இவள் முழுதும் சொல்லி முடித்தெ, இவன் முகத்தையே பார்த்திருக்க, மூடிய இமைகளை பிரிக்காமலேயே

“இங்கே இருந்து மரியாதையா எழுந்து போய்டு” என கூற

புரியாமல் பார்த்தவள் அப்படியே அவன் மடியிலேயே இருக்க….

“ இங்க இருந்த போகலை” என உறுமியவன்

“போ…” என கண்களை இறுக்கமாய் மூடியபடி கத்தினான்..

அவன் முகத்தை தன் புறமாய் இழுத்தவள் “இன்னும் எவ்வளவோ இருக்கு சத்ரி… இதுக்கே தளர்ந்து போனா எப்படி உன்னோட உயிரை நீயா தரும் வரை உன்னை விட மாட்டேன்” என பழைய சாத்வியாய் மாற

படாரென கண் விழித்தவன்

“உன்னோட காதலை தாங்க முடியாமல்…  அல்ரெடி…. நிறைய முறை செத்து பிழைச்ச மாதிரி தான்  இருக்கேன். இனியும் எடுக்க இங்கே எந்த உயிரும் இல்லை” என மீண்டும் கண்களை மூடி சாய்ந்தான்.

அவனின் தனிமையை கலைக்க விரும்பாமல் இவளும் எழ  சத்ரியின் கைகள் அவளை இறுக்கமாய் பற்றி இருந்தது.

எப்போதோ தான் உணர்ந்த காதல் அவனை தினம் தினம் கொன்று கூறு போட்டது என்றால்

எட்டு வருடங்களாய் நீ தான் எனக்கு எனர்ஜி… என சர்வ சாதாரணமாய்.. காதலை சுமந்து வாழ்ந்த சாத்வியை நினைக்கும் போது, தன் காதல் மிக சிறியதாய் தெரிய…

அவளை எழ விடாமல் அவள் விரல்களோட தன் விரல்களை இறுக்கமாய் பிணைத்தவனின்  வார்த்தைகள் ஒன்று கூற செயல் வேறு கூறியது….

 அவனின் முகத்தை பார்க்க அப்போது தான் கண்களை திறந்த சத்ரியும்  அவளை தான் ஆழந்து பார்த்திருந்தான்..

“மோசமா நடந்துகிட்டா மன்னிச்சிடுடி”  என ஆழந்த பார்வையை அவளிடம் விட

அவனின் பேச்சுகளாலும் செயல்களாலும் குழம்பி போனவள்

“மோசமா வா…  நீயா….எப்போ..” என குழப்பமாய் அவனை பார்க்க, குழப்பத்திற்கெல்லாம் விடை கொடுத்தது அவனின் செயல்…. அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்ற விதமே கூறியது அவனின் மோசமான குணத்தை.

———–

சில மாதங்களுக்கு பின்..

சத்ரியுடன் ஓருயிராய் வாழக்கையை வாழ்ந்த மகழ்ச்சியையும் மீறி…  அன்று இன்னும் கூடுதலான மகிழ்ச்சியுடன் வந்தவளை

 கண் இமைக்காமல் பார்த்தவன்…

“மேடம்… இன்றைக்கு செம ஹேப்பியா இருக்கீங்க என்ன விசயம்” என அருகில் வந்தான்.

“ஹேய்.. வித்யாசம் தெரியுதா சத்ரி..” என முட்டை கண்ணை விரித்து கேட்டாள் சாத்வி.

“ம்ம்ம்.. நல்லா தெரியுதே! என்னைக்கும் விட இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே டாலடிக்குதே” அருகில் நின்றிருந்தவன் நெருங்கி அவள் முகத்தை வருடினான்.

தன்னுடைய மகிழ்ச்சியின் அளவீட்டினை கூட சரியாய் கண்டு கொண்டு, அதை தன்னிடமே வெளிப்படுத்துபவனை ஆசையாய் பார்த்தாள் சாத்வி.

“என்னன்னு சொல்றது.. இப்படியே பார்த்தால் என்ன அர்த்தமாம்? சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம்“ கன்னம் விட்டு கையெடுத்தவன் அவளை இறுக்கி கொண்டான்.

