காவியத் தலைவன்
“அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?”
“எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப தெரியாதுன்னே சொல்லிடுங்க. அதுல என்ன?” என்று தாரகேஸ்வரி சொன்னதும், புரிந்தவன் போல, “ஆமாம், ஆமாம், எங்களுக்கு தான் எதுவும் தெரியாதில்லை....
காவியத் தலைவன் – 30
யாரையும் எதிர்கொள்ளும் நிலையில் தாரகேஸ்வரி இல்லை. அவள் தனக்குள் நிறைய போராடி போராடி களைத்துப் போயிருந்தாள்.
நல்லவேளையாக ஆதீஸ்வரன் சொல்லி சென்றது போல அழகாண்டாள் பாட்டி அன்றே வீட்டிற்கு வந்திருக்கவில்லை. வந்திருந்தார் என்றால் அவரை எதிர்கொள்ளும் சிரமத்தையும் அவள் கடக்க வேண்டியதாக இருக்கும்.
இப்பொழுது இருக்கும் சூழலில் நிதானமாக அவரை எதிர்கொள்வாள் என்றும் சொல்வதற்கில்லை. தனக்கிருக்கும்...
காவியத் தலைவன் – 29
தாரகேஸ்வரி கணவனை வழியனுப்பி விட்டபிறகும் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றிருந்தாள். மனதில் இனம்புரியாத படபடப்பு. முகம் லேசாக செம்மையை பூசியிருந்தது.
வரங்களை அள்ளித்தர கடவுள் தான் பூமிக்கு வர வேண்டும் என்பதில்லை போல! நாம் எதிர்பார்க்கும் வரத்தை எதிர்பாரா நேரத்தில் யாரோ ஒருவர் போகிற போக்கில் தூரலென நம் மேலே சிதறி விட்டு போய்விடுகிறார்கள்!
தன்னிடம்...
“அதுதான் சார், உடனே உங்ககிட்ட சொல்லாம இன்னொருமுறை சரிபார்த்துட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தோம். ஆனா நம்ம பேட் லக் இந்த ரிப்போர்ட் நிஜம் சார்” என்று சொன்னவர்களின் முகத்திலும் பெரும் சோகம். யாராலுமே இந்த தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அதெப்படி???” என்ற ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் சந்தேகப்பட்டியலில் வைத்திருந்த பள்ளிகள், கல்லூரிகளில் எல்லாம்...
காவியத் தலைவன் – 28
காலையில் எழுந்ததிலிருந்தே ஆதீஸ்வரன் ஒரு நிலையில் இல்லை. அவன் பாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாலும் என்னென்னவோ யோசனைகள். நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி திரும்பி மனைவியைப் பார்த்துக் கொண்டான். பார்வையில் அச்சம், ஏக்கம், தவிப்பு என்று கலவையான உணர்வுகள்.
தாராவுக்கும் ஒருகட்டத்தில் கணவன் மிகுந்த அலைப்புறுதலோடு இருக்கிறான் என்றளவில் புரிந்தது. ஆனால், காரணம் இன்னதென்று சரியாகக் கணிக்க...
காவியத் தலைவன் – 27
எப்பொழுதுமே உறக்கத்தில் கூட கொஞ்சம் விழிப்புடன் இருப்பது ஆதீஸ்வரனின் வழக்கம். ஆழ்ந்த உறக்கம் என்பதை அவன் தொலைத்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது.
இன்றோ ஓய்வில்லாத அலைச்சல் காரணமாக மனையாளின் வலது கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி விரைவிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குப் போயிருந்தான். பிடியில் மெல்லியதாக அழுத்தம், எளிதாக விடுவதில்லை என்கிற முனைப்பு அதில்...
காவியத் தலைவன் – 26
சத்யேந்திரனால் மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. மனதில் அளவுக்கதிகமான அழுத்தம்.
நிதர்சனம் புரிகிறது தான்! அவனாலுமே அப்படி தன் அண்ணன் ஆதீஸ்வரன் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு தன் சொந்த அன்னை, தங்கை தான் என்றாலும் அவர்களோடு சென்றுவிட முடியாது தான்!
