பகுதி 25

அதிகாலையிலேயே விழிப்பு தட்ட, சாத்வியின் முகத்திலேயே விழி பதித்தபடி எழுந்தான்

மீண்டும் ‘ஒரு முறை’ என ஏங்கிய மனதிற்கு கடிவாளமிட்டான் சத்ரி

“அடையாளம் தெரியவில்லை” இந்த ஒரு வார்த்தை ஐந்து வருடங்களுக்கு முன்.. அவளை அவனிடமிருந்து விலக்கி வைத்தருக்க அதே வார்த்தை இன்று அவர்களை ஓருயிராய் கலக்க செய்ததை நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதையும் மீறி  “தேடி வந்துட்டு எந்த நினைப்பில் என்னை விட்டு இவள் போகலாம்” என்ற கோபமே மேலோங்கியது சத்ரிக்கு..

ரெப்பிரஷ் செய்து கொண்டு வீட்டை விட்டு கால் போன போக்கில் வந்தான்  அருகில் இருந்த வாக்கிங் கிரௌண்டினில் கல் மேடையில் அமர்த்திருந்தான். சாத்வியை பற்றிய எண்ணங்களே அலையாய் மீண்டும் மீண்டும் அவனுள் அடித்துக் கொண்டிருக்க நொடிக்கு நொடி ஏறிக் கொண்டிருக்கும் அவள் மீதான காதலின்  அளவை விட அவள் மீதான கோபமே பல மடங்காய் ஏற…  நேரம் போவது தெரியாமல் அங்கேயே இருந்தான்.

எப்போதும் எழும் நேரத்திற்க்கு கண் விழித்தவளுக்கு நேற்றைய நியாபகங்கள்  நினைவில் எழ சத்ரியின் இடத்தினை பார்த்தாள்.

அதன் வெற்றிடத்தில்,  கண்களை அறை முழுவதும் சுழற்ற  சத்ரி இல்லாததை உணர்ந்து சிறு ஏமாற்றத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

பின் இவளும் தயாராகி கீழே வந்தாள். இப்படியே சில பல நிமிடங்கள் கடக்க. சிறிது நேரம் வரை பொறுத்தவள்  நேரமாவதை உணர்ந்து அவனுக்கு கால் செய்தாள்.

மொபைலில் கசிந்த மெல்லிசையில் மௌளனம் கலைந்து,

சாத்வியின் அழைப்பை பார்த்து அந்த நிலையிலும் இதழ்களில் மெதுவாய் மலர, அதே புன்னகையுடனே காதுக்கு கொடுத்தான்.

“எங்க இருக்க” கோபத்துடன் இருக்கிறாள் என அவள் குரலே காட்ட

“இதே கிளம்பிட்டேன்… வரேன்” என அவளுக்கு தேவையான பதிலை கொடுத்து..வீட்டிற்குள் நுழைந்து தன் அறைக்கு வந்தான்.

தன்னையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வந்த சத்ரியின் பார்வையை  எதிர் கொள்ள முடியாமல் வேறு புறம் திரும்ப, இரவின் நினைவுகள் தனக்குள்ளும் எழுவதை தடுக்கமுடியாமல் அவளை துளைத்தபடியே குளியலறையில் புகுந்தான்.

மீண்டும் வெளியே வரும் போது  கட்டிலில் சத்ரி வாங்கிக் கொடுத்த நகைகளுக்கு நடுவில் திவ்யாவும் சாத்வியும் இருந்தாள்.

திவ்யாவின் புது உடையையும், சாத்வியின் பரிசளிப்பையும் பார்த்தவன் “ஓ  இன்றைக்கு திவ்யாவுக்கு பிறந்த நாளா  மறந்துட்டேனே” என தனக்குள் பேசியபடி அவர்களை பார்க்க

இருப்பதில் அவளுக்கு பொருத்தமான நகைகளை எடுத்து பார்ப்பதும் , அவள் கழுத்தில் வைப்பதும்…. பின் ‘வேண்டாம்’ என்பது போல் உதடு பிதுக்குவதுமாய் இருந்த சாத்வியும்  நகைளை ஆர்வமாய் பார்த்தபடி இருந்த திவ்யாவும் கண்களுக்கு தெரிய அதைவிட சாத்வியின் கைகளில் இருந்த மெலிதான செயின் அவனின் கண்களை உறுத்த அவர்களை நோக்கி நகர்ந்தான் சத்ரி

