சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி….

“ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க….

“ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள்.

அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்’ என கட்டளையிட

“செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண போனேன். கை ஆட்டோமேட்டிக்கா உன் பேரை தான் அடிச்சது.. அப்படியே சர்ச் பண்ணி பார்த்தா..” என அடுத்த வார்த்தை அவள் வாயில் இருந்த வரவில்லை, வரவிடவில்லை சத்ரி

அன்று ஆழியாய் சுழற்றி சென்றவன், இன்று நேரம் காலம் பாராது ஆழப்பேரலையாய் சுழற்றிச் சென்றான்.

“ உன்னோட காதலை எனக்கு உணர்த்திட்டே…

 என்னோட காதலை நான் உணர்த்த வேண்டாம்” என வாய் வழி சொன்னவன் செயலில் இறங்க…

புயலிடம் சிக்கிய பூவானாள் சாத்வி.

சாத்வியின் உயரினுள்ளே ஊடுருவினாற் போல் அப்படி ஒரு சங்கமம் அங்கே இனிதே ஆரம்பமானது முடிவே யில்லாமல்.

காதலின் வெறியும் நொடிக்கு நொடி ஏறியதே தவிர இறங்கியபாடில்லை.

சத்ரியிடம் மொத்தமாய் கிறங்கித் தான் போனாள் சாத்வி வெகுநேரமாய் தொடர்ந்த காதல் யுத்தம் முடிவு பெற விலகி படுத்தான் சத்ரியன்.

“என்னை மனுஷனா இருக்க விட கூடாது முடிவே பண்ணிட்டாளா இவள்” மனம் அவனை குற்றம் சட்ட, திரும்பி இவளை தான் பார்த்தான்.

உடலை குறுக்கி சுருண்டு படுத்திருந்தாள், மணி பதினென்றரை என காட்டியது.

 தன்னை சரி செய்து கொண்டு டேபிளில் இருந்த வாட்டர்பாட்டிலை எடுக்க, அதில் தண்ணீரும் காலியாகி இருந்தது.

மேலும் பதினொன்று வரை உணவுண்ணாமல் வேறு இவள் இப்படி கிடக்கிறாளே! என தோன்ற  சமையலறை சென்றான்.

கைக்கு கிடைத்த பாதாம் முழுவதையும் மிக்ஸியில் தட்டி பொடி செய்து அதை பாலில் கலந்து கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் எடுத்து செல்ல.

அவனை வழிமறைத்தார்போன்று நின்ற சிவஹாமி…

“ஏண்டா சாத்வி சாப்பிட வரலை.. அவளுக்கு எதுவும் உடம்பு சரியில்லையாடா… பால் மட்டும் எடுத்துட்டு போற” அவன் கையில் இருந்த பாலையும், இன்னொரு கையில் இருந்த தண்ணீர் பாட்டிலையும் பார்த்து இவர் கேட்க.

“ஆமாம்மா…. கொஞ்சம் உடம்பு சரியில்லை” என தடுமாறியபடி படியில் ஏற

“இருடா… நானும் வரேன்” என சிவஹாமி அவனுக்கு முன்பாய் படி ஏற, “ஐய்யோ” என இவன் பதறி

வேகமாய் அவரை தடுத்து ”வேண்டாம்மா… நான் பார்த்துக்கிறேன்” சாத்வி இருக்கும் நிலையை கவனத்தில் கொண்டு தடுமாற

“ ண்டா ஆம்பளை பையன் என்ன செய்வ நீ வழி விடு  நான் பார்த்துக்கிறேன் ” என அவனை தடுக்க

“இல்லைமா….வேண்டாம்” என சத்ரி திரு திரு வென முழித்தபடிமறுக்க

அவனின் முகச்சிவப்பையும், புதிதாய் எழுந்த தயக்கத்தையும் பார்த்தபடியே வந்த  வெங்க்கட்

“அம்மா, அவன் பார்த்துப்பான் வாங்க” என வெங்க்கட் அழைக்க  கண்களாலேயே அண்ணனுக்கு நன்றி சொல்லியபடி தங்களின் அறைக்கு சென்றான்.