உணர்வுகளால் பிணைந்துவிட்ட உறவைத் துறப்பது பெரிய கொடுமை என்று அவன் மனதிற்கும் புரியாமல் இல்லை.
ஆனால், அன்னை...
ஓடி வந்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவனை கையில் அள்ளிக்கொண்டு ஆதி வாசலை நோக்கி ஓடினான். ஏனென்றே புரியாமல் கண்ணில் கண்ணீர் சிதறியது. சத்யாவிற்கு தனக்காக ஒருவன் இந்தளவு உயிரையே பணயம் வைத்தானே என்பது இன்னமும் நடுக்கம் தான்! அவனும் அண்ணன் பின்னாலேயே ஓடியிருந்தான்.
அவர்களுடன் நான்கு பேர் துணைக்குப் போக, மீதம் இருந்தவர்கள் எல்லாரும் அவ்விடத்தை...
காவியத் தலைவன் – 25
பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி வைத்து தங்கள் குடும்பத்திற்கு பெரும் அநியாயம் இழைத்திருக்கும் விஷயத்தை எப்படி அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியும்?
‘அப்படியானால், பெற்றோரை இழந்த பிறகு...
விசாரணையின் போது எதிர்பாராதவிதமாக, பெரிய தலையாக வீராவும் சிக்கிக்கொள்ள, “என்ன பிரமா இந்த நேரத்துல குடோனுக்கு வந்திருக்க?” என அப்பொழுதும் வீரா சமாளிக்கத் தான் பார்த்தான்.
“அதை நான் தானே கேட்கணும் வீரா” என பிரமா வெகு அழுத்தமாகக் கேட்க, “ஆமா... ஆமா... நீ தான் கேட்கணும். உன்னோட குடோன் இது... நான் ஏன் இங்கே...
காவியத் தலைவன் – 24
ஆதீஸ்வரனுக்கு தாரா அப்படி தளர்ந்து சோர்ந்து நடப்பதைப் பார்த்ததும் மனதைப் பிசைந்தது. இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளையான அவளைக் கோபத்தில் அடித்தது பெரும் தவறாகவே பட்டது.
ஆனாலும் அவள் செய்கையில் இன்னமும் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான்! அடித்துவிட்ட பிறகும் கூட அவள் மீதிருந்த கோபம் துளியும் குறைய மறுத்தது.
‘முளைச்சு மூணு இழை விடலை. அதுக்குள்ள பேச்சைப் பாரு!’...
படிப்பு விஷயத்தில் தான் சத்யாவிற்கு பயங்கர திட்டு விழும். “உங்க அண்ணன் எல்லாம் எப்படி படிச்சான் தெரியுமா?” என அடிக்கடி அவனுக்கு வசைவுகள் விழுந்து கொண்டே இருக்கும், தொட்டதற்கும் அழகாண்டாள் பாட்டி, “இதே உங்க அண்ணனா இருந்தா என்ன செஞ்சிருப்பான் தெரியுமா?” என சொல்லிக் கொண்டே இருப்பார். சத்யாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வரும்....
காவியத் தலைவன் – 23
*** சில ஆண்டுகளுக்கு முன்பு ***
கண்ணபிரான், அழகாண்டாள் தம்பதி ஈரோடு அருகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ஒரே மகன் பிரமானந்தம். அந்த சுற்றுவட்டாரத்தில் அவர் மிகவும் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார்.
கண்ணபிரானின் உடன்பிறந்த தங்கை ஜோதிமணி. அவருக்கும் மாணிக்கம் என்பவரோடு திருமணம் முடிந்து அதே பகுதியில் தான் வசித்து வந்தார். அவர்களுக்குப் பிறந்தவர்...
சத்யேந்திரனும், பூஜிதாவும் அப்படியொரு எதிர்வினையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. பூஜிதா மிக வேகமாக அவர்களின் இடையே புகுந்து தந்தையைத் தடுக்கப் பார்க்க, வீராவின் ஆக்ரோஷத்திற்கு முன்னால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
மகள் என்றும் பாராமல் அவளைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட அவள் நிலை தடுமாறி தொப்பென கீழே விழுந்திருந்தாள்.
