அவனின் விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் ‘இந்த கல்யாணம் மட்டும் தான் உனக்கு செட் ஆகும்’ என அடிக்கடி சத்ரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அன்று தான் முழு அர்த்தமும் கிடைத்தது சாத்விக்கு.

“ ரமேஷ் உன் பிளானுக்கு சரி பட்டு வரலைன்னா…. என்ன பண்ணி இருந்திருப்ப… ” என கேட்க…

“வெரி சிம்பிள்…. ஹீரோவா உன்னை கல்யாணம் பண்ணி இருக்காமல் வில்லனா உன்னை ரேப் பண்ணி இருந்திருப்பேன்” என சிரிக்க…

கோபம் கொள்வதற்கு பதில்  சிரிப்பு தான் வந்தது  சாத்விக்கு

அதைப் பார்த்தபடி

“நான் சொல்லிட்டேன்… என்னோட காதல் கதையை நீ தான் பெண்டிங்” என சீண்ட

அவனின் சீண்டலை உணர்ந்தவள் “நான் சொல்ல மாட்டேன்… நீயா தான் தெரிஞ்சுக்கனும்“ முன்பு ஒரு முறை அவன் பேசியதை போல் பேசிக் காட்ட

“ம் தெரிஞ்சுக்கிறேன்,  கண்டிப்பா தெரிஞ்சுக்கிறேன். அதையும் இந்த வாயிலருந்தே வர வரைச்சு.. தெரிஞ்சுக்கிறேன்” என அவளிதழ்களை பிடித்து இழுத்தபடி பேச…

அவன் கைகளில் இருந்து இதழ்களை பிரித்தபடி “அன்னைக்கு மீதியை பார்த்துக்கலாம்” என அவனிடமிருந்து விலகினாள்..

விலகியவளின் கையை பிடித்து இழுத்தவன்…

“அப்பறம் இன்னொன்னு கேட்கனுமே… ” என…

“ என்ன…?” என்றாள் சாத்வி…

“வெங்க்கட் மேல கோபம் இல்லையா சாத்வி” என தயங்க…

“முன்ன இருந்தது… ஆனால் இப்போ இல்லை”என சாதாரணமாய் சொல்ல…

ஆச்சர்யமாய் “இல்லையா திடீன்னு என்ன  ஞானோதயம்?” என புருவங்களை உயர்த்த…

“அன்னைக்கு நீயும், வெங்க்கட் மாமாவும் பேசினதை கேட்டேன் சத்ரி” என வெங்க்கட் தன்னிலை விளக்கம் கொடுத்த அன்று  இருவரும் பேசியதை நியாபகப் படுத்தி.. “ அதுக்கு பிறகு கோபம் இல்லை” என

“ இதை நீ சொல்லவே இல்லை ” என சத்ரி  முறைக்க…. அதை புறம் தள்ளி…

“எப்போவுமே…  நம்ப பக்கம் தான் நியாயம் இருக்குன்னு நினைக்கிறது தப்பு மத்தவங்க நிலையில் இருந்தும் பார்க்கனும்னு ரொம்ப லேட்டா புரிஞ்சுக்கிட்டேன் ”

“நீ  கூப்பிட்டதுமே கிளம்பி வந்து இருக்காங்கனா…  எவ்ளோ கஷ்டபட்டு இருப்பாங்க.. ஆனால் அப்பா கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம். எல்லாரோட லைப்பும் யூடேர்ன் ஆயிடுச்சு..” என சாத்வி கூற

“எல்லாமே நல்லதுக்கு தான் சாவி” என்றவன்…

“ உன் அப்பா.. நம்ப இரண்டு பேருக்குமே வாழ்க்கையை கத்து கொடுத்துட்டாங்க”

“என்னோட வளர்ச்சி… உன்னோட வேலை இரண்டுமே உன் அப்பாவால் தான் சாத்யம் சாத்விமா.இதை நீ ஒரு நாளும் மறுக்க முடியாது.ஒருத்தர்கிட்ட நிறை இருக்கா, குறை இருக்கான்னு பார்க்குற கண்ணில் தான் இருக்கு” என சமயம் பார்த்து அட்வைஸ் செய்தான்

“மூளைக்கு புரியுது ஆனால் மனசுக்கு புரிஞ்சா தானே ஏத்துக்க முடியும்…  இனி ஏத்துக்க முடியுமான்னு தெரியலை.  பட் ட்ரை பண்றேன்…” என சொல்லி தலை சாய்த்து சிரிக்க

“ ம்… ட்ரை பண்ணு” என சொல்லி நகர்ந்தான்.

