்ல இருக்க உன் பொண்டாட்டி க்கு நீ குடிக்கிறதும் லேட்டா வீட்டுக்கு போறதும் தெரியும்...

அதெல்லாம் அப்படி தான் மச்சி...

அதான் எப்படி...

நான் தான் நைட்டு எல்லாத்தையும் வாய்ஸ் மெசேஜ் பன்னிடு ...குட் நைட் அனுப்புவேனே...

அடப்பாவி... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு எதுக்குடா ரெண்டு பேரும் ஒருமாசம் பிரிஞ்சி போய் டைவர்ஸ் அது இதுனு முட்டாள் தனம் பன்னிட்டு இருக்கீங்க...

அது...

அதெல்லாம் அப்படி தானு மட்டும் சொல்லாத நான் செம்ம கடுப்பாயிடுவேன்...

அப்போ அத நாளைக்கு சொல்றேன் மச்சி...

ஆனாலும் ஒன்னு மச்சி...

என்ன... பாசத்துல உன் பொண்டாட்டிய அடிச்சிக்க முடியாது அதானே...

ம்ஹூம்...

வேற... என்ன...

அவ தான் என் உயிரு மச்சி... அவ இல்லாம என்னால இருக்க முடியாது மச்சி...

டேய் தயவு செஞ்சு கிளம்பு வீட்டுக்கு போலாம்...

ஏன் மச்சி...

இதுக்கு மேல லேட்டா போனா என் பொண்டாட்டி வீட்டு கதவ கூட தெறக்கவே மாட்டாடா... நீ நாளைக்கு வந்து ஸ்வேதா புராணம் பாடு... இன்னைக்கு போய் சாப்பிட்டு படு... வா...

ஆனா ஒன்னு மச்சி...

டேய் இதுக்கு மேல நீ பேசுன நான் அழுதுடுவேன் அமைதியா வா...

ஐ லவ் யூ மச்சி...

டேய்... நான் அந்த மாதிரி டைப் இல்ல மூடிட்டு வாடா...
சரி மச்சி...
பேசிப்பேசியே கௌதமை டார்ச்சர் செய்து ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை துக்கம் மட்டும் தான் பொங்கியது.... கண்களைத் தாண்டி கண்ணீராக...
ஐ லவ் யூ டி காரச் சட்னி... ஐ மிஸ் யூடா விஹான் குட்டி... ஒரு புகைப்படத்தை நெஞ்சோடு புதைத்தபடி இவன் இங்கே...
__தொடரும்....
__ காயத்ரி வினோத் குமார்...
Semma epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top