Then Paandi Meenaal
தென் பாண்டி மீனாள் 23
தம்பதிகளின் அந்த இரவு, அவர்களுக்கான நீண்ட இரவாகி போனது.
தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. அசதியில் அலுத்த உடல் ஓய்வை மட்டுமே கேட்டது.
பேச வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல், மற்றவர் கையணைப்பிலே, இணையின் வருடலிலே, அவர்களின் மென் முத்தத்தின் சத்தத்திலே அந்த இரவு முடிந்து சூரியனும் உதயமாகி விட்டார்.
காலை...
அதில் வேண்டுகோளும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. வில்வநாதன் இரண்டையும் புரிந்து கொண்டான்.
பாண்டி நாட்டு அழகியை தன் நெஞ்சோடு சேர்த்து கொள்ள, அந்த வீட்டின் போன் ஒலித்தது.
கஜலக்ஷ்மி "ஏன் ராஜா அங்க இருக்கீங்க?" என்று பதட்டம் கொண்டு கேட்க,
"சும்மா தான் பாட்டி, இதோ வந்திடுவோம்" என்று வைக்க,
அடுத்து பானுமதி அழைத்துவிட்டார். "மாம். வந்துடுவோம்" என்று வைத்தவன்,...
தென் பாண்டி மீனாள் 22
வில்வநாதனின் அழகிக்கு அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்!
எந்தவிதமான நியாய, அநியாயங்களும் அவளுக்கு வேண்டாம். எதையும், யாரையும் யோசிக்கும் நிலையில் கணவன் அவளை வைக்கவில்லை.
முற்றும் முழுதாக அவனை மட்டுமே நினைக்க வைக்கிறான். எதிலும் அவனின் நலத்தையே யோசிக்க வைக்கிறான்.
இப்போதும் மாமனார், மாமியார் பக்கம் இருக்கும் நியாயம், கணவனின் கோவம் எதுவும்...
"மீனா பொண்ணு என்ன பேசுற நீ?" கஜலக்ஷ்மிக்கு கோவம். "இந்த வீட்டோட மருமகள் நீ. என் ராஜாக்கு எல்லாம் நீ தான். அவனோடது எல்லாம் உன்னோடது தான். இதுல வேணும், வேணாங்கிறது எல்லாம் எங்கிருந்து வருது?" என்று கடிந்து கொண்டார்.
"லட்சுமி நீ அமைதியா இரும்மா. என் பேத்திகிட்ட நான் பேசுறேன்" என்று தனபாலன் மனைவியை...
தென் பாண்டி மீனாள் 21
வில்வநாதனின் கோவம், மனைவியின் அணைப்பிலே அடங்கி போனது.
'இந்த வில்லனை பிடிக்கும், இவர் மட்டும் தான் வேணும்' என்றதில், இன்ப அதிர்வுக்குள்ளானான்.
உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்னல் வெட்டி சென்றது.
அவனின் விறைத்த உடல், இப்போது வேறு மாதிரி இளகி நின்றது.
கண்கள் மூடி அந்த சுக அவஸ்தையை முழுதாக அனுபவித்தான்.
பாண்டி நாட்டு அழகி,...
சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?
மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான்.
"பிடிக்கலையா உங்களுக்கு?" என்று மீனலோக்ஷ்னி முகம் வாட,
"க்கும். அப்படி இல்லை. வா" என்று அவளுடன் கரம் கோர்த்து நடந்தான்.
மாளிகையின் தோட்டத்தில் ஆட்கள் கூடியிருக்க, அட்டகாசமான வரவேற்பு.
வில்வநாதன் அளவான புன்னகையுடன், மனைவியின்...
தென் பாண்டி மீனாள் 20
வில்வநாதனிடம் திரும்ப அதே பார்வையை சந்தித்தாள் மீனலோக்ஷ்னி.
கஜலக்ஷ்மியிடம் பேசிவிட்டு, போனை கணவனின் கையில் கொடுத்த நேரம்.
சுற்றி ஆட்கள் இருக்க, நெருங்கி கேட்க தயக்கம். என்னாச்சு? என்று பார்வையில் கேட்க, அவன் அறிவழகனிடம் ஏதோ பேசினான்.
இரவு உணவு உட்கொள்ளும் நேரமும், பெரிதான பேச்சில்லை. "மாப்பிள்ளை சரியாவே சாப்பிடலை. அவருக்கு இங்க வசதி...
வெயில் ஏற தொடங்கியிருக்க, பெண்ணுக்கு உதட்டின் மேல் வேர்க்க ஆரம்பித்திருந்தது.
வில்வநாதன் தன் கைக்குட்டையால் நிதானமாக அவளின் வேர்வையை துடைத்துவிட்டவன், "இப்போதான் பர்ஸ்ட் டைம் என் பெயர் சொல்ல போறியா என்ன?" என்று கண்டுகொண்டான்.
மீனலோக்ஷ்னி ஆம் என்று தலையசைக்க, வில்வநாதனுக்கு இன்னும் ஆர்வம் உண்டானது. "நீ என் பேர் சொல்றதை நானே முதல்ல கேட்கிறதா இருக்கட்டும்...