மாலையில் ஷிவாவின் மனைவி மற்றும் மகன் கோகுல் வந்தனர். சத்ரி தான் ஷிவாவை நச்சரித்து வரவழைத்திருந்தான்.

க்ருத்திகாவை விட கொள்ளை அழகுடன் இருந்தாள் ஷிவாவின் மனைவி கஸ்தூரி…  வீட்டில் நுழைந்ததில் இருந்து ஷிவாவும் கஸ்தூரியும் இடைவெளி விட்டு  இருந்தாலும் அவர்களின் பார்வையும் ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறையிலும் அவர்களின் அன்பு வெளிப்படையாய் தெரிய…. வெங்க்கட் க்ருத்திகாவிற்கு ஏதோ சுழலில் இருந்து வெளி வந்தார்ப்போல் இருந்தது.

திவ்யாவே வீட்டை ஒரு வழி ஆக்குபவள்…இதில் கோகுலும் சேர்ந்து கொள்ள வீடே அதிர்ந்தது.

மறுநாள் காலையில்… கார், பைக்குகள் எல்லாம் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு..  போர்டிகோவை டென்னிஸ் கிரௌண்டாக மாற்றி  வெங்க்கட், ஷிவா ஒரு புறம்….

 கிருத்தி சத்ரி ஒரு புறம் என  ‘டென்னிஸ் பால்களை’ விர்விர் என  பறக்க விட்டபடி விளையாட்டு கொண்டிருந்தனர்.

பேட்டரி காரில் திவ்யாவும் கோகுலும் விளையாட அவர்களை கஸ்தூரி பார்த்திருக்க.

வாசலில் தற்செயலாய் அமர்வது போல் பெரியவர்கள் அமர்ந்து விளையாட்டை பார்த்திருக்க..  மாடியில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சாத்வி.

ஷிவா சத்ரியும் ஒரு முறை கூட பந்தை தவற விடாமல்..  இருவரும் வீரர்களாய் சீறிக் கொண்டிருக்க.

 வெங்க்கட் க்ருத்திகாவை டார்கெட்டாக்கி…  தோற்கடிப்பதிலேயே குறியாய் இருக்க…

அதை கவனித்தபடி  “க்ருத்திகா விடாத அவனை உன்னை கவுக்க பிளான் பண்றான் ” என ஷிவா கூற

“அதான் பத்து வருசத்துக்கு முன்னாடியே கவுந்துட்டானே…  இனி எங்கே கவுர” என சத்ரி சிரிக்க…

“ நாங்களாவது பத்து வருசத்துக்கு முன்னாடி… தான்.. நீங்க…. இருபத்தெட்டு வருசத்துக்கு முன்னாடியே கவுந்தாச்சே” பாலை த்ரோ செய்தபடி சத்ரியிடம் க்ருத்திகா வம்பிழுக்க..

“டேய்  வாயை மூடிட்டு விளையாடுடா.. இல்லை உன்னை நோஸ் கட் பண்ணாமல் விட மாட்டா ” என வெங்க்கட் இடை புக

“ உன்னை மாதிரி நான் கவலை எல்லாம் பட மாட்டேன். இருபத்தெட்டு வருசமா…. ஒருத்திக்காக காத்தருந்தேன்னு சந்தோஷம் தான் படுவேன்” என சிரிக்க

“ஆஹா…இதல்லவோ…  புருஷ லட்சனம்” என ஷிவா சிரிக்க

 “இரண்டு பேரும் பேசிட்டே இருங்க…  நான் தான் வின் பண்ண போறேன்” என க்ருத்திகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..  கிடைத்த கேப்பில் வெங்க்கட் ஸ்கோர் செய்து

“நான் தான் வின்… நான் தான் வின்” என கூச்சலிட

“வெங்க்கட் ப்ராடு என்னை ஏமாத்திட்ட இது பொய்யாட்டம் போ” என நெட்டை விலக்கி அவனருகில் வந்து “ ப்ராடு… நில்லுடா” என அவனை விரட்ட

