பகுதி 24….

வாய்விட்டு சிரிப்பதை ஆசையாய்  பார்த்தபடி இருந்தாள் சாத்வி..

“எப்போ எனக்காக இதெல்லாம் பண்ணின..” என ஷிவா கூறியதை மீண்டும் தொடர…

“எல்லாத்தையும் நீயா…. கெஸ் பண்ணிடுவ… இதை நீ கெஸ் பண்ணவே இல்லையா?” என அவளின் கன்னங்களை வருடினான்

“ ரொம்ப அக்யூ ரேட்டா எல்லாம் கெஸ் பண்ணலை…  பட் டவுட் வந்து ஷிவா மாமா கிட்ட கேட்டேன்.. ‘இல்லவே இல்லைன்னு சாதிச்சுட்டாரு “ என  அன்று  நடந்ததை அப்படியே கூற…

“பரவாயில்லை டவுட் வர்ர அளவுக்காவது என்னை தேடியிருக்கியே..” என முகம் புன்னகையில்  பூக்க..

“ உன்னை எந்தளவு தேடியிருக்கேன்னு…  உனக்கின்னும் புரியலை” என வில்லங்கமாய் சிரிக்க…

 “ம்ப்ச்…. ஆரம்பிச்சுட்டியா “ என அவளை விட்டு தள்ளி நிற்க…

அவன் விலகலை பார்த்தபடி.. “அப்படி என்ன டிரெயினிங் கொடுத்த ஷிவா மாமாக்கு” மறைத்துவிட்டாரே…என்ற ஆதங்கம் நன்றாகவே வெளிப்பட

“டிரையினிங்கா… போலீஸ்க்கே டிரெயினிங்கா..?” என முறைக்க….

“நீ டிமிக்கியே குடுத்தவன்…  டிரெயினிங் குடுக்க மாட்டியா?” என அவளும் முறைத்து…  “மாமா கிட்ட என்ன  சொன்ன? எனக்கு முழுசா தெரிஞ்சாகனும்” என கேட்டாள் சாத்வி…

சத்ரியும் சொல்ல தொடங்கினான்…

“திருச்சி போனதும், எப்படியாவது ஸ்டேபில் ஆகனும்னு நினைச்சேன்…  பிடிச்ச தொழில், படிச்சு முடிக்கலைன்னலும் அழகா கை கொடுத்தது…  வாய்ப்பை கப்புன்னு புடுச்சிகிட்டேன்  ரொம்ப ஆசையாய் ஆரம்பிச்ச தொழில். நான் வாய் வார்த்தையால் சொல்றதை…  விட  நீ பார்த்த தான் தெரியும்” என அவனின் கண்களில் அடைந்த லட்சியத்தின் ஒளி தெரிய…. பேசியவன்  “உன்னை இன்னும்…. ஷெட்டுக்கு கூட்டிட்டு போகலை இல்லையா.. சீக்கிரமா கூட்டிட்டு போறேன் நீ பார்த்து சொல்லு ஐயாவோட வளர்ச்சியை..” என காலரை தூக்கி விட்டு

“வேலைக்காக டிரை பண்ணி எதுவுமே சரியா அமையவே இல்லை. அதான் மெக்கானிக் ஷாப் வச்சு…. அதை பெரிசு பண்றதில் நிச்சயமா கொஞ்ச நாள் என்னோட மைண்டில் நீ இல்லவே இல்லை” என

அதற்கு அவள் முறைத்த முறைப்பில்  “ ஹேய், உனக்கு தான் ஷிவா அண்ணாவ காவலுக்கு வச்சுட்டு வந்துட்டனே அந்த தைரியம் தான் அது கொடுத்த தைரியத்தில்…  உன்னை நிஜமாவே மறந்துட்டேன்.” என

“அது கொடுத்த தைரியம் இல்லை….!” என முறைத்து…. “வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு’ என்கிட்ட சத்தியம் வாங்கின’ இல்லையா அது கொடுத்த தைரியம்ன்னு சொல்லு ஒத்துக்குறேன்” என கை கட்டிக் கொண்டு பதில் கூற…

அவளை ஆர்வமாய் பார்த்தவன் “ஆனாலும், இப்படி ஒரு நியாபக சக்தி உனக்கு இருக்க கூடாது சாத்வி” என அவள் பேச்சில்  சிரித்தவன்

“ஆமாம் சாத்வி  நிச்சயமா அந்த தைரியம் தான்..” என ஒப்புக்கொண்டான்…

“ எதுக்கு அப்படி ஒரு கம்பெல்ஷனை எனக்கு கொடுத்த…” சாத்வி கேட்க….

