அதற்கு அவரோ.. “நான் சொன்னா எல்லாம் விட மாட்டான் அந்த ஷிவா…  சரியான திமிரு புடிச்சவன்.. இதோ பாருங்க, ஆளுங்க பலத்தை விட பணத்தோட பலம் தான் எங்கேயும் பேசும்” பணத்தின் மதிப்பை கூறி  “இவ்வளவு பணத்தோட வாங்க, நான் டிஐஜி கிட்ட கூட்டிட்டு போறேன்… அவர் சொன்ன கண்டிப்பா விட சான்ஸ் இருக்கு” என அனுப்பி வைத்தார்.

‘இவ்வளவு பணமா, என நினைக்க முடியவில்லை, அப்போதைக்கு சத்ரியன் தான் பெரிதாக தெரிய’ வீட்டுக்கு சென்றார்..

“சிவஹாமி..” என சத்தமிட்டு அழைத்தார்.

பதிலுக்கு சிவஹாமி பதில் பேசும்முன்பே நடந்ததை கூற ,அதிர்ந்தார் சிவஹாமி.

“அய்யோ இப்போ என்னங்க செய்றது” பதறியவரிடம்

  ”மர பீரோவில் குத்தகை பணம் இருக்கும், அப்படியே உன் நகையில் கொஞ்சம் எடுத்திட்டு வா, இல்லையில்லை எல்லாத்தையும் எடுத்துட்டு வா“ என

அடுத்த நிமிடம் இரண்டையும் எடுக்க சென்றவர் வரவே இல்லை  ‘இவ்வளவு நேரமா இவ என்ன பண்றா..’ என உள்ளே சென்று பார்க்க…

மர பீரோ லாக்கர் திறந்தபடி இருக்க, அதை அதிர்ச்சியுடன் பார்த்தபடி சிவஹாமி நின்று இருந்தார்.

ஏதோ வித்யாசமாய் பட, தானும் அவரின் அருகில் சென்று பார்க்க..  அது சுத்தமாய் வழிக்கப்பட்டு இருந்தது..

“எங்கே சிவஹாமி பணம் நகை எல்லாம்..” என குரல் கமற கேட்க

விருட்டென  திரும்பிய சிவஹாமி கண்களில் அவ்வளவு அதிர்ச்சி…  “வெங்கட் பய எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டான் போல..” என வெளிறிய முகத்துடன் சொல்ல….

சென்றவன் இப்படி சுத்தமாய் வழித்துச் சென்றிருப்பான் என இருவம் கனவிலும் நினைக்கவில்லை.. மகன் மேல் இருந்த பாசம் அப்படி…  அதை அவனே கெடுத்துக் கொண்டான்..

அப்படியே தலையில் கைவைத்து தரையிலேயே அமர்ந்தார் விநாயகம் என்ன செய்ய…  என விழித்தவருக்கு, சத்ரியன் அங்கே ஸ்டேஷனில் என்ன பாடு படுகிறானோ? என கதறிய மனதை அடக்கி,  மீண்டும் பஞ்சாயத்து தலைவரை பார்க்க சென்றார்.

நடு இரவில் சென்று பணம் கேட்க.. அவரின் கலங்கிய முகம். அதை கொடுக்க வைத்தது… அதுவும் வட்டிக்காக தான் தந்தார்.

இரவில் உயர் அதிகாரியை சந்திக்க சந்தர்ப்பம் அமையாத காரணத்தால், காலையில்  தான் பணம் சுழன்றது காவல் துறையிடம்.

பணம் சற்று அதிகாமாகவே விளையாண்டிருந்ததால், டிஜிபியிடமிருந்தே சத்ரியன்க்கு சிபாரிசு கிடைத்தது. எப்ஐஆர் கூட இல்லாமல் அவனை எவ்வளவு நாள் வைத்திருக்க முடியும் என ஷிவாவும் சத்ரியை அனுப்பி விட்டான்.

சத்ரியனை அழைத்துச் செல்ல வந்த விநாயகசுந்தரம். சத்ரியனை பார்த்து அழுதே விட்டார்.

பின்னி எடுத்துவிட்டிருந்தான் ஷிவா..

உமையடி அடித்ததின் விளைவு நடக்கவே சிரமப்பட்டான் சத்ரியன். அத்தனை அடி வாங்கி இருந்தும்,  உடலில் தான் தளர்வு தெரிந்ததே தவிர, மனதில் தளர்வு அற்றவனாய் ஷிவாவின் கண்ணில் இருந்து மறையும் வரை, சத்ரியன் பார்த்த பார்வை.. அவ்வளவு குரூரமாய் இருந்தது.

