“அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க…

“கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”

 “சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து

“அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை…  ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க முடியலை…  அம்மா அப்பாவை விட்டு பேச வைக்கலாம்ன்னு பார்த்தால்…  ‘பைக் பஞ்சர் பார்க்குரவனுக்கெல்லாம் என் பொண்ணை தரமாட்டேன்னுட்டார்’ என் மாமானார்.  சாத்விகிட்ட பேசி இருந்தால் கண்டிப்பா….என் பேச்சை தான் கேட்டிருப்பா, ஆனால் எதேச்சையா நடக்கனும்னு நினைச்சேன்.

“ஏதாவது பிளான் பண்ணனும்ன்னு நினைச்சப்போ…. மாமாவே அவனோட கான்டெக்ட்ஸ் எல்லாம் என கையிலேயே வச்சுட்டாங்க. ரமேஷ் கிட்ட பேசிப்பார்த்தப்பறம் தான் தெரிஞ்சது…  எனக்கு கடவுள் ஒரு ஆப்பர்ச்சூனிட்டி கொடுத்து இருக்கார்ன்னு…  கரெக்கடா யூஸ் பண்ணிக்கிட்டேன்… .

வரண் பத்தி சாத்விகிட்ட பேசறதுக்கு முன்னாடியே…. நான் ரமேஷ்கிட்ட பேசனும்னு நினைச்சேன். சாத்வின்னு பேரை சொன்னதுமே…  என்னை பேசவே விடலை அவன். நான் அல்ரெடி அமெரிக்க சிட்டிசென்சிப்க்காக அங்கேயே ஒரு பொண்ணை லவ் பண்ணினேன், அப்பா மேரேஜை ரஷ் அப் பண்றதை பார்த்துட்டு…  ரெஜிஸ்டர் மேரேஜ் கூட இங்கே பண்ணிக்கிட்டேன்.. நீங்க அப்பா பேச்சை கேட்காமல் கல்யாணத்தை நிறுத்திடுங்க.. அமெரிக்கா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனே வேற”  ன்னு சொன்னான்… .

“அப்பறம்… ”

“அப்பறம் என்ன…  நமக்கு அமெரிக்கா ரூல்ஸ் அண்ட ரெகுலேஷன்ஸா முக்கியம்?” என சிரிக்க .

அவன் தோளில் அடி வைத்து “மீதியை சொல்லுடா” என

“சாத்வியோட மேரேஜை நிப்பாட்ட தான்  உங்களுக்கு கால் பண்ணினேன்.. ஆனால் நீங்களே அதுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பீங்கன்னு நினைக்கவே இல்லை..  அஸ் அ லவ்வரா…  இன்னொரு லவ்வர்க்கு ஹெல்ப் பண்ணுங்க பாஸ்” ன்னு நான் கேட்டேன்….

“சரி சொல்லுங்க…. ஆனால் ஹெல்ப் பண்றதுக்கும் ஒரு அளவிருக்கு.” என ரமேஷ் சொல்ல

“உங்களால முடிஞ்ச ஹெல்ப் தான்.. நீங்க எதுவும் ப்ராப்ளம் பண்ணாமல் மேரேஜூக்கு டூ டேஸ் முன்னாடி வாங்க.. சாத்வி கல்யாணம் பிக்ஸ் பண்ணின டேட்டில் நடக்கனும்…  ஆனால் என்கூட இதை விட்டால் எனக்கு வேற ஆப்பர்சூனிட்டி கிடைக்காது.. மற்ற ஏற்பாடெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இதில் உங்களுக்கு ஒரு பெனிபிட் இருக்கு…   இனி உங்கப்பா கல்யாணம் பற்றிய பேச்சு எடுக்க மாட்டாங்க” ன்னு நான் சொன்னேன்

“ அதுக்கு அவனும் சரின்னுட்டான்..”

“ அப்பறம்… ”

“அப்பறம் என்ன.. காற்றுள்ளபோதே…  தூற்றிக் கொண்டேன்” என சத்ரி வாய்விட்டு சிரித்து…  தன் வாயையே பார்த்திருந்த சாத்வியின் தோளில் கை போட்டு தன் அருகில் நிறுத்த..

