முதலிரவிற்காக, எடுத்து வைத்த பட்டுபுடவை… நகை எல்லாவற்றையும் தவிர்த்து.
லேசான புடவை, கனமில்லாமல் பேருக்கு இரண்டு நகைகள் என அணிந்து கொள்ள
மஹாவும், க்ருத்திகாவும் எவ்வளவு பேசியும் பயணில்லை “சரி இந்த பூவையாவது முழுசா வச்சிக்க….சாத்வி” என கைநிறைய மல்லிப் பூவுடன் நெருங்க
“எனக்கு தலை வலிக்குது… வேண்டாம் “ என அதையும் மறுத்தாள்….சாத்வி.
சத்ரியின் நினைவில் அப்போது தான் உள்ளே நுழைந்த சிவஹாமி… சாத்வியின் உடையையும் நகையையும் பார்த்தவுடன் புரிந்து கொண்டார், சாத்வியின் நிலையை… ‘சத்ரி, நீ எமஹாதகண்டா… சாத்வி இப்படியெல்லாம் செய்வான்னு தெரிஞ்சு தான் , பர்ஸ்ட் நைட் வேண்டாம்னு சொன்னியா..’ என வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி… வர…
க்ருத்திகா சிவஹாமியை பாவமாய் பார்க்க… ‘கண்களாளேயே’ பதில் கூறினார் சிவஹாமி, பின் சாத்வியை நெருங்கி.
“சாத்வி, கல்யாணம் ஆன பொண்ணு, பூ வேண்டாம்னு சொல்லகூடாது…அபசகுணமாயிடும். இன்னைக்குன்னு இல்ல, என்னைக்குமே பூ வேண்டாம்னு சொல்ல கூடாது.. இந்த பூ உனக்குன்னு வாங்கினது வேற யாரும் வச்சுக்க கூடாது” என க்ருத்திகாவின் கையில் இருந்த பூவை , சரியாய் உயரம் பார்த்து, அவள் கட்டையான கூந்தலுக்கேற்ற வகையில், தலை நிறைய வைத்துவிட்டார்… சிவஹாமி.
இருவரிடமும் வாதம் செய்தவள், சிவஹாமியிடம் அமைதியாகிவிட்டாள்… ஏற்கனவே இருந்த தலைவலி, மலர்ந்து மனம் பரப்பிக்கொண்டிருந்த மல்லிகையினால் இன்னும் அதிகமாக… வண்டாய் குடைந்தது.. தலைவலி…
சாத்வியை கண்களில் நிரப்பியபடி இருந்த மஹாவை “சாத்வியை நான் பார்த்துகிறேன்… மஹா“ என மஹாவின் கலக்கம் நிறைந்த முகத்தை பார்த்து சாவகாமி ஆறுதலாய் பேச
சிவஹாமியின் எண்ணம் புரிந்த மஹாவும்.. சிவஹாமியை பார்த்து முறிவலித்தபடியே “இனிமேல் என் பொண்ணை பத்தி நான் ஒரு நாளும் கவலை பட போறதில்லை… சிவஹாமி“ என தேவையான பதிலைக் கொடுத்தார் மஹா.. தேவையற்ற பேச்சுக்கள் அங்கே தவிர்க்கபட்டது..
அதற்குள் சாத்வியை விட்டு வந்த க்ருத்திகாவும் அங்கு கூட
“அம்மா , சாத்விக்கு என்ன தான் ஆச்சு ஏன் அவளோட இஷ்டம் எதுவுமே இல்லாமல் ,இப்படி ஆளாளுக்கு ஆட்டி வைக்கிறீங்க… சாத்விக்கு முகமே சரியில்லை… ” என முகத்தை சுருக்கியபடி கேட்க..
“சாத்வி சரியான இடத்தில் தான் சேர்ந்திருக்கா… சத்ரி சாத்வியை சமாளிச்சுப்பான்…. நீ இதில் தலையிடாதே” என மஹா சுள்ளென விழுந்தார்….
அதில் மேலும் முகம் சுருங்க.. “ஏன்மா… சாத்வியை பத்தி எது பேசினாலும் , திட்டிட்டே இருக்கீங்க..” என கேட்க…
“ சாத்வி வாழ்க்கை நல்ல படியா அமைஞ்சிருக்குன்னு, சந்தோஷமா இருக்கேன்… ஏதாவது பேசி குழப்பம் பண்ணிடாத.. எங்ககிட்ட பேசின மாதிரி உன் அப்பாகிட்ட பேசிடாத…. இது தான் சாக்குன்னு, இரண்டு பேரையும் பிரிச்சிட போறாரு..” என கடுமையுடன் கூறி
“ பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது உனக்கு இங்கே என்ன வேலை.. கிளம்பு… “ என க்ருத்திகாவை அனுப்ப…
முகம் வெளிற வெங்க்கட்டிடம் வந்தாள் கிருத்தி “என்ன கிருத்தி முகம் … ஏன்…. ஒரு மாதிரி இருக்கு.. அழுதியா” என யோசனையாய் கேட்டான் வெங்க்கட்.