அதே மெலிதான செயினை எடுத்து “ஹேய் இது நல்லா இருக்கும் திவ்யா உனக்கு.” திவ்யாவின் கழுத்தில் அணிய போக

அதற்க்குள் அவளை நெருங்கிய சத்ரி “ஹேய், திவ்யாக்கு கொடுக்குறது தான் கொடுக்குற கொஞ்சம் பெரிசா கொடு” என அவளின் கையிலிருந்ததை அழகாய் வாங்கிக் கொண்டு வேறு ஒரு நகையை அவளின் கழுத்தில் போட்டு

நெற்றியில் முத்தமிட்டு “ஹேப்பி பர்த டே திவ்யா” என திவ்யாவுக்கு வாழ்த்து கூற

“தேங்க்ஸ் சித்தப்பா தேங்கஸ் சித்தி” என மான் குட்டியாய் துள்ளி குதித்து சென்றாள் திவ்யா

“உனக்குன்னு ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கினது யார் கைக்காவது போச்சு…  கொன்னுடுவேன்” என கழுத்தை ஒட்டி போடும் வகையில் இருந்த  செயினை அவளின் கையில் திணித்து திரும்ப…

“ஆமாம், ஆமாம் ஒவ்வொன்றும் உன் பொண்டாட்டிக்காக பார்த்து பார்த்து வாங்கின பாரு  இதில் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணினேன்னு பில்டப் வேற”

ரமேஷூடன் நடக்க இருந்த திருமணத்திற்காக வாங்கின நகை தானே என்ற குத்தல் பேச்சு தாராளமாய் வர

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் பொண்டாட்டிக்காக நானே பார்த்து பார்த்து வாங்கின நகை தான் இது, அதுவும் இது என ‘அவள் கையில் இருந்த செயினை காட்டி’  “இது உனக்காக மட்டும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கினது. அதோட டிசைனை பார்த்தா இப்படி பேச மாட்ட”என கூர்மையான பார்வையை அவள் புறம் விட..

அதன் டிசைனை உற்று பார்க்க… வெளியில் சாதாரணமாய் தெரிந்த டிசைன் , உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது

“C” யின் முடிவில் “S” ஆரம்பிக்க அதன் முடிவில் “C” ஆரம்பமாக… ”C” “S” என்ற இரு எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டபடி செயின் முழுவதும் அந்த எழுத்துக்களாலே வரிசைகட்டினார்ப்போன்று டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

 மிக மெலிதான செயின் ஆதலால் மேலோட்டமாய் தெரியாத வித்யாசம் உற்று பார்க்கும் போது நன்றாக தெரிய…மலைத்து நின்றாள் சாத்வி.

அவன் விழிகளை ஊடுருவிய படி “இந்த நகையெல்லாம்..நீ வாங்கினதா.. ஐ மீன்ட்…  அப்பா பணத்தில் வாங்காமல் உன்னோட பணத்தில் வாங்கினதா” என கையில் இருந்த செயினை இறுகப்பிடித்தபடி கேட்க..

“ஆரம்பத்தில் இருந்தே அது நமக்கான கல்யாணமா முடிவு பண்ணினதால் தான் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செஞ்சேன்…   அப்படி இருக்கும் போது நகையை ஏனோ தானோன்னு எப்படி எடுப்பேன்” இன்னமும் விடாத கோபத்துடன் அவள் விழிகளை ஊடுருவ

“அப்போது புடவை எல்லாம்” பதில் கூறாது அவளை முறைக்க…  அவன் முறைப்பில் தானாகவே தலை கவிழ…

“அப்போ….அப்பா கொடுத்த பணம்” என அவனின் முகம் பார்க்க தயங்க…

“அது… என்னோட அப்பாட்ட கொடுத்து வச்சேன், திரும்ப வாங்கலை.” என

“எனக்கு அந்த பணம் வேணும்” அவசரமாய் கேட்க…

“ எதுக்கு”

“ அப்பாகிட்ட கொடுக்க போறேன்… ”

“ கொடுத்து….”

“ கொடுத்து….”

