பகுதி 21

கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், அறையினுள் செல்லவும் முடியாமல்.. சாத்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருக்க..  காதுகளை இறுக்கமாய் பொத்திக் கொண்டான்…  சத்ரி.

சாத்வியின்  வார்த்தைகளை…  ‘கோபத்தில் எதோ பேசுறா.’ என ஒதுக்க முடியவில்லை.. இத்தனை காலமாய் அடைத்து வைத்த பாரம் முழுவதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சீறி வந்ததை உணர்ந்தவன்   இல்லை அவளோட முழு பாரமும் இறங்கவில்லை… இறக்கி வைக்கவில்லை..… இன்னும் அவளுள் ஏதோ இருக்கு..…  என அவனது மனம் உணர்த்த மீண்டும் அறையினுள்ளே சென்றான்.

கண்களை மூடி சோபாவிலேயே அமர்ந்திருந்த அவளின் முன் வந்து.. கீழே முழங்காலிட்டு அமர்ந்து.

சாய்ந்திருந்த தலையை  அவளின் கன்னங்களில் கை கொடுத்து.. ஒரு வேகத்துடன்.. தன் முன் திருப்பி.. “இன்னும் என்னென்ன…. இங்கே அடைச்சு வச்சிருக்க..” என இயல்பாய் அவன் கைகள் அவள் இதயத்தின் மீது கை வைத்து கேட்க

அவனின் அழுத்தத்தில் கண் திறந்தவள்.. “அசிங்கமா பேசாத… தொடாத..” என

சாத்வியின் பேச்சில் “இன்னும் என்னென்ன இருக்கு சொல்லிடு…  மொத்தமா சொல்லிடு..” என வார்த்தைகளை கடித்து துப்ப…

“ஒன்னா , இரண்டா…  அது இருக்கு நிறையா…  ஆனா ஒன்னே ஒன்று மட்டும் இப்போவே உன்கிட்ட ஷேர் பண்ணனும்.” என அவன் கைகளை பிடித்து எழுப்பி தன் அருகில் அமர வைத்து..  அவன் மடியில் தலை சாய்ந்து

“நீ ஊரை விட்டு போறதுக்கு முன்னாடி…  ஒரு தடவை ஓரே ஒரு தடவை ‘என்னைக்கா இருந்தாலும் நான் தான் உனக்கு  நீ தான் எனக்குன்னு.. ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருந்திருக்கலாம்..  சத்ரி” என நிறுத்தி அவன் முகம் பார்த்து…

“என்ன புரியலையா..” என கேட்டு காதலோடு வலியையும் சுமந்திருந்த அவன் விழிகளை பார்த்தபடி…

“ஒரு நாள் உன்கிட்ட ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்’  நியாகம் இருக்கா..” என அவனிடம் கேட்க..

அவள் விழிகளில் இருந்து தன் பார்வையை திருப்பியவன்.

 “ம்…. நியாபகம் இருக்கு..” என

இருவருக்கும் அந்த தருணம் மனதில் ஓடியது..

ஷிவாவினால் அடிபட்டு வீட்டில் இருந்த தருணம்…

சில நாட்களாய் கோழியுடன் தன் வீட்டிற்கு வரும் சாத்வி…. அன்றும் வந்தாள்….

“சத்ரி, இந்தா சூப்பை பிடி” என கால்கள் தரையில் படாமல் மான்குட்டியாய் தாவி குதித்தபடி..  அருகில் வந்து அவன் கைகளில் திணிக்க…

அவளையும் சூப்பையும் மாறி மாறிப் பார்த்த சத்ரி “ நீ நடந்து வர்றீயா… இல்லை பறந்து வர்றீயான்னு  ஸ்லோ மோஷன் கேமரா வச்சு தான் கண்டுபிடிக்கனும்..இதில் கையில் இரண்டு பாத்திரம் வேற.. நீ வர்ற ஸ்பீடுக்கு  சூப்பும், குழம்பும்  இருக்கா…. இல்லை கொட்டிடுச்சா.” என கிண்டலாய் கேட்க

“ ஐயோ பாவம்ன்னு கொண்டு வந்தா.. நீ என்னையவே கிண்டல் பண்றியா..  உனக்கு போய் சூப் கொண்டு வந்தேன் பாரு” என அவன் தலையில் நங்கென கொட்ட..

“ஆ” என வேண்டுமென்றே கத்தி “உங்கப்பன் அடி வாங்க விட்டது பத்தாதுன்னு…  நீ வேற அடிக்கிற..” என வலிக்காத தலையை தடவிக் கொடுக்க

வலிக்காமல் கொட்டியது அவளுக்கும் தெரிந்தது தானே.. வேண்டும்  என்றே…  இவன் கத்துறான்….என தனக்குள்ளே சிரித்துக் கொண்டு..

