Monday, April 28, 2025

    இவள் எந்தன் சரணமென்றால்

    துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் "என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க... முகமே சரி இல்லையே.. எதுவும் பிரச்சனையா திரும்ப.." என்று வரிசையாக கேள்வி கேட்க                  திரு சிரித்துக் கொண்டான் அவள்...
    இவள் எந்தன் சரணமென்றால் 21                                   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது நினைவு வர, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. இப்போது திரு அருகில் இருப்பதால் பயம் இல்லை என்றாலும், அவர்கள் கடத்தி...
    இவள் எந்தன் சரணமென்றால் 20                                   திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும் அவ்வபோது ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டேதான் அலைவது. இருவருமே விட்டு கொடுப்பவர்கள் இல்லை என்பதால் வாழ்வு சுவாரஸ்யமாகவே சென்றது அவர்களுக்கு.                                  ...
    இவள் எந்தன் சரணமென்றால் 19                                      சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யின் முன்னால் அமர்த்தப்பட்டிருந்தான் திரு. அவனுக்கு முன்னால் அந்த பெண் டிஎஸ்பி அமர்ந்திருக்க, அவளோ அவளுக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள்.                                      திருவுக்கு நடப்பதெல்லாம் ஏதோ திகில் படம் பார்ப்பது போலவே இருந்தது. கமிஷனர் ஆபிசில் இருந்து போன் என்றதும்...
    இவள் எந்தன் சரணமென்றால் 18                                   காலை கண்விழித்த துர்காவால் அசைய கூட முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கொண்டிருந்தான் திரு. துர்கா தூக்கம் தெளிந்தவள் அவனை முறைத்துவிட்டு அவன் கையை மீண்டும் எடுத்துவிட பார்க்க, தூங்கி கொண்டிருந்தாலும் அவனது கைகள் துர்காவை இறுக்கமாக பிடித்திருந்தது.                                   அவளுக்கு நேற்று முழுவதும் நடந்தது எல்லாம் நினைவு வர,...
    இவள் எந்தன் சரணமென்றால் 17                                        காலை தன் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே விழித்துவிட்டாள் துர்கா. ஒரே பக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தது கால்களில் வலியைக் கொடுக்க, எழுந்து கொண்டவள் சோஃபாவில் நன்றாக அமர்ந்து கைகால்களை உதறி கொண்டாள்.                                          இரவு நடந்தது அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர மீண்டும் வேதனை சூழ்ந்து கொண்டது அவளை....
    இவள் எந்தன் சரணமென்றால் 16                            அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அதன் திரையை வெறித்துக் கொண்டிருந்தாள் துர்கா. மதியம் திரு விட்டுச் சென்றதிலிருந்து இதுவரை ஒரு ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள். ஆனால் ஒருமுறை கூட அழைப்பு ஏற்கப்படவே இல்லை.                             கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க, பேசிய வார்த்தைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்து...
    இவள் எந்தன் சரணமென்றால் 15                                  துர்கா அழைக்கவும் ஒரு புன்னகையுடன் தான் திரு அழைப்பை ஏற்றான். ஏதோ கேட்கப்போகிறாள் என்று அவன் நினைக்க, அவள் கண்ணீருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாஹே ஏற்கவே முடியவில்லை அவனால்.                                வள்ளி அவளிடம் கூறாமல் இங்கு வேலைக்கு வந்திருப்பார் என்று அவன் யோசிக்கவே இல்லையே. வள்ளியின் மீது கோபமாக வந்தாலும்,...
    இவள் எந்தன் சரணமென்றால் 14                                 இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க, அவன் கைகளுக்குள் அழகாக துயில் கொண்டிருந்தாள் துர்கா.                                                             எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பார்த்து பழகி இருந்த...
                        "அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.                         மீண்டும் கிளம்ப போகிறாளோ என்று அவன் வேகமாக எழுந்து கொள்ள "அப்போ போங்க.. வெளியே போங்க.. போய் அதோடவே குடும்பம் நடத்துங்க.." என்று...
