Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

குறுநாவல் மிகவிரைவாய் முடிந்துவிட்டது,ரத்னா மாதிரி நிறைய அம்மாக்களை இப்பவும் காணலாம் ,குழந்தைகளின் நலனுக்காக எதிர்காலத்திற்காக வாயைகட்டி வயிற்றைக்கட்டி வாழ்பவர்கள்,கிருஷ்ணா அம்மா அப்பா மாதிரியும் இருக்கின்றார்கள் ,லஞ்சம் வாங்கவதாகட்டும் அடுத்தவர்களைப்பற்றி அவதூறாகப்பேசுவதாகட்டும் இப்படி அடுத்தவர்களை துன்புறுத்துபவர்கள்,காவ்யா நேர்மை தன்னைச்சுற்றி இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்,கிருஷ்ணா மிக இயல்பான ஆண்,அதாவது தன்பெற்றோர் நேர்மையற்ற முறையில் சம்பாரிப்பது தெரிந்தும் அதை கண்டும் காணாதமாதிரி இருத்தல்,இப்படி நிறைய வீடுகளில் நடக்கின்றது,ஆனால் அதேநேரம் காவ்யாவின் நேர்மையை விரும்பும் குணமறிந்து ,திருமணத்தின்பின் அவர்களின் பொருளாதாரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளாமை ,காவ்யாமீதான அன்பையும் அவரை மதிக்கும் செயலையும் காட்டுகின்றது,இருபக்கமும் அழகான அன்பான சகோதரம்,காவ்யா சரி கிருஷ்ணா சரி உண்மைவிளம்பிகளாக இருப்பது கதைக்கு கூடுதல் சிறப்பு.எங்களுக்காக நேரம் ஒதுக்கு நாவல் தந்தமைக்கு நன்றி mam.

நன்றி
Aravin22
 
Sundaramuma

Well-Known Member
புறக்கண் திறப்பதற்கும் அககண் திறப்பதற்கும் வித்யாசம் உண்டு அதுபோல் தான் நுகர்தலிலும் நுகர்வதை எழுத்தாய் கொடுப்பவருக்கு புரியும் எங்கே மணத்தை மிஸ் செய்துள்ளோமென்று குணம்,நிறம் மிஸ்ஸாகாமல் அப்படியேதான் இருக்கிறது அது கூடவே இருப்பது மிஸ் ஆகாது
எஸ்.....மல்லிகை மொட்டாக இதில் நின்று விட்டது .....அதனால் மணம் குறைவு.....
மலர்ந்து மணம் வீச இன்னும் வரும் என ஒரு நம்பிக்கை .....
 
MythiliManivannan

Well-Known Member
மைத்தி கமெண்ட் எங்கே..
கடைசி பதிவுக்கு காணலையே..
நான் தேடினேன்...:)
எல்லோரும் கமெண்ட் போட்டுட்டாங்கடா....அதுக்கு மேல எனக்கு என்ன கமெண்ட் பணறதுன்னு தெரியல...அதனால :)
 
Adhirith

Well-Known Member
Hi mam

குறுநாவல் மிகவிரைவாய் முடிந்துவிட்டது,ரத்னா மாதிரி நிறைய அம்மாக்களை இப்பவும் காணலாம் ,குழந்தைகளின் நலனுக்காக எதிர்காலத்திற்காக வாயைகட்டி வயிற்றைக்கட்டி வாழ்பவர்கள்,கிருஷ்ணா அம்மா அப்பா மாதிரியும் இருக்கின்றார்கள் ,லஞ்சம் வாங்கவதாகட்டும் அடுத்தவர்களைப்பற்றி அவதூறாகப்பேசுவதாகட்டும் இப்படி அடுத்தவர்களை துன்புறுத்துபவர்கள்,காவ்யா நேர்மை தன்னைச்சுற்றி இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்,கிருஷ்ணா மிக இயல்பான ஆண்,அதாவது தன்பெற்றோர் நேர்மையற்ற முறையில் சம்பாரிப்பது தெரிந்தும் அதை கண்டும் காணாதமாதிரி இருத்தல்,இப்படி நிறைய வீடுகளில் நடக்கின்றது,ஆனால் அதேநேரம் காவ்யாவின் நேர்மையை விரும்பும் குணமறிந்து ,திருமணத்தின்பின் அவர்களின் பொருளாதாரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளாமை ,காவ்யாமீதான அன்பையும் அவரை மதிக்கும் செயலையும் காட்டுகின்றது,இருபக்கமும் அழகான அன்பான சகோதரம்,காவ்யா சரி கிருஷ்ணா சரி உண்மைவிளம்பிகளாக இருப்பது கதைக்கு கூடுதல் சிறப்பு.எங்களுக்காக நேரம் ஒதுக்கு நாவல் தந்தமைக்கு நன்றி mam.

நன்றி
Aravin22

நேர்மை,உண்மை உழைப்பின் மேன்மையை பற்றி
கூறும் கதைக்கு ஓரு நேர்மையான ,அருமையான விமர்சனம்...
“ அவர்களின், பொருளாதாரத்தில், தங்களின்
வாழ்வாதரத்தை அமைத்துக்கொள்ள கொள்ளாமை...”
Very aptly said.....
 
Last edited:

malar02

Well-Known Member
நேர்மை,உண்மை உழைப்பின் மேன்மையை பற்றி
கூறும் கதைக்கு ஓரு நேர்மையான ,அருமையான விமர்சனம்...
YES கதைக்கு பொருத்தமான விமர்சனம்
 
mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

சந்தத்தில் பாடாத கவிதையும்
சொந்தத்தில் சேராத காரிகையும்
பந்தத்தில் சேர்ந்த அழகு,
பாசமும் நேசமும்
கோபத்தில் துரந்தாலும்,
சாபத்தில் மறந்தாலும்,
காலத்தின் மடியில்
காலாவதி ஆவதே
ஞாலத்தின் நீதி என்றால்,
வாய்மையும் பொய்மையும்
தூய்மையும் அழுக்கும்
சுகமும் சோகமும்,
சொர்க்கமும் நரகமும்,
மகிழ்ச்சியும் துக்கமும்,
வெற்றியும் தோல்வியும்
சூழ்ந்த வாழ்க்கை
இயற்கையின் வரமோ.....?
இறைவனின் வரமோ......?
என்ன கேள்வி வந்தால் என்ன?
காதல் காதல் தான்!
காதலுக்கு அழிவில்லை!
அன்புக்கு அளவில்லை!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

நன்றி. வாழ்த்துக்கள் மல்லி.
உங்கள் அரிய படைப்பு அழகாய் மிளிர்ந்த பதிப்புக்கு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top