Monday, April 21, 2025

    Yaali

    அத்தியாயம் - 29 ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான். பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும்...
    அத்தியாயம் – 6 யாளிகள், ஈரேழு உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில் வாழும் (Mythological Creature) உயிரினங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு யாளிகள் வேற்று கிரக வாசிகள் (Aliens). மனிதர்கள் பூமியில் வாழ்வதுப் போல, யாளிகள் யாளி(மஹர்) உலகத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாளிகளுக்கு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உண்டு(Spiritual Energy). யாளிகளால் அவற்றின் பூர்வீக உருவத்திலும் இருக்க முடியும் மனித உருவதிற்கு மாற்றமடையவும்(shape shifting) முடியும். முழு சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால் மட்டுமே யாளிகள் முழு பூர்வீக உருவத்திற்கு மாறுவர். சாதாரண சமயங்களில் மனித உருவில் இருபர். யாளிகளின் பெயர்களும் அவற்றின் பிரதேக ஆயுதங்களும், கைக்காப்பு முத்தின் நிறமும் கீழே. பிரதேக ஆயுதத்தைக் கையாள்வதில் அந்தந்த வகை யாளிகள் சிறந்தவர்கள். இருந்தப்போதும் யாளிகளால் மற்ற...
    அத்தியாயம் - 25 "அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா. முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசாரித்ததில் சில ஒற்றுமைகளை உணர்ந்தேன். எல்லா பெண்களும் 18லிருந்து 24 வயது வரையிலான...
    அத்தியாயம் - 7 சின்ன சிரிப்பை உதிர்த்த (chuckle) பவளன், "நிச்சயம் இளவரசி!" என்றான். அவனை மறுமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, மற்றப் போட்டியாளர்களின் ஓவியத்தைத் திரையில் திரும்பிப் பார்த்த வண்ணம்," ம்ம்...இப்போது போட்டி முடிவைக் கவனிப்போம்" என்றாள் அவந்திகா. “ம்ம்" என்ற பவளனின் கண்கள் மற்றவர்கள் வரைந்த ஓவியத்தில் இல்லை. கவனம் சிதறமால் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது. ஒருவழியாக போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது. மனிதர்கள் அறியாத விழாவாக இருந்தப் பின்பும், நேர்த்தியாக வரைந்ததாலும், அந்த விழாவைப் பற்றிய விளக்கமாக அவந்திகா எடுத்துச் சொன்னவிதமும் அனைவரையும் ஈர்க்க அவர்களுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது. நேற்று வெளியில் வரத் தாமதமானதால் கவலையுற்ற பாவனாவின் முகம் நினைவு வர இந்த...
    அத்தியாயம் – 5 பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும் ஓய்வறையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அவந்திகா காத்திருந்தாள். எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாளோ தெரியவில்லை.அறையில் இருந்த அனைவரும் கிளம்பி தனியாளாக அமர்ந்திருக்கும்...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    அத்தியாயம் - 10 முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா. ‘இந்த ஓட்டுநரைப் பார்த்தால் 22லிருந்து 25வயதுக்குள் இருப்பவன் போல இருக்கிறது. பவளனைப் போல, மேகனைப் போல அதே வயது. இவனும் யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.' என்று நினைத்தாள். சந்தேகமாக இருந்த அவளது பார்வையை சிறிதும் தளர்த்தாமல், அவனுக்குப் பதில் அளித்தாள் அவந்திகா, “நான் வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன். இப்போது நேராகச் செல்லுங்க.” என்றாள். “சரிங்க அம்மா(1)” என்றான் ஓட்டுநர். அவன் காரியமே கண்ணாகத் தானூர்தியை இயக்கியப் போதும், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் பார்வை அவனை விட்டு மீளவில்லை. அப்படியே, "அது இருக்கட்டும். ஏன் என்னை அவந்திகா என்று அழைத்தீர்கள்? என் பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!” என்று நேரடையாகக் கேட்டாள். அவளது கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு அடையாளமாக அவன் இதழ்...
    அத்தியாயம் - 8 நேரில் கண்டதுப் போல் பேசிய பவளன் வார்த்தைகளில், சந்தேகமாகத் தன் அருகில் எங்கேயும் இருக்கிறானா? என்று நிமிர்ந்து தன்னை சுற்றி பார்த்தாள் அவந்திகா. சந்தேகம் இருந்தப் போதும் பவளனின் குரலில் தெரிந்த அவசரத்தில் மேலும் கேள்விக் கேட்காமல், "ம்ம்" என்றாள் அவந்திகா. அப்படியே பயந்துக் கொண்டே நில்லாமல் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி யோசித்தாள் அவந்திகா. 'தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது. தன்னை யாளியுலகத்தினர் அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து என் கைக்காப்பை ஒழித்து வைத்தப் போதும் இந்த யாளிகள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. இவை தற்ச்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை. இவர்கள் எதற்காக...
    அத்தியாயம் - 15 "என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக. அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான் நேற்று கண்டது தவறாக இருக்குமோ' என்று நினைத்து, 'அதை அவளிடம் சொல்லலாமா அல்ல வேண்டாமா' என்று தயங்கினான். ஆனால் அவள்...
