“ கூறு கெட்டவனுங்க.. வெங்க்கட்க்கு தான் சாத்வி குரல் தெரியாது, பெத்த அப்பனுக்குமா தெரியலை. வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்ததும் இல்லாமல் பந்தா வேற அவனுக்கு” என வண்டியில் வரும் போது சங்கரனையும், வெங்கட்டையும் திட்டியபடியே வந்தார் விநாயகசுந்தரம்.
அதை கவனிக்காமல் சத்ரியும் ஏதோ நினைவில் வண்டியை ஓட்டியபடியே வந்தான்.
வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை இறக்கிவிட்டுவிட்டு “அப்பா , நீங்க போங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. வந்துடுறேன்” என பைக்கை அப்படியே திருப்பி கொண்டு சென்று விட்டான்.
வேலையை முடித்து கொண்டு சத்ரி மீண்டும் வீடு திரும்ப ஒரு மணி்நேரத்திற்கும் மேலானது.
திரும்பி வந்த போதோ, ஆளாளுக்கு ஒரு புறம் அமைதியாய் அமர்ந்திருக்க, அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது திவ்யாவின் பேட்ரி கார் மட்டும் தான்.
சத்ரியும் அமைதியாய் விநாயகசுந்தரம் அருகில் வந்து அமர்ந்தான். மற்றவர்களின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து பல்லை கடித்தபடித்தபடி “ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?” கேட்டவன் “உன் உன னார் அனுப்பின கப்பல் கவுந்திடுச்சோ” என வெங்கட்டிடம் கேட்க
“டேய், சும்மா இருக்க மாட்டீயா நீ” என விநாயகசுந்தரம் பல்லை கடிக்க அவரின் சத்தத்தில் மற்றவர்கள் சத்ரியை பார்க்க
“மெதுவாவே கடிங்கப்பா, இருக்கிற பத்து பல்லும் உடஞ்சு விழுந்துடபோகுது” என இருபுருவங்களையும் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்று ‘ஏண்டா நீ அடங்கவே மாட்டியா?’ என்ற தந்தையின் பார்வைக்கு ‘மாட்டவே மாட்டேன், அடங்கவே மாட்னேன்” என பதிலுக்கு ஒரு லுக் கொடுத்து நிற்க
சத்ரியின் குணம் தெரிந்தவராய் “எல்லாரும் சாத்வியை பத்தின கவலையில் இருக்காங்க.. நீயும் ஏண்டா, சாவடிக்க..” என நிஜமாகவே நைந்த குரலில் கேட்க…. “செய்றதெல்லாம் செஞ்சுட்டு கவலை பட்டா ஆச்சா?” சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்து தன் அறைக்குள் சென்று மறைந்தான் சத்ரி.
அவன் பின்னேயே சென்ற சிவஹாமி.. சத்ரியின் அறை வாசலில் நின்றபடி “வா மஹா” என அழைத்தார்.
குரல் கேட்டு ‘இவங்க இரண்டு பேரும் எதுக்கு நம்ப ரூம்க்கு வந்திருக்காங்க?’ என்ற யோசனையுடன் இவன் எழுந்து நிற்க
“ உட்கார் மஹா” என மஹாவிற்கு ஒரு சேரை எடுத்துப் போட்டபடி, சத்ரியிடம் திரும்பி “சாத்வி எங்கடா இருக்கா” என சிறிதும் தயக்கமில்லாமல் கேட்டார்
‘ஓ.. இது தான் விசயமா?’ என, கட்டிலில் சுவாதீனமாய் அமர்ந்தபடி “பெத்தவங்க அவங்களுக்கே தெரியலையாம் எனக்கு எப்படி தெரியும்?” என மஹாவையும் விட்டுவைக்காமல் பேச…
“ஆனால் பெத்தவங்களை விட நீ அதிகமாக பாசம் வச்சு இருக்கறவனாச்சே.. உனக்கு கண்டிப்பா தெரியும் சொல்லு” என சிவஹாமி விடாமல் கேட்க….
