சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?”

கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட்

“சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை  ஞாபகம் வச்சுக்கோ! அப்பன் மகள் என்னமும் பண்றாங்க… உனக்கென்ன வந்தது?“ என பேசிக் கொண்டே சென்றவன் , அவனை அழுத்தமாய் பார்த்து “ஒரு வேளை அவளை நீ கல்யாணம் பண்ண பிளான் போடுறீயோ… ” என வெங்க்கட் நக்கலாய் கேட்க

“எனக்கு பிடிச்சிருந்தா இந்நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன்! மாமாட்டயே  போய் கேட்டு இருப்பேன், ‘பொண்டை கொடுப்பியா இல்லையான்னு’  உன்னை மாதிரி நான் கிடையாது” சற்றும் தயங்காமல் இவனதௌ மூக்குடைக்க

 இனியும் பேசுவானா? நம் வெங்க்கட், ‘என்னமும் பண்ணி தொலை’ கத்திவிட்டு அங்கிருந்து அகன்றான் வெங்கட்.

மேல் அறையில் ஓய்வெடுக்க சென்ற சங்கரனோ, ‘சத்ரியின் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்’ என அவனை தேடிக்கொண்டு மீண்டும் கீழே வந்தார். வந்தவரின் செவிகளில், வெங்கட், சத்ரியின் பேச்சுகள் முழுதாய் காதில் வந்து விழுந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அனைத்தும் சங்கரன் கேட்டு விட கோபம் எகிறியது இவருக்கு.

 சாத்வியின் மீது தனக்கில்லாத பாசமா? என நினைக்கும் போதே ‘பிடிச்சிருந்தா மாமாட்டயே கேட்பேன்..’ என்ற வார்த்தையில்

சங்கரன் சற்றே அதிர்ச்சியுடன் சத்ரியை பார்க்க, சத்ரியும் அவரை பார்த்துவிட்டான் ‘இவர் எப்போ வந்தார்‘ என்ற சிறு பார்வை மட்டுமே

‘சத்ரிக்கு.. சாத்வியா? முடியவே முடியாது! என முடிவே எடுத்துவிட்டார் சங்கரன்..

பலத்த யோசனையின் பின்னே ‘எதுக்காக இங்கே வந்தோமோ…  அந்த வேலையை முதல்ல ஆரம்பிக்கனும், இல்லைன்னா சாத்வி இவனுக்கு வாக்கபடுறாளோ என்னவோ, நான் இவனுக்கு வாக்கப்படுருவேன் ’ என  பயம் பிடித்து கொண்டது இவரை.

அதன் பின் களைப்பெல்லாம் பறந்தோட, விநாயகத்திடம் சென்றார்.

“வாடா.. வா..” என அறையினுள் அவரை அழைத்தவர் “உட்கார்” என கூற

“உட்கார எல்லாம் நேரமில்லை” என சோர்வாய் கூறியவர் “சாத்வியை பார்த்துட்டு வந்துடுறேன் மச்சான்” என கிளம்ப..

சங்கரனை வினோதமாக பார்த்த விநாயகசுந்தரம்  “இப்போ தானே உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னேன். முதலில் கொச் நேரம் போய் படுடா…   உன் மகளை பத்தி அப்புறமா யோசிக்கலாம். சத்ரி சொன்ன மாதிரி எல்லாம் எதுவும் ஆகாது. நீ பயப்படாமல் இரு” என சமாதானமாய் பேச

“ இல்லை மச்சான்… ” என பேச வர

“அப்போவே ஆறு மணிக்கு மேல ஆச்சு, இனி போய் தேடி கஷ்டம். காலையில் பார்க்கலாம் சங்கரன்,போய் தூங்கு” என அக்கறையான பேச்சும்,  கூடவே  “இத்தனை நாளா  புள்ளையை பத்தி கவலை இல்லை. ஒரு ராத்திரியில் என்ன ஆக போகுது”  என கடிந்து அவரை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

காலையில்..