வெளியே வந்த சத்ரியன் தன் தந்தையின் தோளில் சாய்ந்தவாறே “நடக்க முடியலைப்பா” திணறியபடியே கூறினான்.

“தப்பு செஞ்சவனை விட்டுட்டு உன்னை அடிச்சுட்டானே இந்த படுபாவி பய” வழியும் கண்ணீரை துடைத்தபடியே இவர் பேச

“ப்பா.. முடியலைப்பா” சத்ரியின் வலி முழுதாய் வெளிப்பட்டதில், வழியில் சென்ற ஆட்டோவை அவசராமய் பிடித்து வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், அந்த ஊரில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவனை காட்டி ஊசி போட்டுவிட்டு, மருந்து வாங்கியபின்பே வீட்டிற்கு வந்தனர்.

சிரித்த முகமாய், அனைவரிடமும் வம்பிழுத்தபடி, ஆரவாரமாய் வலம் வரும் இளையமகன் ,  ஆங்காங்கே சிறிய பிளாஸ்திரிகளுடன், உடலின் சில இடங்கள் இரத்தம் கன்றி போய், வீங்கிய முகத்துடன் வந்தவனை பார்த்து சிவஹாமி கதறிய கதறல்கள் சொல்லில் அடங்காது.

நடக்க சிரம்ப்பட்டவனெ சிவஹாமியும் வந்து தாங்கி கொள்ள, மெதுவாய் அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்தனர்.

விநயாகம் அவனுக்கு உடைமாற்றி விட்டு வெளியே வர, கிழிந்த நாராய் படுத்தருந்தவனை பார்க்க பார்க்க, மூத்த மகனின் மீது அப்படியோரு வெறி கிளம்பியது அவனை பெற்றவர்களுக்கு.

அவனை பார்த்த சிவஹாமி முந்தானையை வாயில் வைத்தபடி சத்தம் வராமல் அழ.. விநாயகமோ புலம்ப தொடங்கினார்.

“வெங்கட் பய நல்லா தான இருந்தான்.. எப்படி தான் அவனுக்கு புத்தி இப்படி போச்சோ.. இந்த பயலை இப்படி படுக்க வச்சிட்டு போய்ட்டானே” என அழுகையில் ஆரம்பித்தவர், ஆத்திரத்தில் முடித்தார்.

அவனை அடித்த விசயம் கேள்விபட்டு மஹா, சங்கரிடம் சண்டைக்கு நின்றார் “நம்ப பொண்ணு பண்ணின தப்புக்கு சத்ரியன் என்ன செய்வான்…  புள்ளையை போட்டு இப்படி அடிச்சருக்கான் உங்க அக்கா மகன். சத்ரியன் நம்ப வளத்த புள்ளைங்க, நம்ப பிள்ளை மாதிரிங்க” என மஹா ஆற்றாமையில்  பேச

“மாதிரி தான்.  நம்ப பிள்ளை இல்லை” என உறுமியவர் “அந்த ஓடுகாலியை இனி நம்ப பொண்ணுன்னு சொன்ன! பேசறதுக்கு இனி வாய் இருக்காது…  எப்படியாவது கூட்டி வந்து ஷிவாக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைச்சேன். ஓடுகாலி போய் ஒரு நாளாச்சு, இன்னும் அவ நம்ப பொண்ணாவா இருக்க போறா..நேத்தே அவனுக்கு பொண்டாட்டி ஆயிருப்பா.. இனி அவளை பத்தி பேசாத.. தலை முழுகியாச்சுன்னு நினைச்சிக்க.. மூத்தவளை விட்ட மாதிரி இந்த கழுதையையும் விட்டுடாத” என சாத்வியை பார்த்தபடி முறைப்புடன் சென்றவர் மீண்டும் வந்து “இனிமேல் அண்ணே, நொண்னேன்னுட்டு விநாயகம் வீட்டு பக்கம் போன உனக்கும் உன் மவளுக்கும் தான் தான் எமன்” என சீறியபடி பெரிய மகளை  மீண்டும் தேடி சென்றுவிட்டார்.

மஹா ஒரு மூலையில் தலையில் கை வைத்தபடி இருக்க “அம்மா சத்ரியை பார்க்க போகலாம்மா” என அழுகையில் முகமெல்லாம் சிவந்து போய் இருந்த சிறிய மகளை பார்த்து.

