Vizhiyin Mozhi
அன்புவும் சந்திரனும் ஒரே துருவங்கள் என்பதால் சற்று விலகியே இருந்தனர். அவசியம் என்றால் பேசிக் கொள்பவர்கள் தான் ஆனால் பேசிக் கொள்வதற்கான அவசியம் வரவேயில்லை.
கயல், ஸ்வேதா, குழந்தைகள் இரு வீட்டிற்குமான இணைப்புகளாய் இருந்தனர். கயல் ஸ்வேதாவிற்கு இடையேயான புரிதலைக் கண்ட, ருக்மணியும், சிவகாமியும் வியந்தனர். முன்பே தாங்களும் இவர்களைப் போன்றிருந்தால் குடும்பமானது இரண்டாகப் பிரிந்திருக்காதே...
அத்தியாயம் 43
ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷிற்கு சகோதரிகள் இல்லை என்பதால் திருமணத்தின் போது கயல் தான் நாத்தனார் முடிச்சிட்டாள். இப்போதும் கயலை தான் அவள் மனம் தேடியது.
அவள்...
அத்தியாயம் 06
அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.
அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. "இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத...
அத்தியாயம் 22
இருளில் படிகளிலிருந்து கீழே இறங்கி தரையில் கால் வைக்க, எத்திசைலிருந்தோ எறிந்த மலர்க்கொத்தைப் போல் அவன் மேல் வந்து விழுந்தாள் கயல்.
தன் நெஞ்சோடு புதைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் பின்னத் தலையை வருடியவன் பதட்டமுடன், "செல்லம்மா என்னாச்சு?" என்றான்.
மறுநொடி அவனிடமிருந்து விலகியவள் வலதுகையால் அவன் வாயை மூடி, இடது கை விரலை தன்...
அத்தியாயம் 24
அன்று கயல் தன் காதலைச் சொல்லிய பிறகு அதீத சந்தோஷத்தில் சுற்றினான் அன்பு. அவன் கல்லூரியிலும் வெளியிலும் சுற்றும் காதலர்களை பார்க்கும் போதெல்லாம் கயலின் ஞாபகம் தான்.
இதில் அவன் ரூம்மெட் மனோஜ் வேறு மொபைலில் இரவெல்லாம் அவன் காதலியோடு ஓயாது பேசிக்கொண்டே இருந்தான். காதல் தரும் சந்தோஷத்தை கயலோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும்,...
அத்தியாயம் 25
பஞ்சாயத்திலிருந்து கிளம்பியதும் கல்யாணம் நின்றதில் துக்கம் போல் சில உறவுகள் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினர்.
மேலும் சிலர், "உடனே பண்ணனும்னு அவசரப்படா இப்படி தான் ஆகும். எதுவும் பொருத்தம் பார்த்து முடிவு பண்ண வேண்டாமா? அதுவும் அந்த புள்ளைக்கு விரும்பமில்லாம, கட்டிட்டாயப்படுத்தியா பண்ணுறது?" என்பது போல் பேசிச் சென்றனர்.
சந்திரன் வீட்டில் யாரும் பதில் சொல்லும்...
அத்தியாயம் 08
ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.
"ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள் முன்பு ஒரு சாக்லெட்டை நீட்ட, நிமிர்ந்து அவன் புன்னகை முகம் பார்த்தாள்.
அவள் தயக்கம் அறிந்தவன், "நானும் உனக்கு அண்ணன் தான்,...
அத்தியாயம் 05
ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.
ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக, மறு வருடம் சங்கரலிங்கத்திற்கும் ருக்மணிக்கும் திருமணமானது. முதலில் சில வருடங்களுக்கு சிவகாமி, ருக்மணி உறவு நல்ல முறையில் இருக்க, அதன்...
அத்தியாயம் 20
டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.
டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில்...
அத்தியாயம் 28
கயலின் பெற்றோர்களால் மகளின் ஆசையை நிராகரிக்க வாய்ப்பின்றி போனது. கயல் அன்புவை காதலன் என்றில்லாது கணவன் என்று கூறி அனைவரின் முன்னிலையில் தாலியையும் காட்டிய பின் அவர்களாலும் தான் என்ன செய்ய இயலும்.
அன்புவிற்கும் சந்திரனுக்கும் பெரிதாக வித்தியாசம் என்பதில்லை. சந்திரன் சற்று நெருங்கிய சொந்தம் அவ்வளவே, இதில் அன்பு குடும்பத்தாருடன் தனிப்பட்ட பகை...