முதல் ஆளாய் கிளம்பி சாத்வியை பார்க்க, சங்கரன் அவதி அவதியாய் கிளம்ப “காலையில் இருந்து இவன் அலம்பல் தாங்க முடியலப்பா” என முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்ட விநாயகசுந்தரம்

“நீ தனியாவா போற” என்றவர் “ஒரு நிமிஷம் இரு” என சங்கரிடம்  கூறியவர் , மாடியை பார்த்தபடி திரும்பி சத்ரியை அழைத்தார்.

“என்னப்பா” என மாடியில் இருந்து இவன் இறங்கி வர

“ ஒரு சின்ன வேலைடா.. ப்ரியா இருக்கியா?”

“ ப்ரி.. தான்பா.. என்னன்னு சொல்லுங்க”

“நம்ப சாத்வி தங்கி இருக்கிற லேடீஸ் ஹாஸ்டல் போகனும்.. காரை எடுடா.. போய் சாத்வியை கூட்டிட்டு வந்துடலாம்.” என கேட்க

“ஓ.. இப்போவாவது  மகள் நியாபகம் வந்ததே” என கேலியாய் கேட்டு பின் “ஏதோ ஓர் ஹாஸ்டல் பேர் சொன்னீங்களே” என யோசித்தவனுக்கு ஹாஸ்டல் பெயர் நினைவு வர  “அவள் அங்கே இருக்க மாட்டா….” என கூலாக கூறினான்.

 “நீ டக்குன்னு பதில் சொல்றத பார்த்தா.. அல்ரெடி சாத்வியை தேடி ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துட்ட போல” அவர்களின் அருகே நின்றிருந்த வெங்கட்  சந்தேகமாய்  கேட்க

“வாயை மூடுடா, எருமை” அண்ணன் என்றும் பார்க்காது  பேச

வெங்க்கட்டோ, “கண்டுபிடிக்கேன்டா, கண்டுபிடிக்கேன்”  என இவன் முறைக்க

 ‘இவன் என்ன நேரில் போய் பார்த்த மாதிரி சொல்றான்’ என சங்கரன் குழப்பமாய் பார்த்திருக்க..

“இப்போ வரை அது ரொம்ப ரொம்ப சாதாரண ஹாஸ்டல் தான். ஆறு மாசம் தாக்கு பிடிக்கிறதே கஷ்டம்.. இத்தனை வருசமா ஒரே ஹாஸ்டல்லில் இருக்க சான்ஸ் இல்லை, கண்டிப்பா வேற ஹாஸ்டல் தேடி போய் இருப்பா” என்றான் அவளை முழுவதும் அறிந்தவன் போன்று.

‘ இவனுக்கு எப்போ பார்த்தாலும் இதுதான்வேலை…  நாம ஒன்னு சொன்னா, இவன் ஒன்னு சொல்றான் பாரு..’ என முறைத்த விநாயகசுந்தரம்

“எப்படியும் அவள் அங்கே இருக்க போறது இல்லை…  டைம் தான் வேஸ்ட்.. வேண்டிய எல்லாம் என்னால் அலைய முடியாது. எனக்கு வேலை இருக்கு  உங்க கூட வெங்க்கட்டை வேணும்னா கூட்டிப் போங்க” என கிளம்பிச் சென்றுவிட்டான்.

பெற்றவர்கள் கூட கணிக்க தவறவிட்ட ஒரு விசயம் சத்ரியால் சரியாய்  கணிக்கப்பட.. ‘இவன் சொல்லி கேட்பதா’ என

 “நான் போய் பார்த்துட்டுவரேன். மச்சான் ஒருவேளை இருந்தா கூட்டி வாரேன்” என கிளம்ப

“டேய் நீயாவது கூட போடா” என வெங்க்கட்டை  கூற

ஏற்கனவே ‘அப்பா சாத்வியை பார்க்க போறாங்க…  நீங்க கூட்டிட்டுப்போங்க..’ என ஒரு மணிநேரமாய் வெங்க்கட்டை படுத்தி இருந்தாள் க்ருத்திகா.