“டேய், சாத்விக்கு உடம்பு சரியில்லையாம்டா…. விடுடா” என

“அம்மா இப்போ தான் அவங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கு, கொஞ்சம் ப்ரியா விடுங்க” என வேறு பக்கம் பார்க்க

இந்த பேச்சை கேட்ட பின் மறு பேச்சு பேசுவாறா சிவஹாமி…  சிரித்தபடி சென்றுவிட்டார்.

பாலுடன் சாத்வியை நெருங்கியவன் அவளை தன் நெஞ்சில் ஏந்தி, தண்ணீரை புகட்ட, அதில் லேசாய் எழுந்தமர்ந்தாள்.

தண்ணீழை குடித்தவளுக்கு, மிதமான சூட்டுடன் இருந்த பாலையும் கொடுக்க, அதையும் வாங்கி கொண்டாள். மிதமான சூட்டோடு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே சென்றது. குடித்து முடித்தவள் லேசாய் கண் விரித்து பார்த்தாள்.

“தூங்கு”  களைப்பு தீர உறக்கம் மட்டுமே வழி என அவளை உறங்க வைக்க மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள

“சாத்வி ஷிவா அண்ணாவும் அண்ணியும. கிளம்புறாங்க….உன்னை பார்க்கனுமாம்” என சத்ரி எழுப்பிய பின்பே கண் விழித்தாள் சாத்வி.

“என்னம்மா உடம்பு சரியில்லையாமே! என்னாச்சு?” என ஆளாளுக்கு விசாரிக்க, “ஹோட்டல் சாப்பாடு சேரலை போல” என சொல்லி இவள் சமாளிக்க

“ஏதாவது புட் பாய்சன் ஆகி இருக்க போது.. டாக்டர்கிட்ட போய்ட்டு வரலாம்ல” சிவா கூற

“இல்லை இப்போ பரவாயில்லை மாமா.இனி் ஏதாவது பிரச்சனைனா போறேன்” என்றவள் “இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே மாமா” என கூற

“ட்யூட்டி அழைக்குது என்ன செய்ய? அடுத்த லீவ் எடுத்த மறுபடியும் வரோம் சாத்வி” சிவாவும் கூறிவிட்டு, மற்றவர்களிடமும் சொல்லி கொண்டு ஷிவா கஸ்தூரி கோகுல் மூவரும் கிளம்பிச் சென்றனர், செல்லும் போது கூட “உனக்கெல்லாம் ரொமான்ஸ் கிளாஸே அதிகம். இதில் ஸ்பெஷல் கிளாஸ் வேறயா?” இவர்களை கண்டு கொண்டவன் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்க

“அய்யோ, சும்மா இருக்க மாட்டீங்களா!” இவன் பதற

“அப்போது ஸ்பெஷல் கிளாஸை வேணா கட் பண்ணிட சொல்லவா?” என கூறியவர் சாத்வி என அழைக்க,

ரசகளமானது அங்கே..! வழக்கம் போல் சத்ரியை ஒரு பாடு படுத்தி விட்டே சென்றான் ஷிவா.

————-

இரவில் மொட்டை மாடியில் இருந்த சத்ரியை தேடி வந்தாள் சாத்வி.

“சத்ரி தூங்க வராமல் இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என அவன் அருகில் தரையில் அமர்ந்தாள்.