“ எதிரியா இருந்த என்னையைவே கரெக்ட் பண்ணிட்ட. அவனை கரெக்ட் பண்ண மாட்டீயா?” என இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்தபடி ஷிவா சிரிக்க…

“ம்… செம்ம லவ்டா ம்….அப்பறம் என்னாச்சு” என ஷிவா தன் ஆர்வத்தை காட்ட

“அப்பறம் என்ன…  திருமண வேலைகளை அவசரப்படுத்தி…  நிச்சயம் அன்று மாலை தான் ரமேஷ் வந்தான். ஆனால் அவன்…  ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த பெண்ணுடன்.. ஆர்ப்பாட்டம் செய்த கோதண்டத்திற்கும் அமெரிக்கா ரூல்ஸ் அண்ட ரெகுலேஷன்ஸ் தான்” என சிரித்து

“நம்ப ஊரு மாதிரி இல்லைப்பா…  புடிச்சு உள்ள போட்டான்னா…  என் வாழ்க்கையே குளோஸ்“ என மிரட்டி திருமணத்தை நிறுத்திட்டான்…

அப்பாக்கு நடக்கபோறதையெல்லாம்  அல்ரெடி சொல்லி  டைம் பார்த்து என் மாமானார்கிட்ட பேச சொன்னேன்… அதே மாதிரி அப்பா மாமாகிட்ட பேசினாங்க…

“இந்த நிலையில் கல்யாணம் நின்னா…  சாத்வி கண்டிப்பா இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க முடியாது இப்போவும் ஒன்னுமில்லை…. சத்ரிக்கே முடிச்சிடு…  அவன் பார்த்துப்பான்டா” என கூற வேறு வழியின்றி சங்கரனும்  தலையசைத்தார்.

இதையெல்லாம் சொல்லி முடிக்க..

பெண் மனதால் காதலை உணர்த்தினாள் என்றால்..

ஆண்….

 தன் செயல்களால் உணர்த்துவான்.. என கண் கூடாய் கண்டாள் சாத்வி…

ஷிவாவோ “டேய்…  எவ்வளவு வேலை பார்த்திருக்க.. மாமாக்கு கழுகு கண்ணாச்சே எப்படி எதுவும் தெரியவிடாமல் பார்த்துகிட்ட”

“ஏண்ணே, உன்னையவே கரெக்ட் பண்ணிட்டேன், மாமனாரை கரெக்ட் பண்ண மாட்டேனா” என

“அடப்பாவி…. அவரையும் விட்டு வைக்கலையா நீ.” என இன்னும் பேசிக் கொண்டிருக்க…

அவனிடமிருந்து லேசாய் நழுவிய சாத்வி…  சத்ரி எப்போதும் தன்னை நிழலாய் தொடர்ந்திருக்கின்றான் என மனம் இறக்கை கொண்டு பறக்க…

“சத்ரி அடுத்த ரொமான்ஸ் கிளாஸ் உனக்கு  ரெடிடா” என சிரித்துக் கொண்டே சென்றாள்…

அவள் வெளியேறியதும் வெங்க்கட் உள்ளே நுழைந்தான் ஆவேசமாக…

சமையலறையில் அறைகுறை வேலையாய் இருப்பதை பார்த்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து…  அங்கே சென்றாள்.

புதிதாய் இருந்த நான்கைந்து பாத்திரங்களை பார்த்து…  யோசிக்க…

“நானும் உங்க மாமாவும் சுத்த  சைவம்மா..எல்லா பாத்திரத்தையும் புழங்க வேண்டாம்…. இதை மட்டும் புழங்கிக்கோ… சாத்வி…. வெங்க்கட் க்ருத்திகா கூட…. சாப்பிடறதில்லை…  அது தான்  தப்பா எடுத்துக்காத“ என….

“அய்யோ…. விடுங்க அத்தை ” என அவரை அனுப்பி விட்டு…  விநாயகம் வாங்கி வந்திருந்த நாட்டுக் கோழியை… ஷிவாவிற்க்காக அல்லாது சத்ரிக்காக முதல் முறையாய் ஆசை ஆசையாய் சமைக்க தொடங்கினாள்.

அதன் பின் இவர்களை உணவுண்ண அழைக்க சென்றாள்.

இவள் உள்ளே நுழையவும் சத்ரியின் அறையிலிருந்து வெங்க்கட் வெளியேறவும் சரியாய் இருந்தது. ஆனால் அப்போது இருந்த்டென்ஷன் எல்லாம் வடிந்து ஏதோ நிம்மதியான முகத்துடன் கீழ் இறங்கி சென்றான்.

அவர்களை தொடர்ந்து இவர்களும் உணவுண்ண இறங்கி வந்தனர்.

ஷிவா வந்த விஷயம் கேள்விபட்டு, வெளியே சென்றவள், படபடப்பாய் அப்போது தான் வீட்டினுள் வர வெங்க்கட் முகத்தில் இருந்த அமைதியை பார்த்து  நிம்மதி பெருமூச்சை விட்டாள்..

க்ருத்தியை பார்த்த ஷிவா…  “ க்ருத்திகா…  எப்படி இருக்க.. ஹாய் குட்டி ஏஞ்சல்! வாட்ஸ் யுவர் நேம்?“ என க்ருத்திகாவிடம் பெயருக்கு பேசியவன் திவ்யாவுடன் பேச தொடங்கினான்.

