“அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்..  அப்போ  இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை…  நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

“ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடியா?  ஷெட்டுக்கு நீ வந்தியா?  எ…எ….எப்போ ?” என அவளை பேச விடாமல் விழிகள் இடுங்க கேட்டான்..

அவனின் விழிகளின் தீவிரம்.. அவள் பேச்சிற்கு தடை போட தேவையில்லாமல் வாய் விட்டுவிட்டோம்…  என தாமதமாய் உணர்ந்தாள்

“உன் கிட்ட தான் கேட்குறேன்” என கையிலிருந்த பாலை அருகில் கிடைத்த இடத்தில் வைத்துவிட்டு விருட்டென எழுந்து அவளருகில் வந்தான்.

அவனின் வேகத்திலேயே…  தப்பான பேச்சை தப்பான இடத்தில் ஆரம்பிச்சிட்டோம் போல  என விழகளில் அப்படியே பிரதிபலிக்க…

“ சரியான நேரத்தில் தான் ஆரம்பிச்சிருக்க” என அவள் விழிகளுக்கு பதில் கூறி

“ சொல்லு“ என அவளை பார்க்க…

அவனை பார்த்தபடியே “பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணியிருந்தேன்…. மதுரை திருச்சி இரண்டு ஆப்சன் கிடைச்சது.. உனக்காகவே திருச்சி வந்தேன்” என அவனை பார்த்தபடி கூற.

அதிர்ந்து போனான் சத்ரி

 தனக்காகவே திருச்சி வந்தாளா? என இதயம் துடிப்பை அதிகப்படுத்த

“என்ன.. ? இங்கே எனக்காக திருச்சி வந்தியா” என்றவன்

“அப்பறம்..ஏன்…  என்னை பார்க்க வரவில்லை” என இது வரை பேசியதை மறந்தவன் போல் கேட்க…

“வரலைன்னு நீயா நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பில்லை” அப்போதைய கோபம் சற்றே எட்டி பார்க்க..

“புரியுற மாதிரி பேசித்தொலைடி” என பல்லை கடித்துக்கொண்டு அலைபுறுதலுடன் சத்ரி கேட்க.

அவன் அலைப்புறுதலை உணர்ந்து தானாகவே வாய் திறந்தாள் சாத்வி.

“வந்தேன் பேங்கில் ஜாயின் பண்றதுக்கு முந்தின நாள் உன் ஷெட்டுக்கு வந்தேன்..  உன்கிட்ட பேச வந்தேன். பேச..கூட செஞ்சேன் ” என விழிகளில் ஊடுருவ…

“என்ன? பேசினியா” என இன்றும் அதிர்ச்சியுடன் நம்ப முடியாமல் அதை தன் நினைவடுக்கில் தேடினான்.

அவனின் நினைவுப்பெட்டகமோ.. இந்த தேடல்  தேவையேயில்லை என்பது போல் “இல்லை” என்ற பதிலை கொடுக்க

அதற்குள் சாத்வியே “ஆனால் என்னை உனக்கு அடையாளம் தெரியலை ரிப்பேர்ரா… ரீ மாடலிங்கான்னு கேட்ட“  என அவனுள் ஊடுருவி

“என்னை தான்…  அடையாளம் தெரியலை .. ஆனால் என் உணர்வுகளை சரியா அடையாளம் கண்டுபுடுச்சு கேட்ட மாதிரி இருந்தது உன் கேள்வி.. ரிப்பேரா! ரீமாடலிங்கான்னு”

அந்த நேரத்திலும் அவளின் பேச்சு வர்ணனைகளை ரசிக்க தான் தோன்றியது சத்ரிக்கு.

“ கண்டிப்பா…  ரிப்பெர் தான் ஆயிட்டேன்..

என்னோட மைண்டை ரீ மாடலிங் தான் பண்ணனும்ன்னு.. சிரிப்பு தான் வந்தது.  ஆனால் அதுவும் கூட வெறுப்பா தான் வந்தது அதுக்கு மேல் பேச பிடிக்கலை போய்டேன்” என

அவளின் தேடல் சிறிதாய் உரைக்க “எப்போ வந்த சாத்வி, என்னைக்கு வந்த” என குரல் கரகரக்க கேட்டான்.

“அதான் சொன்னேனே பேங்கில் ஜாயின் பண்ண முன்னாடி உனக்கு தான் அடையாளமே தெரியலையே” என சாதாரணமாய் சத்ரியின் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

அதுவரை அதிர்ச்சியில் இருந்தவன் அவளது அசால்ட்டான பதில்களில் கோபம் வர

“அடையாளம் தெரியலையா..” என சீறியவன் “அடையாளம் தெரயலைன்னா என்ன? நீயா சொல்லி இருக்க வேண்டியது தானே சாத்வின்ற ஒரு பேரே போதுமே” என சத்ரிக்கும் கோபம் வெடிக்க…

“இல்லையா, இரண்டு அறையாவது விட்டிருக்கலாம் சாவி…  ‘என்னை அடையாளம் தெரியலையான்னு கேட்டு இரண்டு அறை விட்டு இருக்கலாமே“  என முடிக்கும் முன்