“ ம்ப்ச்! அது தான் சொல்றேன்ல தெரியாதும்மா” என மீண்டும் சொல்ல
இம்முறை மஹா இடையில் புகுந்தார் “சத்ரியா நான் பொறுப்பில்லாமல் சாத்வியை அனுப்பியது தப்பு தான்! தைரியமான பொண்ணுன்னு தான் நான் கவலை படாம இருந்தேன்… இங்கே வந்தப்பறம் தான் உண்மையான நிலைமை உரைக்குது. சாத்வி பத்திரமா இருக்காளா? இல்லையா? இதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லுப்பா.. வேற எதுவும் எனக்கு தெரியவேண்டாம்” என மஹா வருத்தம் தோய்ந்த முகத்துடன் கேட்க
“பாவம்டா மஹா…. இங்கே வந்ததிலிருந்து சாத்வியை பற்றி தெரியாமல், அவளுக்கு என்னாச்சோன்னு கதி கலங்கி போய் இருக்கா பதில் சொல்லுடா” என சிவஹாமி சற்று சத்தத்தை கூட்ட
“பத்திரமா இருக்கா! அவ்வளவு தான் தெரியும்” என திரும்பி நின்று கொண்டான்
அவன் பதிலில் மஹாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது “இது போதும் சத்ரியா, இது போதும்” என வழிந்த கண்ணீரை துடைத்தபடி செல்ல, அவர் நென்றதை உறுதிபடுத்திய
சிவஹாமி “அவளை நாளைக்கே நம்ப வீட்டிற்கு கூட்டி வா ” என கட்டளையிட
இடுப்பின் இருபுறமும் கை வைத்து சிவஹாமியை முறைத்து “எனக்கு சாத்வியை பத்தி தெரியும்னு, உனக்கு யாரு காட்டிக் கொடுத்தாங்க?” என கேட்க….
“வேற யாரு…. உன் முகம் தான் காட்டிக் கொடுக்குது” என சிரிப்புடன் சொல்ல
புரியாத மாதிரி நின்றிருந்த சத்ரியை பார்த்து “ நடிக்காத டா… சாத்வி சந்தோஷமா இருக்காளா… இல்லை கஷ்ட படுறாளான்னு இந்த முகத்தை வச்சே கண்டு பிடிச்சிடலாம்… சொல்லு சாத்வியை பத்தி எந்தளவுக்கு தெரியும்” என கேட்க
“ அப்படியேவா காட்டிக் கொடுக்குது” என அருகே இருந்த கண்ணாடியில் முகத்தை அப்படியும் இப்படியுமாய் திரும்பி பார்த்தான்
“ டேய் சொல்லுடா” என பொய்யாய் மிரட்ட..
“அப்பாவை இறக்கி விட்டுட்டு நான் அவளை தேடி தான் போனேன்மா! ஆனா அவளை பார்க்க முடியலை. ஆனால் சேப்டியா இருப்பா” என கூற
“இருப்பாளா….? ஏண்டா உங்கப்பா சொல்ற மாதிரி எல்லார் வயித்திலேயும் புளியைக் கரைக்கிறது தான் உன் வேலையா ‘பத்திரமா இருக்கான்னு’ முதல்ல சொன்ன? இப்போ சேப்டியா இருப்பான்னு’ சொல்ற.. எங்கடா இருக்கா சாத்வி… உனக்கெப்படி தெரியும்” என கேள்விகளை அடுக்க
“இப்போதைக்கு சாத்வி பேங்கில் வேலை பார்க்ககுறா, அது மட்டும் தான் தெரியும்… நிஜமா வேற எதுவும் எனக்கு தெரியாது, பேங்கில் வேலை பார்க்குறதால, எப்படியும் நல்ல சம்பளம் வரும், அப்போது பிரச்சனை இல்லாமல் தானே இருப்பா.. அதை வச்சு தான் சொன்னேன்” என காட்டமாய் இவன சொல்ல
“சரி விடுடா, மத்த எதுவும் கேட்கலை… ஆனா…. பேங்கில் வேலை பார்க்குறது எப்படி தெரியும்” என கேட்க..
‘இது மட்டும் சொல்லு.. சொல்லுன்னு எல்லாத்தையும் என்கிட்ட கறந்துடு” முறைத்துவிட்டு அதற்கு மேல் பதில் பேசாமல் போய் படுத்துக் கொண்டான்.
‘இவன்கிட்ட கேட்கிறதுக்கு இந்த செவத்துகிட்ட கேட்கலாம் போல’ என சத்தமாய் கூறிவிட்டு, பதில் கிடைக்காத கடுப்பில் சென்று விட்டார் அவன் அன்னை.
கட்டிலில் கிடந்தவனோ சாத்வியை தேடிச் சென்ற நினைவில் மூழ்கினான்.
