Sunday, April 20, 2025

    Yaali

    அத்தியாயம் - 61 இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான். “விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால் இப்படி ஒரு பிணி(decease) ஒருவருக்கு வந்திருக்கும்.” என்று ஆர்வம் மேலிட வன்னி கேட்டாள். “தூதுவரே! உண்மையில் விராட்டு மலையை, மலை என்பதைவிட...
    அத்தியாயம் - 60 வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. 'எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?' என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி. பின் அவள் அருகில் இருந்த சேவகியை திரும்பி பார்த்து, “நன்றி சேவகி. நீ இப்போது போகலாம். வேறு தேவையிருந்தால் நானே பார்த்துக் கொள்வேன்.”...
    அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், "நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு வந்தேன்." என்று வெகு இயல்பு போல சொல்லிக் கொண்டு அந்த அறையின் மூலை முடுக்கில் எல்லாம் சென்று நுகர்ந்து பார்த்தான். வன்னியின்...
    வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே...
    அத்தியாயம் – 58 வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு நொடிக்கூட எண்ணவில்லை போலும். தீர்க்கமாக அதே இடத்தில் எதுவும் சொல்லாமல் முகம் இறுக சந்திரரை பார்த்து நின்றாள். அவள் பிடிவாதமான முகத்தை...
    அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து...
    அத்தியாயம் - 56 வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி அவர்கள் மூவரையும் சரிய விட்டது. இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே உருவாக்கிவிட்டதால் அந்த பாதுகாப்பு சக்கரம் அத ஆன்மீக ஆற்றல் கொண்ட...
    அத்தியாயம் - 55 வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான். வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய...
    அத்தியாயம் - 54 வன்னி அவளை அறிமுகம் செய்துக் கொள்ளும் முன்னே பேரரசர் பேச ஆரம்பித்தார். “பரி அரசின் இராஜகுரு சந்திரர் ஏன் வரவில்லை? ” என்று முகவாயில் கையை வைத்து கேட்டார். கௌரி சந்திரரை பற்றி கேட்டதும், “பேரரசே! பரி அரசின் இராஜகுரு சந்திரர் பேரரசருக்கென்று பரிசளிக்க ஒரு விஷேஷமான மூலிகையை தயாரித்துக் கொண்டிருந்தார்....
    அத்தியாயம் - 53 முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன் நோக்கவில்லை. ஆனால் அவள் பரி இளவரசி என்றதும், ‘சிறு வயதிலே ஆன்மீக இதய வேர் உருவாக்கியவள் என்றும், பரி அரசின் இராஜகுருவுடன்...
    அத்தியாயம் - 52 கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார். சாரங்கன் தலை வணங்கி, “சரிங்க குருவே.” என்றான். சாரங்கனின் பதிலில் தலையசைத்த கௌரி, வன்னியிடம் திரும்பி, “இளவரசி வன்னி, வெளியில் செல்லும் போது இளவரசர்...
    அத்தியாயம் - 51 வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்கள் தரை...
    அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள். பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...
    காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை இன்னும் கோலகலமாகக் காட்டிக் கொண்டிருந்தது. இப்படி முன்னும் பின்னும் காவலர்கள் சூழ நடந்து செல்வது மதிக்கு என்னமோ போல இருந்தது. கூடவே...
    அத்தியாயம் - 49 கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர். “வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான். காவலர்களைப் பார்த்ததும் தன்னுடைய ஒரு நாள் கூத்து முடிவுற்றதை எண்ணி பெருமூச்சுவிட்டு வன்னி தரையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து நந்தனும் எழுந்து...
    அத்தியாயம் - 47 வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர். ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும் கிளுக்கி சிரித்தாள். ‘முகிலனை மட்டும் எப்படியாவது உடன் அழைத்துக் கொள்ளலாம். அவன் என்னை பார்க்கிறானா?’ என நோட்டமிட்டாள். ஆனால் அவன் அந்தக்...
    அத்தியாயம் - 46 425 வருடங்களுக்கு முன்பு… பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று இன்று பிரசவ வலியில் இருந்தாள். பிரதான அரண்மனையில் உள்ள அனைவரும் பதட்டமுடன் குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவலுக்காகக் காத்திருந்தனர். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளால் பிரசவ...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    அத்தியாயம் - 44 பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள கூடுமோ என்ற தடுமாற்றம் அவளுள் இருந்தது. இருந்தும் ஒரு பெருமூச்சுவிட்டு இயல்புக்கு வந்தாள். பறக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு வருடமும் தாமரை தீபவிழா...
    அத்தியாயம் - 43 அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது. அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை நிறைவேற்ற நான் தயார்.” என்றவன், சிவப்பு நிற பழத்தைக் கையில் கோலி உருண்டையை உருட்டுவது போலச் சில முறை உருட்டிப் புன்னகைத்தான். அதே நேரத்தில்...
    error: Content is protected !!