தென் பாண்டி மீனாள் 19
குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள்.
நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி.
"லக்ஷ்மி மேடம் என்ன இது?" என்று பேரன் கடுப்பாகி போக,
"ராஜா. நீ தனியா இருக்க கேட்ட, நாங்க விட்டுட்டோம். அதே போல சாப்பிடுறது...
"எனக்கு இதைப்பத்தி பேசவே வேண்டாம். உங்களுக்கு உங்க மனைவியோட இருக்க கஷ்டம்ன்னா நீங்க நேரடியா சொல்லலாம். இப்படி என்னை வைச்சு சொல்லணும்ன்னு அவசியமில்லை"
"டேய் பானுவோட இருக்க எனக்கென்ன கஷ்டம்? என்ன பேசுற நீ?"
"சரியாதான் பேசுறேன். அவங்களை விட்டு போனது நீங்க தானே?"
"வில்வா. ப்ளீஸ். எனக்கு எந்த ஆர்கியூமெண்ட்டும் வேண்டாம். நான் தப்பாவே இருக்கட்டும், நீ...
தென் பாண்டி மீனாள் 18
வில்வநாதன் முடிவை ஏற்று கொள்ள முடியாத பெரியவர்கள், "ராஜா. என்னப்பா இது" என்றனர்.
மீனலோக்ஷ்னி கணவனின் பற்றிய கையை விட முடியாமல் நிற்க, வீட்டினர் பார்வை அதில் பதிந்தது.
'போச்சு, என்னை தப்பா நினைக்கிறாங்களா?' என்று மீனலோக்ஷ்னி பதறி, கையை இழுத்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் கணவனையே இறுக்கமாக பற்றி கொண்டாள்.
வில்வநாதன், "என்ன...
"ஆஹ். வலிக்குது"
"கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள்.
வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள்.
"எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?" என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம்.
"உன்னை...
தென் பாண்டி மீனாள் 17
முதல் இரவு இவர்களுக்கு மட்டும் முதல் இரவாக தோன்றவில்லை போல.
கட்டில் யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில், வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.
புது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு நின்றார்கள்.
இருவருக்கும் மற்றவர் இதயத்தில் இடமில்லாமல், தாம்பத்திய வாழ்க்கையை தொடங்க முடியாது என்பதாய் மீனலோக்ஷ்னி முடித்திருக்க, “சோ என்கிட்ட...
"நான் தான் நம்ம கல்யாணம் நடந்திடும்ன்னு எதிர்பாக்கலையே. அதான் வாங்கி வைக்கலை" என்றான் மிகவும் நல்லவனாக.
"அது நான் சொல்ல வேண்டியது. அதோட நம்ம மேரேஜ் உறுதியாகி ஒரு மாசமாவது இருந்திருக்கும்" என்றாள் அவனின் மனைவி.
"சோ. எதிர்பார்த்திருக்க?"
"எதை சொல்றீங்க நீங்க?"
"சாக்லேட் டிப் தான்"
"நீங்க சொன்னதும் ஆசை வந்திடுச்சு. அவ்வளவு தான். ஆனா பழம் சாப்பிட்டதுக்கு இவ்வளவா?"...
தென் பாண்டி மீனாள் 16
வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது.
அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.
அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். "இதை தான் நான் முதல்லே சொன்னேன்" என்று தோள் உயர்த்திய வில்வநாதன்,...
"நான் பார்த்துகிறேன்" என்று மீனலோக்ஷ்னி முடிக்க,
"நீ ரொம்ப தெளிவா இருக்க. அண்ணா தான் பாவம்" என்று சிரித்தாள் சுகன்யா.
"அவரா பாவம்? வேணா என்னை பேச வைக்காத. சரியான காரியவாதி அவர்" என்று பொரிந்துவிட்டாள்.
"பாப்பா. என்ன பண்ற நீ?" என்று சுஜாதா உள்ளே வந்து மகளை கண்டித்தவர், தலையில் தாராளமாக பூ வைத்துவிட்டார்.
"என்ன என் பேரனோட...
தென் பாண்டி மீனாள் 15
வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன கேட்டாலும, என்ன பேசினாலும் உடனே பதில் வருவதில்லை. இரண்டு மூன்று முறை அவர்கள் தொடர்ந்து கேட்டப்பின் தான் பதில் சொல்கிறாள்.
கனவும்...
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்? என்னாச்சு?"
“நாளைக்கு காலையில கோவில்ல மீட் பண்ணலாமா?"
"ம்ம். ஓகே. ஷார்ப் செவன்" என்று வைத்துவிட்டான்.
மீனலோக்ஷ்னி இப்போதே என்ன பேச வேண்டும், எப்படி...
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.
"உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன்.
பானுமதியும், தயாளனும்...
"ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?" என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.
மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர்.
"இப்போதான் கண்ணே தெரியுது" என்று வினய் இவளிடம் மெல்லிய குரலில் சொன்னான்.
"ரொம்ப பயந்துட்டீங்களா, சாரி என்னாலதான் எல்லாம்" என்று பெண் வருத்தம் கொள்ள,
"மீனா. அந்தளவு பயம் எல்லாம்...