அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது… இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க
குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற டிரெஸ் தான்…இந்த வயசில் போடாமல் எப்போ போடறது… ” என சிவஹாமி கூற..
“சத்ரியோட பைக்கில் சேரி கட்டிட்டு போக முடியாது. ஆனால் கோவிலுக்கு இதோடையும் போக முடியாது… . நான் புடவையே மாத்திக்கிறேன்” என மாடி ஏற….
“கோவிலுக்கு வேனா இன்னொரு நாள் போய்க்க்கலாம்… வேற எங்கேயாவது போய்ட்டு வா மா. ஆசையா அவன் கூட பைக்கில் போக கிளம்பிருக்க… போமா” என அனுப்பி வைக்க.. மகிழ்ச்சி கொப்பளிக்க… சத்ரியை தேடி வந்தாள்..
பிளாக் ஜீன்… ஸ்கைபுளு டிசர்ட்… அவனின் மெருகேறிய மெக்கானிக் உடலமைப்பை அப்படியே எடுத்துக் காட்ட… இரண்டு கால்களை அகட்டி தரையில் ஊன்றி கடுமையான உழைப்பினால் மெருகேறியிருந்த அகன்ற தோள்களும், கேன்ட் பாரில் திடமாய் பதிந்திருந்த விரல்களும்…. விரல்களால்… ”உர்…உர்…உர்” என பைக்கை உரும விட்டுக் கொண்டிருக்க… காற்றில் பறந்த கேசமும்.. கண்களை மறைத்த கூலிங் கிளாஸூம் சாத்வியின் மனதில் அழுத்தமாய் படிய.. அமைதியாய் அவனருகில் சென்று நின்றாள்.
பிங்க் பிளாக்கில் சாத்வி, புளூ பிளாக்கில் சத்ரி என இருவரும் உடைகளிலும் பொருத்தம் காட்டியபடி ஒருவரை ஒருவர் பார்த்திருக்க.. சத்ரியின் விரல்கள் இன்னும் பைக்கை உறும விட்டது அவனின் மனதினை போல்..
அவன் பார்வைகள் என்ன பேசின என தெரியாத வண்ணம்… கூலிங் கிளாஸ் மறைத்துக் கொண்டிருக்க… தாராளமாய் அவன் பார்வை அவளை வருடியது. ஆனால் விகாரமில்லாத அவள் உடைகூட அவனுக்குள் வேறு உணர்வுகளை தூண்டி விட..
“ இப்படியே கோவிலுக்கு போக முடியாது” என குரலில் ஏற்றத்துடன் கூற
“ வேற எங்கையாவது போகலாம்..” என அவன் பின் எறி அமர்ந்தாள்.
ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பெரும்பாலும் இருக்கும் சிறிதான சீட்டில் பாதியை அடைத்தபடி சத்ரி அமர… அவன் மேலே தன் உடல் முழுவதும் உரசி…. இரண்டு புறமும் கால் போட்டு அமர்ந்தாள் சாத்வி.
உறும விட்டுக் கொண்டிருந்த கைகள் அதன் வேலையை நிறுத்தி.. ஹேண்டில் பாரில் இருந்த இடது கையை எடுத்து, சற்று திரும்பி..
“ஏய், என்னடி இது…” என அவன் கோபம் மறந்து கேட்க.
அவளோ… அவனை கவனியாதது போல்…. இன்னும் நெருங்கி அமர்ந்து “சீட் பத்த மாட்டுது சத்ரி” என கூற…
“ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடி” என அவளின் பின்னால் சற்றே தெரிந்த வெறுமையான சீட்டை பார்த்து கூறியவன் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்ய…
அவனை பார்த்து கள்ளமாய் சிரித்தவள் சற்று பின் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.
இதை எதிர்பாராத சத்ரி… “ஐய்யோ…. வடை போச்சே” என வாயில் ஜொள் வடிந்த படி
“வாயை மூடிட்டு இருந்திருக்கலாம் சத்ரி நீ” என தனக்கு தானே கொட்டு வைத்து கிளம்பினான்..
சினிமா சென்றவர்கள், லேசாய் உணவு உண்டு விட்டு, ஷாப்பிங் மால், ஹோட்டல் என பெயருக்கு சுற்றினார்களே தவிர எதுவுமே வாங்கவில்லை. ஆனால் நிறைய அலையவைத்தாள்..
மாலை நெருங்க “ஏய்… இத்தனை கடைக்கு போறோம், ஏதாவது வாங்கு சும்மா சுத்துறதுக்கா இவ்வளவு பில்டப்..” என கேட்க…
“எனக்கு உங்கூட பைக்கில் போகனும்….அவ்வளவு தான் ” என சுவாதீனமாய் சொல்ல..