தெரியாத ஊரில் சங்கரை தனியாக விடவா என எண்ணிய வெங்க்கட்டும் “வாங்க மாமா நான் அழைச்சுட்டு போறேன்…  சாத்வி அங்கே இருந்தா கூடவே கூட்டிட்டு வரலாம்” என கூறி காரை எடுத்து வந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சாத்வியை தேடி சென்றனர் வெங்க்கட்டும் சங்கரனும்.. ஐந்து வருடங்களுக்கு முன் தாயின் கைகளில் திணித்து விட்டு சென்ற அதே ஹாஸ்டலின் அட்ரெஸ்.

ரிசப்சனில் “சாத்வி “ என்ற பெயரை மட்டும் வைத்து  விசாரிக்க

“ நீங்க….” என்றார் ஹாஸ்டல் வார்டன்…

“ நான் சாத்வியோட அப்பா..”

“ஓ… இப்போ அவங்களுக்கு ஒர்க்கிங் அவர்ஸ்..ஈவ்னிங் வந்து பார்த்துக் கோங்க..”

“இல்லை இப்போவே பார்க்கனும், அவளோட போன் நம்பர் இருந்தா கொடுங்க”

வித்யாசமாய் பார்த்தார் அந்த வார்டன்.. “அப்பான்னு சொல்றீங்க?  மகளோட போன் நம்பர் எப்படி  தெரியாம  போகும் “

திரு திருவென விழித்தார் சங்கரன்.. அதற்குள் சட்டென உள் புகுந்தான் வெங்க்கட்.. “அது சாத்வி போன் நாட் ரிச்சபிள்ள இருக்கு.. கொஞ்சம் அர்ஜெண்டா பார்க்கனும் ஆபீஸ் நம்பர் கொடுங்க“ என வெங்கட் எளிதாய் சமாளித்தான்..

இன்னும் நம்பாத பாவனை பார்த்தார்.. வார்டன்…

அதை புரிந்தார் போல் “நீங்களே நம்பர் டயல் பண்ணி கொடுங்க மேடம். நம்பர் கூட எங்களுக்கு சொல்ல வேண்டாம்” என வெங்க்கட் மரியாதையாய் பேசயதால்

“ம்…” என சம்மதித்து அவர்களுக்கு தெரியாமலேயே நம்பரை டயல் செய்து சாத்வியை அழைக்க..

“சாத்வி உன்னோட அப்பா வந்திருக்காங்க… உன் மொபைல் ரிச்சபிள்ள இல்லை போல. அதான் தேடி ஹாஸ்டல் வந்திருக்காங்க.. பேசுறியாமா” சங்கரின் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே பேச….

“ ம்… கொடுங்க மேடம்….” என்றாள் சாத்வி

“ ஹலோ…  சாத்வி …  எப்படிமா இருக்க..” தெளிவாய் பேச நினைத்தாலும் குரல் நடுங்கியது..

“ நல்லா இருக்கேன் பா…  உங்க குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு….” என சட்டென லகுவாய் பேசினாள் சாத்வி..

“ ந…ந….நல்லா தானேம்மா  இருக்கு… ” என ஒரு மாதிரி உணர்ந்தார் சங்கரன்.

