அம்பிகா அவர் கணவன் முத்துசாமி என அவர்கள் குடும்பத்துக்குள், விநாயகசுந்தரம் குடும்பத்தாரையும் அழகாய் இணைத்துக் கொண்டனர் அம்பிகாவின் குடும்பம்.
விவசாயம் மட்டுமே தெரிந்த அவருக்கு, குத்தகை நிலமும் போய், சொந்த நிலமும் இல்லாது போக… என்ன வேலை பார்ப்பது, எப்படி சம்பாத்தியம் காண்பது என என விழி பிதுங்கிப் போனார்.
டிகிரி முழுதாய் முடித்தவர்களே வேலைக்காக திணறிக் கொண்டிருக்க இரண்டு வருடம் கூட முழுதாய் நிறைவடையாமல் மெக்கானிக்கல் படிப்புடன் நிறுத்தியிருந்த சத்ரி வேலை தேடுவதற்குள்..பெரும்பாடு பட்டுப்போனான். விநாயகத்திற்கோ.. கையிலிருந்த பணம் சிறிது சிறிதாய் குறைந்து கொண்டே வர..
விநாயகசுந்தரம் முத்துசாமியிடம் உதவி கேட்க ஹோட்டல் செக்யூரிட்டி வேலை தான் கிடைத்தது. அதற்கும் தயங்காமல் சென்றார் விநாயகசுந்தரம்.
சத்ரிக்கு தான் தந்தையை பார்த்து அவ்வளவு வருத்தம். அவனும் வேலை தேடி அலுத்துப்போனான். அவன் படிப்பிற்கு மிக குறைவான சம்பளமே கிடைக்க… சத்ரிக்கோ வேலை தேடுவது வேலைக்காகவில்லை என இரண்டு வருட மெக்கானிக்கல் படிப்பை கையில் எடுத்துக் கொண்டுஅதை ஆரம்பமாய் கொண்டு தன் கனவினை நோக்கி பயணிக்க தொடங்கினான்.
நிலத்தை விற்ற மீதி பணத்தை தந்தையிடமிருந்து வாங்கிக் கொண்டு சிறிதாய் மெக்கானிக் ஷாப் வைத்தான்.
வாடகைக்கென அம்பிகா பிடித்துக் கொடுத்திருந்த வீட்டின் சைடில் இருந்த சிறிய இடத்தில் தனக்குரிய மைக்கானிக் ஷாப்பினை சிறிதாய் தொடங்கினான்.. தெருவில் இருந்த ஆட்களே சிறு சிறு ரிப்பேருக்காக வர தொடங்கினர் பஞ்சர் போடுவது ஆயில் மாற்றுவது, வாட்டர் சர்வீஸ் என சிறிதாய் வேலைகள் வர ஆரம்பித்தது.
பைக் ஆல்ட்ரேசன் மீது இருந்த தீராத மோகத்தினாலேயே…. ஆல்ட்ரேஷன் ஷோரூம் வைக்க வேண்டும் என கனவுகளுடன் எடுத்த மெக்கானிக்கல் படிப்பு அவ்வப்போது கண்முன் தோன்றி அவனை தூண்டி விட்டுக் கொண்டே இருக்க…. அதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது சத்ரிக்கு.
சில நேரங்களில் வேலையில்லாமல் இருப்பவன்… தன்னுடைய பைக்கையே ஆல்ட்ரேசன் செய்ய முடிவெடுத்தான், ஓய்வாக இருக்கும் நேரங்களில் தன்னுடைய பிளாட்டினா பைக்கை…. அதன் வடிவமைப்பை தனக்கு பிடித்த வகையில் அதன் உருவ அமைப்பை அப்படியே மாற்றி இருந்தான்… “ஸ்போர்ட்ஸ் பைக்காக….”
ஏதோ ஓர் ஆர்வத்தில் செய்த பைக் மாட்லேசன்… இப்போது அவனின் வாழ்க்கை அங்கமாய் மாறப் போவது தெரியாமல்…. தனிமையை கலைக்க, பைக்கை மாட்லேசன் செய்வதில் தன் நேரத்தை முழுமையாக செலவிட்டான் சத்ரி… ரெடிமேடாக கிடைக்கும் பைக் ஷேப்பை தவிர்த்து , தன் கைகளால் அவன் பைக்கிற்கு அழகூட்டிக் கொண்டிருந்தான்…. பைபர், மெட்டல் என அதை மட்டுமே கொண்டு தனக்கு தேவையான ஷேப்பை அதில் கொண்டுவந்தான்…
இறுதியில் அதற்கு ஸ்போர்டஸ் பைக் Yamaha YZF R3 என்ற மாடல் ஒன்றை முன்னுதாரணமாக கொண்டு அப்படியே ஷேப்பை மாற்றி இருந்தான்.. மேலும் அதற்கு தகுந்தாறப் போல் பெயிண்டும் அடித்து வேண்டிய இடத்தில் டயனாமிக், 3D மற்றும் ஸ்டைலிஸ் ஆன ஸ்டிக்கர்களும் ஒட்ட…. அசல் அந்த ஸ்போர்ட்ஸ் பைக் போலவே இருந்தது.