“நான் கேட்டதை…. எனக்கு கொடுத்திட்ட சத்ரி”

“ நீ… என்னத்த கேட்டே! நான் என்ன கொடுத்தேன்” வேகமாய் விலக்கி நிமிர்ந்தான் .

“நான்  என்ன கேட்டேன்னு நியாபகமும் இல்லையா? ம்.. உன் உயிரைக் கேட்டேன். அதுவும் கரெக்கடா ஒரு ஐந்து மாசத்துக்கு முன்னாடி கேட்டதா எனக்கு நியாபகம்”

“உயிரை கேட்டு கேட்டு என் உயிரை எடுத்தியே..! ஆனால் அது அப்போடி.. பிரச்சனை எல்லாம் முடிஞ்சு சந.தோஷமா இருக்கும் போது, மறுபடியும் ஏண்டி உயிரை வாங்கிற!” இவன் கேட்க

“அதான் உயிரை வாங்கிட்டேனே.. இனி உயிரை எடுக்க மாட்டேன்” இவனை அணைத்தபடி இவளும் பேச

“ஏய்…. என்னடி உளரிட்டு இருக்க! புரியுற மாதிரி தான் பேசேன்” இன்னமும் புரியாமல் பார்த்தவனை, லேசாய் விலக்கி, அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து “இதோ… இங்கே இருக்கு உன்னோட உயிர்”  சொன்ன நொடி பீறிட்டு கிளம்பிய மகிழ்ச்சி வெள்ளத்துடன் அவள் வைத்ததை விட வயிற்றில் அழுத்தமாய் பதிந்தது அவனின் விரல்கள்.

 சில நொடிகள் நீடித்த அவன் விரல்கள், புடவையை விலக்கி வயிற்றினுள் பதிந்தது “உயிரை கொடு கொடுன்னு கேட்டது இதுவாடீ?” அயர்ந்து தான் போனான்.

“சத்தியமா உன்னோட காதலை என்னால் தாங்க முடியாதுடீ” என மறு கையால் எலும்புகள் எல்லாம் நொறுங்கும் அளவு இறுக்கி கொண்டான்.

“உயிரைக் கொடு உயிரைக் கொடுன்னு நீ கேட்டது…  நம்பளோட உயிரா” என அதிர்ந்து, அவன் கொடுத்த  ஈரமான கண்ணீர் பதிந்த முத்தங்கள், அவளுள் ஊடுருவிச் செல்ல..

சாத்வியின் மீதான ஆழமான காதல்  சத்ரியின் நெஞ்சில் ஈரமாய் உறைந்து போனது.

அவளிடமிருந்து வேகமாய் விலகிய சத்ரி “உனக்கு ஒரு கிப்ட் வச்சுருக்கேன்” என தனது கப்போர்டினுள் ஒளித்து வைத்திருந்த பெரிய போட்டோ ப்ரேமை சாத்வியின் கைகளில் எடுத்து வந்து கொடுத்தான்.

“இந்த நாள் என்னைக்காவது ஒரு நாள் வரும்ன்னு ஏங்கிட்டு இருந்தேன் சாவி முன்னக்கூடியே உனக்காக ரெடி பண்ணிட்டேன் சாவி.பாரு” என அவள் கைகளில் திணிக்க

“முன்னாடியேவா”  என ஆச்சர்யமாய் பார்த்து வேக வேகமாய் அதை பிரித்தாள்

உள்ளே இருந்ததை பார்த்த அடுத்த நொடி அவனுக்கு பரிசுகள் கொடுப்பது இவள் முறையானது.

பல நிமிடங்களுக்கு பின் இவள் விலக  சத்ரி அவளை விலக அனுமதிக்கவில்லை  தன் கையணைப்பிலேயே வைத்தபடி அவனும் அந்த போட்டோ ப்ரேமை பார்த்தான்.