    இவள் எந்தன் சரணமென்றால் 13                                                           அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.                                                    "இதுல நீயே திறந்து பாரு ன்னு ஐடியா வேற.. உனக்கு தேவைதான்.." என்று...
    இவள் எந்தன் சரணமென்றால் 12                                         அடுத்த நாள் காலை எட்டு மணிக்குதான் துர்காவின் நாள் விடிந்தது. இரவு தாமதமாக உறங்கி இருந்ததால் காலையிலும் அவள் தாமதமாகவே எழுந்து கொள்ள, குளியல் அறையில் இருந்த திருவின் உடைகள் அவன் வீடிற்கு வந்து சென்றதை உறுதிபடுத்தியது.                                           எப்போ வந்தாங்க? என்று நினைத்துக் கொண்டே அவள் குளித்து முடித்து...
    இவள் எந்தன் சரணமென்றால் 11                                  சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.                                   இது கடைசி இரண்டு நாள் பழக்கம். அன்று துர்காவிற்காக வீடு வந்திருந்தவன் அவள் சமைத்து முடிக்கும் வரை காத்திருக்க, துர்காவும்...
    அடுத்த நாளும் முன்தினம் போலவே புலர, இன்றும் திரு முதலில் எழுந்து வந்திருந்தவன் துர்காவை தரிசித்துவிட்டு கிளம்பி சென்றிருக்க, துர்காவிற்கு அது தெரியவே இல்லை. அவள் தன் வழக்கமாக எழுந்து கொண்டவள் குளித்து முடித்து காஃபி குடித்துவிட்டு, டீவியை போட்டுவிட்டாள்.                           அவள் வழக்கமாக பாட்டுச்சேனல் ஒன்றை வைத்து விட்டவள் தான் இரண்டு நாட்களாக உடுத்திய...
    இவள் எந்தன் சரணமென்றால் 10                                துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன் மனைவியை. “என்னடா நடக்குது இங்கே?” என்பது போன்ற பார்வை தான்.                               “அவளாத்தான் சண்டை போட்டா, இப்போ அவளே நான் பார்த்துக்கறேன்...
    இவள் எந்தன் சரணமென்றால் 09                                          துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.                                          அவள் இருந்த பதட்டத்தில், அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனாள் அவள். திரு மீண்டும் "என்ன மாத்திரை இது.."...
                                  அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே மாப்பிள்ளை, பெண்ணுக்கு பால்  பழமும் கொடுத்துவிட, பாலில் மிதந்து கொண்டிருந்த வாழைப் பழங்களை கண்டதுமே உமட்டிக் கொண்டு வரும் போல்...
    இவள் எந்தன் சரணமென்றால் 08                          வடபழனி ஆண்டவர் திருக்கோயில்                                     கோவில் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டு சுழன்று கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். பின்னே அவர்கள் திரு அண்ணாவின் திருமணம் அல்லவா.                                     திரு மாப்பிள்ளையாக பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருக்க, ஐயர் கூறும் மந்திரங்களை அத்தனை பவ்யமாக...
    இவள் எந்தன் சரணமென்றால் 07                                    வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே "இது சரியா வராதுமா.. விட்டுடு" என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருக்க, துர்காவிற்கு தான் ஏதோ தவறு செய்து விட்டதாக தோன்றியது.                                     மீண்டும் வள்ளியின்...
                     "என்ன சொன்னான்" என்று முழித்தவள், பின்பே தெளிந்து "என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று கேட்க               "இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்று நிதானமாக கூற                             அவனை முறைத்தவள் "அப்புறம் இல்ல.. எப்பவுமே பார்க்கவேண்டாம், நான் ஏதோ யோசனையில இருந்தேன். உங்களை பார்த்துட்டு இல்ல"...
    error: Content is protected !!