Monday, April 21, 2025

    ஒரு காதல் இடைவேளை

    அத்தியாயம் 7 “இனி அந்த ராம் காதல், கீதல்னு உங்கிட்ட ஏதாவது பேசினான்னு என் காதுக்கு வந்துச்சு, அவனை ஆளே அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன், பார்த்துக்க” என அன்னை மிரட்டலாகச் சொன்ன இறுதி வார்த்தைகள் நித்யாவின் மனதை அலட்டத் தன்னால் பாவம், ராமுக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று சிறிது நாட்கள் ஒதுங்கி இருக்க நினைத்தாள். சில நாட்கள்...
    அத்தியாயம் 6 ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தான் அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. உணவு இடைவேளை நேரத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளமே கலகலத்துக் கிடந்தது. டெக்னீஷியன்கள் அவர்கள் குழுவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, துணை நடிகர்கள் ஒரு குழுவாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படத்தின் நாயகி நித்யஸ்ரீயும், நாயகன் ரவியும், டைரக்டர் பாஸ்கரும் ஒரு மேஜையைச்...
    அத்தியாயம் 5 பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ராமை அலைபேசியின் குரல் கலைத்துவிட அதை எடுத்தான். அக்கா ராஜலட்சுமி அழைத்திருக்க, எடுத்துக் காதில் வைத்தான். “சொல்லுக்கா” “தம்பி, என்னய்யா இப்படிப் பண்ணிட்ட. நீங்க ரெண்டு பேரும் பிரியறதா சொன்னப்பகூட ஏதோ ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம், அந்தக் கோபத்துல சொல்லுறேன்னு நினைச்சேன். இப்ப நிஜமாலுமே பிரிஞ்சுட்டீங்களா?” “ம்ம்… பிரிஞ்சுட்டோம் க்கா” “ஊருல இருக்கற நிறையப் பேரு வாழ்க்கை...
    அத்தியாயம் 4 “தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண். “நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி? பிரஷர் மாத்திரை வேற போடணும்ல” “ம்ம்… பசிக்கல ஜானும்மா” என்றவனின் வாடிய முகமே அவன் மனதைச் சொல்ல ஜானகிக்கும் வேதனையாய் இருந்தது. “எனக்குப்...
    அத்தியாயம் 3 திங்கள் கிழமை. எல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது. மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக் கொடுக்கலாம். மனத்திற்கு விலக்கையோ, விலங்கையோ யார் கொடுப்பது? அது சதா சர்வ காலமும், ‘ராம், ராம்…’ என அவன் பெயரை...
    அத்தியாயம் 2 எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர். சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த பெண்மணியைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்தாள். சாரதா… அவள் மிகவும் மதிக்கும், விரும்பும் ஆதர்ஷப் பெண்மணிதான் சாரதா. திரைத்துறையில் குடும்பப் பாங்கான...
    ஒரு காதல் இடைவேளை அத்தியாயம் 1 கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ. ‘பரஸ்பர விவாகரத்து கோரி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான  ராம்சரண் - நடிகை நித்யாஸ்ரீ நீதிமன்றத்தில் மனு’ கொட்டை எழுத்தில் வெளியாகியிருந்த செய்திக்குக்...
    ஒரு காதல் இடைவேளை அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக்...
    error: Content is protected !!