அவளையே விடாமல் பார்த்தவன் “எட்டு வலுஷமா தான் இந்த காதலா? இல்லை அதுக்கும் முன்னாடி இருந்தா” என கூர்மையாய் பார்க்க

இந்த முறை கொஞ்சமும் பயமில்லை அவளிடம்.. “பிறந்ததில் இருந்து” என அவன் தோள் சாய…

“விளையாடாத சாத்வி…. உண்மையை சொல்லு” என….தூண்ட…

“நீ கோப படக் கூடாது…. படலைன்னா சொல்றேன் இல்லைனா வேண்டாம்” என சத்ரியின் மனைவியாய் உரிமையில் அவனிடம் வம்பிழுக்க

“நடந்தது ஒன்னு விடாமல் சொல்ற  இல்லை மொட்டை மாடின்னு கூட பார்க்க மாட்டேன்” என அவளை ஊடுருவ

“ஏன் என்ன செய்வீங்களாம்”  என சீண்ட

சத்ரி பிடித்த பிடியில், அவன் கைகளை தட்டி விட்டவள்

“வெயிட்  வெயிட் சொல்றேன் ” என மூச்சு வாங்கியபடி அவனிடம் இருந்து பிரிந்தவள் இயல்புக்கு திரும்ப பல நிமடங்களானது.

சத்ரியை முறைத்து நின்றவளை மீண்டும் நெருங்க… அவசர அவசரமாய் அவனிடம் சொல்ல தொடங்கினாள் மீதி கதையை  இன்னும் அவனின் காதல் வெறியை ஏற்றி விடப் போகிறோம் எனத் தெரியாமலேயே.

“நீ் ஊரை விட்டு போனப்ப கூட உன்னை வெளியில் தேடலை அவ்வளவு தான். ஆனால் என்னோட மனசுக்குள்ளயே ரொம்ப நாள் தேடிட்டு இருந்திருப்பேன் போல சத்ரி

பேஸ்புக்கில் உன் பேரை ஆட்டோமேட்டிக்கா என் கை டைப் பண்ணி தேட ஆரம்பிச்சிடுச்சு…

தேடினதில் என் கண்ணுக்கு விருந்தாவே கிடைச்சது உன்னோட நிறைய போட்டோஸ்  சும்மா சொல்ல கூடாது…  ஹீரோ மாதிரி இருந்த…  உன் போட்டோவை பார்க்கிறதே புது எனர்ஜி கிடச்ச மாதிரி இருந்தது…

 உனக்கு சத்ரயின்னு பேரு வைக்கிறதுக்கு பதிலா…  பூஸ்ட் ஹார்லிக்ஸ்ன்னு பேர் வச்சு இருக்கலாம்ன்னு அப்போ அப்போ நினைச்சுப்பேன். ஸ்ஸப்பா…  என்ன எனர்ஜி அதில் தான் படிக்கனும், வேலைக்கு போகனும்ன்னு உத்வேகம் கிடச்சது” என அவள் சொல்லிக் கொண்டருக்க….

சத்ரியோ உணர்வுகளை வெளியில் காட்டமல் கண்மூடி சாய்ந்திருக்க…

“நான் இங்கே எவ்வளவு ஆசையா சொல்லிட்டு இருக்கேன்…  நீ என்னடான்னா.. தூங்கிட்ட” என அவனின் மடியில் படுத்தவள்.

உனக்காக என்ன என்ன செஞ்சிருக்கேன் தெரியுமா…

உனக்காக கோழி திருடினேன். எங்கே என் அப்பாக்கு தெரிஞ்சிடுமோன்னு பயந்து செந்தில் வீட்டிலேயே குழம்பு சூப் வைக்க சொல்லி உனக்கு கொண்டு வந்து கொடுத்தேன்.

உன்னை அடிச்ச ஷிவா மாமாக்கு அடி வாங்கி விட்டேன்.

பேஸ்புக்ல் டெய்லி உன்னை சைட் அடிப்பேன்” என ஆரம்பித்தவள் கல்லூரி காலங்களில் இவள் செய்த அட்டகாசங்களை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி கொண்டிருக்க..

ஒவ்வொன்றையும் கேட்க கேட்க தீயாய் எறிந்தது மனம்.காதலை சொல்லாமல் தவியாய் தவித்த சாத்வி, மூடிக்கிடந்த இவன் கண்களுக்குள் உலா வர, இது எதையும் அறியாமல், அவளை அம்போவென விட்டு வந்த மடத்தனத்தை எண்ணி  உயிரோடு செத்து கொண்டிருந்தான் சத்ரி.