சத்யா அதற்குள் சுதாரித்திருந்தவன், துணிந்து அவர் கையை...
காவியத் தலைவன் – 22
விவேக்கின் கணிப்பு எல்லாம் சரிதான்! சந்தேகம் கொண்ட இரண்டு வாகனங்களையும் தன் டிபார்ட்மெண்ட்டின் உதவியுடன் விரைவாக ட்ரேஸ் செய்திருந்தான்.
ஒன்றுக்கு இரண்டு பேரின் போனுமே ஸ்விட்ச் ஆஃப். அதோடு அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்ற போதே வீரராகவன் தான் விவேக்கின் சந்தேக வட்டத்திற்குள் இருந்தது.
தான் சந்தேகப்பட்ட இரண்டு வாகனங்களையும்...
காவியத் தலைவன் – 21
சத்யேந்திரன், பூஜிதாவின் உறவில் முன்னேற்றம் வந்தபிறகு, ஆதீஸ்வரனுக்கு இப்போதெல்லாம் தம்பியைக் குறித்த கவலைகள் பெருமளவு குறைந்திருந்தது.
ஆதியாக இனி சரிவராது போல என்று விலகிய ஒரு விஷயம் தான் சத்யா, பூஜிதாவின் திருமணம்! இப்பொழுது அது கைக்கூடும் வாய்ப்பு கண்ணெதிரில் மீண்டும் தோன்றினால், அதுவும் அந்த பந்தம்... எதிலேயோ மூழ்கவிருந்த தன் தம்பியை மீட்டெடுக்கும் மந்திரக்கோலாய்...
*** சத்யா, பூஜிதாவின் உறவு மெல்ல மலர்ந்திருந்தது. கனிகா விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருந்த சத்யாவிற்கு அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது!
வெளியேறவே முடியாதோ என்று வேதனையோடு கழிந்த இரவுகள் ஏராளம்! உயிர் பிரியுமளவு வேதனையைச் சுமந்து வந்தவன் மீள வேண்டும் என்று நினைத்தது தன் அண்ணன் ஒருவனுக்காகத்தான்!
பெற்றோரை இழந்து நிலைதடுமாறி நின்றபோது...
காவியத் தலைவன் – 20
தான்பாபுவைப் பற்றி விசாரிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? எங்கோ கண்கணாத இடத்தில் அவர்களுக்கென்று ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர்களை ஒரு பிடியளவு தொந்தரவு செய்யவும் ஆதீஸ்வரனுக்கு மனம் இல்லை.
நீண்ட நாட்கள் கழித்துக் கிடைத்த ஒற்றை துப்பும் உபயோகமின்றி பறிபோனது! வழக்கமாக நடப்பது தான் என்றாலும் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம்!
இதுபோல அலைந்து திரிந்து...
காவியத் தலைவன் – 19
‘பாபு ப்ரோ’ என தாரகேஸ்வரி குறிப்பிட்ட விதமும், அவள் சிந்தும் கண்ணீர் துளியும் உரைக்கிறதே தான்பாபு மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் அபிமானத்தையும்.
தாரகேஸ்வரி இந்த அளவிற்குப் பாசம் வைக்கத் தயாராக இருக்கிறாள் என்றால் அவன் நிச்சயம் கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆதீஸ்வரன் நம்பினான்.
இந்த தீராத நோயால் தான்பாபு அவதிப்படுகிறான்...
எரிமலை நெருப்பென குமுறிய தாராவின் நினைவுகள் கொஞ்சம் நிதானித்தது. இல்லை அவர்களைப்பற்றி விசாரிப்பவர்கள் வேறு யாரோ இல்லை. விசாரிக்க நினைப்பது தன் கணவன், அவன் குணம் அவளுக்கு தெரியுமே! அவனது நேர்மையையும், தவறுக்குத் துணை போகாத உன்னத குணத்தையும், தைரியத்தையும், உழைப்பையும் அவள் ஐயந்திரிபற அறிவாளே! அவனை எப்படி அவர்களைப் பிரிக்க நினைப்பவன் என...