“இதை முதலிலிலேய சொல்ல மாட்டியயா?” என அழைத்துக் கொண்டு… திருச்சியின் மெயினை கடந்து பைப்பாஸில் ஒரு லாங் டிரைவ் கூட்டிப் போக… அவனின் ஸ்போர்ட்ஸ் பைக்.. அதிவேகத்தில்.. காற்றை கிழித்துக் கொண்டு.. பறந்தது. அவன் சென்ற வேகத்திற்கு…. தானாகவே அவன் தோள்களில் கை வைத்து அப்படியே எழுந்து.. கைகளை விரித்து.. வேகமாய் மோதிய காற்றை உள்வாங்கிக் கொண்டு.. அத்தனை சந்தோஷங்களையும் தத்து எடுத்தவளாய்… மனம் நிறைந்த புன்னகையுடன் அவன் பின் மீண்டும் அமர்ந்தாள்.. ஆனால் நெருக்கமாய் அவன் வயிற்றில் கைகளை புதைத்துக் கொள்ள.
அடுத்த நொடி.. இன்னும் வேகமெடுத்து.. காற்றைக்க கிழித்துக் கொண்டு.. காதல் பறவைகளை சுமந்த வண்ணம்… பறந்து சென்றது அவனின் ஸ்போர்ட்ஸ் பைக்…
அவனுடனான இவ்வளவு நேர இயல்பையும் கலைக்கும் வண்ணம் இருந்தது அவள் செய்கை.
வீடு திரும்பும் போது இரவு நெருங்க ஆரம்பித்திருந்தது.. சுவாதீனமாய் அவன் தோள்களில் கை வைத்து, தன் முழு உடலும் உரச இறங்கினாள் மீண்டும்.
சத்ரிக்கோ… உடல் சூடேரிக் கொண்டிருந்தது. “அடங்கவே மாட்றாளே” என அவனும் புலம்பியபடி இறங்கி.. இவள் முதல் செல்ல, பைக்கை நிறுத்தி விட்டு பின்னாலேயே இவன். வந்தான்.
அவனுக்கு முன்பே அறையினுள் சென்றவள், மாற்றுடைக்காக கப்போர்டினுள் இருந்து உடையை எடுத்து திரும்ப இவளுக்காகவே காத்திருந்தார்ப்போல், கைகட்டி சாத்வியையே பார்த்திருந்தான்.
அவன் பார்வையில் “எ…என்ன….” என சாத்வி கேட்க… அவளை முழுவதுமாய் பார்த்து
“கல்யாணத்துக்கு அப்பறம், ரொமான்ஸ், ரொமான்ஸ்ன்னு ஒரு சாப்டர் வரும் அது பத்தி கொஞ்சமாவது உனக்கு தெரியுமா” என வம்பிழுக்க
“ யாராவது சொல்லிக் கொடுத்தா தானே தெரியும்”என அவளும் பதில் பேச…
“ஓ மேடமுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்த தான் ரொமான்ஸ் வருமோ”
“ம்… ஆமாம்” என தெனாவட்டாய் சொல்ல…
“ம்… இப்போ பைக்கில் ஏறும் போதும் இறங்கும் போதும் , என்னை உசிப்பேத்தி விட்டீங்களே… அதுக்கு பேர் என்னவாம்” என ஸ்டைலாய் கேட்க..
“ ஓ…அதான் ரொமான்ஸா.. அப்போ ரமேஷ் சொல்லிக் கொடுத்தது ரொமான்ஸ் இல்லையா” என தீவிரமாய் முகம் மாற
“என்னது.. ரமேஷா.. ” என அவளை கூர் பார்வை பார்த்து “அவன் பேரையையே எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனா.. இல்லையா?”என பல்லை கடிக்க…
“ஆமா, சத்ரி, ரமேஷ் தான் சொல்லிக் கொடுத்தான்…. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே ஒரு நாள் கிளாஸ் எடுத்தான்… அதுவும் ஒரு பத்து நிமிசம் தான், அவ்வளவு அழகா கிளாஸ் எடுத்தான்… நீயும் இருக்க… கல்யாணமே ஆயிடுச்சு” என சிரிப்பை அடக்கி வம்பிழுக்க
“என்னடி சொல்ற” என அதிர்ச்சியாய் கேட்டான் சத்ரி…
“ஆமாம் சத்ரி.. எனக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் ரொமான்ஸ் கிளாஸ் எடுத்தது அவன் தான்” என மனதில் அன்றைய சத்ரி உருவம் பெற..
அவன் அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு..