“அப்பா அம்மாவை விட்டு தைரியமா… நான் இங்கே வந்ததே உனக்காக தான். ஆனால் என்னை உனக்கு அடையாளம் தெரயலைன்னதும் அனாதை மாதிரி நின்னேண்டா.. ஒரு பயம் தான் வந்தது நல்லா ஹெல்த்தா இருக்கும் போது உயிரை குடிக்கிற நோய்  வந்தா எப்படி இருக்குமோ.. அந்த அளவு பயம் வந்தது செத்து போய்டுவனோன்னு கூட நினைச்சேன்..உன் மேல் இருக்கிற நம்பிக்கையில் தான் இங்கே வந்தேன்… அந்த நம்பிக்கைக்கே  ஆட்டம் கண்டுருச்சு பின்னே எந்த நம்பக்கையில் பேச சொல்ற“ என நிறுத்த

அவள் கன்னங்களை தன் வலது கை விரல்களால் அழுத்தமாய் பற்றி தன் முகம் நோக்கி இழுத்து “உன்னை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டேன்னு இருந்த உன் அப்பா , வேலைக்காக வெளியூர் அனுப்புவாங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்…  என்னை தேடி வந்தாளாம்… எனக்கு அடையாளம் தெரியலைன்னதும் கோபம் வந்து போய்ட்டாளாம்  என்னை தேடி வர தெரிஞ்சிருக்கு.. வந்தது ‘நான் தான்னு’ சொல்ல முடியாலையாக்கும்.. அவ்வளவு ஈகோ வாடி உனக்கு” எனிருந்த பொறுமை எல்லாம் பறந்தது சத்ரிக்கு…

பிடித்திருந்த பிடியை இன்னும் அழுத்த கன்னங்கள் குவிந்து மீன் குஞ்சாய் அவளின் இதழ்கள் இரண்டாய் பிரிய.

“இந்த ஈகோ…. தானே…  என்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு.. கூட்டிட்டு போச்சு.. அப்படி என்ன உனக்கு ஈகோ வேண்டிக் கெடக்கு” என மேலும் சீற

அது பொறுக்கமுடியாதவள் “அதுக்கு பேர் ஈகோ…  இல்லை வலி” என தன் இடது மார்பின் ஓரம் கைவைத்து “இங்கே வலி.. அதுவும் மரண வலி” என  அவன் அழுத்தத்தில் திணறியபடி பேச

சாத்வியின் விழிகளில் இருந்த சத்ரியின் பார்வை அழுத்தமாய் சாத்வியின் மார்பின் ஓரம் இருந்த கைகளை தீவிரமாய் பார்த்து..

“இவ்வளவு வலியும் எதுக்குடி..”என  அழுத்தம் கொடுக்க..

“உன்னோட உயிருக்குக்காக“ என ஆழமான பார்வையை அவன் புறம் விட

ஆத்திரம் பல மடங்காய் ஏறியது சத்ரிக்கு “உயிர் தானே…  நானே தரேன்டி” என்ற அவள் விழிகளில் கலந்தவன்

“ஆனால் உன் கூட வாழாமல் என் உயிரை என்னாலேயே எடுக்க முடியாதே” என கன்னங்களை இன்னும் அழுத்தி பிடித்து மீன் குஞ்சாய் விரிந்திருந்த அவளிதழ்களை   தன் இதழ்களுக்குள் உள் வாங்கிக் கொண்டான்.

வெகுநேர யுத்தம் முடிவடையாமல்  மீண்டும் மீண்டும் தொடங்கியது. மூச்சு விட சிரமப்பட்ட இரண்டு மூன்று முறை அவளுக்கு தன் மூச்சுக்காற்றையே கொடுத்து.. அவளை உயிர்த்தெழ வைத்துக் கொண்டிருந்தான்.

மூச்சிற்காய் திணருவதை உணர்ந்து அவள் இதழ்களை விட்டு பிரிந்த அடுத்த நொடி பெருமூச்சு வாங்கியபடி…  கட்டிலில் கிட்ட தட்ட விழுந்தார்ப் போல் அமர்ந்தாள்.

அதே பெருமூச்சை சுவாதீனமாய் வாங்கியபடி அவளருகில் அமர்ந்தவன்.. சில நொடிகள் மட்டுமே ஓய்வு கொடுத்து அடுத்த நொடி.

“ எவ்வளவு தைரியம் இருந்தா.. என்னை தேடி வந்துட்டு.. என்னையவே விட்டுட்டு போவ.. அதுவும் மரண வலியோட” என கண்கள் சிவந்து போய் கிடக்க கழுத்தின் பின் கைகொடுத்து தன் முகம் நோக்கி இழுத்து அவள் இதழ்களில் மீண்டும் ஓர் யுத்தத்தை தொடங்கினான்.

சிறு எதிர்ப்பு கூட இல்லை சாத்வியிடம்.. அலைந்து திரியும் ஆத்மா கடவுளிடம் சரண் புகுந்தாற் போல்…  அவனிடம் ஆத்மார்த்தமாய் ஒப்படைத்து இருந்தாள்.. வெகுநேரம் தொடர்ந்த முத்த யுத்தம் போய்….