    அத்தியாயம் - 12 செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர். தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள். “அ… அவந்திமா...நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே" என்று 'எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்' என்று பயத்திலே தயங்கி தயங்கி கேட்டார் செல்வம். அவரின் முகத்தைப் பார்த்ததுமே அவர் மனம் அறிந்த அவந்திகா, “கவலை படாதீங்க அப்பா. நான் கொடுத்த வாக்கிலிருந்து மாறமாட்டேன். அதனோடு இந்தக் காடு எனக்கு 400 வருடம் பழக்கமான ஒன்று. அதனால் நான் எளிதில் சென்று திரும்பிவிடுவேன்.” என்று செல்வத்தின்...
    அத்தியாயம் - 11 “ம்ம்" என்ற போதும் உடனே அவந்திகா பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “7 வருடத்திற்கு முன்பு அந்தக் காட்டு வழி பாதையில் நீங்கச் சென்று கொண்டிருக்கும்போது காட்டு யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த தானூர்தி தூக்கி வீசப்பட்டது. உங்களுக்கு அந்த நிகழ்வு மறக்க வாய்ப்பில்லைதானே?!' என்றுவிட்டு செல்வத்தைப் பார்த்தாள். ஆமாம் என்பதுப் போல் 'இதுகுறித்து அதிகம் அவந்திகாவிடம் தாங்கள் பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான இவளுக்கு அது தெரிந்தது' என்று பெற்றோர்கள் இருவரும் திகைப்பு குறையாமல் தலையசைத்தனர். அவர்களின் திகைப்பை உணர்ந்தப் போதும் தொடர்ந்து, "அப்போது அந்தக் காட்டில் நானும் இருந்தேன். அந்த விபத்தில் உண்மையில் உங்க குழந்தை இறந்துவிட்டாள். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் அம்மா...
    அத்தியாயம் -14 தன் கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின் செய்கையில் உடல் சிலிர்த்து நின்றிருந்தப் போது அவள் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் அடங்கும் முன்னே அந்தப் பட்டாம்பூச்சியும் மெதுவாகப் பறந்து திறந்திருந்த சாளரத்தின்(window) வழியாக வெளியில் சென்றுவிட்டது. அது போவதையே பார்த்திருந்தவளின் கவனம் மீண்டும் தட்டப்பட்ட கதவை நோக்கித் திரும்பியது. உடனே எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக, தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள் அவந்திகா. மணி 9 -ஐ கடந்து 5 நிமிடம் ஆகி விட்டிருந்தது. இருந்தும் 'பாட்டு நடனத்திற்கு சென்றவர்கள் அதற்குள் வந்திருக்க கூடுமா! என்ன?' என்று தோன்ற அந்த அறை கதவில் வெளியில் இருப்பவர்கள் யார் என்று அறிய உதவும் சிறு துவாரத்தில் எட்டிப்...
    அத்தியாய்ம் - 9 'தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்' என்று அதிர்ந்த அவந்திகா 'எங்கே?' என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள். அப்போது தன் நாற்காலியிலிருந்து எழுந்த மேகன் "நீ எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா நான் ஓய்வறை(Restroom) சென்றுவிட்டு வருகிறேன்." என்று எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அவந்திகாவின் முகத்தில் அவளுக்குத் தான் மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை என்பதை பாவனா உணர்ந்தாள். அதனால் எப்படி அவந்திகா சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பாவனா பதில் சொல்லும் வரையும் காத்திராமல், மேகன் சற்று தொலைவு நகர்ந்ததும், "பாவனா. எங்கே அவருடன் தனியாகச் செல்கிறாய்.?” என்று நேரிடையாகக் கேட்டாள் அவந்திகா ஏற்கனவே அவந்திகாவின் எச்சரிக்கை உணர்வை உணர்ந்த பாவனா அவந்திகாவின் கைப்பற்றி, "அவந்தி… நான்...
    அத்தியாயம் - 13 தரையில் கிடந்த ஓட்டுரை நோக்கி ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு" என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா. அவந்திகாவின் குரலைக் கேட்டதும் 'பல வருடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப் போகிறோம்' என்று கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று வெளியில் வந்து அவந்திகாவின் ஓட்டத்தினால் ஏற்பட்ட காற்றோட்டம் தன் மீது விழப் படபட சத்தத்துடன் எட்டிப்பார்த்தது. அவளுக்கு முன் சென்ற மின்மினிப் பூச்சிகள் அந்த ஆலமரத்தின் விழுதுகளைச் சுற்றி படர்ந்து அந்தி மாலைப் போல காரிருளிலும் வெளிச்சம் பரப்பியது. ஓடி வந்த அவந்திகா, 'முதலில் இந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டும்' என்ற எண்ணி ஓட்டுநரை...
    அத்தியாயம் - 21 அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன். அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா, அவ ன் கேள்வியில் திகைத்தும் போனாள். ‘என்னைத் தெரியவில்லையா? இவனுக்கு!’ என்று திகைப்பில் அவள் கண்கள் சிமிட்டியது. பின் 'தான் மனித...
    அத்தியாயம் - 52 கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார். சாரங்கன் தலை வணங்கி, “சரிங்க குருவே.” என்றான். சாரங்கனின் பதிலில் தலையசைத்த கௌரி, வன்னியிடம் திரும்பி, “இளவரசி வன்னி, வெளியில் செல்லும் போது இளவரசர்...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
    அத்தியாயம் - 19 அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள். அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது. ஆனால்...
    அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள். பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...
    அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு...
    error: Content is protected !!