அவளும் தன் முகத்தை மாற்றியபடி “நம்ப வீட்டுக்கு போன அப்பறம்.. சாத்விக்கு என்ன நடந்ததுன்னு அத்தைகிட்ட கேட்டு சொல்றீங்களா..” என மெதுவாய் கேட்டாள்…
“நான் என்ன கேட்டா.. நீ என்ன பதிலுக்கு கேட்கிற..”என அவளருகில் வர…
“சாத்வி ரொம்ப அடி பட்டிருக்கா வெங்க்கட்..” என நிறுத்தி “ என்னால..” என வெங்க்கட் முகம் பார்த்து கூற..
“ஹேய்.. நீ வேற ஏண்டி லூசு மாதிரி பேசற..” என வாய் கேட்டாலும்… வெங்க்கட்டிற்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் தான், ஆனாலும் அவளிடம் காட்டாமல் மறுத்து பேசினான்… .
“இல்லை, எனக்கு தெரியாமல் ஏதோ பிரச்சனை பண்ணியிருக்கேன்“ என வெங்க்கட்டின் நெஞ்சில் சாய்ந்தாள்.
அவளின் தோளை மெதுவாய் வருடி “சரி, கேட்கிறேன். பேசி சரி பண்ணலாம் கவலை படாதே என வெகுநேரம் போராடி சமாதானம் செய்தாலும் இருவரின் மனதிலும்.. ‘என்ன நடந்திருக்கும் சாத்விக்கு..’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை.. இருவரும் தங்களின் இறந்த காலத்திற்கே சென்றனர்.
அதே நேரம்.. சாத்வியை அழைத்து வந்த க்ருத்திகா..சத்ரியின் அறையினுள் நுழையும் போதே… “சத்ரி உள்ளே தான் இருக்கான்…. கதவை லாக் பண்ணிக்க…. “ என கூறி அங்கிருந்து செல்ல.
உள்ளே நுழைந்த சாத்வி கதவை லாக் செய்து சத்ரியை தேட அங்கே அவனிருப்பதற்கான எந்த அரவமும் இல்லை. அறையும் எந்த ஒரு அலங்காரத்தையும் பிரதிபலிக்கவில்லை.
அந்த நொடி டென்ஷன் எல்லாம் வடிந்தோட, மனம் லகுவானது.
சத்ரியிடம் பேச வேண்டுமே என்ற எண்ணம் ஓட, அவனுக்காக காத்ததிருக்கும் பட்சத்தில் சோபாவில் அமர்ந்தபடி தலை சாய்த்தாள்.
நேற்றிலிருந்து இல்லையில்லை திருமண வேலைகள் ஆரம்பித்த நாளில் இருந்து சத்ரி செய்த ஒவ்வொரு செயலும் சாத்விக்கு தலை வலியைகயும், வேதனையையும் இயலாமையையும் கொடுத்தது என்றால்,
திடீரென ரமேஷிற்கு பதிலாய் சத்ரி எப்படி வந்தான்?
தன் கழுத்தில் தாலி அணிவித்தான்?
பெரியவர்கள் எப்படி சம்மதம் கொடுத்தனர்?
எப்போது நடந்தது இந்த மாப்பிள்ளை மாற்றம்?
நலுங்கு வைக்கும் போது கூட ரமேஷின் அம்மாவும் அப்பாவும் கூட நலங்கு வைத்தார்களே.! என மூளையை குடையும் போதே, சடாரென நிமிர்ந்தாள்… ஒருவேளை நிச்சயதார்த்தம் அப்போவே சத்ரி தான் மாப்பிள்ளையா..! அதான் அவ்வளவு உரிமையாய் என் கன்னத்தில் சந்தனம் இட்டு அவ்வளவு மகிழ்ச்சியாக மேடையைவிட்டு இறங்கிச் சென்றானா?
அப்போவே சத்ரி தான் மாப்பிள்ளை என்றால் ஏன் என்னிடம் யாருமே கூறவில்லை… யாருமே என்ன? இந்த சத்ரி கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே.. !