அத்தியாயம் 07
எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு, ஒருபுறம் மல்லிகைச் சரத்தை முன்புறத் தோளில் சரிய விட்டுக் கொண்டு கிளம்பினாள்.
அவன் வெளியே கிளம்பி விடுவானோ என்ற எண்ணத்தில் அன்னையையும்...
அத்தியாயம் 42
இராஜமணிக்கம் ஜாமினில் வெளியில் இருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஸ்வேதாவும் விடாது வழக்கை நடத்திக்கொண்டு இருந்தாள்.
அன்புவின் மேல் நடந்த கொலை முயற்சியை விட்டுவிடும் படி அன்பு கூறியதாலும், அன்பு புகார் கொடுக்காததாலும் ஸ்வேதா அதை விட்டு விட்டாள். இராஜமணிக்கமும் அவராகக் கூறி மாட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதில் செல்வான தன் மருமகன் மாட்டி விடக்கூடாது...
அத்தியாயம் 12
கயல் கூறியதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அவள் கேட்டு அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை. எனவே இராஜமாணிக்கத்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றான்.
உள்ளே செல்லவே, அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த பூங்கோதை, "வாங்க..." ஒற்றைச் சொல்லில் வரவேற்று சமையலறைக்குள் சென்று கொண்டாள்.
‘அதிகம் பேசியதில்லை எனினும் சிறு வயதில் அன்பு மாமா என்றுதானே அழைப்பாள்?...
அத்தியாயம் 18
ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடைகள் ஒருபுறம் அமைந்திருக்க, மைக் செட், ரேடியோக்களில் அம்மன் பாடல்கள் அதிரும் படி ஒலிபரப்பினர். கோவில்...
அத்தியாயம் 30
மழைச் சாரலில் மரக்கிளையின் மறைவில் இரு காதல் கிளிகள் அலகால் ஒன்றோடு ஒன்று கொத்தி முத்தமிட்டுக் கொண்டு தன்னை மறந்த மயக்கத்திலிருந்தன.
அடுத்த காட்சியாக, இருள் சூழ்ந்த அறைக்குள் மெல்லிய தீரைச் சீலைகளை ஊடுருவி வெளிச்சம் சிறிது பரவ, உச்ச கோபத்தில் கண்களை மூடி நின்றிருந்தாள் ஸ்வேதா கோபம் தான் எனினும் கண்களிலிருந்து கண்ணீரும்...
அத்தியாயம் 23
சந்திரனின் ஆட்கள் கயலைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அன்பு ஊருக்கே இன்னும் வரவில்லை என்றும் தகவல் தர, கயல் எங்குச் சென்றால் எனச் சந்திரனுக்குக் குழப்பமாக இருந்தது.
நண்பகல் நெருங்கி இருக்க, தென்னந்தோப்பில் வந்து அமர்ந்திருந்தான் சந்திரன். வேல்முருகனையும் இன்னும் சந்திக்கவில்லை யாரேனும் கேள்வி கேட்டால் கூட தன்னிடம் பதிலில்லையே என்றெண்ணி...
அத்தியாயம் 10
சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே.
அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு. உடை தான் இருவரையும் வித்தியாசப் படுத்தியது.
குணத்திலும் இருவரும் ஒற்றுமை கொண்டவர்கள் தான். இருவருக்கும் அவர்கள் அன்னைக்குத்தான் முதலிடம் அளிப்பார்கள். பிறருக்கு...
அத்தியாயம் 11
இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது.
நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை தான்.
அவளை அணைத்தபோது பற்றிய தீ இன்னும் உள்ளே எரிவது போன்றிருந்தது. அவள் வாசம், அணைப்பு, முத்தம், இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஆனால்...
அத்தியாயம் 27
காலையில் விழித்த பின் தன் இடையை அழுத்திக் கிடந்த அன்புவின் கரத்திலிருந்து அவன் உறக்கம் கலையாமல் மெல்ல விலகி எழுந்தாள். உடலெல்லாம் அழுத்தி, அசதியில் கணமாய் தெரிந்தது. இதமான சூட்டில் வெந்நீரில் குளித்ததில் சற்று அசதி நீங்கியது போலிருந்தது.
பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கி குங்குமம் இட்டுக்கொண்டாள். மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது....
அத்தியாயம் 14
விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர்.
நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, "ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்" என்றான் குமார்.
"வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க...