“ நீ எனக்கே எனக்கு மட்டும் தான்ற…  வெறி தான்…. “ என நிஜத்தை பேச

“இப்போ கூட…. வெறி தான்னு சொல்றியே தவிர காதல்ன்னு ஒத்துக்க மாட்ற சத்ரி.”

“ ஐ லவ் யூ” இந்த வார்த்தையை விட  என் செயல் தான் உனக்கு என்னோட காதலை உணர்த்தனும் சாத்வி.. வார்த்தை மறந்திடும்…ஆனால் செயல் என்னைக்குமே மறக்காது.” என

“ அப்படி பார்த்தா…. நான் பிறந்ததில் இருந்து… உன் செயல் எல்லாமே…. எனக்கு ஒரே மாதிரி தான் தெரிஞ்சிருக்கு.. எதிலேயும் நீ டிபரன்சியேட் பண்ணி காட்டலையே..

இதெல்லாம் பாசம்

இதெல்லாம் காதல்…ன்னு எனக்கு பிரிச்சு காட்டலையே… ” என நக்கலாய் கேட்டவள்.. “பின்ன எப்படி எனக்கு தெரியும்..” என சரியாய் அடிக்க… .

“ நீ தெரிஞ்சுக்கலைன்னா…. நான் பொறுப்பில்லை  ” என தோளை குலுக்க..

“ நான் தெரிஞ்சுக்கலையா….?” என முறைக்க….

“ஆமாம்…  தருணை அடி பிண்ணி எடுத்தப்போ… எதுக்குன்னு யோசிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும். என்னை கல்யணம் பண்ணிக்கோ சத்ரின்னு வந்து நின்னியே. அப்போ என் கண்ணை பார்த்திருந்தா….என் தடுமாற்றமும் தெரிஞ்சிருக்கும், அந்த தடுமாற்றம் எதுக்குன்னும் தெரிஞ்சிருக்கும்…

இதெல்லாம் விடு…

கல்யாணம்ன்னு ஆரம்பிச்ச நாளில் இருந்து உன் கழுத்தில் தாலி கட்ற வரை உனக்கு நிறைய க்ளு குடுத்தேன் நீ நோட் பண்ணலைன்னா… நானா பொறுப்பு” ன என வம்பிழுக்க….

“ ஏண்டா…  சரக்கு உனக்கு சைட் டிஸ் எனக்கா…?” என

“ம்ஹூம்… சரக்கும் எனக்கு தான்… சைட் டிஸ்ஸூம் எனக்கு தான் ” என சிரித்தவன் அவளின் கண்கள் கலங்க தயாராய் இருப்பதை பார்த்து.

“சாத்வி… நான் தான் உன்னோட அப்பா அம்மா… உன்னோட படிப்புன்னு டைவர்ட் பண்ணிட்டேன்…. என்னை பத்தி யோசிக்க விடாமல் டைவர்ட் பண்ணிட்டேன்”  என சமாதானம் செய்ய…

“இப்படி டைவர்ட் பண்ணி விட்டது தப்பா தெரியலையா” ஆதங்கமாய் பேச…

“ ஸ்கூல் படிக்கிற பொண்ணை வேற விதமாக டைவர்ட் பண்ணினா தான் தப்பு இது தப்பில்லை…. இது தான் சரி.”

“சரி எனக்காக பீஸ் கட்டினியே, அப்போவாவது சொல்லி இருக்கலாம் இல்லையா!”

“உன் மனசில் நான் இருக்கேனான்னு எனக்கு தெரியாமல் எப்படி சொல்றது!   அதுவும் தவிர வெங்க்கட் ப்ரச்சனையே தீராத போது நானும் அதே தப்பை செய்யவான்னு தான் தோணுச்சு”

“ஷிவா அண்ணாவோட போனில் அடிக்கடி பேசுவேன்…. அப்படி தான் நீ காலேஜ் ஜாயின் பண்ணின விசயம் தெரிஞ்சது.  ஏதாவது வாங்கலாம்னு போனேன். ஆனால் அவ்வளவு வாங்குவேன்னு நினைக்கவே இல்லை…   ஷிவா அண்ணா பார்த்தவுடனே கெஸ் பண்ணிட்டாங்க”

“என்ன நீயும் லவ்வா” என அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்த ஷிவா…

