uyirai tholaithaen UD 11

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae likes and comments potta anaivarukkum nandri indha padhivukkum comments sollunga


தன பெற்றோரிடம் நடந்த அணைத்து விவரத்தையும் கூறினான் அனைத்தையும் கூறிவிட்ட பின்பும் மனதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்க மௌனமாக நின்றான். இதுவரை எதையும் மறைத்தது இல்லை தப்பாய் செய்தாலும் நான் தப்பு செஞ்சான் அதுக்கு என்ன இப்போ என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கேற்கும் ரகம் அவன்.

அதே போல் செய்த தவறை சரி செய்யும் யுக்தியும் அவனுக்கு தெரியும் இன்று தவறு செய்யவில்லை ஆனால் மறைத்திருக்க கூடாதோ என்ற எண்ணம்........


நேத்து ராத்திரி எங்க இருந்த அஜய் என்று கேற்க தன் தாயின் புத்திசாலி தனத்தை மெச்சம்மாள் அவனால் இருக்க முடியவில்லை ..

அம்மா .....

இம் சொல்லு என்று உந்த

அபி வீட்டுல அம்மா என்றான் ஒரு பெண்ணுடன் இரவு முழுவதும் தனியாக இருப்பது என்பது எந்த பெற்றோராலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று எப்படி பட்ட சூழ்நிலை யானாலும் சிறு தயக்கம் மனதில் எழத்தான் செய்யும் அது தவிர்க்க முடியாதது .....


கோகிலாவின் புருவங்களில் முடிச்சு விள மேலும் சொல்லு என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தார் .

அம்மா நேத்து ராத்திரி தான் ம எனக்கு தெரிஞ்சுது என்னால முடியல அது தான் போய் பார்தேன் ஆனா அங்க அவ இருந்த நிலைமையில என்னால வேற எதுவும் யோசிக்க முடில மா அப்போ அவ கூட இருக்கனும் அப்படிங்கறது மட்டும் தான் எனக்கு பெருசா தெரிஞ்சுது

அவளோட கஷ்டத சொல்லி அழ கூட அங்க யாரும் இல்ல மா

இத்தன வருஷத்துல அப்பா உங்கள விட்டு தனியா ஒரு நாள் கூட இருந்தது இல்ல தவிர்க்க முடியாத சில பிசினஸ் dealings நா மட்டும் தான் அவரு உங்கள விட்டு தனியா இருந்து இருக்கார்

அப்பாக்கு நீங்க எப்டியோ அப்டி தான் எனக்கு அபியும் அம்மா அவளை நா உங்க கிட்ட என்னோட காதலியா அறிமுக படுதலை அவளை என்னோட மனைவியா அறிமுக படுத்தறன்

கல்யாணம் பண்ணாத அவளை நான் என்னோட மனைவியா எதுக்கறதுனு இல்ல எப்ப நா என்னோட காதலை உணர்தேனோ அப்ப இருந்து அவளை மனைவியா தான் பாக்குறேன்

என்னோட வாழ்க்கையில ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான் மா ஒன்னு நீங்க இன்னொன்னு அபி இந்த ரெண்டு பொண்ணுக லுமே என்னோட வாழ்கை புரா என்கூட வர போறவங்க உங்க கிட்ட இருந்து நா எதுவும் மறைகளை மறைக்க விரும்பவும் இல்ல

சொல்றதுக்கான சமயம் வரல அவ்ளோதான்

எப்டினாலும் உங்க கிட்ட சொல்லி இருப்பன் என்ன கொஞ்சம் நேரம் எடுத்து இருக்கும் ஆனா இப்போ உடனே சொல்லிட்டேன் அவ்ளோ தான் மா நீங்க என்ன சொல்றிங்க என்று கேள்வியை தாயிடம் கேட்டு பார்வையை தந்தையின் மீது பதித்தான்