“ நீ எதுக்குடி இப்ப அழற” என கண்ணீரை துடைக்க…

“சத்ரியை பார்க்கனும்மா“ என வேறு பதிலை கூற

“உங்கப்பா வந்தார்னா கொன்னே போட்டுடுவார்டி” என பயத்துடன் மஹா கூற…

“பரவாயில்லை மா… கொன்னாலும் பரவாயில்லை..” என மஹாவிற்கு முன் சத்ரியின் வீட்டில் இருந்தாள்….சாத்வி.

கட்டிலில் சத்ரி இருக்க.. அவன் தூங்குவதால் தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியே வந்தனர்.

 விநாயகமும் சிவஹாமியும், மஹாவிடம் புலம்பி தள்ளி கொண்டிருந்தனர்.

இவர்கள் வாயை எத்தனை நேரம் தான் பார்ப்பது என  இருவரையும் விருட்டென கடந்து சென்றாள் சாத்வி.

“ஏய், அவன் தூங்குறாண்டி” என மஹா தடுக்க தடுக்க அவன் அறைக்குள் சென்று விட்டாள்.

“சத்ரி மேல இவள் வச்சிருக்கிற பாசம் உனக்கு தெரியாததா? விடு மஹா பார்த்துட்டு வந்திடுவா.. இவன் இன்னும் சாப்பிடவும் இல்லை,இரு வரேன்” என சிவஹாமி சமையலறைக்கு சென்றார்.

சாத்வி உள்ளே செல்ல, அரவம் உணர்ந்து, அருகில் இருந்த துண்டை தன் மேல் போட்டு மறைத்தான் சத்ரி…  அதற்குள் பார்த்துவிட்ட சாத்வி…  வாயில் கை வைத்தபடி அப்படியே நின்றுவிட்டாள்..

என்ன செய்வதென தெரியாமல்  அவனருகில் வந்து வலுக்கட்டாயமாய் துண்டை எடுத்துபார்த்தாள் சாத்வி.

அதை அவள் கைக்கு சிக்கவிடாமல் இறுக்கி பிடித்த சத்ரி “சாத்வி வீட்டுக்கு போ..” என படுத்திருந்த வாக்கிலேயே ஹீனமாய் பேச

அதற்க்குள் வெடுக்கென துண்டை பறித்தவள்   ஓரடி பின் நகர்ந்து “அம்மா..” என சத்தமிட

அதில் சற்று அழுத்தமாய் “வாயை மூடுடீ.. எதுக்கு கத்துற.. இப்போ நீ வீட்டுக்கு போறியா இல்லையா சாவி” என அதட்ட

அதற்குள் இவள் சத்தம் கேட்டு பின்னாலேயே வந்த மஹாவும் அவனின் நிலையை பார்த்து “என்னடா இப்படி அடிச்சிருக்கான்.. மனுஷனா அவனெல்லாம்! நாசமா போறவன்” என கதறி விட்டார்..

பெற்றவர்களுக்கு சிறிதும் மரியாதை தராமல் சென்று பிரச்சனையை இழுத்துவிட்ட கிருத்தி வெங்க்கட் மீது கோபப்படுவதா..  இல்லை அதை பெரிதாய் மாற்றி வைத்திருக்கும் தன் கணவனின் மீது கோபம் கொள்வதா?  இல்லை அதில் இன்னமும் பொறியாய் எறிந்து கொண்டிருக்கும் ஷிவாவின் மீது கோபம் கொள்ளவதா என தெரியாமல் மொத்த குடும்பமும் கதி கலங்கி நின்றிருந்தனர்.

“சத்ரிக்கு நேரம் சரியில்லை போல மஹா.. அழுது என்னாக போது” சிவஹாமி கண்களிலும் நீர் நிறைந்தது.

சாத்வியின் கையில் ஒரு கின்னத்தில் கஞ்சியை ஊற்றி “எப்படியாவது அவனை சாப்பிட வச்சிடு சாத்வி, நேத்தில் இருந்து சாப்பிடவே இல்லை. நான் சொல்லி பார்த்துட்டேன் கேட்க மாட்றான் நீயாவது சாப்பிட வை” என சிவஹாமி கண்களை துடைக்க,

மீண்டும் இருவரும் அவனது அறைக்கு வெளியிலேயே அமர்ந்துவிட்டனர்,சத்ரியை நினைத்து.

கிண்ணத்தை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு, “எழுந்திரு சத்ரி.. சாப்பிட்டு படுத்துக்கோ” என

“நீ முதலில் துண்டை கொடு” என

“நீ முதலில் எழுந்து உக்காரு தரேன்”

“உங்கப்பன் ஒரு பக்கம், நீ ஒரு பக்கம் சாவடிங்க என்னை” கடுப்புடனே எழுந்தமர்ந்தான்.