“உங்க சவகாசமே வேண்டாம்பா….ன்னு சொல்ல போறீயா…” என கிண்டலாய் கேட்க

அவளின் பார்வையே அதை தான் செய்வேன் என கூற

“இப்போ தான் உங்கப்பா மலையேறாமல் நிம்மதியா இருக்காங்க பணத்தை கொண்டு போய் கொடு.. சாமியாட வசதியா இருக்கும்” என கூற

“எனக்கு எல்லாமே செஞ்சது நீ தான்னு சொல்லனும்” என தயங்க

“அப்படி தம்பட்டம் அடிக்க அவசியமே இல்லை” இவன் கூறிய நொடி, பதிலுக்கு சாத்வி அனல் பார்வையை விட

அதை கண்டு கொள்ளாமல் “அந்த விசயம் என்னோட அப்பா அப்பறம் நம்பளை தவிர வேற யாருக்கும் இது தெரியாது நீயா வாயை விட்டு பிரச்சனையை இழுத்து விட்டுக்காதே”

“என்கிட்டே இருக்குற பணம் பத்து ரூபாவா இருந்தாலும் அது என்னோட உழைப்பில் இருந்ததா தான் இருக்கனும்…  அந்த பணம் இனி  உன் பொறுப்பு” என

“அப்போ இதை திவ்யாவிற்கு கொடுத்துடுவோமா..” என

“உன் இஷ்டம்… ” என்றவன்..

“ஆனால் கிருத்தியும் வெங்க்கட்டும் வாங்க மாட்டாங்க… ரொம்ப ரேஷக்காரன். ஒரு தடவை பணத்தையும் நகையையும் எடுத்ததுக்கே இப்போ வரை வாயை திறந்து எதுவும் கேட்க மாட்டேன்றான்.  நீ எதுவும் ஏடாகூடாமா செஞ்சு வாங்கி கட்டிக்காத..” என்றவன்

“எது செஞ்சாலும் சொல்லிட்டு செய்” என அவளை பேசவே விடாமல் அவனே கேள்வி…  அவனே பதில் என பேசிக் கொண்டிருக்க.

 “இவ்வளவு செய்த உனக்கு அந்த பணத்தை என்ன செய்யனும்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்…  நீயே பார்த்துக்கோ” என இருந்த கோபத்தை கைவிட்டவளாய் வெளியேறினாள் சாத்வி..

புரிதலுடன் கூடிய நம்பிக்கையை அந்த நிமிடம் உணர்ந்தனர் இருவருமே, ஆனால் அதையும் தாண்டி ஒட்டுதல் இல்லா கோப பேச்சு சாத்வியை சுட தான் செய்தது.

கோபம் விடுவேனா என சத்ரியும்! விட்டால் தான் என்ன? என சாத்வியும் முறைத்து நின்றிருந்தனர்.

மாடியில் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, கீழே ஓர் பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்தது சத்ரியால்.

பெரிய சோபாவில் ஒருபுறம் மஹா சிவஹாமி அவர்களின் எதிர்புறம் விநாயகசுந்தரம் சங்கரன் என இருவரும் இருக்க

“ஷிவா பேசுறதையெல்லாம் வச்சு பார்த்தா…  சாத்வி சத்ரி இரண்டு பேரும் ஏற்கனவே  விரும்பி இருப்பாங்களோ” என சிவஹாமி ஆரம்பிக்க

“சாத்வி விரும்பினாலான்னு தெரியலை, ஆனால் கண்டிப்பா இந்த பய விரும்பி இருப்பான்” என விநாயகம் நூல் விட்டு பார்க்க…

 “எனக்கும் அப்படி தான் தோணுது  சிவஹாமி…  எப்படியோ சத்ரியே அவளை கல்யாணம் பண்ணிக்கிற நிலை வந்துடுச்சு…  ரமேஷ் வேற பொண்ணை விரும்பினது கூட நல்லதா போய்டுச்சு, சிவஹாமி  இல்லைன்னா என் பொண்ணோட நிலைமை” என  நிஜமாகவே மஹா வருத்தப்பட

“ரமேஷ் யாரையும்… விரும்பலைன்னாலும் சாத்வி கழுத்தில் சத்ரி தான் தாலி கட்டியிருப்பான்.. “இது தான் நேரமென விநாயகம் போட்டு உடைக்க

“ஆமாம் இரண்டு பேரும். விரும்பினதை நேரில் எப்போ பார்த்தீங்க, எல்லாம் தெரிஞ்சவர் மாதிரியே எப்போ பார்த்தாலும் பேசுறது” என மகனை குறை கூறுவது பிடிக்காமல்  சிவஹாமி கூற

“ஏய், பெத்த மகன் மேல நம்பிக்கை வை.  வேண்டாம்ன்னு சொல்லலை…  அதுக்காக… நம்பிக்கைக்கு மறு பெயர் உன் மகன்னு பினாத்திட்டு திரியாத” என சத்ரியை அறிந்தவராய் பேசியவர்….