இரண்டு பெரிய போட்டோக்களை உள்ளடக்கி இருந்தது, இடது புறம்  சத்ரி சாத்வியின் பால்ய வயது புகைபடமும், வலது புறம் திருமணத்தன்று எடுத்த புகைபடமும் இருந்தது.

 அந்த பெரிய ப்ரேமில்  இடது புறம் பட்டுபாவடையை ஒரு கையில் தூக்கி பிடித்தபடி, மறுகையினால் சத்ரியின் கையை பிடித்திருந்த சாத்வியும், சாத்வியின் கையை இறுக்கமாய் பற்றி மறு கையினால் வேஷ்டியை மடித்தபடி நின்ற சத்ரியும் என சாத்வியின் முதல் மொட்டையின் போது மொட்டை போடுவதற்கு முன்பு எடுத்த போட்டோவில்  அழகின் மொத்த உருவமாய் நின்ற போட்டோவும்.

வலது புறம்.

ஆறடி உயரத்தை சற்று குறைக்கும் வண்ணம் கீழ் நோக்கி, கண்களில் காதலை தக்க வைத்தபடி தலையை மட்டும் குனிந்து தன்னவளை பார்த்த சத்ரியும் அவன்பார்வையை மொத்தமாய் தாங்கியபடி நிமிர்ந்து தன்னவனை கண்களில் நிரப்பிய சாத்வியும்.என பட்டு வேஷ்டி, பட்டு புடவையில் அழகான ஜோடியாய்   காட்ணியளித்த தற்போதைய சத்ரியையும் சாத்வியையும் உள்ளடக்கிய போட்டோவும் என .இரண்டு போட்டோக்களையும் உள்ளடக்கி இருந்தது அந்த பெரிய ப்ரேம்.

இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றொருவரை மறந்தபடி அந்த ப்ரேமில் லயித்தியிருந்தனர்.

தவறென்பது மனித குணம், மகன் மட்டும் விலக்கா? என வாழ்வை அதன் பாதையில் ஏற்று கொண்டு துரோகத்தையும், கோபத்தையும் மன்னித்து மனித்உறவுகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் விநாயகமும் சிவஹாமியும்..

வாழ்க்கையை அதன் சாரம்சத்தை புரிந்து கொள்வதற்காக சங்கரனும் மஹாவும் அவர்களது மகளின் வாழ்க்கையையே பணயம் வைக்க, அதை தன் பொறுமையாலும், விடா முயற்சியாலும் உடைத்தெரிந்து தனக்கென தனி பாதை அமைத்து கொண்டது சாத்வி என்றால்..

படிப்புக்கும், காதலுக்கும்,குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும் தன் தமயனை காரணம் காட்டாமல், ‘எல்லாம் நன்மைக்கே’ என இரண்டு வருட படிப்பை கையில் எடுத்து, திறமைக்கு மதிப்பளித்து வெறுத்து ஒதுக்கியவர்களின் மத்தியில் மரியாதையை தேடி கொண்டான் சத்ரியன்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காத காதல் கொண்டாலும், தன்மானத்தையும் காதலையும் சரிசமமாய் மதித்து காதலுக்கு மரியாதையை தேடித்தந்தவர்கள்.

காதலுக்கு மரியாதை செய்ததாலோ  என்னவோ! காதலும் அவர்களது வாழ்விற்கு மரியாதையை தேடிக்கொடுத்தது.

பெரியவர்களுக்கும் இளையவர்களுக்கும் குற்ற உணர்ச்சி குறைந்து மகிழ்ச்சியாய் தத்தமது வாழ்க்கையில்  ஆனந்தமாய் மூழ்கி  கொண்டிருந்தனர் .

சிறு வயது நேசம்

காதல் கொண்டு அவதாரம் எடுத்து

உணர்வுகளை மற்றவர்கள் கொன்ற போதும்

வீடே சேர்ந்து உருக்குலைத்த போதும்

உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையாய்

உயிர் காதலில் உயிரும் உருக

தடைகற்களை தகர்த்தெறிந்து

அவர்களுக்குள் உயிராய் கலந்தது  காதல்

சத்ரியன்   சாத்வியின் வாழ்வில் .

முற்றும்..