“என்ன செஞ்சான்னு. நான் அப்படியே உனக்கு எக்ஸ் பிளைன் பண்றேன்”
“ஆர்…யூ ரெடி ஃபார் தட்..” என இரண்டு கைகளையும் தட்டியபடி சத்ரியின் அருகில் நெருங்கினாள்.
பின்புறம் டக் இன் செய்யாமல்,முன்புறம் டக்கின் செய்து இருந்த சத்ரியின் டீசர்டினை வலது கையினால் வெளியில் எடுத்தாள்.
சாத்வி அருகில் வந்ததை ஆர்வமாய் பார்த்த சத்ரி.. அவளின் இந்த செய்கையை சத்தியமாய் எதிர் பார்க்கவே இல்லை உடல் நாணேறிய வில்லாய் விறைக்க…
அதை உணர்ந்தாலும் தனக்குள் கள்ளமாய் புன்னகைத்த சாத்வி டீ சர்டை சற்று மேலே ஏற்றி விட்டு சத்ரியின் இடையில் பதிந்தது இவள் விரல்கள்.
நாணேறிய வில்லாய் விரைத்திருந்தவனுள்.. மாறன் அம்புகள் தொடர்ந்து பாய்ந்தார்ப் போன்று. சுவாசம் ஓர் முறை தடை பட்டது சத்ரிக்கு…
இடையில் அழுத்தமாய் பதிந்த சாத்வியின் விரல்கள் அப்படியே வயிற்றின் மீது பயணித்து… அவன் மார்பில் ஊர்ந்து.. தோளில் படர்ந்து அவன் கழுத்தின் பின்புறம் அழுத்தி பிடித்து… தன் முகம் அருகே இழுத்ததுடன் தன் பயணத்தை நிறுத்தியது சாத்வியின் விரல்கள்.
பெண்மையை தேடும் ஆண்மை இயல்பென்றால்..
ஆண்மையைத் தேடும் பெண்மை கிடைப்பதற்கு அறிய பொக்கிஷம் தான்.
சாத்வியினுள், தான் உணரும் உணர்வுகளை விட, அவளால் தனக்கு உணர்த்தப்படும் உணர்வுகள்.. நிச்சயம் அவனை பித்தம் கலங்கச் செய்தது.. இன்ச் பை இன்சாக நகர்ந்த தளிர் விரல்களும் அது ஊர்ந்த இடங்களும்.. தன் உணர்வினை தூண்டிய விதமும்.. தன்னால் சாத்விக்கு என்றோ ஒரு நாள் உணர்த்தியிருக்கிறோம்..என சட்டென உறைக்க அது எந்நாளான்று என அவன் மனம் சரியாய் காட்டிக் கொடுக்க.. சத்ரியின் கண்கள் விரிந்து இதயம் துடிக்கும் ஓசை இடியாய் இடித்தபடி மாற.. இதழ்களோ.. அடுத்து நிகழப்போகும் நிகழ்ச்சியை எண்ணி ஆழ்கடலின் கொந்தளிப்புடன் காத்திருக்க..
அவளோ அவன் இதழ்களுக்கு அருகில் உதடுகளோடு உரசியபடி “இப்படி தான் அன்னைக்கு எனக்கு ரொமான்ஸ் கிளாஸ் எடுத்தான்” என இதழ்களை அசைக்க… அந்த சின்ன அசைவிலும் அவன் உதடுகளோடு உரசியது சாத்வியின் இதழ்கள்.. வத்திபெட்டியை உரசும் வத்திக்குச்சியாய் தீப்பற்றிக் கொண்டது..
அதை அறிந்த அவளோ ”இதுக்கு பேர் ரொமான்ஸ் தானே” என கூறி.. “ நல்லா கிளாஸ் எடுத்தானா?” என இன்னும் உரசியபடி கூறி. இதழ்களின் உரசலில் இருந்து சிறு இடைவெளி கொடுக்க அந்த உரசல்களை விட மனமில்லாதவன்
அவள் பின்னந்தலையில் கை கொடுத்து பின் கழுத்தை அழுத்தமாய் பற்றி. “ஒரு செகண்ட் தான் உனக்கு தான் டைம்.. மரியாதையா..கிஸ் பண்ணிடு” என தாடை சிறிதும் அசையாமல்.. இதழ்களை மட்டும் அசைத்தபடி இன்னும் உரச
“மாட்டேன்” என இவேள் சொல்லி முடிப்பதற்குள்.. அவளிதழ்களை தன் இதழ்களால் அழுத்தமாய் முட்டி பேசவிடாமல் செய்தவன்
“உனக்கு கிளாஸ் எடுத்தவன் யருன்னு இப்போ இந்த நிமிடம் தெரிஞ்சிடும்” என அவள் இதழ்களை முட்டிக் கொண்டு அவன் இதழ்கள் பேசி..