அஜய் எந்த ஒரு முடிவிலும் தெளிவாக இருப்பான் தனக்கு ஒன்றை பிடித்து விட்டால் அதை விடும் ரகம் அவன் கிடையாது என்பதையும் நன்கு உணர்ந்தவர் இப்போது இந்த பெண் வேண்டாம் என்றால் சரி என்பான் ஆனால் நிச்சயம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டான்


மகன் எப்போது திருமணத்துக்கு சரி என்று சொல்லுவான் என்று எதிர் பார்த்த கோகிலாவிட்கு அவன் ஒரு பெண்ணை காதலிக்கறான் என்பதே ஆச்சர்யத்தை கொடுக்க அடுத்து அடுத்து நடந்த நிகழ்வுகள் மேலும் அவருக்கு குழப்பத்தை கொடுக்க ஒரு வேலை அனுதாபம் கொண்டிருப்பானோ என்ற எண்ணம் மேல் ஓங்கியது ஆனால் இப்போது மகன் பேச்சை கேட்ட பின்பு அவன் உறுதி அவர்க்கு சொல்லாமல் சொல்லியது இது அவள் மேல் கொண்ட காதல் அவள் நிலையில் வந்த காதல் அல்ல என்பது

கோகிலாவிட்கு பெண் பிள்ளைகள் என்றால் மிகவும் இஷ்டம் அதனால் தான் சொன்ன உடனே சரி என்றார் ஒரு சிறு வருத்தம் அவள் பெற்றோரை இழந்து நின்ற பொழுது துயர் துடைக்க கூட ஆள் இல்லாமல் போனதால் என்று தான் வருத்தம்

மகன் சொல்வதை கேட்கும் போது அவருக்கும் வ்ருத்தம் இருக்கவே செய்தது ஆனால் முழுமையாக அவன் பேச வேண்டியே அவர் அமைதி காத்தார்

பின் அவளை அழைத்து வருவதாகவும் குறி விட்டு சென்றான்


அவளை முதல் முறையாக பார்த்த பொழுது அணிந்திருந்த அதே பண்ட் சட்டை அணிந்திருந்தான் அவன் காரை ஸ்டார்ட் செய்து அரை மணி நேரத்தில் அஜியின் வீட்டை அடைந்திருந்தான்

அபி அமைதியான அழகுடன் இருந்தால்

பச்சை வண்ண புடவை மெல்லிய பட்டு பார்டர் அதே கலர் இல் வெட்டி தைக்க பட்ட ரவிக்கை காதில் தங்கத்தில் ஆன சிறு தோடு டால்பின் போல் வடிவமைக்க பட்டிருந்தது அதே போல் கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி அதிலும் டால்பின் டாலர் கோக்க பட்டிருந்தது ஒரு கையில் வாட்ச் மறு கையில் சன்னமான வளையல் முடியை பின்னலிட்டு இருந்தால் நெற்றியில் சிறிய அரக்கு நிற பொட்டு எந்த முக பூச்சும் இல்லாமல் இயற்கை அழகு அவள் புடவையின் உடல் தெரிந்த வெற்றிடை மேலும் இம்சித்தது

உதட்டில் அவனை கண்டா நொடி தோன்றிய புன்னகை அதை தாண்டி கண்ணில் வழிந்த சோகம் அவனை யோசிக்க வைத்து ஆனால் எதுவும் கேற்காமல் காரின் முன் கதவை திறந்து விட்டு அவளை அமர்த்தினான்

அமர்ந்தவள் எங்கு போகிறோம் என்பதை கூட அறிய முற்படவில்லை

அஜி..... என்று அழுத்தமாக அழைக்க

இம்......