“இது வலிக்குதா.. இரு அப்பாகிட்ட சொல்லி இன்னொரு தடவை உனக்கு ரவுண்டு கட்ட சொல்றேன்” என கிண்டலாய் சாத்வி கூற

“ அடிப்பாவி ..  நீயும் அடி வாங்கி விட பி்ளான் பண்ணிட்ட போல” என உண்மையாகவே அவளிடம் கேட்க….

‘ஹா…. ஹா’ என சிரித்தவள்…  “அய்யோ…. சும்மா சொன்னேன் சத்ரி…  நான் போய் உனக்கு அடி வாங்கி விடுவேனா.. அப்பாகிட்ட சொன்னாலும்..  சும்மாலாம் அடிப்பாங்களா.. ஏதாவது காரணம் வேண்டாம்..” என அவன் கைளில் சூப்பை திணிக்க…

அதை வாங்கியபடி…

“காரணமா…. அதுவும் உங்கப்பனுக்கா.. நீ இப்படி கோழியும் கையுமாய் இருக்கிறதை உங்கப்பன் பார்த்தான்…  அது ஒன்னே போதும்.. . மறுபடியும் எனக்கு அடி கன்பார்ம்… ” என சூப்பை ரசித்தபடி கேட்க…

“ ஹா….ஹா.. வாங்கின அடி தான் இப்படி பேச வைக்குது போல.. “ என  சிரித்தவள் அவனது முறைப்பை கண்டு….சிரிப்பை நிறுத்தி..

“ நீ எங்கப்பாகிட்ட இருந்து லைப் லாங் தப்பிக்க ஒரு வழி இருக்கு. அதுக்கு நான் ஒரு ஐடியா சொல்றேன் கேட்கிறியா… ”என கிண்டலாய் அவளும் பேச

ஏதோ விளையாடுகிறாள் என நினைத்த..சத்ரியும்…  “சொல்லுங்க மேடம்…  கேட்டுட்டா போச்சு..” என

“என்னை கல்யாணம் பண்ணிக்க…. ஆனா வெங்க்கட் மாமா மாதிரி ஓடி எல்லாம் போக வேண்டாம்..  எப்படியும் அவருக்கு நீ மருமகன் ஆயிடுவ அப்போ..  அப்பா உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க தானே“ என தன் முன் ஒரு நாள் ஆசை ததும்பும் முகத்துடன் கேட்ட குழந்தை முகம் இப்போதும் சத்ரியின்  கண்களில் வலம் வரத்தான் செய்தது.

விளையாட்டாய் இருவரும் பேச பேச்சு இந்த திசையில் திரும்பும் என எதிர்பாராத சத்ரி…  சட்டென சுதாரித்தான்.. “ஏய், படிக்க வேண்டிய வயசில் கல்யாணம் கேட்குதா உனக்கு அதுவும் என்கூட” என சாத்வியின் இடது காதினை பிடித்து அழுத்தமாய் திருகிவிட..

“ ஆ…ஆஆ…  வலிக்குது சத்ரி… ” என துள்ளக் குதித்து….

“வலிக்குது… .சத்ரி… ” என அவனிடம் இருந்து துள்ள சத்ரியோ  விரிந்த புன்னகையுடன்.. மேலும் மேலும் காதினை திருக..

“ஐயோ…. விடுடா…வலிக்குதுடா” என கத்தவே தொடங்கினாள்…

“இனிமேல் இப்படி பேச மாட்டேன்னு சொல்லு…  விடறேன்” என ஒரு வித தீவரமாய் பேச…

வலி தாங்காத சாத்வியும்…

“ பேச மாட்டேன், பேச மாட்டேன், பேச மாட்டேன்… ” என அவசரமாய்  சொல்ல

“ பேசின…. கொன்னுடுவேன்….”என அவள் காதுகளை தன் கைகளில் இருந்து பிரிக்க…

அடுத்த நொடி அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டு

“உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு… என்னை சொல்லனும்….”என காதை தேய்த்தபடயே கூற

“அடி வாங்காமல் இருக்க.. அம்மையார் குடுக்குற ஐடியாவை பாரு…  உயிருக்கே உலை வைக்கிறே.” என அவள் காதினை மீண்டும் பிடிக்க வர…

அவசரமாய் அவனது அறை வாசலில் கால் வைத்தபடியே திரும்பி….

“நான் எல்லாம் உனக்கு கிடைக்க கொடுத்து வச்சருக்கனும்…  வேண்டாட்டி போடா..” என

“ அடிங் ” என அவளை பிடிக்க வர…

“ போடா “ என அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் சாத்வி..

அது இருவருக்குமே நியாபகம் வர….