“உன்னை நினைச்சு, அன்னைக்கு பெருமையா இருந்தது சாத்வி,அவளோட அம்மா அப்பாவை விட உன் மேல தான்டா அதிகமான நம்பிக்கை வச்சு இருக்கா.. ஆனால் நீ அதை உனக்கு சாதகமா ஆக்க பார்க்கிற? நீயும் பொண்ணுங்களோட தேவையை நிறைவேற்றினால் போதும் மடிஞ்சிடுவாங்கன்னு  நினைச்சுட்ட  அப்படித் தான” என ஷிவா கோபமாய் கேட்க

“என்னை பொறுத்தவரை இது லவ் தான்…  நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க.  சாத்வி எனக்காக பிறந்தவ! அவள் கிட்ட என்னோட காதலை இன்னும் நான் சொல்லலை! சொல்லவும் மாட்டேன்! ஆனால் அதுக்கு முன்னாடி இருந்தே சாத்வி என்னோட கடமை.  அப்போவும் இப்போவும் எப்போவும்  அவள் என்னோட முழு கடமை தான். கடமையை செய்வேன் பலனை எதிர் பார்க்காமல் செய்வேன்.

கடமையையே பார்த்து பார்த்து செய்வேன் இப்போ காதலா மாறும் போது எப்படி சும்மா இருப்பேன்” என சத்ரி கூற

‘நீ என்ன சொல்ற’ என புரியாமல் ஷிவா கேட்க….

மேஜையில் இருந்த பைகளை காட்டி “இதெல்லாம் நீங்க கொடுத்ததா கொடுத்துடுங்க…  நான் கொடுத்ததா சொல்ல வேண்டாம். என் பெயரை சொல்லாதீங்க… சொன்னால் தானே ப்ரச்சனை சொல்லாதீங்க” ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்

“நான் தான் வாங்கிக் கொடுத்திருப்பேன்னு நீ கெஸ் பண்ணினதா… அண்ணா எங்கிட்டே சொல்லும் போது“ என அவளை அருகில் இழுத்து அணைத்து.. அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு

இப்படி தான் செய்யனும்னு தோணுச்சு…  என்றவன்…

“ஏற்கனவே படிக்கிற பொண்ணை டைவர்ட் பண்ணணுமான்னு உறுத்திட்டே இருந்தது. ஷிவா அண்ணா பேசின அப்பறம் முடிவே பண்ணிட்டேன். உன் தேவையை நிறைவேத்தி.. வர்ற காதல் எனக்கு தேவையில்லைன்னு முடிவே பண்ணிட்டேன். அதான் உனக்கு தெரயாமலேயே பீஸ் கட்டினேன் ”

“உன் கல்யாணத்துக்காக எடுத்த ஒவ்வொரு ஸ்டெப்பிலேயும்  எனக்கான காதலை இங்கே தேடிட்டே இருந்தேன் சாவி” என அவள் விழிகளை பார்த்து கூறி..

“அப்ப அப்போ… சின்ன சின்னதா சந்தேகம் வரும்.. உன் அப்பார்ட்மெண்ட் வந்த அன்னைக்கு எனக்கு டவுட் கிளியர் ஆச்சு எனக்கு கொஞ்சமும் குறையாமல் மேடம் என்னை லவ் பண்றீங்கன்னு.“ என அவளை மெலிதாய் அணைத்து

“ஆனால் அதுக்கு முன்னாடியே, என்னோட தான் உன் வாழ்க்கைன்னு முடிவு பண்ணி தான், ரமேஷை காயினாக்கி…. நான் விளையாட நினைச்சேன்“ என முடிக்க….

அவனின் பேச்சில் கண்கள் விரிய பார்த்தவள் “இது தெரியாமல் ரமேஷோட தான் என் வாழ்க்கைன்னு நினைச்சு ஏன் சத்ரி முதலிலேயே சொல்லி இருக்கலாம் இல்லையா” என சாத்வி  கேட்க

“ கிட்ட தட்டநிறைய பேரை… ஏன் உன்னையவே ஏமாத்தி இந்த கல்யாணம் பண்ணி இருக்கேன் சாவி…   சப்போஷ் யாருக்கும் தெரிய வந்தாலும்… அது என்னோட மட்டும் நின்றனும்.  என்னை தாண்டி உனக்கு எந்த கெட்ட பேரும் வரக் கூடாது. அதான் நான் சொல்லலை. உனக்கு தெரியாமலேயே… உனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டேன்”