“எனக்கு ஏதோ வித்யாசமா தான் தெரியுதுப்பா.. அது இருக்கட்டும்… என்னப்பா திடீன்னு ஹாஸ்டல் வந்திரிக்கீங்க” என சாதாரணமாய் பேச…  சங்கரனுக்கு ஆச்சர்யம் தாள வில்லை.. இவ்வளவு அமைதியாய் பேசுவது அவள் தானா…! என

அவளின் திருமண விசயமாய் தான் பேச வந்திருக்கிறார்.. ஆனால் எங்கே கல்யாணம் என்றால் பேச மாட்டாளோ என பயந்து.. “சும்மா தான் பார்க்க வந்தேன்…. இப்போ இங்கே வெயிட் பண்றேன் வர்ரியாம்மா “ என கேட்க

“அப்பா ஆபீஸில் ஆடிட்டிங் வொர்க் நடக்குப்பா…. நான் வர நைட் 9 மணி ஆகிடும். அப்போ வாங்கப்பா”

“அப்படியா…. சரிம்மா” என்றார் கொஞ்சம் ஏமாந்த குரலில்

“நீங்க எங்கேப்பா தங்கி இருக்கீங்க” அந்த ஏமாந்த குரலை தோன்றும் வகையில்

“நம்ம விநாயகசுந்தரம் வீட்டில் தான் இருக்கேன்மா” பளிச்சென்ற முகத்துடன்

“ யாருப்பா அது “ என புரியாமல் கேட்க….

“ என்னம்மா , உன் மாமா  பெயரையே மறந்திட்ட போல” என கேட்க

“மாமாவா…?  தெரியலையேப்பா, திருச்சியில் நம்ம சொந்தகாரங்க யார் இருக்கா” என யோசித்தவள்

“சரி நீங்க அந்த மாமா வீட்டிலேயே இருங்கப்பா… நைட் வாங்க… வார்டன்கிட்ட போனை கொடுங்கப்பா நான் இன்பார்ம் பண்ணிடுறேன்” என சொல்ல

“இதோ கொடுக்கேன் மா”  என ரிசீவரை அவரிடம் கொடுக்க….

“அப்பா நைட் வந்தா வெயிட் பண்ண சொல்லுங்க மேடம்…. நான் வந்துருவேன்”  என வைத்துவிட்டாள்.

இரவில் வருவதாய் சென்றுவிட்டனர் இருவரும்.

வெங்க்கட்டிற்கு நிம்மதி ‘சத்ரி சொன்னது போல்  அவள் இங்கே இல்லை என்றால்?  எங்கே தேடுவது’  என்ற குழப்பம் தீர்ந்து  நிம்மதி அடைந்தான்.

சங்கருக்கு பேரானந்தம் ‘தன் மேல் கொஞ்சமும் கோபம் இல்லாமல் தன் மகள் தன்னிடம்  பேசிவிட்டாள் ‘ என

மகிழ்ச்சி குமிழிட வீட்டிற்கு வந்தனர் இருவரும். எதிர்பார்ப்புடன் இருந்த மஹாவிடம் தான் முதலில் சொன்னார் சங்கரன் .

 “சாத்விகிட்ட பேசினேன் மஹா…. நைட் வர சொல்லி இருக்கா” என நடந்த உரையாடலை கூற எல்லோருக்கும் ஒரு நிம்மதி.

அடுத்து கடந்த சில மணித்துளிகள் சாத்வியை பற்றிய பேச்சு தான்.  ஆனால் மஹா தான் ஏற்க வில்லை. யோசனையுடன் இருந்தவரிடம் வந்த சிவஹாமி…  “சாத்வி தான் வரப் போராளே ,அப்புறம் என்ன யோசனை மஹா ?” என இவர் கேட்க

 “சாத்வி எப்படி இவர்கிட்ட போனில் பேசினாள்?“ என மஹா தன் சந்தேகத்தை கேட்க….

“என்ன இருந்தாலும் அப்பாவாச்சே.. மத்தவங்க  முன்னாடி விட்டு கொடுக்க மனம் வந்திருக்காது அதான் பேசியிருப்பா….” என சிவஹாமி பதில் சொல்ல.

‘ஒரு வேளை அப்படியும் இருக்குமோ என விட்டு விட்டார்’ ஆனாலும் ‘கோபமே இல்லையா’ என அவ்வப்போது தோன்றாமல் இல்லை.