தந்தையை வீட்டில் விட்டுவிட்டு.. தன் பைக்கில் மீண்டும் அதே ஹோட்டல் வந்தான்…
தாங்கள் உணவருந்திய இடத்திலிருந்து சாத்வி சென்ற திசையில் லிப்டில் வேகமாய் செல்ல… அதன் முடிவில் இருந்தது கான்ஃபரன்ஸ் ஹால்.. உள்ளே சென்று ‘எதற்காக இங்கே வந்திருப்பாள்… கான்ஃபரன்ஸ் மீட்டிங் போடுற அளவு என்ன வேலை பார்க்கிறாள்?’ என ஆராய… அந்த ஹால் முற்றிலும் சுத்தப்படுத்தபட்டிருக்க… வேறு வழி இல்லாமல் ரிசப்சன் சென்று விசாரித்தான்.
அந்த மீட்டிங்கிற்கு நிறைய ஆட்கள் வந்திருந்தாலும், அது நிறைய கிளைகள் கொண்ட தலைசிறந்த பேங்க் ,என்பதால் கேட்டதும் விவரம் கிடைத்தது… பேங்கின் பெயர்,எந்த கிளை என்பது போல் பொதுவான விபரங்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது ‘ஓ…மேடம் பேங்கில் வேலை பார்க்கிறாங்களா..?’ என நிம்மதி அடைந்தான்.
தனிப்பட்டு ஒரு பெண்ணை விசாரிப்பது சரியில்லை என வந்த வழியே திரும்ப… சாத்வியை தனக்கு அறிமுகப்படுத்திய கண்ணாடியின் அருகே சென்று , அவன் வரைந்த வரிவடிவம் இல்லாத போதும் அங்கே நின்று , தன் கைகளால் வருடி, ஒரு நிமிடம் நினைவில் அழுந்திக் கிடந்தவன்,அதன் பின் கிடைத்த விபரங்களுடன் தன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
ஆனால் தன் முகத்தை வைத்தே ,சாத்வியை பற்றிய விசயங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கா தான் வெளிப்படையாய் இருக்கிறோம் என சிரித்துக் கொண்டான்.
இதோ இப்போதும் அவளின் நினைவுகள்… வரி வடித்தை வரைந்த கைகள், அதன் நெளிவு சுளிவுகள்… இன்னும் இன்னும்…. ஏதேதோ நினைவுகளில் மனம் செல்ல..
‘சே….’ என தன் உணர்வுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து , ஒரு வழியாய் தூங்கிப் போனான்.
சிவஹாமி ,சாத்வி பேங்கில் வேலை செய்கிறாள் என மஹாவிடம் சொல்லிவிட.. மனதில் வலம் வந்த அத்தனை தெய்வங்களுக்கும் நன்றி உரைத்தபடி வெகு காலங்களின் பின் நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தான். மகளை பற்றி முதல் முறையாய் கவலையில் ஆழ்ந்து உறக்கத்தை விட்டார் சங்கரன்.
மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பியவன் சென்ற இடம் சாத்வியின் கிளை அலுவலகம். அவ்வளவு பெரிய கட்டிடத்தில் இரண்டாம் தளம் முழுவதும் அந்த பேங்க் ஆக்ரமித்திருந்தது.
உள்ளே நுழைந்தவன், சாத்வியை பற்றி எப்படி விசாரிப்பது என தெரியாமல், அவனது கண்கள் அந்த தளம் முழுவதும் அலசியது சிக்கவே இல்லை சாத்வி.
இவள் என்ன போஸ்டிங்ன்னு கூட தெரியலையே? ‘கிளார்க்’ ‘ஆபிசர்ஸ்’ என்றால் கண்களில் தட்டுபடுவாளே? என பேங்கின் ஒவ்வொரு கேபினையும் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டிருந்தான். “ ம்ஹூம்.. சிக்கவே இல்லையே..” என சாத்வியை அதில் காணாமல் கண்கள் அலைபாய்ந்தன.
கொஞ்சமும் பொறுமை இல்லை! பொறுமையற்றவனின் விழிகள் ஒரு மூலையில் நிலை குத்தி நின்றது!
Ms.S.Sadhvi ( personal manager) என்ற எழுத்துக்கள் வெள்ளி நிறத்தில் மின்னியது. பார்த்த சத்ரியின் கண்களும் மின்ன ‘ஓ மேடம் பெர்சனல் ஆபிசரா..’ என இதழ்களில் புன்னகை தவழ, அவளது அறைக்கு தாமகவே சென்றன அவனது கால்கள்.
“எங்கே சார் போறீங்க..” என்ற குரலில் சட்டென திரும்பி விழித்தவன் ”சாத்வி… சாத்வி மேடம் பார்க்கனும்” என கேட்டான்.