அப்படி ஒரு ஆனந்தம்… திருப்தி, அலாதி இன்பம்… இப்படி பல உணர்வுகள் அவனுள்.
கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது… ஒருவன் நன்றாக அடி வாங்கிய வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தான்…
‘அக்ஷிடன்ட ஆகி இருக்குமோ ’ என சத்ரி நினைக்கும் போதே…
“அண்ணா…. சின்ன ஆக்ஷிடண்ட் னா… அடி வாங்கிருச்சு… ப்ரண்ட் பைக் வேற… எவ்வளவு வேணும்னாலும் பணம் வாங்கிக்கங்கண்ணா…. ஆனா ஆக்ஸிடண்ட் ஆனது தெரியாமல் ரிப்போர் பார்த்துருங்கண்ணா” என ஒருவன் வந்து நிற்க….
அவன் பேசியதை காதில் வாங்கி , பைக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பார்த்துக் கொண்டிருந்த சத்ரிக்கு… “ரொம்ப அடி வாங்கி இருக்கு தம்பி…. சின்ன ஆக்ஸிடண்டுன்னு சொல்ற.. புது பைக்கா வேற தெரியுதே! இன்சூரன்ஸ் இருந்தா கிளைம் பண்ணிக்கலாமே… எதுக்கு தண்ட செலவு வேற“ என தானாகவே அவனுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தது சத்ரியின் வாய்
“ஐய்யோ , பைக் பஞ்சர்ன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்ன்னா… ஆக்ஷிடண்டுன்னு சொல்ல முடியாது… எவ்வளவு வேணும்னாலும் வாங்கிகங்கண்ணா… அதான் வெளியில் எங்கேயும் போகாமல் இங்கே வந்தேன்” என அவனுடைய சிறிய கடையை பார்த்தபடி கூற
அவன் பார்வையை பார்த்த சத்ரியும்….
“முடிஞ்ச அளவு சரி பண்ணிடறேன்…. ஒரு ரெண்டு நாள் ஆகும்…. அட்வாண்ஸ் கொடுத்த தான் பார்க்க முடியும் மேலும் பைக்கை பிரிச்சா தான் என்னன்ன பிரச்சனைன்னு பார்க்க முடியும்” என சத்ரி கேட்க…
“ இல்லைன்னா காலையில் வேணும்…. இன்றைக்கு ஒரு நாள் சமாளிக்கிறதே கஷ்டம்னா… ப்ரண்டுக்கு ஆக்ஸிடண்ட் ஆனது தெரியாது” என தயக்கமாய் அவனும் கூற…
“ஏன் உங்க ப்ரண்டு மேல அவ்வளவு பயமா” என சத்ரி கேட்க….
“இல்லைனா , அவங்கப்பனுக்கு தான் பயம்“ என உண்மை நிலையை கூறி “இந்தாங்கண்ணே…. அட்வாண்ஸ் “ என பல நோட்டுகளை சத்ரியின் கையில் திணிக்க…
லேசாய் சிரிப்பு வந்தாலும் “சரி காலையில் வந்து எடுத்துக்கோங்க” என பைக்கை பிரிக்க தொடங்கினான்.
என்னன்ன பிரச்சனைகள் என பார்த்து வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு , அதற்கான வேலையில் இறங்கினான்.
இரவு முழுவதும் தூங்காமல் புது பைக்காகவே மாற்றி இருந்தான் சத்ரி….
காலையில் பைக் வாங்க வந்தவன் திருப்தியாய் புன்னகைத்து “சூப்பர்னா… சூப்பரா வேலை பார்த்திருக்கீங்க” என வண்டியை இப்படியும் அப்படியுமாய் பார்த்தவன் மீதி பணத்தையும் கேட்டு அவன் கைகளில் கொடுத்தவனின் கண்களில் சிக்கியது. சத்ரியின் ஸ்போர்ட்ஸ் பைக்.. வேகமாய் அதன் அருகில் சென்றவன்…
“இந்த பைக் எவ்வளவுண்ணா… செம்ம லுக்கா இருக்குண்ணா” என அதை வருடிக் கேட்க….