“கரெக்டான்னு செக் பண்ணிக்க“ என, சாத்வி செய்த அதே செயல்கள் மீண்டும் ஒரு முறை அவளில் நிகழ்ந்தேறி, அவள் இதழ்களோடு முட்டி மோதி… அவளிதழ்களுக்குள் கலந்த அவன் இதழ்கள் தன் அசுர வேகத்துடன் பயணித்தது.
“அவனை உசுப்பேற்றிவிட செய்த செயலில் தானே விழுவோம் என தெரியாதவளாய்” அவனுக்கு முடிந்தளவு ஈடு கொடுக்க இதழ் முத்தமே, அங்கு யுத்தமாய் மாறிப்போனது.
இதழ் முத்தம் கொடுத்த போதை அவனில் கடலாய் தேங்க மெல்ல அவள் முகம் பார்த்து “நீ மறந்திருப்ப, நியாபகம் இருந்திருக்காதுன்னு நினைச்சேன்” என லேசாய் தடித்திரிந்த அவள் இதழ்களை அழுத்தமாய் வருடி பின் கேட்க…
அவனது பிரதிபலிபிற்கு நேர் எதிர் பதமாய்..மாறிய சாத்வியின் முகம் அவன் டீசர்ட் காலரை பிடித்து இழுத்து..
“அப்போ நான் சுயநினைவில்லாமல் இருந்தப்போ… நான் உணர்ந்த இந்த உணர்வுகள் பொய் இல்லை அப்படி தானே! அன்னைக்கு நடந்தது கனவில்லை நிஜம்!” என அவன் காலரை இன்னும் தன் கைகளுக்குள் சுருட்டிக் கொள்ள..
“ இத்தனை நாள் கனவுன்னு நினைச்சு.. நினைச்சு.. அந்த கனவு நினைவாகாதான்னு, ஏங்க வைச்சிட்டு.. ஒன்னுமே பண்ணாதவன் மாதிரி.. என்னமா.. நடிச்சிருக்க” என முத்த யுத்தத்தில் கரைந்த அவள் பனி மலர் முகம் பனிப்பாறையாய் இறுக..
“உன்கூட கடைசி வரை திகட்ட திகட்ட வாழப் போறவன்… நான் தான் ” ன்னு சொன்னேல்ல.. நீ எப்படியோ… ஆனா… நான் உன் கூட திகட்ட திகட்ட் வாழுவேன்டா. நீ எனக்கு கிடைப்பாயா? இல்லையான்னு..? திண்டாட வச்சிட்டல்ல. உன்கூட தான் என்னோட வாழ்க்கைன்னு தெரியாமல் என்னை தவிக்க விட்டுட்டல.. இதுக்காகவே உன் கூட திகட்ட திகட்ட வாழுவேன்.. இடையில் நான் செத்து போன கூட எனக்கு இதெல்லாம் கிடைக்காமல் போய்டுச்சேன்னு… நான் வருத்தபடவே கூடாது, அப்படி ஒரு வாழ்க்கை வேணும். அதுவும் நீ மட்டும் தான் இருக்கனும் என்னோட வாழ்க்கையில்… வேற யாருக்கும் இடம் கிடையாது” என அவனுடன் என பேசி முடிக்க
ஒரு நொடியும் தாமதிக்காத சத்ரி, அவளை அள்ளி அணைத்து, அவள் பாதங்கள் தரை தொடாமல் தூக்கியபடி அவளை தனக்குள் புதைப்பவனாய் இறுக்கிக் கொண்டு “எனக்கு மேலே நீ விரும்புறன்னு தெரியும், ஆனால் இந்தளவு காதலை நான் தாங்க மாட்டேன்டி.. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை.. சொல்லு…. நான் என்ன செய்யன்னு சொல்லு.. என்ன செஞ்சா உன் வலியெல்லாம்.. மறையும் சொல்லுடி..” என சொல்லிவிட்டு அவள் இதழ்களோடு மீண்டும் ஆனந்தமாய் சங்கமித்தான்.
அப்படியாவது அவள் வலிகள் போக்க வேண்டும். என்ற எண்ணமே நிலைப்பெற அவளிடமே கேட்டான்..அவள் வார்த்தைகளின் கனம் தாளாமல்.
“சொல்லுடி” இதழ்களை விட்டு இவன் பிரிய..
அதையும் சளைக்காமல் பார்த்தவள் “உன்னோட…. உயிர் வேணும்” என கேட்டாள் சாத்வி..