எந்த புறம் என தெரியாமலேயே இவளும் தலையசைக்க, “வாங்க சாப்பிடலாம்” என மஹா அழைக்க, அனைவரும் டெனிங் டேபிள் தோக்கிஇ படையெடுத்தனர்.

வெஜ் ஒரு முறம்! நான் வெஜ் ஒரு புறம்!  என பிரிந்து அமர்ந்தனர்.

அனைவரும் ஒவ்வொரு வகையில் நிம்மதியாய் இருந்த முகத்துடன் இருந்ததைப் பார்த்து தான் பெண்களுக்கு ஒரளவு நிம்மதியானது..

“இவன் வெங்க்கட் மாமாகிட்ட என்ன பேசி கரெக்ட் பண்ணினானோ ” என முகம் நிறைந்த புன்னகையுடன்.. சத்ரியனுக்கு கோழியும் சூப்பும் பரிமாற அவளை விழுங்கியபடி  வயிற்றை நிரப்பினான் அனைவரும் உண்டு முடித்து மேலும் சில நேர பேச்சுகளாய் நகர்ந்தது.

மதிய உணவு முடிந்து.. ஷிவாவிற்கு ஒரு அறையை ஒதுக்கி்… மற்றவர்களும் ஓய்வெடுக்க சென்றனர்.

அவர்களை தொடர்ந்து தங்கள் அறையில் நுழைந்த சத்ரியை அருகில் ஒட்டினாற் போலிருந்த சுவற்றில் சாய்ந்து தானும் அவன் மீதே சாய்ந்தாள் சாத்வி.

“ ஷிவா அண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானே உன்னை தேடி வந்திருப்பேன்னு…  சொன்னதுக்கு இது தான் காரணமா?”  என அவன் சட்டை காலரை பிடித்து இழுத்தாள்

“நீ… என்கூட தனியா ஷேர் பண்ண வேண்டியதெல்லாம்…. பப்ளிக்கா… ஷேர் பண்ணிட்டியே! அதுவும் ஷிவா மாமா மூலமா”

“ஏன்…. தனியா சொல்லியிருந்தா என்ன பண்ணி இருப்ப..” என அவள் முகத்தோடு முகம் வைத்து உரச

“ம்… ரொமான்ஸ் கிளாஸ் எடுத்திருப்பேன் ” என அவளே அவனுக்கு முகத்தை கொடுக்க…

“ஆமாண்டி…. கிளாஸ் எடுத்துட்டு எனக்கென்னன்னு போய்டுவே…  கேட்டா…  உயிர் வேணும் சொல்வ..போடி..” என அவளை விலக்கி..

“ ஒரு கோழி இன்னொரு கோழியை சூப் வச்சிருச்சு.. நான் என்னைக்கு என் கோழியை சூப்  வைக்கப்போறனோ..” என அவளை பார்த்தபடி பெருமூச்சு விட..

“கோழியை பார்த்தும் சேவல் ஓவரா.. சிலிர்த்துக்குதே” இவள் கிண்டலாக பேச

“சிலிர்த்தது…. அந்த நாட்டுக் கோழியை பார்த்து இல்லை“ என அவளை முழுவதுமாய் பார்வையிட்டு “இந்த நாட்டு கோழியை பார்த்து தான் ” என

“ நான் உனக்கு நாட்டு கோழியா..?” என வம்பிழுக்க….

“ ஆமா கோழி.. ” என உதட்டினை அசைக்காமல் பேசி

“ கோழியை திருடி…  அப்படி என் உடம்பை தேத்தனுமா… ” என அவளை தனக்குள் இழுக்க

அவளோ பதில் கூறாமல் அவனிடமிருந்து விலகிக் கொண்டே இருக்க…  “ஏய்…. சும்மா இருந்தவனுக்கு ரொமான்ஸ் கிளாஸ் எடுத்து உசுப்பேத்தி விட்டுட்டு.. இப்போ விலகினால் என்ன அர்த்தம்” என அவன் கைகளுக்கு தடை போட்டவளின் கைகளை பார்த்த வண்ணம் கூற

“ம் ஹூம்” என இதழ்களில் சிரிப்பை அடக்கி இவள் மறுத்து பேச

அதில் கடுப்பானவன் “ஏய்…  நாட்டுக்கோழி…  உன்னை ஒரு நாள் இல்லை ஒரு நாள் உரிச்ச கோழியாக்கி…  பொரிச்செடுக்கிறானா, இல்லையா..ன்னு பாரு” என அவளிடையில் அழுத்தமாய் கிள்ள

அசால்ட்டாய் அதை தாங்கியபடி…

“பொரிப்பியா…  எதுக்கு” என அவனை மீண்டும் உசுப்பேற்ற…

“ம்…. நீ முட்டை பொரிக்கிறதுக்கு தான்” என வாய் விட்டு சிரித்தான் சத்ரி…. ஆசையாய் பார்த்திருந்தாள் அவனின் சிரிப்பை.