“என்ன விசயமா பார்க்கனும்” என மீண்டும் கேட்க
சட்டென “ லோன் எடுக்கனும், அது பத்தி பேசனும்” என
“ஓ..அவங்க மேனஜர் ரூமில் இருக்காங்க..வந்ததும் பாருங்க” என கம்யூட்டருக்குள் தலையை புதைத்துக் கொண்டாள் அந்த பெண். உடனே அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
வெகு நேரம் கழித்தே மேனஜர் அறையிலிருந்து சாத்வி வந்தாள். கையில் ஏதோ ஓர் ஃபைல் அதை பிரட்டியபடியே தன் தனி அறையினுள் நுழைந்தாள்.
அவள் பின்னேயே ஒட்டினாற் போலவே இவனும் எழுந்து வந்தான். அவள் சேரில் சென்று அமரும் வரையிலும் பின்னேயே வந்தான். அதை அறியாத சாத்வி கையில் வைத்திருந்த பைலை ஒரு புறமாய் வைத்து நிமிற அவளை ஊடுறுவிக் கொண்டிருந்தான் சத்ரி.
பார்த்தவளுக்கு பக் என்றானது.. ஆனாலும் ஓர் நிமிடம் தான் அவள் அதிர்ச்சி எல்லாம்.. அடுத்த நொடி இவளும் அவனை பார்க்க.. அவள் பார்வையில்
’ யார் இவன்’ என்ற சந்தேகமும் இல்லை
‘எதற்காக வந்திருக்கிறான்’ என்ற கேள்வியும் இல்லை
‘இப்படி பார்க்கிறானே’ என்ற பிடிக்காத முக பாவனையும் இல்லை
‘என்னை பார்க்க வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆனதா… ’ என்ற உணர்வே அகளின் முகம் தாங்கி நிற்க
அதை சரியாய் கண்டு கொண்டவனோ அதிர்ந்தே போனான்.
‘எப்படி என்னை தெரியும்‘ என்ற நினைவே ஓடியது… ‘ஹோட்டலில் வைத்து தான் முதல் சந்திப்பா… ? இல்லை அதற்கு முன்பே என்னை தெரியுமா..?’ என பட்டிமன்றமே நடத்தும் அளவு இருந்தது அவளின் பார்வை.. அதற்குள் இன்டர்காம் அழைக்க அவனை பார்த்தபடியே எடுத்து பேசினாள்..
அந்தபுறம் என்ன கேட்டார்களோ.. “வரேன் சார்” என
அதே பைலை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“கொஞ்சம் வேலை இருக்கு, வெயிட் பண்றீங்களா… இல்லை? “ என கேள்வியாய் கேட்க..
“மறுபடியும் வெயிட் பண்ண முடியாது” என கெத்தாய் பதில் கூறி.. டேபிளில் இருந்த அவளின் மொபைலை எடுத்து ஆன் செய்ய.. அது பாஸ்வேர்ட் கேட்டது.
“பாஸ்வேர்ட் என்ன” என போனில் பதிந்த பார்வை நிமிராது கேட்டான் சத்ரியன்.
சாத்வியோ..பதில் சொல்லாமல் மொபைலுக்காய் கை நீட்டினாள் .
“இல்லை பாஸ்வேர்ட் சொல்லு “ என பிடிவாதமாய் சத்ரி கேட்க
நீட்டியை கையை மடக்கி தன் ஆள் காட்டி விரலால் மொபைலின் பின்புறம் இருந்த சென்சாரில் அழுத்த மொபைலின் லாக் திறந்தது… அதுவரை அவள் போனை பார்வையிட்டுக் கொண்டிருந்த சத்ரியின் விழிகள்.. அவள் முகத்தையும் கொஞ்சம் பாரேன் என அவளின் நீட்டிய வெண்டை பிஞ்சு விரல்கள் கட்டளையிட அவளை நிமிர்ந்து பார்த்தான்…
சாத்வியின் கூர் விழிகள் அவனை ஊடுறுவ.. சட்டென ..
அவள் மொபைலில் பார்வை பதிய ,அதிலிருந்து தன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து, அதை சேவ் செய்து… அவளிடம் மொபைலை நீட்டி.. . “ ஈவ்னிங் பார்க்கனும் ,கொஞ்சம் பேசனும்.. டைம் அன்ட் பிளேஸ் நீயே பிக்ஸ் பண்ணிடு… சிக்ஸ் டூ செவன் ..எப்போனாலும் ஓகே.. மேசேஜ் பண்ணு இல்லை கால் பண்ணு..” என முகத்தை பார்ப்பதை தவிர்த்து சென்றுவிட்டான்.