நானாக சென்று அம்மாவிடம் கேட்க போய் ‘ரமேஷின் காதல்’ தெரிந்தது. இல்லையென்றால் அதுவும் தெரிந்திருக்காதே?
என்னுடைய ஆசைகளை ஒருவரும் மதிக்கமாட்டார்களா?
இதெயெல்லாம் நினைக்க நினைக்க சாத்விக்கு, தலை வெடித்து கொண்டிருந்தது.
அத்தனை கோபமும் சத்ரியை மட்டுமே குறிவைத்தது. என்ன செய்வது எப்படி நடந்து கொள்வது என தெரியாமல் தலையை பிடித்தபடி இருந்தாள்.
உடை மாற்றும் அறையிலிருந்தபடியே சாத்வியின் நடவடிக்கைகளை சில பல நிமிடங்களாக கண்காணித்து கொண்டே இருந்தான் சத்ரி.
சாத்வியின் முகம் காட்டிய உணர்வுகளும், தலையை பிடித்தபடி அமர்ந்திருந்த தோரணையும், அவளது காயப்பட்ட மனதை கண்ணாடியாய் காட்டியது.
தவிர காலையில் இருந்து அவள் படும் அவஸ்தைகளையும் கண் கூடாய் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்.
‘நானும் சேர்ந்து தானே இவளை படாய் படுத்தி எடுத்து விட்டேன்’ என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
சாத்வியின் சுருங்கிய முகம் மேலும் சுருஙகி போக அவள் நெற்றியை இரு புறமும் அழுத்தமாய் பிடித்து பிடித்து விடுவதையும் பார்த்து , அவளின் தலை வலியை உணர்ந்தான்.
இதற்கு மேல் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல, என தைலம் ஒன்றை கைகளில் எடுத்துவந்து சாத்வி சாய்திருந்த சோபாவின் பின்புறம் நின்றான்.
அவளின் தலையை தன்னை பார்க்குமாறு விளிம்பில் சாய்க்க, தொடுகையே கண்டு கொண்டது அது சத்ரி தான் என.. அவள் நெற்றியில் தைலத்தை தேய்த்து லேசாய் பிடித்துவிட தொடங்கினான் சத்ரி.
சத்ரியின் தொடுகையில் அவனை உணர்ந்து கண்கள் திறக்கும் முன் நாசியை நிறைந்த தைலத்தின் வாசனையும், இதமான பிடிப்பும் சாத்வியை அப்படியே கண்களை மூடியபடியே அமர வைக்க, அவனிடம் தன்னை கொடுத்தபடி இருந்தாள்.
சபத்து பதினைந்து நிமிடங்கள் பிடித்துவிட்டான். அதன் பின் அவள் தலையிலிருந்த அத்தனை மல்லிகையும் சத்ரியால் அகற்றபட்டு, அதை எடுத்து டிரஸ்ஸங் டேபிள் டிராயரில் போட்டு மூடிவிட்டு வந்தான்.
பிடித்துவிட்டதில், பூவை அகற்றியதில் தலையின் பாரம் வெகுவாய் குறைந்து, சிறிது நேரத்தில் வேதனையும் குறைந்து வலியும் குறைந்தது சாத்விக்கு… தான் சொல்லாமலேயே பூவை அகற்றி தலைவலியை குறைத்தவன், தெரிந்தே ஏன் தனக்கு இவ்வளவு வலியைக் கொடுத்தான்.. என நொந்து கொண்டாள்..
அவளின் நெற்றி சுருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதை அவளின் முகமே காட்டிக் கொடுக்க மேலும் மீண்டும் சில நேரம் தேய்த்து, சகஜ நிலைக்கு திருப்பினான் சத்ரி.
தன் புருவங்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சத்ரியின் கைகளை தன் மென்மையான விரல்களால் பிடித்து, அப்படியே இழுத்து வந்து தன் கன்னத்தில் வைக்க… அதற்காகவே காத்திருந்தாற்போல் கண்களிலிருந்து நீர் உடைப்பெடுத்தது சாத்வியின் கண்கள்.
“இதுக்கு என்னை கொன்னு போட்டிருந்தால் கூட, இவ்வளவு வலிச்சிருக்காது சத்ரி.” என உணர்ச்சிகளின் பிடியில் கண்களை திறக்காமலேயே கண்ணீர் வடிய சாத்வி கூற..
அந்த வார்த்தைகளில் சத்ரியின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்க அதில் உடல் அதிர்ந்தது சத்ரிக்கு
அந்த கைகளை அப்படியே தன் கன்னங்களுக்குள் அழுத்தமாய் புதைத்தபடியே கண்மூடினாள்..