காவியத் தலைவன்
காவியத் தலைவன் – 6
திருமணம் முடிந்து ஒன்றிரண்டு நாட்கள் தான் தாராவின் கண்களில் ஆதிஸ்வரன் பட்டிருப்பான். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இவர்களின் திருமணம் முடிந்த பிறகு வீட்டின் காவல் பல மடங்கு பலப்பட்டு இருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. முன்பு இங்கேயே தன்னை மறைத்து வாழ்ந்த போது வாசலின் முன்புறம், பின்புறம் என்று இரண்டு...
ஐயோ கண்டுகொண்டானே என்ற பதற்றத்தில், “அ… அது… சார்…” என பாவமாகத் தொடங்க,
அவனோ வெகு இலகுவாக அவளை நோக்கி நடந்து வந்து, “சாரா? இல்லை சேட்டாவா?” என்றான் புருவம் உயர்த்தி.
‘இவன் ஏன் கண்ணுக்கு இத்தனை அழகாகத் தெரிகிறான்?’ எனப் பரிதாபமாக அவனைப் பார்த்து வைத்தாள். அவன் அழைக்கச் சொன்ன சேட்டா வேறு எக்கச்சக்கமாகப் படபடப்பைத்...
காவியத் தலைவன் – 5
“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா… உன்னை பிடிச்சிருக்க போயி தான் அவன் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்கான். நீ இப்பதான் டாக்டர் படிப்பை முடிச்சியாமே…” ஆசையாகக் கன்னம் வருடிப் பேசிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு தாராகேஸ்வரியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
“பயப்படாதம்மா என்கிட்ட நல்லா பேசு…” என அழகாண்டாள் கணீர் குரலில் சொல்லிக்...
காவியத் தலைவன் – 4
ஆதீஸ்வரன் மேலே அழைத்திருக்க, அவன் குரலிலிருந்தே எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட தென்னரசு அடித்துப் பிடித்துக்கொண்டு மேலே ஓடி வந்தான்.
மேலே ஏறி வந்தவனிடம் எதுவும் பேசாமல் ஆதி அழுத்தமாகப் பார்த்திருக்க, “சார்… என்னாச்சு?” என்று கேட்பதற்குள் அவன் வெகுவாக திணறிப் போனான்.
ஆதி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை....
காவியத் தலைவன் – 3
‘சார்… இதை சாப்பிடுங்க… அதை சாப்பிடுங்க…’ என்ற ஏகபோக வரவேற்பில் விவேக்கின் முகம் வெளியில் கடுகடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஏனோ அப்படியொரு குதூகலம்.
அடுத்து என்ன என்று அவனுக்கு அத்தனை ஆர்வமும், சுவாரஸ்யமும்.
தன்னை ஏய்த்து வேலை வாங்கப் பார்த்த பிரதாபனை தன்னால் எதிர்க்க முடியவில்லை, ஆனால், அவன் திட்டத்தைத் தவிடுபொடியாக்க...
“வீட்டுக்கு அழைத்து போ… உன் அண்ணனிடம் அறிமுகம் செய்து வை…” என நண்பர்களாகப் பழகிய காலம் முதலே கேட்டுக்கொண்டே இருக்கிறாள். கேட்டுக்கொண்டு என்பதை விடவும் நச்சரித்துக் கொண்டே இருப்பாள்.
இப்பொழுது அதுவாக நேரம் அமைந்து வந்திருக்கச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா என்ன? அதுவும் முத்தாய்ப்பாய் அவளும் இப்பொழுது சென்னையில் தான் இருக்கிறாள்.
தென்னரசு மீண்டும் சத்யாவைத் தேடி...
காவியத் தலைவன் – 2
ஆதீஸ்வரன் எதையோ யோசித்தபடி சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாக அவ்விடத்தில் நடந்து கொண்டிருந்தான். என்னதான் திட்டம் போட்டாலும், விடிந்தும் விடியாத இந்த காலைப் பொழுதில் எதுவும் செய்ய வழியில்லை. குறைந்தபட்சம் இன்னும் சில மணி நேரங்களையாவது கடத்த வேண்டும். அதுவரை எப்படி சமாளிக்க என்று யோசித்தபடி தனக்குள் எதையோ திட்டமிட்டுக்...
தென்னரசு நெஞ்சை நிமிர்த்து கொண்டு வந்தவனைப் பார்வையால் அடக்கினான். ஆதியின் கண்ணசைவின்றி அங்கே சிறு துரும்பையும் அசைக்க விட மாட்டான் அவன்.
தயக்கத்துடன், ஆதியிடம் “நீங்க இன்னும் வீட்டுக்குள்ள கூட போகலை போல சார்…” என்றான் தென்னரசு புரியாமல்.
தலையை மட்டும் அசைத்தவன், “நம்ம ஆளுங்களை வெச்சு வீட்டை தரோவா செக் பண்ண சொல்லு…” என்று சொன்னதும்,
ஆட்களை...
காவியத் தலைவன் – 1
“கணபதியே வருவாய், அருள்வாய்…
கணபதியே வருவாய், அருள்வாய்…”
தெருமுனை விநாயகர் கோயிலிலிருந்து வந்த பாடலை கேட்டவாறே, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் செல்ல தொடங்கினான் ஆதீஸ்வரன்.
ஆளும்கட்சியில் எம்.பி., பதவியில் இருக்கிறான். முப்பதின் ஆரம்பத்திலேயே இந்த பதவியை அடைந்திருந்தான். இந்த உயரம் அடைய அவன் போட்ட உழைப்பு ஏராளம். அவன் கடந்து வந்த பாதையும் மிகவும் கடினமானது. அதன்...