“இது என்னோடது… சாதாரண யமஹா பைக் தான், ஆல்ட்ரேசன் பண்ணி யமஹா YZF R3 யாக மாற்றி இருக்கேன்… வெளிய இருக்குற டிசைன் தான் ஸ்போர்ட்ஸ் பைக்… உள்ளே இருக்கிற பார்ட்ஸ் சாதாரண யமஹா பைக்…. மைலேஜூம் கிடைக்கும், இமேஜூம் கிடைக்கும்” என ஸ்டைலாய் தோளை குலுக்க… மீண்டும் வாயை பிளந்தான் அவன்…
ஏனென்றால் அது மார்க்கெட்டில் மூன்றரை லட்சம், ஆனால் ஆல்ட்ரேசன் பைக் என வரும் போது பாதி விலைக்கும் கம்மியாக வாங்கலாம் என “அண்ணா, இது சேல்ஸ்க்குனா தருவீங்களா… ” என ஆசையாய் கேட்க…
சட்டென சத்ரியும் “ம்… தரேன்…. ஆனால் பைக் ரேட் இவ்வளவு… நான் இரண்டு வருசம் ஓட்டி இருக்கேன், இவ்வளவு கிலோ மீட்டர் ஓடிருக்கு, ஆனால் ஆல்ட்ரேசன் செலவு ஜாஸ்தி” என தாடையை தடவியவன் அதிக லாபம் வைக்காது… எழுபத்தைஞ்சுக்கு முடிச்சுக்கலாம்….” என சத்ரி பேச..
“அண்ணா, எழுபது முடிச்சுக்கலாம்..ரெடி கேஸ்…. பைக்க வேற ஒரு மெக்கானிக் கிட்ட கொடுத்து செக் பண்ணி வாங்கிகங்க… மெக்கானிக்கை கூட்டி வாங்க….” என சத்ரி பேச…
சத்ரியின் ஏமாற்றாத குணம் அவனின் குரலிலும் பேச்சிலும் தெரிய
“ஓகே ன்னா” என பைக்கில் இருந்த கண்களை அகற்றாமல் கேட்டவன்.
மறுநாளே வேறு ஒரு மெக்கானிக்கை அழைத்து வர… “சத்ரியின் பைக்கை பார்த்து… அதை ஓட்டி செக் செய்தவன்…
“பைக் நல்ல கண்டிசன்ல இருக்கு பா…. எழுபது ரிசனபிள் தான்…. வாங்கலாம்” என இருவரும் பைக்கை வாங்கி்சென்று விட சத்ரிக்கு ஓரளவு லாபம் கிடைத்தது…. பணத்தினை பத்திரபடுத்தி, அடுத்த பைக் என்ன வாங்கலாம், என்ன ஆல்ட்ரேசன் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்க..
அடுத்து சில நாட்களில் மீண்டும் வந்தான் அந்த கல்லூரி மாணவன்….
“டேய் இந்த கடையில் தான்டா பைக் வாங்கினேன், அன்னைக்கு ஆக்ஸிடண்ட் ஆன வண்டியை கூட இங்கே தாண்டா ரிப்பேர் பார்த்தேன்….” என வேறொருவனை அழைத்து வந்தான்
செகண்ட ஹேண்ட் பைக் ஒன்றை சத்ரியிடம் கொடுத்து….
“அண்ணா… இதையும் மாடுலேஷன் பண்ணி கொடுக்கனும் எவ்வளவு ஆகும்” என ட்ரண்டில் இருக்கும் ஒரு பைக்கின் பெயரை சொல்லி கேட்க….
கூடவே வந்த இன்னொருவனோ குப்பையென அடைந்து கிடந்த சத்ரியின் சிறு கடையை பார்த்து நம்பிக்கையின்மையை காட்ட
அதை உணர்ந்த சத்ரியோ… ”பிடிக்கலைன்னா, பைக்கோட ரேட்டை விட இரண்டு மடங்கு பணம் வாங்ககங்க.” என அவனுக்கு தேவையான பதிலை கொடுக்க..
சிரித்த முகத்துடன்… பைக்கை எப்படி மாற்ற வேண்டும் என்ன என்ன பொருத்த வேண்டும்…. என ஒரு நீண்ட பட்டியலை போட்டு விட்டு செல்ல
அந்த கல்லூரி மாணவனின் பார்வை சத்ரியை நன்றாகவே ஏற்றி விட்டிருக்க… இரவு பகல் பாராத உழைப்பு தான் அவனுக்கு.
அடுத்த பத்து நாட்களில் அது பல்சர் பைக் என கண்டே பிடிக்காத வண்ணம்.. அவன் எதிர்பார்த்த புது மாடல் ஸ் போர்ட்ஸ் பைக்காய் மாற்றி இருந்தான்.