“அன்னைக்கு இரண்டு பேருமே விளையாட்டா தான் பேசினோம்…  ஆனால் அப்போவே என் மனசில் நீ பதிஞ்சு போய்ட்ட..   இல்லைன்னா அப்படி ஒரு வார்த்தை என் வாயில் இருந்து வந்திருக்காது.. விளையாட்டுப் போல் கேட்டாலும் அது நிஜம் தான். என்னைக்கேட்டா…. அது காதலோட வெளிப்பாடா தான் தெரியுது சத்ரி..எஸ்…. அது காதல் தான்…. அப்போது எப்படின்னு தெரியாது. ஆனால் இப்போ அது காதல் தான்…  எஸ் காதல் தான்..… என்னோட காதலை அன்னைக்கு…  நிராகரிக்காமல் இருந்திருந்தால் நீ எனக்கு தான்னு தெரிஞ்சிருந்தால்…  நான் எதை பத்தியும் பயப்படாமல் யாரையும் கேர் பண்ணிருக்க மாட்டேன்…   என்னைக்காவது ஒருநாள்..  எனக்காக வருவேன்னு.. அந்த .நம்பிக்கையில் இருந்திருப்பேன்…  நிறைய விஷயத்தில் ஏமாந்து போய் இருக்க மாட்டேன்” என தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே செல்ல…

அவளின் பேச்சில் தலையே சுற்றிப்போனது சத்ரிக்கு.. அன்னைக்கு விளையாட்டிற்கு கேட்ட ஒரு விஷயத்தை இப்படி பெரிசு பண்றாளே என ..எரிச்சலும் கூடவே வர…

“நீ பேசுறது உனக்கே லூசுத்தனமா தெரியலையா சாத்வி” என கோபத்துடன் கேட்க…

 “உன் மேல் பைத்தியம் பிடிச்சு அலையறேன்னு…உனக்கு இன்னும் புரியலை சத்ரி.“ என விரக்தியாய் புன்னகைத்தவள்….

“அன்னைக்கு ஒரே ஒரு வார்த்தை, ‘சரி’ ன்னு கூட சொல்லி இருக்க வேண்டாம்.. ‘உனக்கு முதலில் கல்யாண வயசு வரட்டும் அப்பறம் பார்க்கலாம்’ இந்த வார்த்தையை கூட சொல்லி இருக்கலாம்.. அந்த நம்பிக்கையோட இருந்திருப்பேன்“ என அதை விடாமல் பேச

“ஏய், லூசாடி நீ… நையண்த் படிக்கிற உன்கிட்டவந்து, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..உனக்கு நான் தான்…. எனக்கு நீ தான்.. நாம இரண்டு பேரும் தான் சரியான ஜோடி…. இரண்டுபேரும் லவ் பண்ணலாம்.. லவ் பண்ணி நாசாமா போகலாம்ன்னு தெரிஞ்சே கேட்க..  சொல்றியா…இல்லை தெரிஞ்சே உன் வாழ்க்கையை கெடுக்க சொல்றியா.. லவ் பண்றாளாம் லவ்வு.. மண்ணாங்கட்டி லவ்வு“ என ஒவ்வொரு வார்த்தைக்கும் ஸ்ருதி ஏறிக்கொண்டே செல்ல..

சாதாரண மனிதனாய் இருந்து யோசித்த சத்ரியும்.. சத்ரி மட்டுமே உலகம் என்றிருந்த சாத்விக்கும்…  இந்த ஒன்றில் மட்டும் எண்ண அலைகள் வேறு வேறு திசையில் பயணிக்க.. இருவருமே…  தான் சொல்வது தான் சரி என நின்றிருந்தனர்.

அதை மாற்ற முயற்சி கூட செய்யாத சாத்வி.. “எல்லோரும் சந்தோஷமா வாழத்தான் லவ் பண்ணுவாங்க…  நாசமா போறதுக்கு இல்லை”என கடுப்புடன் கூற

“ பெரிய…  அமரக் காதல்ன்னு நினைப்போ.. அமரக் காதல் எல்லாம் நாசாமா தான் போய் இருக்கு” என பல்லைக் கடிக்க..

“ஓ…  அப்போ நான் உன்னை லவ் பண்ணி இருந்தால் நாசமா போவேன்னு சொல்ற அப்படித்தானே” என சிலிர்த்துக் கொண்டு நிற்க…

“அந்த வயசில் என்னைன்னு இல்லை, வேற யாரையும் லவ் பண்ணி இருந்தாலும் நாசமா தான் போய் இருப்ப” என வார்த்தைகள் தடித்து விழ…

“ஓ… அதனால் தான், சார் தருண் கிட்ட இருந்து என்னை பிரிச்சு வைச்சீங்களோ” என நேரம் பார்த்து அவளும் கேட்க…

“பிரிச்சு வைக்கிறதுக்கு, நீங்க லவ்வர்ஸ்  இல்லை.” சுள்ளென சத்ரியும் விழ….

“நீ அப்படி ஒரு காரணத்தை என்கிட்ட சொல்லி தான் , தருணை பிண்ணி எடுத்ததா எனக்கு நியாபகம்….”என சரியாய் அவனுக்கு நினைவூட்ட

“அப்கோர்ஸ்.. உங்கிட்ட இருந்த தருணை பிரிக்க….எனக்கு அந்த ஒரு காரணம் தான் கிடைச்சது..நல்லது நடக்குறதுக்காக பொய் சொல்றதில் தப்பில்லை” என தெனாவட்டாய் கூற