இதழ்களின் யுத்தம் அடுத்து கைகளின் யுத்தம் ஆரம்பிக்க

“அவ்வளவு வலியோட நீ போகனுமா….”

 “ ஏன்….என்கிட்ட சொல்லலை.. “

“ வந்தது நீ தான்னு.. ஏன் சொல்லலை..”

“ நீ தான்னு…  தெரிஞ்சிருந்தா..”

“அன்னைக்கே…  உன்னை தூக்கி இருந்திருப்பன்டி …”

“அப்போவே…  உன் கழுத்தில் தாலி கட்டி இருந்திருப்பேன்டீ”

“அன்னைக்கே….அன்னைக்கே” என அவனின் குரல் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் அவளுக்கு மட்டுமே புரியும் வண்ணம் பேச்சுகளாலும் செய்கைகளாலும் உணர்த்த

 ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலும் அவளுக்கு காதலின் வன்முறைகளை.. அவனுக்கே உரிய முறையில் உணர்த்த.. உணர்த்த.. அனலில் இட்ட பனியாய் உருகிப்போனாள் சாத்வி.

தேடி வந்தும்.. தன்னை காட்டிக் கொள்ளாமல் போனளே.. என்ற  ஆத்திரம் அவனின் வன்முறைகளில் கரைய.. அந்த ஆத்திரமும் சிறிது நேரத்தில் வலியாய் உணரப்பட அவளை தாண்டி இவனுக்கும் வலிக்க ஆரம்பிக்க.. தன் செய்கைகளை கைவிட்டு

“ஏண்டி சொல்லலை…  எனக்கே இப்படி வலிக்குதே” என தன் இதயத்தை காட்டி.” உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் ”

“வலிக்குதுடி.. ரொம்ப வலிக்குதுடி.” என செவ்வரியோடிய விழிகளில் நீரும் கலக்க.. வைரமாய் பளபளத்த விழிகளோடு  இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.

சத்ரியின் ஒவ்வொரு செய்கையையும் விட…. அவன் இணைப்பு அதிலிருந்த தீவிரம்.. அதில் உறைந்த தேடல்..எல்லாம் சேர்ந்து சாத்வியை உறைய வைத்தது..

சத்ரியின் பேச்சிலும் செய்கையிலும் முழுதாய் தொலைந்தவள் அவனை  இறுக்கமாக அணைக்க

அடுத்த நொடி சத்ரி என்ன செய்கிறான் என சாத்வியால் நிதானிக்க கூட முடியவில்லை நிமிடங்கள் நொடிகளாய் கடக்க… கடக்க…. தாக்குபிடிக்க முடியாதவள் அவனை தள்ளிவிட்டு நகர ஒரு இன்ச் கூட நகரவே முடியவில்லை சாத்வியால் அந்தளவு ஆக்கிரமித்திருந்தான் சத்ரி

“ஐ வல்யூ” என வார்த்தைகளுக்கு கூட இத்தனை தாக்கம் இருந்திருக்காது…

ஆனால் அவள் வார்த்தைகளின் தாக்கத்தை அவளே உணர்ந்து கொண்டிருந்தாள்.. தன் சத்ரியின் மூலம்… உணர வைத்தக் கொண்டிருந்தான்.

காதலை சொல்லும் விதம் கூட காதலனை வெறி கொள்ள வைக்கும் என ஆத்மார்த்தமாய் உணர்ந்தாள் சாத்வி.

தன் சத்ரி தானா? என சந்தேகம் பேயாய் ஆட்டம் போட வைத்தது சத்ரியின் செயல்களால்.

சத்ரியின் அமைதியான காதல் அங்கே ஆழமான ஆழியையாய் அவளை சுருட்டிக் கொண்டது..

அவளை விடவே இல்லை.. சாத்விக்கோ… மூச்சு விடக்கூட நேரம் இல்லை…  அவனின் ஆக்கிரமிப்பில் திண்டாடி போனாள்.

வலிகள் உணர்ந்தாலும்..அங்கே உணர்வுகள் ஜனனிக்க.. சாத்வியால் அவனுள் புதைந்து போகவே முடிந்தது… ஆழியாய் தனக்குள் இழுத்துக்கொள்பவனிடம் விரும்பியே சிக்கிக் கொண்டாள்.

ஆழியே தன்னை விடுவிக்கும் வரை..

எத்தனை நேரமோ, சத்ரி, சாத்வியை விட்டு விலகிய நொடி, வலியையும் கடந்து ஏதோ ஓர் அமைதியை உணர்ந்தது மனம்.

மனம் களித்து கிடக்க… உடல் களைத்து கிடந்தது…

காமத்தையும் தாண்டிய காதல் அங்கே ஆட்சி செய்ய…

சொல்லாமலேயே  நிரூபித்தான் தன் காதலை…

உடம்பில் இருந்த ஒவ்வொரு அனுவும் இறந்து புதிதாய் பிறப்பது போல் தோன்றியது… சாத்விக்கு