“ஆமா.. பொய்யாட்டம் தான்.. என்ன செய்ய முடியும் உன்னால” என டென்னிஸ் பேட்டுடன் நெட்டை சுற்றி ஓடிக்க கொண்டே வெங்க்கட் பதில் கொடுக்க அதை பார்த்த மற்ற இருவரும் விளையாட்டை நிறுத்தி…

“க்ருத்தி… அண்ணா சரியா தான் விளையாண்டான்…  உன் கவனம் எல்லாம் வெங்க்கட் மேல இருந்தா எப்படி ஸ்கோர் பண்ண முடியும் “ ஷிவா சிரித்தபடி கூற…

“கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆச்சு ஷிவாண்ணா. இதுக பண்ற லவ்சு தாங்க முடியலை” என சத்ரி வார..

“உனக்கேண்டா பொறாமை போய் உன் பொண்டாட்டியை சைட் அடி” என ஷிவா கூற…. அவனுக்கு ஹைஃபை கொடுத்த வெங்க்கட்

“அப்படி சொல்லுண்ணே” என சிரிக்க…

“நீங்க சைட் அடிக்கீங்களோ…  இல்லையோ…  உங்க ஒனர், உங்களை சைட் அடிக்கிறாங்க கொழுந்தனாரே…  இந்த விசயத்தில் என் தங்கச்சி தான் பெஸ்ட் நீங்க வேஸ்ட்” என சிரித்து அங்கே பாருங்க என மாடியை காட்ட…

அசையாமல் மாடியில் இருந்தபடியே சத்ரியை பார்த்த சாத்வி இவர்கள் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல்.. சத்ரியையே விடாமல் பார்த்திருந்தாள்.

“கண்டிப்பா நீ வேஸ்ட் தாண்டா“ என ஷிவா மேலும் சிரிக்க அதை கண்டு கொள்ளாமல்

வாசலில் இருந்த பெரியவர்களின் முன் வந்து நின்றான் அவனுடன் மற்றவர்களும் வந்தனர்.

 சிவஹாமி அனைவருக்கும் குளிர் பானம் வழங்க அதை குடித்தபடியே வீட்டை அப்போது தான் முழுவதுமாய் உள் வாங்கிய ஷிவா.

“பஞ்சர் பார்த்தா இவ்வளவு பெரிய வீடு கட்டின.. ஏண்டா டூவீலருக்கு பஞ்சர் பார்க்குறீயா இல்லை ஃப்ளைட்டுக்கு பஞ்சர் பார்க்குறீயா” என அவனின் தோளில் தன் தோள்களால் இடிக்க…. அந்த இடியில் லேசாய் ஆட்டம் கண்டு தள்ளாடி நின்றவன், கையில் இருந்ததை முழுவதுமாய் குடித்து

“ என்ன லொள்ளா..” என கேட்க…

“ இவன் விட்டா…. ட்ரெயினுக்கே பஞ்சர் பார்ப்பான்“ என வெங்க்கட்டும் கிண்டல் செய்ய…

“ஒரு மனுசனுக்கு பொண்டாட்டி பக்கத்தில் இல்லைன்னா…  ஆளாளுக்கு கிண்டல் பண்ணுவீங்களே.. ஏய் பொண்டாட்டி…  எங்கடி இருக்க நீ இல்லாமல் எல்லாம் என்னை ஓட்ரானுங்க” என காட்டு கத்தலில் கத்த..

“ ஐய்யோ ராணி மங்கமாவா !” என ஷிவா இழுக்க…

சத்ரியின் பேச்சுக்களை ரசித்தபடி வந்த சாத்வி வேண்டும் என்றே மார்பின் குறுக்காக கைகளை கட்டியபடி…

“என்ன இங்கே சத்தம்”  என சாத்வி வர

வெங்க்கட் ஷிவா க்ருத்திகா… என மூவரும்…

“பேசிக்..  கிட்டு.. இருந்தோம்..  ம்மா” என வடிவேல் பாணியில்  கோராசாக சொல்ல

அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டு கிளம்ப சத்ரியும் சாத்வியும் அர்த்தமாய்… பார்வைகளை பறிமாறிக் கொள்ள, இனிதாய் ஆரம்பமானது அவர்களின் மகிழ்ச்சி..