அவளிடம் இருந்து வந்த மெல்லிய முனங்களில் கார் ஐ நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்ப அவள் கண்கள் கலங்கி இருந்தது

அவள் குனிந்திருக்க அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி அவள் பார்வையை அவன் புறம் திருப்ப

அவள் கண்களில் இருந்து நீக்காமல் கண்ணீர் வலிந்து கொண்டிருந்தது

ஏய்


என்ன இது சின்ன புள்ள மாதிரி

எதுக்கு டி இந்த அழுகை நான்தான் உன் கூட இருக்கேனே அப்பறோம் எதுக்கு
என்று அவன் முடிக்கும் முன் அவன் நெஞ்சில் சாய்ந்து

இல்ல அஜய் இந்த ஒரு ஒன்றரை மணி நேரத்துல நீங்க இல்லாம என்னமோ மாதிரி இருந்தது புத்திக்கு தெரிஞ்சுது நீங்க திரும்பி வருவீங்கன்னு ஆன மனசுல நீங்க என் கூட இருக்கணும்னு மட்டும் தான் கேட்குது

நீங்க என்கூட இருந்த மட்டும் போதும் அஜய் வேற எதுவும் எனக்கு வேண்டாம் என்று உதடு துடிக்க அவள் கூற

இதற்கு மேல் தங்க முடியாதவனாக அவள் இதழ்களில் தம் இதழை பதித்திருந்தான்

அவனின் இந்த முற்றுகையில் அவள் மருண்ட விழிகள் மூடி கொள்ள அவன் கேசத்தினுள் விறல் நுழைத்து அவனுள் புதைய அவனின் ஒரு கை அவள் கூந்தலில் புதைந்திருக்க மற்றோர் கை அவள் வெற்றிடையில் கவி பாடி கொண்டிருந்தது
அவன் விரலின் சூடு அவள் தேகத்தில் பாய்ந்து மயிர் கூச்சு ல மீண்டும் அவனுள் புதைந்து அவன் கரங்களில் பாகாய் உருகும் அவள் உடலை அடக்கும் வழி அறியாமல் அவனுள் மூழ்கினால்

இருவரும் எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியாது


சில மணி நேர பிரிவிலேயே அவனுக்கான அவளுடைய தேடலை அவன் உணர்ந்தான்

அவனுடைய வேகத்திற்கு கொஞ்சமும் சலிக்காமல் இருந்தது அவளுடைய வேகம்

கடந்து போன வாகன ஹார்ன் ஒளியில் இருவரும் சுய நினைவுக்கு வந்தனர்

அவள் செய்கையை எண்ணி அவளுக்கு வெக்கமாக வந்தது இப்படியா நடந்துக்கணும் என்ன பத்தி என்ன நெனச்சிருப்பாரோ என்று மனதில் கவலை மூல

முகமோ செவ்வனமாய் சிவந்திருந்தது

அவள் முக சிவப்பை கண்ட அஜய்கு மேலும் அவளை இருக்க அணைத்து கொள்ள வேண்டும் போல் இருக்க முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டான்

அவள் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் அவன் புறம் திரும்பவே இல்லை

அவளை எண்ணி அஜய்கு சிரிப்பாக இருத்தது முதல் முறை அவன் முன்னாள் தோன்றிய கம்பிரமான அபி எங்கே

இந்த அபி அவனுக்கு மிகவும் புதியவளாக தெரிந்தால்

ஒரு பெண்ணுள் தான் எத்தனை பறி மாற்றங்கள்

அஜய் மேலும் அவளை நெருங்காமல் அவளுக்கான நேரத்தை அளித்தான்

கார் ஒரு பிரம்மாண்டமான கேட் முன்னாள் நின்றது சீருடை அணிந்த காவலாளி வணக்கம் தேறி விக்க கார் உள்லே நுழைந்தது

அஜய் அவள் புறம் வந்து கார் கதவை திறந்து அஜி இறங்கு என்றான்

அவள் விரல்களினுள் தன் விரலை கோர்த்து கொண்டு உள்லே அழைத்து சென்றான் அவன் இறுக பற்றி அவளுக்கு தைரியமூட்ட தன் பெற்றோர் முன்னாள் நிறுத்தினான்...


















 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top